என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Jewel-money theft"
- பீரோவில் இருந்த நகைகள் மற்றும் பணம் திருட்டு போயிருந்தது.
- சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரணை.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலம் சேரன் நகரை சேர்ந்தவர் பசுபதி. இவரது மனைவி மைதிலி. பசுபதி தர்மபுரியில் டாஸ்மாக் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவருடைய மனைவி மைதிலி அத்திக்கடவு- அவினாசி திட்ட அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் வீட்டில் அனைவரும் வெளியூர் சென்று விட்டனர். நேற்று காலை மைதிலி வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த 37 பவுன் நகைகள் மற்றும் ரூ.4 லட்சம் ரொக்க பணம் திருட்டு போயிருந்தது.
வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்தது. இது குறித்து பெருந்துறை போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதன் பேரில் பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன், போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் வீட்டில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
சி.சி.டி.வி. கேமிரா காட்சியில் கொள்ளை நடந்த அன்று நள்ளிரவில் ஒரு சிகப்பு கலர் காரும், ஒரு மோட்டார் சைக்கிளும் செல்வது பதிவாகி இருந்தது. இதன் பேரில் விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
- பூட்டை உடைத்து துணிகரம்
- போலீசார் விசாரணை
செங்கம்:
செங்கம் அடுத்த தாழையூத்து மற்றும் அதன் அருகே உள்ள போயம்பள்ளி தண்டா பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில்களில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
அதேபோல நேற்று முன்தினம் பொன்னித்தண்டா கிராம பகுதியில் உள்ள கோவிலிலும் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த சம்பவங்கள் குறித்து செங்கம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்