search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewels and money"

    • மோட்டார் சைக்கிளில் வந்து மர்ம கும்பல் நகை-பணத்தை பறித்து சென்றது.
    • வழிப்பறி கொள்ளையர்களின் அட்டூழியத்தை அடக்க வேண்டும்.

    மதுரை

    மதுரை பைக்காரா நாயக்கமார் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் குமார்(வயது50). இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள ரோட்டில் நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 3 பேர் மறித்து அவரை தாக்கினர். தொடர்ந்து அந்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டி குமாரிடம் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம், செல்போனை பறித்து சென்றனர்.

    இந்த சம்பவம் தொட ர்பாக சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை நகரில் கடந்த சில மாதங்களாக தனியாக செல்லும் பெண்கள், முதியவர்களை குறி வைத்து நகை-பணம், செல்போன் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் அணிந்து வரும் கொள்ளையர்கள் பட்டப்பகலில் நகை பறிப்பு, வழிப்பறியில் ஈடுபடுகின்றனர்.

    எனவே போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வழிப்பறி கொள்ளை யர்களின் அட்டூழியத்தை அடக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நகை-பணத்தை திருடிய வீட்டில் மதுபோதையில் தூங்கிய கொள்ளையனை பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
    • போலீசார் கைது செய்து அவர் திருடிய நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    மதுரை

    மதுரை அவனியாபுரம் பராசக்தி நகரை சேர்ந்தவர் ரத்தினவேல், லோடுமேன். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியூர் சென்று விட்டு நேற்று அவனியாபுரம் வந்தார். அவர் தனது வீட்டின் கதவை பூட்டாமல் வெளியில் சென்றுள்ளார்.

    இந்தநிலையில் நேற்று இரவு பணி முடிந்து வீடு திரும்பிய ரத்தினவேல் வீட்டின் கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி யடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அவரது வீட்டில் நிர்வாணமாக தூங்கிக் கொண்டிருந்தார். மேலும் வீட்டில் இருந்த பொருட்களும் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன‌. வீட்டு பீரோவில் இருந்த 7 பவுன் நகைகள் மற்றும் ரூ. 4 ஆயிரம் ரொக்கம் திருட்டு போய் இருந்தது.

    திருடப்பட்ட நகை, பணம் மற்றும் சில பொருட்கள் தூங்கிக் கொண்டிருந்த திருடனின் அருகே கிடந்தது. இதைப்பார்த்த ரத்தினவேல் வீட்டை விட்டு வெளியே வந்து அக்கம், பக்கத்தினரை அழைத்தார். அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு சென்று நிர்வாண நிலையில் தூங்கிக்கொண்டிருந்த வாலிபரை தட்டி எழுப்பினர்.

    மது போதையில் இருந்த அந்த வாலிபர் விழித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார்.

    உடனடியாக அவரை பிடித்துக்கொண்ட பொதுமக்கள் இதுபற்றி அவனியாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மர்ம நபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவரது பெயர் நடராஜன் என்பதும், அவர் திருடிய 7 பவுன் நகை மற்றும் ரூ. 4 ஆயிரம் ரொக்கத்துடன் மது போதையில் வீட்டில் தூங்கியதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து அவர் திருடிய நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    ×