search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewellery shop"

    • பிரபல நகைக்கடைக்குள் நேற்று இரவு 7.30 மணிக்கு முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்தது.
    • கொள்ளை கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் கடை உரிமையாளர் ஜெய் சிங் உயிரிழந்துள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் நகை கடைக்குள் புகுந்து உரிமையாளரை சுட்டுக்கொன்று நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்து தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பிவாண்டி பகுதியில் பிரபல நகைக்கடைக்குள் நேற்று இரவு 7.30 மணிக்கு முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்தது.

    அப்போது, நகைக்கடையில் இருந்தவர்களை சரமாரியாக கொள்ளை கும்பல் தாக்கியது.

    கொள்ளை கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் கடை உரிமையாளர் ஜெய் சிங் உயிரிழந்துள்ளார். அவரது தம்பிக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

    நகைக்கடையில் இருந்த நகைகளை அள்ளிச்சென்ற மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர்.

    வெறும் 4 நிமிடங்களில் நடந்த கொள்ளை சம்பவத்தின் அதிர்ச்சிகர சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

    • ஆஷிஷ் நகைப்பையை பஸ்சில் வைத்து விட்டு உணவு சாப்பிட சென்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து 2 தனிப் படைகள் அமைத்து நகைகளை திருடி சென்றவர்களை தேடி வருகின்றனர்.

    திருப்பதி:

    மும்பையை சேர்ந்தவர் ஆஷிஷ். இவர் அங்குள்ள நகைக்கடை நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

    அடிக்கடி ஐதராபாத், சங்க ரெட்டி வந்து நகை தயாரிப்பாளர்களிடம் இருந்து நகைகளை வாங்கி செல்வது வழக்கம்.

    நேற்று முன்தினம் ஐதராபாத் வந்த ஆஷிஷ் நகை தயாரிப்பாளர்களிடம் இருந்து 4 கிலோ நகைகளை வாங்கினார்.

    பின்னர் ஐதராபாத்தில் இருந்து மும்பை செல்லும் அரசு பஸ்சில் பயணம் செய்தார். அவர் பயணம் செய்த பஸ் சிராக் பள்ளி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட மும்பை ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் உணவு சாப்பிடுவதற்காக தாபாவில் நிறுத்தப்பட்டது.

    ஆஷிஷ் நகைப்பையை பஸ்சில் வைத்து விட்டு உணவு சாப்பிட சென்றார். அப்போது 4 கிலோ தங்க நகையை திருடி சென்று விட்டனர். ஆஷிஷ் திரும்பி வந்து பார்த்தபோது நகை பையை காணவில்லை.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சிராக் பள்ளி போலீசில் புகார் செய்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 2 தனிப் படைகள் அமைத்து நகைகளை திருடி சென்றவர்களை தேடி வருகின்றனர்.

    • வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதா என தீவிர விசாரணை நடத்தினர்.
    • நகை கடைகளில் சோதனை நடந்ததால் மற்ற கடைக்காரர்கள் உடனே கடைகளை மூடி விட்டு சென்றனர்.

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியில் ஏராளமான நகைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    இதில் செஞ்சி சாலையில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் செந்தில்குமார் நகை கடையும், வந்தவாசி சாலையில் பிரபலமான நகைக்கடையும் உள்ளன.

    இந்த கடைகளில் நேற்று தேர்தல் பறக்கும் படை அலுவலர் மற்றும் வருமான வரித்துறை ஆணையாளர் சுப்பிரமணி தலைமையில் 20 பேர் அடங்கிய குழுவினர் திடீர் சோதனை செய்தனர்.

    அப்போது வாக்காளர்களுக்கு வழங்குவதற்காகpe நகைகள் ஏதாவது மொத்தமாக ஆர்டர் செய்யப்பட்டுள்ளதா? நகை கடையில் வருமான வரி முறையாக கட்டப்பட்டுள்ளதா? வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதா என தீவிர விசாரணை நடத்தினர்.

    நேற்று இரவு 7 மணி அளவில் தொடங்கிய சோதனை இரவு வரை தொடர்ந்து நீடித்தது. நகரின் முக்கிய நகை கடைகளில் திடீர் சோதனை நடந்ததால் மற்ற கடைக்காரர்கள் உடனே கடைகளை மூடி விட்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஹந்தாராமின் நகைக்கடைக்குள் இன்று புகுந்த மர்மநபர்கள் 2 பேர் நகை வாங்குவது போல் வாக்குவாதம் செய்தனர்.
    • நகைக்கடைக்குள் பட்டப்பகலில் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கொடிகேஹள்ளி பகுதியில் ஹந்தாராம் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார்.

    ஹந்தாராமின் நகைக்கடைக்குள் இன்று புகுந்த மர்மநபர்கள் 2 பேர் நகை வாங்குவது போல் வாக்குவாதம் செய்தனர். அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்த ஹந்தாராமை நோக்கி சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தடுக்க முயன்ற நகைக்கடை ஊழியர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

    நகைக்கடைக்குள் பட்டப்பகலில் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இக்கடைக்கு திங்கட்கிழமை வாராந்திர விடுமுறை நாளாகும்
    • முன்னதாக கண்காணிப்பு கேமிராவை செயலிழக்க செய்தனர்

    இந்திய தலைநகர் புது டெல்லியின் தென்கிழக்கு பகுதியில் உள்ளது ஜங்க்புரா. ஜங்க்புராவில் உயர் நடுத்தர மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி போகல்.

    இங்குள்ள பிரபல நகைக்கடை உம்ராவ் ஜுவல்லர்ஸ். இக்கடை 4 தளங்களை கொண்டது.

    இக்கடைக்கு வாராந்திர விடுமுறை நாள் திங்கட்கிழமை என்பதால் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை விற்பனை நடைபெற்றது. அதற்கு பிறகு விற்பனை நேரம் முடிந்ததும், கடை உரிமையாளர் கடையை பூட்டி விட்டு சென்றார்.

    இக்கடையை கொள்ளையடிக்க நீண்ட நாட்களாக திட்டமிட்டிருந்த கொள்ளையர்கள், ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்திற்கு மேல், கடை மூடியிருந்த நேரத்தில் கடையின் மேற்கூரைக்கு எப்படியோ வந்தனர். அங்கிருந்து தரைப்பகுதிக்கு வந்திறங்கினர்.

    முன்னதாக அக்கடையின் கண்காணிப்பு கேமிராக்களை திருடர்கள் செயலிழக்க செய்தனர். அதற்கு பிறகு அக்கடையின் தரைதளத்தில் உள்ள "ஸ்ட்ராங் ரூம்" எனப்படும் பாதுகாப்பு பெட்டக அறையில் துளையிட்டனர். அங்கு வைக்கப்பட்டிருந்த நகைகளையும், வெளியில் ஷோ ரூமில் இருந்த நகைகளையும் கொள்ளையடித்து சென்றனர்.

    இன்று காலை கடையை திறந்து பார்த்த உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் கடையில் இருந்த அனைத்து நகைகளும் பறி போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். அவர்கள் அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் விசாரணைக்கு வந்தனர்.

    கொள்ளையர்கள் செயலிழக்க செய்யும் முன்பு வரை கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ள காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். எவரையும் காவலில் எடுக்கவில்லை என்றும் தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

    நேற்று அரியானாவில் உள்ள அம்பாலாவில் ஒரு கூட்டுறவு வங்கியில் இதே போன்று துளையிட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    தவளக்குப்பத்தில் நகைக்கடையில் பூட்டுகளை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் லாக்கரை உடைக்க முடியாததால் பல லட்சம் மதிப்புள்ள நகைகள் தப்பின.

    பாகூர்:

    புதுவை ரெயின்போநகரை சேர்ந்தவர் முகேஷ் (வயது37) இவர் கடந்த 10 ஆண்டுகளாக தவளக்குப்பம்- அபிஷேகப்பாக்கம் மெயின்ரோட்டில் அடகு கடையுடன் கூடிய நகைக்கடையை நடத்தி வருகிறார். நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் முகேஷ் நகைக்கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். வீட்டுக்கு செல்லும் போது நகை மற்றும் பணத்தை லாக்கரில் பூட்டி வைத்து விட்டு சென்றார்.

    இன்றுகாலை முகேஷ் வழக்கம் போல் நகைக்கடையை திறக்க வந்தார். அப்போது நகைக்கடையில் கிரீல்கேட், ஷெட்டர் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு திடுக்கிட்டார். மொத்தம் 8 பூட்டுகளை மர்ம நபர்கள் வெல்டிங் மூலம் உடைத்துள்ளனர். நகைக்கடையில் உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கு பணம் மற்றும்நகை வைத்திருந்த லாக்கரை உடைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் லாக்கர் உடைக்க முடியாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திருப்பி சென்றுள்ளனர்.

    இதனால் லாக்கரில் இருந்த பணம், அடகு நகைகள் மற்றும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நகைகள் என பல லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையர்களிடம் இருந்து தப்பின. இது குறித்து முகேஷ் தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை பதிவு செய்தனர்.

    கொள்ளை முயற்சி நடந்த இடம் எப்போதும் மக்கள் நடமாட்டமுள்ள பகுதியாகும். அப்படி இருக்க மர்ம நபர்கள் துணிச்சலாக வெல்டிங் மெஷினை எடுத்து வந்து பூட்டுகளை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கொள்ளை முயற்சி நடந்த நகைக்கடையில் ஏற்கனவே 7 மாதங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் நகைக்கடையின் பின்பக்கமாக சுவரில் துளைபோட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×