என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "jain temple"
- சென்னை சூளை பகுதியில் உள்ள ஜெயின் கோவில் அருகே நடத்தப்படும் இறைச்சிக் கடையை அப்புறப்படுத்த வேண்டும்
- இந்த விவகாரம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளை அணுகுவதாக மனுதாரர் தெரிவித்தார்
சென்னை சூளை பகுதியில் உள்ள ஜெயின் கோவில் அருகே நடத்தப்படும் இறைச்சிக் கடையை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறை ஆகியவற்றிற்கு உத்தரவிடக் கோரி, கோவிலை நிர்வகிக்கும் ஸ்ரீ அகில பாரதிய சுத் ஹர்ம் ஜெயின் சன்ஸ்க்ருதி ரக்ஷக் அறக்கட்டளை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், "கோவில் அருகில் இறைச்சிக் கடை அமைக்கக் கூடாது என எந்த சட்டமோ, விதிகளோ இல்லாதபோது நீதிமன்றம் எப்படி உத்தரவிடமுடியும் என கேள்வி எழுப்பினர்.
இதனை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளை அணுகுவதாக கூறிய, மனுதாரர் வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். இதனையடுத்து நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்தது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ள இடத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவுக்கு இறைச்சி கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கருங்கல் பாளையம் காவிரி ரோட்டில் உள்ள ஒரு காலி இடத்தில் ஜெயின் கோவில் உண்டியல் கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
- இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு இந்திரா நகரில் வட இந்தியர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயின் மந்திர் என்ற கோவிலை அப்பகுதியில் கட்டி வழிபட்டு வந்தனர்.
சுப்தேவ்(45) என்பவர் இந்தக் கோவிலின் பூசாரியாக உள்ளார். தினமும் அதிகாலை கோவிலைத் திறந்து பூஜைகள் செய்து இரவு 8 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுவது வழக்கம்.
நேற்று இரவு 8 மணி அளவில் பூஜைகள் முடிந்து சுப்தேவ் கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார். இன்று அதிகாலை 4.45 மணி அளவில் மீண்டும் கோவிலை திறப்பதற்காக சுத்தேவ் வந்தார். கோவில் நுழைவாயில் கதவை திறந்து கோவில் வளாகத்திற்குள் சென்றார்.
அங்கு கருவறையில் உள்ள கதவை திறக்க சென்றபோது ஏற்கனவே கதவு கடப்பாறை கம்பியால் உடைத்து திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே பீரோல் திறக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் கோவில் வளாகத்தில் இருந்த உண்டியல் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உண்டியலில் ரூ.50 ஆயிரம் பணம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் மூலவர் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் நகையும் திருட்டுப் போயிருந்தது.
இது குறித்து சுப்தேவ் ஈரோடு டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் மற்றும் போலீசார் கொள்ளை நடந்த ஜெயின் கோயிலுக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
ஜெயின் கோவில் வளாகத்தில் சிசிடிவி கேமராக்கள் பாதுகாப்பு கருதி பொருத்தப்பட்டு இருந்தது. அந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது நள்ளிரவில் கோவில் வளாகத்திற்குள் 2 மர்ம நபர்கள் உள்ளே நுழைவதும் அவர்கள் உண்டியலை பெயர்த்து எடுத்து செல்வதும் நகைகளை திருடி செல்வதும் பதிவாகி இருந்தது.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு மோப்பநாய் ஜெர்ரி வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இந்நிலையில் இன்று காலை கருங்கல் பாளையம் காவிரி ரோட்டில் உள்ள ஒரு காலி இடத்தில் ஜெயின் கோவில் உண்டியல் கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இரும்பு உண்டியலை அவர்கள் திறக்க முடியாததால் அங்கேயே போட்டு விட்டு சென்றது தெரிய வந்தது. இதனால் உண்டியலில் இருந்த பணம் தப்பியது.
இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துணிகரை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செஞ்சி:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பெரும்புகை கிராமத்தில் பழமை வாய்ந்த பகவான் மல்லிநாதர் ஜெயின் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு அறையில் பல கோடி மதிப்புள்ள 35 ஐம்பொன் சாமி சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் கடந்த மாதம் 16-ந் தேதி மர்ம மனிதர்கள் சிலர் இந்த கோவிலுக்குள் புகுந்தனர். அங்கிருந்த 6 ஐம்பொன் சிலைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். அவற்றின் மதிப்பு ரூ.2 கோடியாகும்.
இந்த கொள்ளை குறித்து செஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடிவந்தனர்.
இந்த நிலையில் செஞ்சி அருகே அனந்தபுரம் செல்லும் வழியில் அத்தியூர் என்ற காட்டுப்பகுதி உள்ளது. அந்த இடத்துக்கு சுரேஷ் என்பவர் சென்றார். அங்கு சாமி சிலைகள் கிடந்தன. அதனை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவர் இது குறித்து அனந்தபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் சிவராஜ் மணிகண்டன், சப்- இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் காட்டுப் பகுதிக்கு விரைந்து சென்றனர்.
அங்கு 4 ஐம்பொன் சிலைகள் கிடந்தன. அதில் 3 புத்தர் சிலைகளும், ஒரு காமாட்சி அம்மன் சிலைகளும் இருந்தது. போலீசார் அந்த சிலைகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த சிலைகள் பெரும்புகை ஜெயின் கோவிலில் திருடப்பட்டவை என்பது தெரிய வந்தது. அந்த சிலைகளை காட்டுப்பகுதியில் வீசி சென்றவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வந்தவாசி அருகே பிருதூர் கிராமத்தில் ஆதிநாதர் ஜெயின் கோவில் உள்ளது. கோவில் பூசாரியாக, அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் (வயது 35) உள்ளார். நேற்று இரவு பூஜை முடித்து விட்டு செல்வராஜ் கோவிலை பூட்டிச் சென்றார்.
நள்ளிரவில் கொள்ளை கும்பல் 8 பூட்டை உடைத்து, கோவிலுக்குள் புகுந்தனர். கருவறையில் இருந்த பித்தளை உலோகத்தாலான 1 அடி மற்றும் அரை அடியுள்ள 2 மகாவீர் சிலைகள் மற்றும் 2 உண்டியல்களை உடைத்து பணத்தையும் கொள்ளையடித்தனர்.
இன்று காலை கோவிலுக்கு வந்த பூசாரி செல்வராஜ், சாமி சிலைகள் மற்றும் உண்டியல் பணம் கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, வந்தவாசி வடக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
டி.எஸ்.பி. பொற்செழியன், இன்ஸ்பெக்டர் கவுரி மற்றும் போலீசார் கோவிலுக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
மேலும், வழக்குப்பதிவு செய்து சிலை திருட்டு கும்பலை பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்