என் மலர்
நீங்கள் தேடியது "Jayanti"
- மதுரை மாநகராட்சி பகுதிகளில் மகாவீர் ஜெயந்தியையொட்டி 4-ந் தேதி இறைச்சி கடைகள் அடைக்கடுகின்றன.
- சுகாதாரச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரை
மதுரை மாநகராட்சி அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மகாவீர் ஜெயந்தியையொட்டி நாளை மறுநாள் (4-ந்தேதி) அனைத்து விதமான இறைச்சி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நாளில் ஆடு, மாடு, கோழி மற்றும் இதர உயிரினங்கள் உள்ளிட்டவற்றின் இறைச்சி விற்பனை செய்யக்கூடாது. இறைச்சி விற்பனை கடைகளை திறந்து வைக்க வும் கூடாது.
தடையை மீறி செயல்படு வர்களின் கடைகளில் உள்ள இறைச்சியை பறிமுதல் செய்வதுடன் பொது சுகாதாரச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கிருஷ்ணர் சிலைகளை வீட்டில் வைத்து கிருஷ்ண–ருக்கு பிடித்த இனிப்பு பதார்த்தங்களை வைத்து வழிபாடு நடத்துவார்கள்.
- இதை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் கிருஷ்ணர் சிலைகள் பல்வேறு வடிவங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
ஆத்தூர்:
இந்துக்களின் மிக முக்கியமான பண்டி–கைகளில் ஒன்றான கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்துக்கள் தங்கள் வீடுகளில் உள்ள குழந்தை–களை கிருஷ்ணர், ராதை போல அலங்கரித்தும் கிருஷ்ணர் சிலைகளை வீட்டில் வைத்து கிருஷ்ண–ருக்கு பிடித்த இனிப்பு பதார்த்தங்களை வைத்து வழிபாடு நடத்துவார்கள்.
மேலும் குழந்தைகளின் பாத சுவடுகளை வீட்டின் நுழைவாயில் இருந்து பூஜை அறை வரை வெள்ளை நிற சுண்ணாம்பால் பதிய வைத்து வழிபாடு நடத்துவார்கள். இதனால் கிருஷ்ணர் தங்கள் இல்லத்துக்குள் வந்து ஆசி வழங்குவா என்பது ஐதீகம்.
இதை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் கிருஷ்ணர் சிலைகள் பல்வேறு வடிவங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணர் வெண்ணை சாப்பிடுவது, கிருஷ்ணர் நின்று கொண்டிருப்பது, புல்லாங்குழல் வாசிப்–பது, பசுமாட்டுடன் இருப்பது போன்ற பல வடிவங்களில் கிருஷ்ணர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும் பள்ளி குழந்தை–களுக்கு தேவையான கிருஷ்ணர் வேடம் அணிய தேவையான அனைத்து உபகரணங்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.