என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "JCP Driver"
- மீட்பு பணியில் ஜே.சி.பி. டிரைவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது.
- தூங்கும்போது பலியானவர்களின் உடல்கள் தான் கண் முன்பு வருகிறது.
வயநாடு:
வயநாடு நிலச்சரிவு மீட்பு பணியில் ஜே.சி.பி. டிரைவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. அவர்கள் பலியானவர்களின் உடல்களை தேடுவதற்காக மீட்பு படையை சேர்ந்த வீரர்களுக்கு தேவையான உதவிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வயநாடு மாவட்டம் சூரல்மலை பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் ஜே.சி.பி. டிரைவர் ஒருவர் கூறியதாவது:-
எனது சொந்த ஊர் கேரள மாநிலம் மேப்பாடி. நிலச்சரிவு ஏற்பட்ட முதல் நாளிலேயே இங்கு மீட்பு பணிக்கு வந்து விட்டோம். அன்று முதல் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
நிலச்சரிவு ஏற்பட்ட மலைப்பகுதி முதல் அனைத்து இடங்களிலும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். இப்போது பலியானவர்களின் உடல்கள் ஏதாவது மண்ணுக்குள் புதைந்து உள்ளதா என்று தேடி வருகிறோம்.
மீட்புபணியில் ஈடுபட்ட பிறகு வீட்டுக்கு சென்று தூங்குவது கொஞ்சம் கஷ்டம் தான். நான் தூங்கி பல நாட்கள் ஆகிறது. நிறைய பேரின் உடல்களை பார்த்துவிட்டேன். எனவே தூங்கும்போது பலியானவர்களின் உடல்கள் தான் எனது கண் முன்பு வருகிறது. எனவே தூங்குவதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
தூக்கம் வராமல் அப்படியே உட்கார்ந்திருப்போம். அல்லது வெளியில் எங்காவது சென்று விடுவோம். ஆனாலும் மீட்பு பணிக்கு காலையில் 6 மணிக்கெல்லாம் வந்து விடுவோம். அப்படியே தூங்க வேண்டும் என்றால் தூக்க மாத்திரை தான் போட வேண்டி இருக்கும்.
இந்த பகுதியில் எங்களுக்கு தெரிந்தவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது. மேலும் எங்களுக்கு தெரிந்த நிறைய பேர் இறந்து விட்டனர். இனி இருப்பவர்கள் பார்த்து இருந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோபாலுக்கு வலிப்பு நோய் பாதிப்பு உள்ளது.
- அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே கோபால் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் மொ டக்குறிச்சியை அடுத்துள்ள எழுமாத்தூர் அய்யகவுண்ட ன்பாளையம் நெறிப்பாறை பகுதியை சேர்ந்தவர்
கோபால் (32). ஜே.சி.பி. டிரைவர். இவரது மனைவி மணிமேக லை (28). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில் கோபாலுக்கு வலிப்பு நோய் பாதிப்பு உள்ளது. காலை வழக்கம் போல வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு கோபால் சென்றார்.
சிறிது நேரத்தில் கோபாலின் உறவினர் ஒருவர் மணிமேகலைக்கு போன் செய்து கூட்டப்பள்ளி வாய்க்கால் அருகே கோபால் மூச்சு பேச்சின்றி, வாயில் நுரை தள்ளிய நிலையில் கீழே விழுந்து கிடப்பதாக கூறியுள்ளார்.
இதையடுத்து மணிமேகலை உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று உறவினர்கள் உதவியுடன் கோபாலை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே கோபால் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து மொடக்கு றிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சக்திவேல் பரமசிவம் என்பவரிடம் ஜேசிபி எந்திர டிைரவராக வேலை செய்து வந்தார்.
- ஜே.சி.பி எந்திர டிரைவர் சக்திவேலை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கூகையூர் போயர் தெருவை சேர்ந்தவர் ராமசாமி இவரது மனைவி வள்ளியம்மாள்(வயது 58), கூலிவேலை செய்து வருகின்றனர். இவருக்கு இந்திரா என்ற மகளும், சக்திவேல் என்ற மகனும் உள்ளனர். மகளை நைனார் பாளையத்தில் திருமணம் செய்து வைத்துள்ளனர். சக்திவேலுக்கு சென்னையை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளனர்.
சக்திவேலின் மனைவி மற்றும் பிள்ளைகள் சென்னையில் அவரது பெற்றோருடன் தங்கி வருகின்றனர். சக்திவேல் கடந்த 4 ஆண்டுகளாக கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா புலிக்கரம்பூர் கிராமத்தை சேர்ந்த பரமசிவம்(43) என்பவரிடம் ஜேசிபி எந்திர டிைரவராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் சக்திவேலுக்கு சரிவர சம்பளம் தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் தற்போது சக்திவேல் டிரைவர் வேலைக்கு செல்லவில்லை. மேலும் சக்திவேல், பரமசிவம் ஆகியோர்களுக்குள் கொடுக்கல், வாங்கல் பிரசினையும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது .
இந்நிலையில் கடந்த 4-ம் தேதி காலை 10.30 மணியளவில் சக்திவேல் தன் வீட்டில் இருந்தபோது, 2 மோட்டார்் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 4 பேர் லஷ்மணபுரம் சாலையில் ஜேசிபி எந்திரம் கவிழ்ந்து விட்டது. அதனால் ஜே.சி.பி எந்திர டிரைவர் சக்திவேலை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதை நம்பிய சக்திவேல் அவர்களுடன் மோட்டார்் சைக்கிளில் சென்றுள்ளார். அதன் பின்னர் சில மணி நேரம் கழித்து சக்திவேலின் தாய்க்கு வந்த போனில் சக்திவேலை கடத்தி விட்டதாகவும், ரூ. 5 லட்சம் பணம் தந்துவிட்டு சக்திவேலை மீட்டு செல்லுங்கள் என தெரிவித்துள்ளனர். மேலும் பணம் கொடுக்கவில்லை என்றால் சக்திவேலை கொலை செய்து விடுவோம் என மிரட்டி உள்ளனர்.
இதுகுறித்து வள்ளியம்மாள் கீழ்குப்பம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மியாடிட் மனோ தலைமையில் தனிப்படை அமைத்து கடத்தப்பட்ட சக்திவேலை தேடி வந்தனர். இந்நிலையில் செல்போன் டவர் மூலம் திட்டக்குடி அருகே புலிக்க ரும்பூர் பரமசிவம் என்பவரது மாடி யில் இருந்த சக்திவேலை மீட்டனர். மேலும் இந்த வழக்கில் ஜேசிபி இயந்திர உரிமையாளர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்த பரமசிவம்(43), அவரது டிரை வர் சுப்ரமணி மகன் ரமேஷ்(36), ஜெயகுமார் மகன் ஜெகதீஷ்(23), ராஜா மகன் ரவி(19), முத்துகிருஷ்ணன் மகன் பெரியசாமி(23), பழனிவேல் மகன் வெற்றிசெல்வன்(19), சவுந்தர்ராஜன் மகன் சந்திரன்(20) மற்றும் பென்னாடம் பகுதியைச் சேர்ந்த தனபால் மகன் தனராஜ் (42) உள்ளிட்ட 8பேரை கீழ்குப்பம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் சின்னசேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்