search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jammu Kashmir Assembly Election"

    • ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலின் மூன்றாவது மற்றும் கடைசி சுற்று வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
    • ஜனநாயகத்தின் திருவிழாவை வெற்றிபெறச் செய்ய அனைத்து வாக்காளர்களும் முன்வந்து வாக்களிக்க வேண்டும்.

    ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி 24 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக கடந்த மாதம் 18-ந்தேதியும், 26 தொகுதிகளுக்கு 2-வது கட்டமாக கடந்த மாதம் 25-ந்தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    இந்த நிலையில் 3வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. 40 தொகுதிகளில் காலை ஏழு மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலின் மூன்றாவது மற்றும் கடைசி சுற்று வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

    ஜனநாயகத்தின் திருவிழாவை வெற்றிபெறச் செய்ய அனைத்து வாக்காளர்களும் முன்வந்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    முதன்முறையாக வாக்களிக்க இருக்கும் இளம் நண்பர்கள், பெண்கள் அதிக அளவில் வாக்களிப்பில் பங்கேற்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • 40 தொகுதிகளுக்கு அக்டோபர் 1-ந் தேதி இறுதிக்கட்ட தேர்தல்.
    • வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 8-ந் தேதி நடக்கிறது.

    ஸ்ரீநகர்:

    90 தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு கடந்த 18-ந்தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. 61 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    2-வது கட்டமாக 26 இடங்களுக்கு கடந்த 25-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 56 சதவீதம் ஓட்டு பதிவாகி இருந்தது.

    3-வது மற்றும் இறுதி கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்டோபர் 1-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடக்கிறது.

    ஜம்மு காஷ்மீரில் இறுதி கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.


    ஹிஸ்புல்லா இயக்க தலைவர் ஹசன் நஸ்ரலிபா இஸ்ரேல் வான் தாக்குதலில் கொல்லப்பட்டதால் முன்னாள் முதல்-மந்திரியும், ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவரான மெகபூபா முப்தி இன்று தனது பிரசார கூட்டத்தை ரத்து செய்துள்ளார். தனது கட்சி பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மக்களுடன் நிற்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

    காஷ்மீரில் பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி அமைத்து களத்தில் நிற்கிறது.

    மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சியும் தனித்து போட்டியிடுகிறது. இதனால் அங்கு மும்முனை போட்டி நிலகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 8-ந் தேதி நடக்கிறது.

    • காஷ்மீர் மக்களுக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
    • பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் வெறுப்பை பரப்புவதிலேயே நம்பிக்கை வைத்திருக்கின்றன.

    காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. இதில் முதல் கட்ட தேர்தல் கடந்த 18-ந்தேதி முடிந்த நிலையில், 2-வது கட்ட வாக்குப்பதிவு நாளை நடக்கிறது.

    2-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. அந்த தொகுதிகளில் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரங்களை மேற்கொண்டனர். அந்தவகையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித்தலைவருமான ராகுல் காந்தி பூஞ்ச் மாவட்டத்தின் சுரான்கோட் தொகுதியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி வெற்றி பெற்று ஆசி அமைத்தால், ஜம்மு காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்படும். குடும்ப தலைவர்களுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை, சுய உதவிக் குழுக்கள் மூலம் ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

    குடும்ப ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில் ரூ.25 லட்சம் வரை மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் அமல்படுத்தப்படும். ஒவ்வொரு தாலுகாவிற்கும் ஆம்புலன்ஸ் மற்றும் மொபைல் கிளினிக் தொடங்கப்படும். காஷ்மீர் பண்டிட்களுக்கான மன்மோகன் சிங் திட்டம் முழுவதுமாக செயல்படுத்தப்படும். ஜம்மு காஷ்மீரில் காலியாக உள்ள 1 லட்சம் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படுவதோடு, ஒவ்வொரு நபருக்கும் 11 கிலோ இலவச ரேஷன் வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகளை அளித்தார்.

    இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு மாநிலத்தின், மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக தரமிறக்கப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, புதிய மாநிலங்களாக உருவாக்கப்பட்டு இருப்பதை நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால் எந்த மாநிலமும் இப்படி யூனியன் பிரதேசமாக தரமிறக்கப்படவில்லை. ஆனால் முதல் முறையாக காஷ்மீருக்கு அது நேர்ந்திருக்கிறது.

    எனவே காஷ்மீர் மக்களுக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம். அவர்கள் அதைச் செய்யத் தவறினால், நாங்கள் அதைச் செய்வோம்.

    சட்டசபை தேர்தலுக்கு முன்பே மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சி விரும்பியது. ஆனால் அது நடக்கவில்லை. எனவே தேர்தலுக்குப்பிறகு இதற்காக மோடி அரசுக்கு நாங்கள் அழுத்தம் கொடுப்போம்.

    பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் வெறுப்பை பரப்புவதிலேயே நம்பிக்கை வைத்திருக்கின்றன. அதனால்தான் காஷ்மீரிலும், நாட்டிலும் அதை செய்கிறார்கள்.

    எல்லா இடத்திலும் அவர்கள் வெறுப்பை பரப்புகிறார்கள். நாடு முழுவதும் பா.ஜனதாவின் வெறுப்பு சந்தையில் நாங்கள் அன்புக்கடையை திறந்து வருகிறோம். இது ஒரு சித்தாந்தப்போர்.

    கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலும், மணிப்பூரிலிருந்து மகாராஷ்டிரா வரையிலும் பயணம் செய்து, வெறுப்பை விட அன்பே மட்டுமே உதவும் என்ற செய்தியை பரப்பினேன்.

    செல்லும் இடங்களில் எல்லாம் அவர்கள் பிரிவினை அரசியலை செய்கிறார்கள். அதைப்போலவே ரஜோரி-பூஞ்ச் பகுதியில குஜ்ஜார் மற்றும் பகரிகளை பிரித்தார்கள். ஆனால் அவர்களின் இந்த செயல்திட்டத்தை வெற்றிபெற விடமாட்டோம். எல்லாரையும் இணைத்து செயல்படுவோம். தேர்தலில் காங்கிரஸ், தேசிய மாநாடு வேட்பாளர்களை ஆதரித்து எங்களை வெற்றிபெறச்செய்யுங்கள். உங்களை கைவிடமாட்டோம். காஷ்மீர் மக்களுக்கு எது தேவையோ, அதற்காக பாராளுமன்றத்தில் உங்களின் குரலாக ஒலிப்பேன். எப்போதும் உங்களுடன் இருப்பேன்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

    • வருகிற 25-ந்தேதி 2-ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
    • 26 தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது.

    ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1-ந்தேதிகளில் ஓட்டுப்பதிவு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதல் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது.

    அடுத்தக்கட்டமாக வருகிற 25-ந்தேதி 2-ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக அந்த 26 தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது.

    பாரதிய ஜனதா கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. இதனால், பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி ஏற்கனவே ஜம்மு பிராந்தியத்தில் பிரசாரம் செய்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) பிரதமர் மோடி 2-வது முறையாக காஷ்மீர் சென்றுள்ளார்.

    பிரதமர் மோடி முதலில் ஸ்ரீநகரில் நடக்கும் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். பின்னர், கத்ரா நகரில் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தத் தேர்தல் ஜம்மு-காஷ்மீரின் எதிர்காலத்தைத் தேர்ந்தெடுப்பதற்கானது. இந்தத் தேர்தல் 'புதிய ஜம்மு-காஷ்மீரை' புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்வதற்காகும்.

    காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பிடிபி ஆகிய மூன்று குடும்பங்களும் சேர்ந்து பல ஆண்டுகளாக இங்குள்ள மக்களுக்கு காயங்களை ஏற்படுத்தியது. பாஜகவின் சின்னமான தாமரைக்கு அடுத்துள்ள பட்டனை அழுத்துவதன் மூலம் இந்தக் கட்சிகளின் அரசியல் சூரிய அஸ்தமனத்தை உறுதி செய்யும்.

    அது பாஜகதான். இது உங்கள் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து, பல தசாப்தங்களாக பிராந்தியத்துடனான பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜம்மு பகுதியில் மோடியின் பிரசாரம் பா.ஜ.க.வுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும் என்று அந்த கட்சி கருதுகிறது.
    • மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத்சிங் இன்று காஷ்மீரில் பிரசாரம் செய்கிறார்.

    புதுடெல்லி:

    90 தொகுதிகளை கொண்ட ஜம்மு-காஷ்மீர் சட்டசபைக்கு வருகிற 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

    பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது. 51 தொகுதிகளுக்கு அந்த கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

    காங்கிரஸ் கட்சி தேசிய மாநாடு கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் 32 தொகுதியில் நிற்கிறது. தேசிய மாநாட்டு கட்சி 51 இடங்களில், போட்டியிடுகிறது. கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தேசிய பாந்தர்ஸ் கட்சி தலா ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது.

    பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். வருகிற 14-ந்தேதி அவர் ஜம்முவில் பிரசாரம் செய்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    மோடி 2 பொதுக் கூட்டங்களில் பேசுகிறார். ஜம்மு பகுதியில் மோடியின் பிரசாரம் பா.ஜ.க.வுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும் என்று அந்த கட்சி கருதுகிறது.

    பா.ஜ.க.வில் தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று முன்தினமும், நேற்றும் ஜம்முவில் பிரசாரம் செய்து ஆதரவு திரட்டினார். அவர் அடுத்த கட்டமாக ரஜோரி, பூஜ் மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார்.

    மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத்சிங் இன்று காஷ்மீரில் பிரசாரம் செய்கிறார். ராம்பன், பனிஹால் ஆகிய 2 இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.

    • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் புதிதாக 613 வாக்குசாவடிகள் சேர்க்கப்பட்டு உள்ளன.
    • வரைவு வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடும்போது இறுதி வாக்காளர் பட்டியலில் 7 லட்சத்து 72 ஆயிரத்து 872 பேர் அதிகரித்துள்ளனர்.

    ஜம்மு:

    நாட்டின் வட எல்லையான ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கொண்டு வர தேர்தல் ஆணையமும் முயற்சி மேற்கொண்டுள்ளது.

    அதன்படி மாநிலத்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் மற்றும் நீக்கும் பணிகள் நடந்து வந்தன. இப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதனை ஜம்மு-காஷ்மீரின் இணை தேர்தல் அதிகாரி அனில் சல்கோத்ரா வெளியிட்டு பேசியதாவது:-

    ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் மொத்த வாக்காளர்கள் 83 லட்சத்து 59 ஆயிரத்து 771 பேர். இவர்களில் 42 லட்சத்து 91 ஆயிரத்து 687 பேர் ஆண்கள். 40 லட்சத்து 67 ஆயிரத்து 900 பேர் பெண்கள். 184 பேர் இதர பிரிவினர். மொத்த வாக்காளர்களில் 57 ஆயிரத்து 253 பேர் மாற்று திறனாளிகள்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் புதிதாக 613 வாக்குசாவடிகள் சேர்க்கப்பட்டு உள்ளன. வரைவு வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடும்போது இறுதி வாக்காளர் பட்டியலில் 7 லட்சத்து 72 ஆயிரத்து 872 பேர் அதிகரித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குஜராத், இமாச்சல பிரதேசம் மாநிலங்களில் இப்போது சட்டசபை தேர்தல் நடக்கிறது. இவை முடிந்த பின்பு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது.

    அதன் முன்னேற்பாடாகவே இப்போது வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ×