search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jail term"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெளியில் யாரிடமும் கூறக்கூடாது என்று சிறுமியை மிரட்டியிருக்கிறார்.
    • வழக்கு திருவனந்தபுரம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பள்ளிக்கல் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு 11 மற்றும் 7 வயதில் 2 மகள்கள் உள்ளனர். அவரது கணவருக்கு திடீரென மனநிலை பாதிக்கப்பட்டது.

    இதனால் அந்த பெண், தனது கணவரை பிரிந்துசென்றார். அவர் தனது காதலன் சிசுபாலன் என்பவருடன் குடும்பம் நடத்தி வந்தார். அந்த பெண், 7 வயதான தனது இளைய மகளை மட்டும் தன்னுடன் வைத்திருந்தார். அப்போது அந்த பெண்ணின் காதலன், பெண்ணின் இளைய மகளை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

    இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் கூறியிருக்கிறார். ஆனால் அவர் அதனை கண்டுகொள்ளாமல் இருந்தது மட்டுமின்றி, அதுபற்றி வெளியில் யாரிடமும் கூறக்கூடாது என்று சிறுமியை மிரட்டியிருக்கிறார். இந்நிலையில் அந்த பெண்ணின் மூத்த மகள் தாய் மற்றும் சகோதரி தங்கியிருந்த வீட்டுக்கு சென்றிருக்கிறார்.

    அப்போது அவரிடம் தனக்கு நேர்ந்த விஷயங்களை சிறுமி தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, அதுபற்றி தனது பாட்டியிடம் கூறினார். அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பாட்டி, பள்ளிக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அவரது புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்த சிசுபாலன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு திருவனந்தபுரம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது.

    வழக்கு விசாரணை நடந்துவந்த போதே, சிசுபாலன் தற்கொலை செய்து கொண்டார். இதனால் சிறுமியின் தாய் மீதான வழக்கு விசாரணை மட்டும் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் தற்போது தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி ரேகா, சிறுமியின் தாய்க்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். மேலும் அவருக்கு ரூ20ஆயிரம் அபராதமும் விதித்தார்.

    40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள அந்த பெண்ணின் இரு மகள்களும் தற்போது காப்பகத்தில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 2019-ம் ஆண்டு கடை உரிமையாளரின் 17 வயது மகளை தனது வீட்டிற்கு வரவழைத்தார்.
    • பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ரூ 50 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், ஓங்கோல் மாவட்டம், கனி கிரியை சேர்ந்தவர் மகபூப் பாஷா (வயது 35). இவர் அதே பகுதியில் உள்ள மெக்கானிக் கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

    கடந்த 2019-ம் ஆண்டு கடை உரிமையாளரின் 17 வயது மகளை தனது வீட்டிற்கு வரவழைத்தார். பின்னர் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரது விருப்பத்திற்கு மாறாக பலமுறை பலாத்காரம் செய்தார்.

    இதேபோல் ஐதராபாத் அழைத்துச் சென்றும் அங்கு சிறுமியை பலாத்காரம் செய்தார்.

    இதுகுறித்து சிறுமி அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். ஓங்கோல் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் மெகபூப் பாஷாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த வழக்கு விசாரணை கடந்த 3 ஆண்டுகளாக ஓங்கோல் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்தது. நேற்று வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி சோமசேகர் தீர்ப்பு வழங்கினார்.

    மைனர் பெண்ணை பலாத்காரம் செய்த மகபூப் பாஷாவிற்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ 3 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

    மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ரூ 50 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.

    ×