என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewelery robbery"

    • சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் தோட்டத்துக்கு சென்றார்.
    • செயின், மோதிரம் உள்பட 3 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டியை சேர்ந்தவர் விஷ்ணு பிரசாத் (வயது 29). விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் தோட்டத்துக்கு சென்றார். இரவு தோட்டத்து வீட்டில் தங்கினார்.

    நள்ளிரவு விஷ்ணு பிரசாத் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், மோதிரம் உள்பட 3 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    இது குறித்து விஷ்ணு பிரசாத் டவுன் கிழக்கு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விவசாயி வீட்டில் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள். 

    விருதுநகர் அருகே பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள ஆணைக்குட்டத்தை சேர்ந்தவர் ஜெயலட்சுமி(வயது 43). மாற்றுத்திறனாளியான இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் ஜெயலட்சுமியை தாக்கி அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பினர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

    சம்பவத்தன்று போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ராஜபாளையம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக 2 பேர் நின்றிருந்தனர். அவர்களிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனால் அவர்கள் மீது சந்தேகம் வலுத்தது.

    இதையடுத்து போலீசார் 2 பேரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய போது அவர்கள் மதுரை தோப்பூரை சேர்ந்த சசிகுமார்(22), திருநகர் 3-வது ஸ்டாப்பை சேர்ந்த அழகுராஜா(21) எனவும், இவர்கள் ஜெயலட்சுமியிடம் நகையை பறித்தது தெரியவந்தது. 2 பேரையும் ஆமத்தூர் போலீசார் கைது செய்தனர். #tamilnews
    ×