search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "investigations"

    • ஜானகிராமன் உறவினர் இல்ல காதணி விழா திண்டிவனத்தில் நடைபெற்றது.
    • தூக்கி வீசப்பட்ட ஜானகிராமன் பலத்த காயமடைந்தார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த மடவிளாகம் கிராமத்தை சேர்ந்தவர் ஞானவேல் மகன் ஜானகிராமன் (வயது 29). இவர் சுகாதாரத் துறையில் ஊழியராக சிதம்பரத்தில் பணியாற்றி வந்தார். இவரது உறவினர் இல்ல காதணி விழா திண்டிவனத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். அப்போது முண்டியம்பாக்கம் ஆலைப் பகுதியில் உள்ள கூட்ரோட்டை கடக்க முயன்றார். இவரது பின்னால் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ஜானகிராமன் பலத்த காயமடைந்தார். அவ்வழியே சென்றவர்கள் இவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்து போனார். இது தொடர்பாக விக்கிரவாண்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெங்கடேசன் அவ்வப்போது வெளியிலும், வீட்டிலும் மெக்கானிக் வேலை செய்து வந்தார்.
    • 11 மணி வீட்டு வாசலில் மழை நீரில் வெங்கடேசன் வழுக்கி விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் திருநள்ளாறை அடுத்த செருமாவிளங்கை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் லதா. இவரது கணவர் வெங்கடேசன் (வயது 45) மாற்றுத்திறனாளியான இவர், அவ்வப்போது வெளியிலும், வீட்டிலும் மெக்கானிக் வேலை செய்து வந்தார். வழக்கம் போல் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. இரவு 11 மணி வீட்டு வாசலில் மழை நீரில் வெங்கடேசன் வழுக்கி விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். உடனடியாக லதா மற்றும் உறவினர்கள் வெங்க டேசனை காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோத்த டாக்டர் வெங்கடேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். தொடர்ந்து லதா திருநள்ளாறு போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.2 லட்சம் சீட்டு பணம் மோசடியில் ஈடுபட்ட பஸ் கண்டக்டர், மனைவியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    • இதுகுறித்து தெப்பக்குளம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மதுரை

    மதுரை புதுராமநாதபுரம் ரோடு, கம்பர் தெருவை சேர்ந்தவர் பாண்டீஸ்வரி (வயது 35). இவர் தெப்பக்குளம் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    பைக்காரா, முத்துராமலிங்கபுரம், புது மேட்டு தெருவில் இளங்கோவன் (45) என்பவர் வசித்து வந்தார். இவர் பொன்மேனி பணிமனையில் அரசு பஸ் கண்டக்டராக உள்ளார். இவரும், மனைவி கவிதாவும் மாத சீட்டு வசூலித்து வந்தனர். நான் அவர்களிடம் ரூ.2 லட்சம் சீட்டு போட்டிருந்தேன். மாத சீட்டு முதிர்வடைந்தது. இளங்கோவன் தரப்பினர் எனக்கு ரூ.1.44 லட்சம் மட்டும் கொடுத்தனர். மீதமுள்ள தொகையை கேட்டேன். அவர்கள் தர மறுத்து விட்டனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

    • ராஜபாளையம் அருகே சொத்து தகராறில் வாலிபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
    • இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்ைதயடுத்த மங்காபுரத்தை சேர்ந்தவர் சமுத்திரம். இவரது சகோதரர் முருகன். இவர்களுக்கு இடையே குடும்ப சொத்து தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.

    இந்த நிலையில் அதே பகுதியில் வீரம்மாள் என்பவர் இறந்து விட்டார். இதையொட்டி துக்கம் விசாரிப்பதற்காக சமுத்திரம் சென்றார். அப்போது அங்கு முருகனும் வந்தார். அவரை கண்ட சமுத்திரம் தகாத வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது.இதுபற்றி அறிந்த முருகனின் மகன் சரவணன் மற்றும் உறவினர்கள் ஆத்திரமடைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் சமுத்திரத்தின் மகன் நாகராஜ் (வயது 23) கொண்டேரி கண்மாய் மாரியம்மன் கோவில் பூக்குழி திடல் பகுதியில் சென்ற போது அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சிறந்த செல்போன் செயலிகளை உருவாக்கிய 7 கல்லூரிகளின் மாணவர் குழுவுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு பெற்றனர்.
    • முதல் நாளில் பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

    சிவகாசி

    மத்திய கல்வித்துறை அமைச்சகம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் (ஏ.ஐ.சி.டி.இ), பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் மற்றும் ஐ.டி.சி. இன்னோவேசன் செல் இணைந்து ''ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்-2022'' என்ற தலைப்பில் தேசிய அளவில் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான மென்பொருள் தொழில்நுட்ப திறன்களை அறியும் இறுதிப்போட்டி சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரி மையத்தில் 2 நாட்கள் நடந்தது.

    முதல் நாளில் பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார். இரண்டாம் நாள் ஹேக்கத்தான் போட்டியின் நிறைவு விழா நடந்தது.

    பி.எஸ்.ஆர்.கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் விஷ்ணுராம், டீன் மாரிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் கருணாமூர்த்தி, மத்திய கல்வி அமைச்சரகத்தின் மைய தலைவர் உத்யன் மவுரியா,

    ஐ.சி.டி. அகாடமியின் மாநில தலைவர் பூர்ணபிரகாஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

    கல்லூரிகளுக்கு இடையேயான 30 குழுக்கள் பங்கேற்ற இந்த போட்டியில் 7 குழுக்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி சிறந்த டிஜிட்டல் கற்றல் செயலியை உருவாக்கிய சென்னை ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரி, கண்டென்ட் கிரியேசன் செயலியை உருவாக்கிய கோவை ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, டிஜிட்டல் கல்வி செயலியை உருவாக்கிய சென்னை சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரி, விளையாட்டு அடிப்படையில் கற்பிப்பதற்கான செயலியை உருவாக்கிய மும்பை சங்கி பொறியியல் கல்லூரி, செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் மாணவர்கள்-பெற்றோர்களுக்கு உதவும் வகையில் செயலியை உருவாக்கிய பஞ்சாப் தாப்பார் என்ஜினீயரிங் கல்லூரி, செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி கல்வி வழிகாட்டுதல், தகவல் ஆய்வு செய்வதற்கான மென்பொருளை உருவாக்கிய டெல்லி சூரஜ்மால் தொழில்நுட்ப கல்லூரி, வாசிப்பு திறனை மேம்படுத்துவற்கு தேவைப்படும் மென்பொருளை உருவாக்கிய இந்தூர் தொழில்நுட்ப கல்லூரி ஆகிய 7 கல்லூரி மாணவர் குழுவுக்கு தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    இேத போன்று ஜூனியர் ஹேக்கத்தான் போட்டியில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி குழு, நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 3 பள்ளி குழுக்களின் மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், ஒருங்கிணைப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், மாதவன் மற்றும் பேராசிரியர் இணைந்து செய்திருந்தனர்.

    ×