search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Investication"

    • மயிலாடுதுறை- திருச்சி ரெயில் மோதி பலத்த காயம் அடைந்தார்.
    • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திட்டை ரெயில் நிலையத்துக்கும், பசுபதிகோ யில் ரெயில் நிலையத்திற்கும் இடையே தண்டவாளம் அருகே 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் நடந்து சென்றார். அப்போது அவர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த மயிலாடுதுறை- திருச்சி ரெயில் மோதி பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை அதே ரெயிலில் ஏற்றி தஞ்சைக்கு கொண்டு வரப்பட்டார். ஆனால் வழியிலேயே அந்த நபர் இறந்து விட்டார்.

    இதையடுத்து தஞ்சை ரெயில்வே இருப்புபாதை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி உத்தரவின்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன், தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ், தலைமை காவலர் சரவணசெல்வன் மற்றும் போலீசார் இறந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெயிலில் அடிப்பட்டு இறந்தவர் யார் ? எந்த ஊர் ? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்தவர் பற்றிய தகவல் தெரிந்தால் உடனே 04362-230004 மற்றும் 9498101980 என்ற எண்களில் தொடர்பு கொள்ள வேண்டும் என்று இருப்பு பாதை போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • நெல்லை அருகே உள்ள மானூரை சேர்ந்த 32 வயது இளம்பெண் ஒருவர் தனது செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் வழக்குப் பதிவு செய்து மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள மானூரை சேர்ந்த 32 வயது இளம்பெண் ஒருவர் தனது செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது உருவப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து முகநூலில் பதிவிட்டிருந்தது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இதுதொடர்பாக மானூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் வழக்குப் பதிவு செய்து மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதை யறிந்த அந்த நபர் அந்த படத்தை முகநூலில் இருந்து அழித்துள்ளார். எனினும் போலீசார் அவர் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் அப்பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் அந்த இளம்பெண் படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் பதிவிட்டதும், பின்னர் அந்த படத்தை அழித்ததும் தெரியவந்தது.

    அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கற்களை தூக்கி பஸ்சில் வீசியதில் முன்பக்க கண்ணாடி சுக்கு நூறாக நொறுங்கியது.
    • குடிபோதையில் கற்களை வீசி பஸ்ஸை சேதப்படுத்தியது தெரிய வந்தது.‌

    தஞ்சாவூர்:

    தஞ்சை கரந்தையில் போக்குவரத்து பணிமனை உள்ளது.

    இந்த பணிமனையில் இருந்து தினமும் ஏராளமான அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பணிமனையில் இருந்து கும்பகோ ணத்துக்கு செல்லும் அரசு பஸ்சை தஞ்சை அடுத்த மாத்தூர் மாதா கோவில் தெருவை சேர்ந்த டிரைவர் ரத்தினசாமி (வயது 53 ) தஞ்சை புதிய பஸ் நிலையத்துக்கு சென்று பயணிகளை ஏற்றுவதற்காக ஓட்டினார்.

    பணிமனையில் இருந்து பஸ் வெளியே புறப்பட்டு வந்து கொண்டிருந்தது.

    அப்போது கீழவாசல் பூமால் ராவுத்தன்கோவில் தெருவை சேர்ந்த கார்த்தி (25) திடீரென கற்களை தூக்கி பஸ்சில் வீசினார். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி சுக்கு நூறாக நொறுங்கியது.

    இது குறித்து ரத்தினசாமி தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்தியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    முதல் கட்ட விசார ணையில் கார்த்தி, குடிபோதையில் கற்களை வீசி பஸ்ஸை சேதப்படுத்தியது தெரிய வந்தது.‌

    இருந்தாலும் பஸ்சை சேதப்படுத்தியதற்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா ? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மேலப்பாளையம் ரோஸ்நகரை சேர்ந்த ஜெனி சாமுவேல் அப்பகுதியில் கடை நடத்தி வருகிறார்.
    • சி.சி.டி.வி. காமிரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    நெல்லை:

    மேலப்பாளையம் ரோஸ்நகரை சேர்ந்தவர் ஜெனி சாமுவேல் (வயது 22). இவர் மேலப்பாளையத்தில் கடை நடத்தி வருகிறார்.

    இன்று அதிகாலை அவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைக்கண்ட அவர் அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த ரூ.21,500 கொள்ளை போயிருந்தது. மேலும் கடையின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளும் திருட்டு போயிருந்தது.

    இதுகுறித்து அவர் மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அருகில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • பாலா,பேச்சியம்மாள் சங்கர்நகர் பகுதியில் புதிதாக வீடு ஒன்றை கட்டி கிரகப்பிரவேசம் நடத்தி உள்ளனர்.
    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பேச்சியம்மாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த தாழையூத்து சங்கர்நகரை சேர்ந்தவர் பாலா. இவரது மனைவி பேச்சியம்மாள் (வயது 38). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    மாரடைப்பால் இறப்பு

    பாலா லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவர்கள் சங்கர்நகர் பகுதியில் புதிதாக வீடு ஒன்றை கட்டி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கிரகப்பிரவேசம் நடத்தி உள்ளனர்.

    அதன்பின்னர் ஒரு வாரத்திலேயே மாரடைப்பு காரணமாக பாலா இறந்துவிட்டார். இதனால் பேச்சியம்மாள் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். சமீப காலமாக கணவரை நினைத்து கொண்டே அழுது கொண்டு இருந்த அவர், வீட்டில் இருந்த ஒரு பெரிய பொம்மைக்கு தனது கணவரின் ஆடை களை எடுத்து உடுத்தி வைத்துள்ளார்.

    தற்கொலை

    மேலும் அவரது ஆடைகளை தினமும் தூங்கும்போது அருகிலேயே வைத்துக்கொண்டு இருந்துள்ளார். ஆனாலும் கணவரின் பிரிவு அவரை மிகவும் பாதித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பேச்சியம்மாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் தாழையூத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    விசாரணை

    அங்கு தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த பேச்சியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.

    • காலை வீட்டு வேலை செய்வதற்காக பெண் ஊழியர் ஒருவர் வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து டேப்லட் மற்றும் ஒரு மொபட்டை திருடி சென்றது தெரிய வந்தது.

    நெல்லை:

    பாளை சேவியர் காலனியை சேர்ந்தவர் ரெஜின் ராகுல் (வயது 36). இவர் பொதுப் பணித்துறையில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

    கதவு உடைப்பு

    இவர்கள் நேற்று வீட்டை பூட்டிவிட்டு சாத்தான்குளத்தில் நடைபெற்ற ஒரு திருமண வீட்டிற்கு சென்றனர். இன்று காலை வீட்டு வேலை செய்வதற்காக பெண் ஊழியர் ஒருவர் வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அவர் இதுகுறித்து வீட்டு உரிமையாளருக்கு தகவல் கொடுத்தார். அவர் விரைந்து வந்து மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஷிதா மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மொபட்

    அப்போது மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து வீட்டில் இருந்த ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள டேப்லட் மற்றும் ஒரு மொபட்டை திருடி சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலை காரணமாக இன்பராஜ் பாளை டார்லிங் நகர் 3-வது தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
    • பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 6 பவுன் தங்க நகை திருடப்பட்டு இருந்தது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த பழையபேட்டை நாராயணசுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் இன்பராஜ்(வயது 40). இவர் வேலை காரணமாக பாளை டார்லிங் நகர் 3-வது தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

    நகை திருட்டு

    கடந்த 14-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் இன்பராஜ் வெளியூருக்கு சென்றுவிட்டார். நேற்று நள்ளிரவு நெல்லை திரும்பிய அவர் வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உடனே குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 6 பவுன் தங்க நகை திருடப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக அவர் பாளை போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். திருட்டு போன நகையின் மதிப்பு ரூ.2.40 லட்சம் என்று கூறப்படுகிறது.

    ×