என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Iron Rod"
- நர்கீஸிடம் பேச விரும்புவதாக தெரிவித்து அவரை அழைத்துள்ளான்
- டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு ,கூட்டத்தை கூட்ட வேண்டும்
டெல்லியை சேர்ந்த 25 வயது கல்லூரி மாணவி நர்கீஸ்.
இவருக்கு இர்ஃபான் எனும் டெலிவரி வேலை செய்யும் ஒருவனுடன் பழக்கம் ஏற்பட்டது. நர்கீஸை காதலிப்பதாக இர்ஃபான் அவரிடம் தெரிவித்துள்ளான். இதனை ஏற்க நர்கீஸ் மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இர்ஃபான் அவரை கொல்ல திட்டம் தீட்டியுள்ளான். நர்கீஸிடம் பேச விரும்புவதாக தெரிவித்து அவரை அழைத்துள்ளான். இதனை அப்பாவியாக நம்பி வந்த அவரை இரும்பு கம்பியால் அடித்து கொன்றுள்ளான்.
தெற்கு டெல்லியின் மாளவியா நகரில் உள்ள அரபிந்தோ கல்லூரி அருகே இன்று நர்கீஸின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இரும்பு கம்பியால் தாக்கப்பட்டது முதற்கட்ட விசாரணையிலேயே உறுதியானது.
காவல்துறையின் விசாரணை முடிவில் இர்ஃபான் கைது செய்யப்பட்டான். அப்போது அவன் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டான்.
"சடலத்தின் அருகே இரும்பு கம்பி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இறந்தவர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் இருவரும் ஒருவரையொருவர் அறிந்தவர்கள். இக்குற்றம் காதல் விவகாரத்தில் நிகழ்ந்துள்ளது", என்று டெல்லி துணை போலீஸ் கமிஷனர் சந்தன் சௌத்ரி கூறினார்.
டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால், இந்த சம்பவத்தை அறிந்து, பெண்களுக்கு தேசிய தலைநகரில் நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலை குறித்து மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தார்.
அவர் கூறியிருப்பதாவது:
"டெல்லியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இன்று 2 சம்பவங்கள் நடந்துள்ளன: தாப்ரியில் ஒரு சிறுமி சுட்டு கொல்லப்பட்டார், அரபிந்தோ கல்லூரி அருகே ஒரு பெண் இரும்பு கம்பியால் அடித்து கொல்லப்பட்டார். டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு கூட்டத்தை கூட்ட வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த சம்பவங்களை மகளிர் ஆணையம் கவனத்தில் கொண்டுள்ளது.
இவ்வாறு ஸ்வாதி கூறினார்.
- பெட்ரோல் பங்க் ஊழியருக்கு இரும்புக்கம்பியால் அடி விழுந்தது.
- கே.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி விக்கிர மங்கலத்தை சேர்ந்தவர் காசி. இவரது மகன் விக்ரம் (வயது24). இவர் மேலூர் மெயின் ரோடு உத்தங்கு டியில் பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடன் வேலை பார்ப்பவர் ஆசாத்அலி. இவர்கள் பணியில் இருந்த போது உத்தங்குடி பாண்டிகோவில் தெருவை சேர்ந்த வேலு மகன் மணிவண்ணன் (27) என்பவர் ஒரு வேனில் வந்தார். அவர் அங்கு பெட்ரோல் நிரப்பும்போது ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தார். இதைத்தொடர்ந்து இரு தரப்பினரும் மோதி கொண்டனர். மணி வண்ணன், அஜித்குமார், கவுதம் ஆகிய 3 பேரும் அவதூறாக பேசிய, ஆசாத் அலியை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து விக்ரம் கே.புதூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய மணிவண்ணன், அஜித்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தப்பி சென்ற கவுதமை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கம் ஜெயலட்சுமி புரத்தை சேர்ந்தவர் வெற்றிவேல் (29). டிரைவரான இவர் மாடியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.
சம்பவத்தன்று இரவு இவர் சினிமாவுக்கு சென்றுவிட்டு நள்ளிரவில் தனது அறைக்கு திரும்பினார். அப்போது வீட்டின் ‘கேட்’ பூட்டப்பட்டிருந்தது.
காம்பவுண்டு சுவரில் ஏறி முதல் மாடியில் உள்ள தனது அறையின் பால்கனிக்கு சென்றார். அங்குயின் கதவு பூட்டப்பட்டிருந்தது. எனவே அங்கிருந்து வெளியே வர மாடியில் இருந்து குதித்தார்.
அப்போது வாசலில் உள்ள இரும்பு கதவு மீது விழுந்தார். அவரது முதுகில் கதவின் இரும்பு கம்பி பாய்ந்தது. அவரால் அதில் இருந்து விடுபட முடியவில்லை. வலியால் துடித்துக் கொண்டிருந்த அவரை நள்ளிரவு 1 மணியளவில் அந்த வழியாக வந்த ஒருவர் பார்த்து நுங்கம்பாக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று மீட்டனர்.
அவருக்கு உடனடியாக சி.டி.ஸ்கேன் எடுக்கப்பட்டது. உடனடியாக 3 அடி நீளமும், 3 செ.மீ. அகலமும் கொண்ட கம்பி முதுகில் 1 அடி ஆழத்துக்கு 7-வது விலா எலும்பு பகுதியில் பாய்ந்து இருந்தது.
அந்த கம்பியின் முனை வளைந்த நிலையில் ‘கொக்கி’ போன்று டிசைன் செய்யப்பட்டிருந்தது. அந்த கொக்கி முதுகு பகுதிக்குள் இருந்தது. நுரையீரலின் இடதுபுறத்தில் குத்தி ஊடுருவி இதயம் மற்றும் மூச்சுக்குழல் பகுதி வரை சென்று இருந்தது. இதையடுத்து அவர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மிகவும் ஆபத்தான ஆபரேசனை 3 டாக்டர்கள் வெற்றிகரமாக செய்து முடித்தனர். முதுகில் பாய்ந்திருந்த இரும்பு கம்பியை வெளியே இழுத்து அகற்றினர். தற்போது வாலிபர் வெற்றிவேல் நலமாக இருக்கிறார். ஒரு வார சிகிச்சைக்கு பின் வீடு திரும்புகிறார். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்