என் மலர்
நீங்கள் தேடியது "Jail Department"
- சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு, தமிழக முதல்வரின் சிறப்பு பதக்கம் அறிவிக்கப்பட்டது.
- இதற்காக 15 பெண் காவலர்கள் உள்பட 60 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
மதுரை
தமிழக சிறைத்துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு, தமிழக முதல்வரின் சிறப்பு பதக்கம் அறிவிக்கப்பட்டது. இதற்காக 15 பெண் காவலர்கள் உள்பட 60 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மதுரை சரகத்தில் மட்டும் 2 பெண்கள் உள்பட 14 சிறை காவலர்களுக்கு சிறப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மதுரை மத்திய சிறை மைதானத்தில் தமிழக அரசின் சிறப்பு விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 16 பேருக்கும் சரக டி.ஐ.ஜி. பழனி பதக்கம் வழங்கி பாராட்டினார். இதில் சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு வசந்த கண்ணன், சிறை அலுவலர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மத்திய சிறை சார்பில் அஸ்தம்பட்டி சிறை முனியப்பன் கோவில் வளாகத்தில் புதிதாக நூலகம் அமைக்கப்பட்டது.
- போலீஸ் போட்டி தேர்வுகள் மற்றும் பொது அறிவு புத்தகங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
சேலம்:
தமிழகம் முழுவதும் சிறைத்துறை சார்பில் நூலகங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. உத்தரவின் பேரில் சேலம் மத்திய சிறை சார்பில் அஸ்தம்பட்டி சிறை முனியப்பன் கோவில் வளாகத்தில் புதிதாக நூலகம் அமைக்கப்பட்டது.
இந்த நூலகத்தை இன்று சிறைத்துறை சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத் திறந்து வைத்தார்.
இங்கு சிறைத்துறை காவலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் போலீஸ் போட்டி தேர்வுகள் மற்றும் பொது அறிவு புத்தகங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக சிறைத்துறை காவலர்கள் அடுத்து போலீஸ் தேர்வுகள் எழுதுவதற்கான புத்தகங்களும் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன. இந்த நூலகத்தில் உள்ள புத்தகங்களை சிறைத்துறை காவலர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு வினோத் கேட்டுக்கொண்டுள்ளார்.
- மதுரை சிறைத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
- வாழ்வாதாரத்திற்காக நல உதவி செய்யப்பட்டது.
மதுரை
மதுரை மத்திய சிறையில் பிரிசன் மினிஸ்ட்ரி ஆப் இந்தியா தமிழக சிறைப்பணி என்.ஜி.ஓ. நிறுவனத்தின் மூலமாக சமீபத்தில் மதுரை மத்திய சிறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை சிறைவாசியாக இருந்து விடுதலையான 2 நபர்களுக்கு அவர்கள் சிறையில் செய்து வந்த பணியின் அடிப்படையில் அவர்கள் வாழ்வாதாரத்திற்காக நல உதவி செய்யப்பட்டது.
அதன்படி அவர்கள் தொழில் செய்யும் வகையில் சலவை பெட்டி மற்றும் தள்ளுவண்டி, இனிப்பகம் நடத்துவதற்கு தேவையான அடுப்பு மற்றும் பாத்திரங்கள் அடங்கிய ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை மதுரை சரக சிறை துறை துணை தலைவர் பழனி, மத்திய சிறை கண்காணிப்பாளர் பொறுப்பு பரசுராமன் ஆகியோர் முன்னிலையில் அகில இந்திய சிறைப் பணிகள் நிறுவனத்தின் தமிழக மாநிலச் செயலாளர் ஜேசு ராஜ் மற்றும் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெனிடிக்ஸ் ஆகியோர் வழங்கினர்.