search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jos Butler"

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 158 ரன்கள் எடுத்தது.
    • ஜாஸ் பட்லர் அதிரடியால் இங்கிலாந்து எளிதில் வென்றது.

    பார்படாஸ்:

    இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் 2-1 என கைப்பற்றியது. முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து வென்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று பார்படாசில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 158 ரன்களை எடுத்தது.

    பாவெல் 43 ரன்கள் எடுத்தார். ஷெப்பர்ட் 22 ரன்கள் எடுத்தார்.

    இங்கிலாந்து சார்பில் சாகிப் மகமுது, மூஸ்லே, லிவிங்ஸ்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 159 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. முதல் பந்தில் பிலிப் சால்ட் டக் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய ஜாஸ் பட்லர் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி பவுண்டரி, சிக்சர்களை விளாசினார். அரை சதம் கடந்த அவர் 83 ரன்னில் ஆட்டமிழந்தார். வில் ஜாக்ஸ் 32 ரன்னில் வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 129 ரன்கள் குவித்தது.

    இறுதியில், இங்கிலாந்து 3 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 2-0 என முன்னிலை பெற்றது.

    • இங்கிலாந்து, பாகிஸ்தான் இடையிலான பயிற்சி போட்டி நடைபெறுகிறது.
    • பயிற்சி ஆட்டத்தில் இருந்து கேப்டன் ஜாஸ் பட்லர் விலகல்.

    டி20 உலகக் கோப்பை தொடர் ஜூன் 2 ஆம் தேதி துவங்க உள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு முன் ஒவ்வொரு அணியும் பயிற்சி போட்டியில் விளையாடுவது வழக்கம். அந்த வகையில், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான பயிற்சி போட்டி நாளை நடைபெற இருக்கிறது.

    இந்த தொடரில் இங்கிலாந்து அணியை வழிநடத்த இருக்கும் கேப்டன் ஜாஸ் பட்லர் மற்றும் லூயிஸ் தம்பதிக்கு மூன்றாவது குழந்தை பிறக்க உள்ளது. இதையொட்டி, நாளை நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இருந்து கேப்டன் ஜாஸ் பட்லர் விலகியுள்ளார்.

    ஜாஸ் பட்லர் பயிற்சி போட்டியில் இருந்து விலகியதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. மேலும், ஜாஸ் பட்லர் - லூயிஸ் தம்பதிக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சார்பில் வாழ்த்து செய்தியும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பியை ஜோஸ் பட்லர் பெற்றார்.
    அகமதாபாத்:

    ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில், குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்தது. 

    இதையடுத்து, 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. அந்த அணி 18.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன் கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது. 

    நடப்பு ஐபிஎல் தொடரில் 4 சதங்களுடன் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பியை ராஜஸ்தான் அணியின் ஜோஸ் பட்லர் கைப்பற்றினார்.

    இந்நிலையில், நேற்றைய போட்டியில் ஜோஸ் பட்லர் புதிய சாதனை படைத்தார். ஒரு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னரை பின்னுக்குத் தள்ளி பட்லர் 2-வது இடத்தை பிடித்தார். பட்லர் இதுவரை 863 ரன்கள் எடுத்துள்ளார்.

    இந்தப் பட்டியலில் பெங்களூரு அணியின் விராட் கோலி (973 ரன்கள் - 2016 ஆம் ஆண்டு ) முதல் இடத்தில் உள்ளார். 3-வது இடத்தில் டேவிட் வார்னர் (848 ரன்கள் - 2016) உள்ளார்.
    • இங்கிலாந்தின் ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 163 ரன் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.
    • நெதர்லாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தின் ஜேசன் ராய் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

    ஆம்ஸ்டெல்வீன்:

    இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி 49.2 ஓவரில் 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் எட்வர்ட்ஸ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 64 ரன்னில் ஆட்டமிழந்தார். பாஸ் டி லீட் 56 ரன்னில் அவுட்டானார். தொடக்க ஆட்டக்காரர் மேக்ஸ் ஒடோவ் அரை சதமடித்து 50 ரன்னில் வெளியேறினார்.

    இங்கிலாந்து சார்பில் டேவிட் வில்லே 4 விக்கெட்டும், பிரிடன் கார்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தி அணியின் வெற்றிக்கு உதவினார். பிலிப் சால்ட் 49 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், இங்கிலாந்து 30.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. ஜேசன் ராய் 101 ரன்னும், ஜோஸ் பட்லர் 86 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முழுமையாக கைப்பற்றியது.

    • முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 232 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • அதிரடியாக ஆடிய இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    ஆம்ஸ்டெல்வீன்:

    நெதர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி பங்கேற்றுள்ளது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஆம்ஸ்டெல்வீனில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நெதர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 498 ரன்கள் குவித்தது. சால்ட் 93 பந்துகளில் 122 ரன்னும், டேவிட் மலான் 125 ரன்னும் குவித்து ஆட்டமிழந்தனர். அதிரடியாக ஆடிய ஜோஸ் பட்லர் 47 பந்தில் சதமடித்து அசத்தினார். அவர் 70 பந்துகளில் 162 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். லிவிங்ஸ்டன் 22 பந்துகளில் 66 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.

    இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ரன்களை குவித்து இங்கிலாந்து உலக அணி சாதனை படைத்துள்ளது.

    இதையடுத்து, 499 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நெதர்லாந்து களமிறங்கியது. ஆனால், நெதர்லாந்து 49.4 ஓவரில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, இங்கிலாந்து 232 ரன்கள் வித்தியசத்தில் அபார வெற்றி பெற்றது.

    நெதர்லாந்து அணியில் அதிகபட்சமாக ஸ்காட் எட்வர்ட்ஸ் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இங்கிலாந்து சார்பில் மொயீன் அலி 3 விக்கெட்டும், டேவிட் வில்லி, ரீஸ் டாப்லி, சாம் கர்ரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    அதிரடியாக ஆடிய ஜோஸ் பட்லர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஜாஸ் பட்லர், மார்கன் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 112 ரன்களை சேர்த்தது.
    சார்ஜா:

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று சார்ஜாவில் நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

    முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ஜாஸ் பட்லர் சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் மார்கன் 40 ரன்னில் அவுட்டானார்.

    இலங்கை சார்பில் ஹசரங்கா 3  விக்கெட் வீழ்த்தினார். 

    இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. அந்த அணியில் யாரும் நிலைத்து நிற்கவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தது.

    அதிகபட்சமாக ஹசரங்கா 34 ரன்கள் எடுத்தார். ராஜபக்ச, ஷனகா ஆகியோர் தலா 26 ரன்கள் எடுத்தனர்.

    இறுதியில், இலங்கை அணி 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 4வது வெற்றியைப் பதிவு செய்தது.

    இங்கிலாந்து சார்பில் மொயீன் அலி, அடில் ரஷீத், ஜோர்டான் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
    233 ரன்கள் முன்னிலை பெற்று இருப்பதால் இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் வெற்றி பெறுவோம் என்று இங்கிலாந்து பேட்ஸ்மேன் பட்லர் கூறியுள்ளார். #ENGvIND #JosButler
    சவுதம்டன்:

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் நடைபெற்று வருகிறது.

    இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்னும், இந்தியா முதல் இன்னிங் சில் 273 ரன்னும் எடுத்தன. 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 260 ரன் எடுத்து இருந்தது. அந்த அணி 233 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கைவசம் 2 விக்கெட் உள்ளது. குர்ரான் 37 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

    நேற்றைய போட்டிக்கு பின் இங்கிலாந்து பேட்ஸ்மேன் பட்லர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த டெஸ்டில் எங்களால் (இங்கிலாந்து) நிச்சயமாக வெற்றி பெற முடியும். இந்த ஆடுகளத்தில் 2-வது இன்னிங்கில் ரன்கள் சேர்ப்பது இந்தியாவுக்கு சவாலாக இருக்கும். மொய்ன் அலி, ஆதில் ரஷித், மற்றும் வேகப்பந்து வீரர்கள் சிறப்பாக பந்து வீசுவார்கள். இதனால் எங்களுக்கு இந்த டெஸ்டில் வெற்றி வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #ENGvIND  #JosButler
    டிரண்ட் பிரிட்ஜில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 4ம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுக்கு 311 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND #INDvENG

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இந்தியா அணி தனது முதல் இன்னிங்சில் விராட் கோலி மற்றும் ரகானேயின் சிறப்பான பேட்டிங்கால் முதல் இன்னிங்சில் 329 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து ஹர்திக் பாண்ட்யாவின் பந்துவீச்சில் சிக்கியதையடுத்து, முதல் இன்னிங்சில் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    அடுத்து, இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய வீரர் விராட் கோலி சதமடித்தார். அவருக்கு புஜாரா ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் 72 ரன்களில் அவுட்டானார். இறுதியில், 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

    இதைத்தொடர்ந்து, இங்கிலாந்துக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா. இமாலய இலக்குடன் இங்கிலாந்து அணியின் அலஸ்டைர் குக், ஜென்னிங்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    ஜென்னிங்ஸ் 13 ரன்னிலும், குக் 17 ரன்னிலும், ஜோ ரூட் 13 ரன்னிலும், போப் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 62 ரன்னுக்குள் இங்கிலாந்து முதல் நான்கு விக்கெட்டுக்களையும் இழந்து திணறியது.



    ஐந்தாவது விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்ஸ் உடன் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 169 ரன்கள் சேர்த்தது. இந்த ஜோடியை பும்ரா பிரித்தார். அணியின் எண்ணிக்கை 231 ஆக இருக்கும்போது ஜோஸ் பட்லர் 106 ரன்களில் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய பேர்ஸ்டோவ், கிறீஸ் வோக்ஸ் ஆகியோரையும் பும்ரா வெளியேற்றினார். தொடர்ந்து நிதானமாக ஆடிய பென் ஸ்டோக்ஸ்சை 62 ரன்களில் பாண்ட்யா வெளியேற்றினார். அப்போது அணியின் எண்ணிக்கை 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்திருந்தது.

    தொடர்ந்து இறங்கிய அடில் ரஷித்தும், ஸ்டூவர்ட் பிராடும் அடித்து ஆடினர். இந்த ஜோடி அரை சதம் கடந்தது. பிராடு 20 ரன்னில் பும்ரா பந்துவீச்சில் அவுட்டானார். ஆட்ட நேர இறுதியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுக்கு 311 ரன்கள் எடுத்துள்ளது.

    இன்னும் ஒருநாள் ஆட்டம் மீதமிருக்கும் நிலையில் இந்தியாவுக்கு ஒரு விக்கெட் மட்டுமே தேவைப்படுவதால் எளிதில் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. #ENGvIND #INDvENG
    ×