என் மலர்
நீங்கள் தேடியது "Jharkhand assembly elections"
- எங்களுக்கு எதிராக சதி செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம்.
- பாராளுமன்ற தேர்தலில் மக்கள் பா.ஜ.க.வினருக்கு பாடம் புகட்டினார்கள் என்றார்.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல் மந்திரி ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை நில மோசடி வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி கைதுசெய்தது. உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியதைத் தொடர்ந்து அவர் நேற்று வெளியில் வந்தார்.
ஜெயிலில் இருந்து வெளியே வந்த அவரை, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தொண்டர்களும், ஆதரவாளர்களும் வாழ்த்து கோஷமிட்டு வரவேற்றனர்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் முன்னாள் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் இன்று கட்சித் தொண்டர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
எங்களுக்கு எதிராக சதி செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம்.
பா.ஜ.க.வின் சவப்பெட்டியில் கடைசி ஆணி அடிக்கும் நேரம் இது.
ஜார்க்கண்டில் இருந்து காவி கட்சி ஒழிக்கப்படும்.
இந்தியாவின் சமூக கட்டமைப்பை அழிப்பதில் பா.ஜ.க.வுக்கு நிபுணத்துவம் உள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில் மக்கள் பா.ஜ.க.வினருக்கு பாடம் புகட்டினார்கள்.
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என பா.ஜ.க. பகல் கனவு காண்கிறது என தெரிவித்தார்.
- மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நவம்பர் மாதம் 20-ம் தேதி நடைபெறுகிறது.
- ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் இரு கட்டமாக நடைபெற உள்ளது.
புதுடெல்லி:
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
மொத்தம் 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை பதவிக்காலம் நவம்பர் மாதம் 26-ந்தேதி முடிவடைகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் நவம்பர் 20-ம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளது.
அதேபோல், 81 இடங்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபையின் பதவிகாலம் ஜனவரி 5-ம் தேதியுடன் முடிவடைகிறது.
ஜார்க்கண்டில் இரு கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்றும், நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.
இரு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் நவம்பர் 23ம் தேதி எண்ணப்பட உள்ளன.
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பாரதிய ஜனதா, அஜித்பவார் கூட்டணி ஆட்சியும் ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி ஆட்சியும் நடைபெற்று வருகின்றன.
- நாங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை நிர்வகிக்கவில்லை.
- மாதிரி அளவு உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் தொடர்பாக சுயபரிசோதனை தேவை.
ஜம்மு-காஷ்மீர் மற்றும் அரியானா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் இழுபறி நீடிக்கும், அரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என மீடியாக்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டன.
ஆனால் வாக்கு எண்ணிக்கையின்போது ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாடு- காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
அரியானாவில் தொடக்க சுற்றின்போது காங்கிரஸ் 50 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றது. அடுத்த சில நிமிடங்களில் பா.ஜ.க. முன்னிலை பெற ஆரம்பித்தது. பின்னர் 48 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது.
இந்த நிலையில் இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ராஜிவ் குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ராஜிவ் குமார் பதில் அளித்து கூறியதாவது:-
நாங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை நிர்வகிக்கவில்லை. மாதிரி அளவு உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் தொடர்பாக சுயபரிசோதனை தேவை. சுயபரிசோதனைக்குரிய அமைப்புகள் உள்ளன. அந்த அமைப்புகள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்வதற்கான நேரம் வந்துவிட்டது.
எதிர்பார்ப்பிற்கும் உண்மைக்கும் இடையிலான இடைவேளி விரக்தியை ஏற்படுத்த வழிவகுக்கும். யாராலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை டிரென்ட் உடன் எதிர்பார்க்க முடியாது.
அரியானாவில் காலையில் 8.05 அல்லது 8.10-க்கும் முடிவுகள் வெளியாக தொடங்கிவிட்டது. இது அர்த்தமற்றது. வாக்கு எண்ணிக்கை 8.30 மணிக்கு தொடங்கியது. 9.30 மணியில் இருந்து 2 மணி நேரத்திற்கு ஒருமுறை முடிவை நாங்கள் வெளியிட்டோம். இது இணையதளத்தில் வெளியாக கூடுதலாக அரைமணி நேரம் எடுத்துக் கொள்ளும். தற்போது வாக்கு எண்ணிக்கை மையத்தில் சரியான விவரங்களை பெற முடியும்.
ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கை 30 நிமிடத்திற்கு முன்னதாக முடியாது. எனவே வழக்கமாக முதல் சுற்று முடிவுகள் வெளிவருவதற்கு 8.50 ஆகும், அது தேர்தல் கமிஷன் இணையதளத்தில் 9.30-க்குள் கிடைக்கும்.
இவ்வாறு ராஜிவ் குமார் தெரிவித்தார்.
- தொகுதி பங்கீடு குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
- ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 68 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் நவம்பர் 13 மற்றும் 20 தேதிகளில் இரு கட்டமாக நடைபெற உள்ளது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஓரணியாக தேர்தலைச் சந்திக்கின்றன. மறுபுறம் பா.ஜ.க, ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் (ஏ.ஜே.எஸ்.யூ.) ஐ.ஜ.த., லோக் ஜனசக்தி (எல்.ஜே.பி.,) ஆகியன ஓரணியாக உள்ளன.
இந்நிலையில், தொகுதி பங்கீடு குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க. மாநில தலைவர் பாபுலால் மராண்டி, ஏ.ஜே.எஸ்.யூ. தலைவர் சுதேஷ் மஹடோ, ஜார்க்கண்ட் மாநில பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளர் மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான், துணை பொறுப்பாளர் அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதன்படி, பா.ஜ.க. 68 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஏ.ஜே.எஸ்.யூ.10 தொகுதிகளிலும், ஐ.ஜ.த. 2 தொகுதிகளிலும், எல்.ஜே.பி. ஒரு தொகுதியிலும் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது.
- ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 68 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
- இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு ஏறத்தாழ நிறைவு பெற்றுள்ளது.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் நவம்பர் 13 மற்றும் 20 தேதிகளில் இரு கட்டமாக நடைபெற உள்ளது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஓரணியாக தேர்தலைச் சந்திக்கின்றன. மறுபுறம் பா.ஜ.க, ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் (ஏ.ஜே.எஸ்.யூ.) ஐ.ஜ.த., லோக் ஜனசக்தி (எல்.ஜே.பி.,) ஆகியன ஓரணியாக உள்ளன.
தொகுதி பங்கீடு குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில், பா.ஜ.க. 68 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஏ.ஜே.எஸ்.யூ.10 தொகுதிகளிலும், ஐ.ஜ.த. 2 தொகுதிகளிலும், எல்.ஜே.பி. ஒரு தொகுதியிலும் போட்டியிடுவது என முடிவானது.
இந்நிலையில், இந்தியா கூட்டணி கட்சியில் தொகுதி பங்கீடு நிறைவு பெற்றுள்ளது. அதன்படி, மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் 70 தொகுதிகளிலும், ஆர்.ஜே.டி, கம்யூனிஸ்ட் கட்சிகள் இதர தொகுதிகளிலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்தக் கட்சி எத்தனை இடங்களில் போட்டி என்ற விவரங்களை இந்தியா கூட்டணி வெளியிடவில்லை.
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்படுகின்றன
- ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 68 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
- முதல் கட்டமாக 66 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டது.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் நவம்பர் 13 மற்றும் 20 தேதிகளில் இரு கட்டமாக நடைபெற உள்ளது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஓரணியாக தேர்தலைச் சந்திக்கின்றன. மறுபுறம் பா.ஜ.க, ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் (ஏ.ஜே.எஸ்.யூ.) ஐ.ஜ.த., லோக் ஜனசக்தி (எல்.ஜே.பி.,) ஆகியன ஓரணியாக உள்ளன.
தொகுதி பங்கீடு குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில், பா.ஜ.க. 68 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஏ.ஜே.எஸ்.யூ.10 தொகுதிகளிலும், ஐ.ஜ.த. 2 தொகுதிகளிலும், எல்.ஜே.பி. ஒரு தொகுதியிலும் போட்டியிடுவது என முடிவானது.
மொத்தமுள்ள 81 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் இணைந்து 70 தொகுதிகளிலும், ஆர்.ஜே.டி, கம்யூனிஸ்ட் கட்சிகள் இதர தொகுதிகளிலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதல் கட்டமாக 66 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டது.
மாநில தலைவர் பாபுலால் மராண்டி தன்வார் தொகுதியிலும், முன்னாள் முதல் மந்திரி சம்பாய் சோரன் சரைக்கேலாவிலும், சிபு சோரனின் மூத்த மருமகள் சீதா சோரன் ஜம்தரா தொகுதியிலும், முன்னாள் முதல் மந்திரி மதுகோடா மனைவி கீதா கோடா ஜகன்நாத்பூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- லோயிஸ் மராண்டி ஹேமந்த் சோரனை தோற்கடித்தவர் ஆவார்.
- ஏற்கனவே மூன்று முறை எம்.எல்.ஏ.-வாக இருந்தவர் கட்சி மாறிய நிலையில், தற்போது 3 இணைந்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் பா.ஜ.க.-வின் முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் மற்றும் பல தலைவர்கள் இணைந்துள்ளனர். தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில் இது பா.ஜ.க.-வுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
லோயிஸ் மராண்டி, குணால் சாரங்கி, லக்ஷ்மன் டுடு ஆகிய மூன்று பா.ஜ.க.வின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று ஜார்க்கண்ட் முக்தி மோச்சா கட்சியில் இணைந்துள்ளனர். அவர்களை ஹேமந்த் சோரன் வரவேற்றுள்ளார்.
இதற்கு முன்னதாக மூன்று முறை எம்.எல்.ஏ.-வாக இருந்த கேதார் ஹஸ்ரா மற்றும் ஏ.ஜே.எஸ்.யு. கட்சி தலைவர் உமாகந்த் ரஜக் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் கடந்த 18-ந்தேதி இணைந்த நிலையில் தற்போது இந்த மூன்று பேரும் இணைந்துள்ளனர்.
லோயிஸ் மராண்டி 2014 தேர்தலில் ஹேமந்த் சோரனை 5262 வாக்குகள் வித்தியாசத்தில் தும்கா தொகுதியில் தோற்கடித்தவர் ஆவார்.
2019-ல் ஹேமந்த் சோரன் தும்கா தொகுதியில் 13,188 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எனினும், அந்த தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பர்ஹைத் தொகுதி எம்.எல்.ஏ.-வாக நீடித்தார். அவரது சகோதரர் பசந்த் சோரன் லோயிஸ் மராண்டியை 6842 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
மராண்டி மாநில தலைவருக்கு, தன்னைப் போன்ற அர்ப்பணிப்பு தொண்டர்கள் புறக்கணிக்கப்பு மற்றும் கட்சியில் உள்ள பிரிவினைவாதம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி கடிதம் எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் கோட்டையான தும்காவில் 2014-ல் பா.ஜ.க. எப்படி வெற்றி பெற்றது என்பது குறித்தும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குணால் சாரங்கி ஜார்க்கண்ட் மாநில பா.ஜ.க.-வின் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து விலகிய பின், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட கட்சியின் அனைத்து பதவியில் இருந்து கடந்த ஜூலை மாதம் ராஜினாமா செய்தார்.
லக்ஷ்மண் டுடு 2014-ல் ஜார்க்கண்ட் முக்தி மோச்சா கட்சியின் ராம்தாஸ் சோரனை கட்ஷிலா தொகுதியில் 6403 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
இவர்களுடன் செரைக்கேலா, கணேஷ் மஹ்லி, பாஸ்கோ பெஸ்ரா, பாரி முர்மு உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களும் ஜார்க்கண்ட் முக்தி மோச்சா கட்சியில் இணைந்துள்ளனர்.
ஜார்க்கண்ட்ல் அடுத்த மாதம் 13-ந்தேதி மற்றும் 20-ந்தேதிகளில் தேர்தல் நடைபெற இருக்கிறது. நவம்பர் 23-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. நேற்று முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. சுமார் 2.60 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர்.
- ஜார்கண்டில் காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் 70 தொகுதிகளில் போட்டியிடுகின்றன
- தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்படுகின்றன
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் நவம்பர் 13 மற்றும் 20 தேதிகளில் இரு கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்படுகின்றன
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கின்றன.
ஜார்கண்டில் உள்ள 81 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் 70 தொகுதிகளிலும், ஆர்.ஜே.டி, கம்யூனிஸ்ட் கட்சிகள் இதர தொகுதிகளிலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 35 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வெளியிட்டுள்ளது. முதல்வர் ஹேமந்த் சோரன் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக உள்ள பர்ஹைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரது மனைவி கல்பனா சோரன் காண்டே தொகுதியிலும் ஹேமந்த் சோரனின் சகோதரரான பசந்த் சோரன் தும்கா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
- 2021-ல் ஹேமந்த் சோரன் தன்னுடைய வயது 45 எனக் குறிப்பிட்டிருந்தார்.
- தற்போது 2024-ல் 49 வயது எனக் குறிப்பிட்டுள்ளார். இது எப்படி சாத்தியமாகுமா? எனக் கேள்வி.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. நவம்பர் 13-ந்தேதி மற்றும் நவம்பர் 20-ந்தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
20-ந்தேதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இருக்கும் ஹேமந்த் சோரன் வேட்மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் ஏராளமான வேறுபாடு இருப்பதாக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பிரதுல் ஷா தியோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில் "ஹேமந்த் சோரனின் 2021 மனுத்தாக்கலுக்கும், 2024 மனுத்தாக்கலுக்கும் ஏராளமான வித்தியாசத்தில் உள்ளது. 2021-ல் ஹேமந்த் சோரன் தனக்கு 45 வயது எனக் குறிப்பிட்டிருந்தார். தற்போது 49 வயது எனக் குறிப்பிட்டுள்ளார். இது எப்படி சாத்தியமாகும்? 2021-ல் ஏகப்பட்ட சொத்துகள் இருப்பதாக பிரமாண பத்திரத்தில் தெரிவித்திருந்தார். தற்போது அந்த சொத்து விவரங்களில் இல்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- ஜார்க்கண்டில் இரு கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
- ராஞ்சியில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டார்.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இதையடுத்து, அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன.
ராஞ்சியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய உள்துறை மந்திரி அமித் ஷா, பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில், சதாரா மாவட்டத்தின் சிமாரியா பகுதியில் நடைபெற்ற பேரணியில் அமித்ஷா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
மொத்தமுள்ள 81 சட்டசபை தொகுதிகளில் பாஜக கூட்டணி 52 இடங்களில் வெற்றி பெறும்.
அற்ப அரசியல் ஆதாயங்களுக்காக நக்சலிசத்தை தூண்டிவிடுகின்றனர்.
ஜார்க்கண்டில் இருந்து தலித், பழங்குடியினர், ஏழைகள் மற்றும் இளைஞர்களுக்கு எதிரான ஹேமந்த் சோரன் அரசை அகற்ற வேண்டிய நேரம் இது.
கடந்த 5 ஆண்டுகளில் ஜார்க்கண்டில் இருந்து அச்சுறுத்தலை நாங்கள் அகற்றிவிட்டோம்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மார்ச் 2026க்குள் இந்தியாவில் இருந்து நக்சலிசத்தை முற்றிலுமாக அழித்துவிடும் என ஆவேசமாக தெரிவித்தார்.
- ஜார்க்கண்டில் இரு கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
- முதல் மந்திரி ஹேமந்த் சோரன் புதிய வாக்குறுதிகளை வெளியிட்டார்.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரு கட்டங்களாக (நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
ஜார்க்கண்டில் பொது சிவில் சட்டம் மற்றும் என்.ஆர்.சி போன்றவை தேவையில்லை.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முந்தைய பா.ஜ.க. ஆட்சியின்போது 11 லட்சம் ரேசன் கார்டுகள் நீக்கப்பட்டன. இதனால் ஏராளமான பழங்குடியின மக்கள், தலித் மக்கள் பசி பட்டினியால் உயிரிழந்தனர்.
எங்கள் ஆட்சியில் ஒவ்வொருவரும் தங்கள் உரிமைகளுக்கு ஏற்ப ரேசன் மற்றும் பென்சன் பெறுகிறார்கள்.
மாநிலத்தில் மீண்டும் எங்கள் அரசு அமைந்தவுடன், பொது விநியோகத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு ஒரு நபருக்கு 5 கிலோ உணவு தானியத்துக்குப் பதிலாக 7 கிலோ உணவு தானியம் வழங்கப்படும்.
ஓய்வூதியத் தொகை உயர்த்தி வழங்கப்படும். கூடுதலாக 10 லட்சம் பேர் பொது விநியோக திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள்.
மையன் சம்மான் யோஜனா திட்டத்தின் கீழ் பெண் பயனாளிகளுக்கு மாதம் 2,500 ரூபாய் நிதி வழங்கப்படும் என தெரிவித்தார்.
- காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியில் சமாஜ்வாடிக்கு தொகுதிகள் ஒதுக்கவில்லை.
- அகிலேஷ் யாதவ் 21 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார்.
81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு வருகிற 13, 20-ந்தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணிக்கும் பா.ஜனதா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாடி கட்சி ஜார்க்கண்ட்டில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. தொகுதி எதுவும் ஒதுக்காததால் அந்த கட்சி 21 இடங்களில் போட்டியிடுகிறது.
இதற்கான வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டது. இதில் 7 முதல் 8 தொகுதிகளில் சமாஜ்வாடி வெற்றிபெறும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் ரஞ்சன் யாதவ் தெரிவித்துள்ளார்.