என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IT company"

    • ஆனந்தன் சேலையால் தூக்கில் தொங்கி கொண்டு இருப்பது தெரியவந்தது.
    • இது குறித்து சூரம்பட்டிபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி குமலன் ெதருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு ஆனந்தன் (23), என்ற மகனும் காவியா (19) என்ற மகளும் உள்ளனர். ஆனந்தன் கோவையில் உள்ள ஒரு ஐ.டி. கம்பெனியில் கடந்த 1 வருடமாக வேலைப்பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் ஆனந்தன் கடந்த 35 நாட்களாக வீட்டில் இருந்தப்படி கம்பெனி வேலைகளை செய்து வந்தார். சம்பவத்தன்று செல்வராஜ், அவரது மனைவி ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர்.

    மகன் ஆனந்தன் மட்டும் வீட்டில் இருந்தப்படி கம்பெனி வேலை செய்து கொண்டு இருந்தார்.

    இந்த நிலையில் செல்வராஜ் மதியம் தனது மகனுக்கு போன்செய்தார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. ஏற்கனவே ஆனந்தன் மன அழுத்தம் காரணமாக 3முறை தற்கொலைக்கு முயற்சி செய்ததால் சந்தேகம் அடைந்த செல்வராஜ் வீட்டிற்கு வந்தார்.

    அப்போது வீடு உள் பக்கமாக தாழ்போடப்பட்டு இருந்தது. இதையடுத்து ஜன்னல்வழியாக பார்த்த போது ஆனந்தன் சேலையால் தூக்கில் தொங்கி கொண்டு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே ஆனந்தன இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து சூரம்பட்டிபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 15 லட்சம் ஷேர்களை நாராயண மூர்த்தி தற்போது அன்பளிப்பாக வழங்கி இருக்கிறார்
    • இன்போசிஸ் நிறுவனத்தில் நாராயண மூர்த்தியின் பங்கு 0.40 சதவீதத்தில் இருந்து 0.36 சதவீதமாக குறைந்துள்ளது

    இன்போசிஸ் (infosys) ஐ.டி.நிறுவனம் 1981- ல் தொடங்கப்பட்டது. இந்தியாவின் பிரபல நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இதன் ' நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தி.

    இந்தியாவின் முக்கிய கோடீஸ்வரர்களில் இவர் முக்கியமானவர். இவரது மகன் ரோஹன் மூர்த்தி - அபர்ணா தம்பதிகளுக்கு கடந்த நவம்வர் மாதம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஏககிரா ரோஹன் என பெயர் சூட்டப்பட்டது.

    இந்த குழந்த மூலம் நாராயண மூர்த்தி தாத்தா ஆனார். இந்நிலையில் தனது 4 மாத பேரன் ஏககிரா ரோஹனுக்கு இன்போசிஸ் நிறுவனத்தின் 15 லட்சம் ஷேர்களை நாராயண மூர்த்தி தற்போது அன்பளிப்பாக வழங்கி இருக்கிறார்.

    இந்த ஷேர்களின் மொத்த மதிப்பு ரூ.240 கோடி. இதன் மூலம் இன்போசிஸ் நிறுவனத்தின் 0.04 சதவீத பங்குகளுக்கு ஏககிரா ரோஹன் உரிமையாளர் ஆகியுள்ளார். மேலும், இன்போசிஸ் நிறுவனத்தில் நாராயண மூர்த்தியின் பங்கு 0.40 சதவீதத்தில் இருந்து 0.36 சதவீதமாக குறைந்துள்ளது.

    • கிக்லீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் 1200 ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் இருந்துள்ளது.
    • ரவிச்சந்திராவின் வீட்டிற்கு நடு இரவில் வந்த மர்மநபர்கள் அவரையும் அவரது தாயாரையும் தாக்கியுள்ளனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இயங்கி வரும் ஐடி நிறுவனமான கிக்லீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரா ரெட்டி ஜூலை 10 தேதி மர்மநபர்களால் கடத்தப்பட்டார்.

    ரவிச்சந்திராவின் வீட்டிற்கு நடு இரவில் வந்த மர்மநபர்கள் அவரையும் அவரது தாயாரையும் தாக்கியுள்ளனர். பின்னர் ரவிச்சந்திராவை அந்த கும்பல் கடத்தி சென்றனர். மேலும் அவரது வீட்டில் இருந்த 83 மடிக்கணினிகளையும் அந்த கும்பல் திருடி சென்றுள்ளது.

    இது தொடர்பாக ரவிசந்திராவின் தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, ரவிச்சந்திராவை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில், 4 நாட்களுக்கு பின்பு போலீசார் ரவிச்சந்திராவை ஸ்ரீசைலம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் கண்டுபிடித்து மீட்டனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதில், ரவிச்சந்திரா சி.இ.ஓ.வாக உள்ள கிக்லீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 5 ஊழியர்களும் அடங்கும் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 84 மடிக்கணினிகள், 6 கார்கள், 5 தொலைப்பேசிகள் மற்றும் 3 பாஸ்போர்ட்டுகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    நிதி சிக்கல் காரணமாக அவரது கிக்லீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் 1200 ஊழியர்களுக்கு சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் கோபமடைந்த சில ஊழியர்கள் தான் ரவிச்சந்திராவை திட்டம் போட்டு கடத்தியுள்ளனர் என்று காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • 2017 - 2022 வரை இந்த வரி ஏய்ப்பு நடந்ததாக ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் தகவல்.
    • இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் இன்று 1% சரிவை சந்தித்தன.

    இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ், ரூ.32,000 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

    2017 ஜூலையில் இருந்து 2022 மார்ச் மாதம் வரை அந்நிறுவனத்தின் வெளிநாட்டு கிளைகளில் இருந்து சேவைகளை இறக்குமதி செய்ததில் இந்த வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதாக ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக இன்ஃபோசிஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், "அனைத்து ஜிஎஸ்டி நிலுவைத் தொகையையும் தனது நிறுவனம் செலுத்தியுள்ளது என்றும் இந்திய நிறுவனத்திற்கு வெளிநாட்டு கிளைகள் வழங்கும் சேவைகள் ஜிஎஸ்டி வரி விதிமுறைகளுக்குள் வருவதில்லை" என்றும் தெரிவித்துள்ளது.

    இன்ஃபோசிஸ் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக அறிக்கை வெளியான நிலையில், அந்நிறுவனத்தின் பங்குகள் இன்று 1% சரிவை சந்தித்துள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காக்னிசன்ட்டின் குற்றச்சாட்டுக்களை இன்போசிஸ் நிறுவனம் மறுத்துள்ளது.
    • வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று இன்போசிஸ் தெரிவித்துள்ளது.

    ஹெல்த்கேர் இன்சூரன்ஸ் மென்பொருள் தொடர்பான வர்த்தக ரகசியங்களை திருடியதாக இன்போசிஸ் நிறுவனத்தின் மீது டெக்ஸாஸ் பெடரல் நீதிமன்றத்தில் காக்னிசன்ட்டின் துணை நிறுவனமான டிரிசெட்டோ வழக்கு தொடர்ந்துள்ளது.

    ஹெல்த்கேர் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் நிர்வாக பணிகளுக்கு காக்னிசன்ட்டின் மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இதனை அதன் துணை நிறுவனமான டிரிசெட்டோ தயாரித்துள்ளது.

    காக்னிசன்ட்டின் இந்த மென்பொருளை அனுமதியின்றி பயன்படுத்தி போட்டியாக மற்றொரு தயாரிப்பை இன்போசிஸ் தயாரித்துள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    ஆனால் காக்னிசன்ட்டின் குற்றச்சாட்டுக்களை இன்போசிஸ் நிறுவனம் முற்றிலுமாக மறுத்துள்ளது. மேலும், காக்னிசன்ட் தொடர்ந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று இன்போசிஸ் தெரிவித்துள்ளது.

    • 100 ஜூனியர் டெவலப்பர் பதவிகளுக்காக ஆட்சேர்ப்புக்காக வாக்-இன் நேர்காணல் நடந்துள்ளது.
    • இன்ஜினீயரிங் பட்டதாரிகள் வாசல் வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    மக்கள் தொகையில் கணிசமான அளவு இளைஞர்களைக் கொண்டுள்ள இந்தியாவில் வேலையின்மை பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. குறிப்பாக அரசு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை (ஐடி) வேலைக்காக இளைஞர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் சுமார் 3000 க்கும் மேற்பட்ட இன்ஜினீயரிங் பட்டதாரிகள் வேலைக்காக ஐடி நிறுவன வாசலைக் கடந்து சாலை வரை வரிசையில் நின்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    மகாராஷ்டிர மாநிலம் புனேவை தளமாகக் கொண்ட ஒரு ஐடி நிறுவனத்திற்கு வெளியே 3,000 க்கும் மேற்பட்ட இன்ஜினீயரிங் பட்டதாரிகள் வாக்-இன் நேர்காணலுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

    100 ஜூனியர் டெவலப்பர் பதவிகளுக்காக ஆட்சேர்ப்புக்காக நிறுவனம், வாக் -இன் நேர்காணலுக்கு அழைப்பு விதித்திருந்த நிலையில் 3000 க்கும் மேற்பட்ட வேலையில்லா பட்டதாரிகள் அங்கு படையெடுத்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் விவாதப் பொருளாக மாறி வருகிறது.

    • படித்த இளைஞர்களுக்கு அவர்களின் தகுதிக்கு உண்டான வேலைகள் தற்போது கிடைப்பதில்லை.
    • 3000 இளைஞர்கள் இந்த நேர்காணலுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. படித்த இளைஞர்களுக்கு தகுதிக்கு உண்டான வேலைகள் கிடைக்காததால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. .

    இந்நிலையில், புனேவில் உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு வெளியே வாக்-இன் நேர்காணலுக்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வாசலில் வரிசையாக காத்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    100 காலி பணியிடங்களுக்காக கிட்டத்தட்ட 3000 இளைஞர்கள் இந்த நேர்காணலுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    ×