என் மலர்
நீங்கள் தேடியது "Jairam Ramesh"
- தன் அரசியல் பிம்பத்தை பாதுகாக்க மோடி அரசு மௌனம் காக்கிறது.
- நமது ஆயுதப் படைகளின் பதிலடியை கண்டு பெருமிதம் கொள்கிறோம்.
சீன ராணுவத்தின் அத்துமீறலை தடுக்க கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படைகளை மத்திய அரசு குவித்துள்ளது. இதனால் அந்த பகுதியில் 30 மாதங்களுக்கும் மேலாக பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 9 ந்தேதி அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் மோதிக் கொண்டதாகவும், இரு தரப்பிலும் சில வீரர்கள் காயம் அடைந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

உடனடியாக இரு தரப்பினரும் அப்பகுதியிலிருந்து வெளியேறியதாகவும், மீண்டும் அமைதி நிலவ, சீன ராணுவ அதிகாரிகளுடன் இந்திய ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் தகவல் தொடர்பு பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
சீனாவுடனான எல்லைப் பிரச்சினையை மோடி அரசு மூடி மறைக்க முயற்சிக்கிறது. எல்லையில் சீனாவின் நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு விழிப்புடன் செயல்பட கடந்த 2 ஆண்டுகளாக காங்கிரஸ் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் தன் அரசியல் பிம்பத்தை பாதுகாக்க மத்திய அரசு மௌனம் காக்கிறது.
மோடி அரசு இந்த விஷயத்தை மட்டும் அடக்கி வாசிக்க முயற்சிக்கிறது, இதனால் சீனாவின் அடாவடித்தனம் அதிகரித்து வருகிறது. நமது ஆயுதப் படைகளின் துணிச்சலைக் கண்டு நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், எல்லையில் சீனாவின் நடவடிக்கைகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. நாட்டை விட யாரும் பெரியவர்கள் கிடையாது, ஆனால் மோடி ஜி தனது இமேஜைக் காப்பாற்ற நாட்டை ஆபத்தில் ஆழ்த்துகிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்தில் இருக்கலாம்.
- காங்கிரஸ் மட்டுமே தேசிய அரசியல் சக்தியாக இருக்கிறது.
அவந்திபோரா :
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், காஷ்மீரில் உள்ள அவந்திபோராவில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து கூறியதாவது:-
ராகுல் காந்தி, நாடு முழுவதும் இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்தி வருகிற சூழலில், வருகிற பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டணியின் முக்கிய ஆதார மையமாக காங்கிரஸ் இருக்குமா என்று கேட்டால் நிச்சயமாக அதை நான் நம்புகிறேன். இன்றும் நாங்கள் மட்டுமே தேசிய கட்சியாக இருக்கிறோம். (பா.ஜ.க. தவிர்த்து).
நாங்கள் ஒவ்வொரு மாநிலமாக ஆட்சியில் இல்லாமல் போய் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு கிராமத்திலும், தாலுகாவிலும், சிறிய நகரத்திலும், நகரத்திலும் காங்கிரஸ் தொண்டர்களை நீங்கள் பார்க்க முடியும். காங்கிரஸ் குடும்பங்களைப் பார்க்க இயலும்.
பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்தில் இருக்கலாம். ஆனால் காங்கிரஸ் மட்டுமே தேசிய அரசியல் சக்தியாக இருக்கிறது.
நாங்கள் ஆளுகிற மாநிலங்களின் எண்ணிக்கை அல்லது நாங்கள் பெறும் வாக்குகளின் சதவீதத்தை வைத்து எங்கள் செல்வாக்கை அளவிடுவது மிகவும் குறுகிய கண்ணோட்டம் என்று சொல்வேன். காங்கிரசின் சித்தாந்தம், மையம் ஆகும். இது ஒரு மைய-இடதுசாரி கட்சி. ஒவ்வொரு கட்சியும் காங்கிரசின் கண்ணோட்டத்தை சுற்றி வருகின்றன.
எனவே நாங்கள் ஆதார மையமாக இருப்போம். பா.ஜ.க.வை எதிர்கொள்ள வேண்டும் என்றால், அது காங்கிரஸ் கூட்டணியால்தான் முடியும்.
காங்கிரஸ் கட்சி தனித்து நின்று பா.ஜ.க.வை எதிர்கொள்ள வேண்டும் என்பதைத்தான் நான் விரும்புவேன். இதுவே எனது லட்சியம். ஆனால் அது 2024 தேர்தலில் அது யதார்த்தமாக இருக்காது.
2029-ம் ஆண்டு தேர்தலில், நாங்கள் எங்கள் சொந்தப் பலத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் போட்டியிட தயார் ஆவோம்.
சில மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அதன் கூட்டணி கட்சிகளுக்கு மிக அதிக இடம் கொடுத்திருக்கிறது. இது கட்சியின் கட்டமைப்புக்கு பாதிப்பாக அமைந்து விடும்.
ராகுல் காந்தியின் செய்தி, முதலில் கட்சியை கட்டமையுங்கள். அதிகாரம் தொடர்ந்து வரும் என்பதுதான். ராகுல் காந்தியின் பார்வை சரியானது.
நீண்ட காலம் ஆட்சிப்பொறுப்பில் இருந்தது. கட்சி அமைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை ஒரு ஊக்க சக்தியாக அமைந்துள்ளது. அது நிலைத்து நிற்க வேண்டும்.
இந்திய ஒற்றுமை யாத்திரை ஒரு நிகழ்வு அல்ல. இது ஒரு இயக்கம். இதை ஒரு இயக்கமாக பார்க்க வேண்டும் என்றால் அதை நாங்கள் ஒரு இயக்கமாக நடத்தியாக வேண்டும்.
இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு பிந்தைய காங்கிரஸ் கட்சி முற்றிலும் மாறுபட்ட காங்கிரசாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தாராளமயமாக்கலை காங்கிரஸ் ஆதரிக்கிறது.
- அதானி விவகாரத்தில் நாங்கள் அஞ்சமாட்டோம்.
புதுடெல்லி :
அதானி நிறுவனங்கள் மீதான ஹிண்டன்பர்க் நிறுவன அறிக்கை இந்திய அரசியலில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. பங்குச்சந்தையில் அதானி நிறுவனங்களின் முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என மத்திய அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இது தொடர்பாக பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. இது மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதேநேரம் அதானி விவகாரத்தில் மறைப்பதற்கோ, அஞ்சுவதற்கோ பா.ஜனதாவிடம் எதுவும் இல்லை என உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
இதற்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்து உள்ளது. இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அதானி விவகாரத்தில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றால் பாராளுமன்ற கூட்டு விசாரணைக்குழு அமைக்க தயங்குவது ஏன்?
கூட்டு விசாரணைக்குழு கோரிக்கையை பாராளுமன்றத்தில் எழுப்பக்கூட அவர்கள் அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்பட எங்கள் தலைவர்கள் பாராளுமன்றத்தில் பேசினால், அந்த கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுகின்றன.
அப்படி அதானி விவகாரத்தில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றால், பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை அரசு அனுமதிக்க வேண்டும்.
அதானி விவகாரத்தில் பாரபட்சமற்ற விசாரணை நடத்துமாறு ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் மற்றும் 'செபி' தலைவர் மதாபி புரிக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.
அதானிக்கும், அரசுடனான அவரது நிறுவனங்களின் உறவுகள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்.
அதேநேரம் நாங்கள் எப்போதும் தொழில் முனைவோருக்கு ஆதரவாக இருக்கிறோம். அதுவே பொருளாதார வளர்ச்சிக்கு முன்னோக்கி செல்லும் வழி ஆகும். கண்மூடித்தனமான தனியார்மயமாக்கல் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.
இதைப்போல தாராளமயமாக்கலை காங்கிரஸ் ஆதரிக்கிறது. ஆனால் அது விதிகள் மற்றும் நிறுவனங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும். அவை சுதந்திரமாக செயல்பட வேண்டும். அப்போதுதான் விதிகள் பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான முறையில் பயன்படுத்தப்படும்.
அதானி விவகாரத்தில் நாங்கள் அஞ்சமாட்டோம், தொடர்ந்து குரல் எழுப்புவோம். பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் இருக்கின்றன.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
- அதானி நிறுவனங்கள் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறது.
- பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் தொடர்ந்து பிரச்சினை எழுப்புவோம் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
புதுடெல்லி :
அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் சந்தை ஆய்வு நிறுவனம் பல்வேறு மோசடிக் குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளது. இதுபற்றி பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படாத நிலையில், இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் தொடர்ந்து பிரச்சினை எழுப்புவோம் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
அதன்படி அந்தக் கட்சி, அதானி நிறுவனங்கள் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கும் மத்திய அரசுக்கும் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறது.
அந்த வகையில் அதானி நிறுவனங்கள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி நேற்று 3 முக்கிய கேள்விகள் எழுப்பி உள்ளது.
இதையொட்டி அந்த கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விடுத்துள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:-
இன்று தொடர்ந்து 10-வது நாளாக அதானி நிறுவனங்களின் அற்புதமான வளர்ச்சியில் பிரதமரின் பங்கு குறித்து 3 முக்கிய கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன. உங்கள் மவுனத்தைக் கலையுங்கள், பிரதமர், அவர்களே.
* கவுதம் அதானி, 2017-ம் ஆண்டு மேற்கொண்ட இஸ்ரேல் பயணத்தில் இருந்து, அவர் இந்திய, இஸ்ரேல் ராணுவ உறவில் சக்திவாய்ந்த லாபகரமான பங்களிப்பைக்கொண்டிருக்கிறார். அவர், டிரோன்கள், மின்னணுவியல், சிறிய ரக ஆயுதங்கள், விமான பராமரிப்பு போன்றவற்றை உள்ளடங்கிய இஸ்ரேலிய நிறுவனங்களுடன் கூட்டு திட்டங்களைப் பெற்றிருக்கிறாரே?
* அதானி நிறுவனங்கள், கடந்த சில வருடங்களாக வெளிநாட்டு 'ஷெல்' நிறுவனங்கள் தொடர்பாக நம்பத்தகுந்த குற்றசாட்டுகளை சந்தித்துள்ள நிலையில், இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ உறவை ஒரு கேள்விக்குரிய குழுமத்திடம் ஒப்படைப்பது தேசிய நலனுக்காகவா? உங்களுக்கும், ஆளும் கட்சிக்கும் (பா.ஜ.க.) இதில் ஏதேனும் கைமாறு உண்டா?
* நமது ஆயுதப் படைகளின் அவசரகாலத் தேவைகளை அரசு ஏன் சாதகமாகப் பயன்படுத்தி, எதற்காக புத்தொழில் நிறுவனங்கள் ('ஸ்டார்ட்-அப்'கள்) மற்றும் நிறுவப்பட்ட இந்திய நிறுவனங்களின் இழப்பில், அதானி டிரோனின் ஏகபோக ஆதிக்கத்தை எளிதாக்குகிறது?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பா.ஜ.க.வைப் பொறுத்தமட்டில் எங்களுக்கு 2 முகம் இல்லை.
- 2024 தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை நிச்சயம் ஒன்றாக கொண்டு வருவோம்.
புதுடெல்லி :
காங்கிரஸ் கட்சியின் மாநாடு, சத்தீஷ்கார் மாநிலம், ராய்ப்பூரில் வரும் 24-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
இதையொட்டி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களான முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேசும், கே.சி.வேணுகோபால் எம்.பி.யும் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
கே.சி.வேணுகோபால் எம்.பி. கூறியதாவது:-
கட்சியின் முதல் நாள் மாநாட்டின்போது, வழிகாட்டும் குழு கூட்டம் நடைபெறும். இதில் கட்சியின் உயர் அதிகார அமைப்பான காங்கிரஸ் காரிய கமிட்டிக்கு தேர்தல் நடத்தப்படுமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.
அடுத்த ஆண்டு நடக்க உள்ள மக்களவை தேர்தலில், பா.ஜ.க.வை எதிர்த்து களம் இறங்கி, அதை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு கூட்டணியை உருவாக்குவதில் காங்கிரஸ் கட்சிக்கு அதன் பங்கு தெரியும்.
காங்கிரஸ் கட்சி அதற்கான முயற்சியை ஏற்கனவே எடுத்துள்ளது. அது பல்வேறு அரசியல் கட்சிகளுடனும் தொடர்பில் உள்ளது. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் காங்கிரஸ் கட்சியின் தெள்ளத்தெளிவான முயற்சி உள்ளது. 2024 தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை நிச்சயம் ஒன்றாக கொண்டு வருவோம்.
இந்திய ஒற்றுமை யாத்திரை அளித்துள்ள உணர்வுகளின் பிரதிபலிப்பாகவும், உதய்பூர் சிந்தனை அமர்வின் நீட்டிப்பாகவும் ராய்ப்பூர் காங்கிரஸ் மாநாடு அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை முக்கியம் என்பதை காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொள்கிறது. இது குறித்து ராய்ப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் விவாதிக்கப்படும்.
எதிர்க்கட்சிகள் அணியை நாங்கள்தான் தலைமை தாங்கி நடத்த வேண்டும் என்று யாரும் சான்று அளிக்கத்தேவையில்லை. ஏனென்றால், காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சிகள் ஒற்றுமை வெற்றி பெறாது.
எனவே நாங்கள் நிதிஷ்குமார் கருத்தை வரவேற்கிறோம். கே.சி.வேணுகோபால் கூறியது போல இதுபற்றியும், 2024 தேர்தலில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் ராய்ப்பூர் மாநாட்டில் விவாதிக்கப்படும்.
அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக பல மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. வலுவான காங்கிரஸ் இல்லாமல், வலுவான எதிர்க்கட்சிகள் ஒன்றுமை சாத்தியம் இல்லை.
இந்திய ஒற்றுமை யாத்திரை, இந்திய அரசியலுக்கான மாற்றுருவாக்கத்துக்கான தருணம், அதை நிதிஷ்குமார் ஒப்புக்கொண்டிருக்கிறார். நாங்களும் இதை வரவேற்கிறோம். எங்கள் பங்களிப்பை நாங்கள் நன்றாக அறிந்திருக்கிறோம். எந்த இடத்திலும் பா.ஜ.க.வுடன் சமரசம் செய்து கொள்ளாத ஒரே அரசியல் கட்சி காங்கிரஸ்தான். சில கட்சிகள் மல்லிகார்ஜூன கார்கே நடத்திய கூட்டத்துக்கு வந்துள்ளன. ஆனால் அவற்றின் செயல்பாடுகள் ஆளும் கட்சிக்கு சாதகமாக உள்ளன. பா.ஜ.க.வைப் பொறுத்தமட்டில் எங்களுக்கு 2 முகம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்.
- கட்சியை வலுப்படுத்த வேண்டும்.
புதுடெல்லி :
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. இருப்பினும், மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். கட்சியை வலுப்படுத்த வேண்டும்.
திரிபுராவில், வலிமையான கூட்டணி அமைத்ததால், ஆட்சி அமைக்கும் நிலையில் இருந்தோம். ஆனால், அந்த நம்பிக்கை நனவாகவில்லை.
மேலிட தலைவர்கள் பிரசாரம் செய்யாததால்தான், வடகிழக்கில் தோல்வி ஏற்பட்டதாக கூறுவது தவறு.
அதே சமயத்தில், பல மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் ஊக்கம் அளிக்கிறது. குறிப்பாக, மேற்கு வங்காள வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. மராட்டியத்தில், 30 ஆண்டுகளுக்கு பிறகு, பா.ஜனதா-ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் வெற்றி பெற்றுள்ளோம். தமிழ்பாரா்டில் எங்கள் மூத்த தலைவர் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அதானி நிறுவன விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி 93 கேள்விகள் எழுப்பி உள்ளன.
- பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை முற்றிலும் அவசியம்.
புதுடெல்லி :
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஜெய்ராம் ரமேஷ் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது தன்னிடம் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து, அவர் கூறியதாவது:-
அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்வதற்கு காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சி அணி அமைவது சாத்தியம் இல்லை. எதிர்க்கட்சிகள் கூட்டணி உருவானால், அதில் காங்கிரஸ் முக்கிய பங்கு வகிக்கும்.
ஆனாலும் இதையெல்லாம் பேசுவதற்கு காலம் வந்து விடவில்லை.
இப்போதைக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னுரிமை, வரவுள்ள கர்நாடக சட்டசபை தேர்தலும், அதைத் தொடர்ந்து தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் மாநிலங்களின் சட்டசபை தேர்தலும்தான். நாங்கள் இதில் கவனம்செலுத்துவோம். பாராளுமன்ற தேர்தல் பற்றி அப்புறம் பார்ப்போம்.
திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சியின் நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைக் குலைக்க முடியுமா என்று கேட்கிறீர்கள். திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சியினர் சந்திக்கின்றனர். மூன்றாது அணி, நான்காவது அணி அமைப்பது தொடரலாம். ஆனால் எதிர்க்கட்சியில் காங்கிரஸ் இருப்பது அவசியம்.
இப்போது அரசியல் கட்சி தலைவர்களுடன் சந்திப்பு தொடரும்,
எந்த எதிர்க்கட்சி அணியைப் பொறுத்தமட்டிலும் அதற்கு வலுவான காங்கிரஸ் தேவை.
பாராளுமன்ற தேர்தலைப் பொறுத்தமட்டில், கட்சி தலைவர் கார்கேயும், மூத்த தலைவர்களும் என்ன யுக்திகள் வேண்டுமோ அதை வகுப்பார்கள். கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.
அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டங்களில் திரிணாமுல் காங்கிரஸ் இடம் பெறவில்லையே என கேட்கிறீர்கள். நான் அவ்வாறு கருதவில்லை. அதற்கென்று கொள்கைகள் இருக்கும். அதற்கு மேல் நான் இதில் சொல்ல விரும்பவில்லை.
அதானி விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என்பதில் 16 கட்சிகள் ஒன்றுபட்டுள்ளன.
அமலாக்கப்பிரிவு இயக்குனரகத்துக்கு எழுதிய கடிதத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி கையெழுத்து போடவில்லை. ஆனால் அவர்கள் ஆதரவு தரத்தான் செய்கிறார்கள்.
அதானி நிறுவன விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி 93 கேள்விகள் எழுப்பி உள்ளன. 100 என்ற எண்ணிக்கையை அடைவோம். பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை முற்றிலும் அவசியம். அதற்கு சுப்ரீம் கோர்ட்டு விசாரணை மாற்று இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- ராகுல்காந்தி மன்னிப்பு கேட்பது பற்றிய பேச்சுக்கே இடமில்லை.
- பாராளுமன்ற கூட்டுக்குழு கோரிக்கை, பேச்சுவார்த்தைக்கு அப்பாற்பட்டது.
புதுடெல்லி :
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
அதானி பிரச்சினையில், கடந்த பிப்ரவரி 5-ந் தேதியில் இருந்து மத்திய அரசுக்கு இதுவரை 99 கேள்விகள் கேட்டுள்ளோம். இறுதியாக 100-வது கேள்வி கேட்கிறோம்.
விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி, தேசநலனுக்காக செயல்படுவீர்களா? என்று கேட்கிறோம். அதானி விவகாரத்தில், கடந்த 2-ந் தேதி, சுப்ரீம் கோர்ட்டு ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. ஆனால், அக்குழுவுக்கு விசாரணை குழுக்கள் மீது முறைப்படியான அதிகாரவரம்பு கிடையாது.
நண்பர்களுடனான நெருக்கம் பற்றியோ, நண்பர்களை செழிப்பாக்க ஆட்சியை பயன்படுத்தியது பற்றியோ விசாரிக்க நிபுணர் குழுவுக்கு அதிகாரம் இல்லை. அக்குழு, அதானிக்கு நற்சான்றிதழ் அளிக்கும் குழுவாகவே இருக்கும்.
நீங்கள் எதிர்க்கட்சிகள் மீதும், சிவில் அமைப்புகள் மீதும், சுதந்திரமான தொழில் நிறுவனங்கள் மீதும் விசாரணை அமைப்புகளை பயன்படுத்துகிறீர்கள். அதே தீவிரத்துடன், 1947-ம் ஆண்டுக்கு பிறகு நடந்த பெரிய ஊழலான அதானி ஊழலை விசாரிக்க அந்த விசாரணை அமைப்புகளை பயன்படுத்துங்கள் என்று கேட்கிறோம்.
எனவே, இந்த ஊழல் தொடர்பான அனைத்து அம்சங்களையும் விரிவாக விசாரிக்க பாராளுமன்ற கூட்டுக்குழுதான் தேவை. முந்தைய பங்குச்சந்தை ஊழல்களை விசாரிக்க பாராளுமன்ற கூட்டுக்குழுவைத்தான் காங்கிரஸ் அரசுகளும், பா.ஜனதா அரசுகளும் அமைத்தன.
ஆனால், பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரிக்கையை எதிர்க்கட்சிகள் கைவிட்டால், ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை தாங்கள் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு சொல்கிறது.
ராகுல்காந்தி மன்னிப்பு கேட்பது பற்றிய பேச்சுக்கே இடமில்லை. ஆனால், பாராளுமன்ற கூட்டுக்குழு கோரிக்கை, பேச்சுவார்த்தைக்கு அப்பாற்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 19 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளன.
- பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடர்ந்து முடங்கும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
புதுடெல்லி :
பிரபல தொழில் அதிபர் அதானியின் நிறுவனங்கள் பங்கு சந்தையில் முறைகேடுகள் செய்ததாகவும், கணக்குகளில் மோசடி செய்ததாகவும் ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டியிருந்தது.
இந்த விவகாரம் இந்திய அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. இந்த விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடர்ந்து முடங்கி வருகிறது.
இந்த நிலையில் அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், '19 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளன. அதானி விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. நாங்கள் எங்கள் கோரிக்கையை தொடர்வோம்' என திட்டவட்டமாக கூறினார்.
அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே எந்தவித தகவல் பரிமாற்றமும் இலலை என கூறிய அவர், அதற்காக ஆளுங்கட்சி முயற்சிக்கவும் இல்லை என்றும் தெரிவித்தார்.
வனப்பாதுகாப்பு திருத்தச்சட்டம் 2023 குறித்த கேள்விக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில் அளிக்கையில், 'வனப்பாதுகாப்பு திருத்தச்சட்டம் எனது தலைமையிலான பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் அது தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. அனைத்து சுற்றுச்சூழல் மற்றும் வனச்சட்டங்களை பலவீனப்படுத்தும் நோக்கில் ஒரு நிகழ்ச்சி நிரல் அரசுக்கு இருக்கிறது' என்று குற்றம் சாட்டினார்.
அதானி விவகாரத்தில் தங்கள் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்துவோம் என காங்கிரஸ் கட்சி கூறியிருப்பதன் மூலம், பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடர்ந்து முடங்கும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
- 261 வாரங்களில் 261 வாக்குறுதிகளை நிறைவேற்றினோம்.
- பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தி இருக்கிறோம்.
பெங்களூரு :
பிரதமர் மோடி நேற்று கர்நாடக பா.ஜனதா தொண்டர்களிடையே காணொலி மூலம் பேசினார். இதில் காங்கிரஸ் ஊழல் கட்சி என்று சாடினார். இதற்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
உள்துறை மந்திரி அமித்ஷா, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகிஆதித்யநாத் ஆகியோருக்கு அடுத்ததாக பிரதமர் மோடி தற்போது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார். வருகிற 10-ந் தேதி 40 சதவீத கமிஷன் பா.ஜனதா ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர கர்நாடக மக்கள் உத்தரவாதம் அளிப்பார்கள். ராஜஸ்தான், இமாசல பிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களை போல் கர்நாடகத்தில் ஆட்சிக்கு வந்த அடுத்த சில நாட்களில் காங்கிரசின் உத்தரவாத திட்டங்களை அமல்படுத்துவோம்.
கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடகத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பா.ஜனதா ஆபரேஷன் தாமரை மூலம் கவிழ்ப்பதற்கு முன் 2013 முதல் 2018-ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. அப்போது நாங்கள் மக்களுக்கு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றினோம். நிலையான ஆட்சியை நடத்தினோம்.
261 வாரங்களில் 261 வாக்குறுதிகளை நிறைவேற்றினோம். அதனால் காங்கிரஸ் அளித்துள்ள உத்தரவாத திட்டங்கள் நிச்சயம் செயல்படுத்துவோம். ராஜஸ்தானில் நாங்கள் அளித்த வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம். இந்திரா காந்தி நகர வேலை உறுதி திட்டம், சுகாதார உரிமை திட்டத்தை அமல்படுத்தியுள்ளோம்.
சிரஞ்சீவி திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் ரூ.25 லட்சம் காப்பீடு, ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு திட்டத்தை அமல்படுத்தியுள்ளோம். சத்தீஷ்காரில் ரூ.9 ஆயிரத்து 270 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்கப்படுகிறது. ராஜீவ்காந்தி கிசான் நியாய் திட்டத்தின் மூலம் ஏக்கருக்கு ரூ.9 ஆயிரம் உதவித்தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
இமாசல பிரதேசத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று கூறினோம். அந்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம். பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தி இருக்கிறோம்.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.
- பிரதமரின் மனதின் குரல் 100-வது நிகழ்ச்சி, மிகுந்த ஆரவாரத்துடன் அறிவிக்கப்படுகிறது.
- ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம், மனதின் குரல் நிகழ்ச்சியின் தாக்கம் பற்றி ஆய்வு நடத்துகிறது.
புதுடெல்லி :
பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பப்பட்டது. இதையொட்டி, அவரை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பிரதமரின் மனதின் குரல் 100-வது நிகழ்ச்சி, மிகுந்த ஆரவாரத்துடன் அறிவிக்கப்படுகிறது. ஆனால், சீனா, அதானி, அதிகரித்து வரும் பொருளாதார சமத்துவமின்மை, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை, விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, கர்நாடகா போன்ற பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் நடக்கும் ஊழல், பா.ஜனதாவுடன் மோசடியாளர்களுக்கு உள்ள நெருக்கம் போன்ற முக்கியமான பிரச்சினைகளில் 'மவுனத்தின் குரல்' ஆக அவர் இருந்து விடுகிறார்.
ரோதக்கில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம், மனதின் குரல் நிகழ்ச்சியின் தாக்கம் பற்றி ஆய்வு நடத்துகிறது.
ஆனால், அதன் இயக்குனரின் கல்வித்தகுதி பற்றி மத்திய கல்வி அமைச்சகமே கேள்வி எழுப்பி இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அரசு வேலைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தானே சம்பளம் கொடுப்பதுபோல் மோடி நடந்து கொள்கிறார்.
- நிர்வாகத்தை கீழ்நிலைக்கு கொண்டு சென்று விட்டார்.
புதுடெல்லி :
பிரதமர் மோடி 'வேலைவாய்ப்பு திருவிழா' நடத்தியதை கிண்டல் செய்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், தனது 'டுவிட்டர்' பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
'வேலைவாய்ப்பு திருவிழா' மூலம் அரசு நிர்வாகத்தை முன்எப்போதும் இல்லாத அளவுக்கு தனிப்பட்ட சொத்தாக பிரதமர் மோடி மாற்றி விட்டார். நிர்வாகத்தை கீழ்நிலைக்கு கொண்டு சென்று விட்டார். இந்த வேலைவாய்ப்புகளை அவரே உருவாக்கியது போலவும், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அவரே சம்பளம் கொடுப்பது போலவும், தேர்வு செய்யப்பட்டவர்கள் தனக்கு மட்டுமே நன்றிக்கடன்பட்டவர்கள் என்று நினைக்க வேண்டும் என்பது போலவும் அவர் நடந்து கொள்கிறார்.
ஆனால், அரசு மற்றும் தனியார் துறையில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை அழித்தவரே பிரதமர் மோடிதான் என்பதை வேலை தேடும் இளைஞர்கள் அறிவார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது பதிவில் கூறியிருப்பதாவது:-
ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு அளிப்பதாக உறுதி அளித்த பிரதமர் மோடி, கடந்த 9 ஆண்டுகளில் 18 கோடி இளைஞர்களின் கனவுகளை தகர்த்து விட்டார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.