search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஜாஸ் பட்லர் அதிரடி: 2வது டி20 போட்டியிலும் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இங்கிலாந்து
    X

    ஜாஸ் பட்லர் அதிரடி: 2வது டி20 போட்டியிலும் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இங்கிலாந்து

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 158 ரன்கள் எடுத்தது.
    • ஜாஸ் பட்லர் அதிரடியால் இங்கிலாந்து எளிதில் வென்றது.

    பார்படாஸ்:

    இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் 2-1 என கைப்பற்றியது. முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து வென்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று பார்படாசில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 158 ரன்களை எடுத்தது.

    பாவெல் 43 ரன்கள் எடுத்தார். ஷெப்பர்ட் 22 ரன்கள் எடுத்தார்.

    இங்கிலாந்து சார்பில் சாகிப் மகமுது, மூஸ்லே, லிவிங்ஸ்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 159 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. முதல் பந்தில் பிலிப் சால்ட் டக் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய ஜாஸ் பட்லர் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி பவுண்டரி, சிக்சர்களை விளாசினார். அரை சதம் கடந்த அவர் 83 ரன்னில் ஆட்டமிழந்தார். வில் ஜாக்ஸ் 32 ரன்னில் வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 129 ரன்கள் குவித்தது.

    இறுதியில், இங்கிலாந்து 3 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 2-0 என முன்னிலை பெற்றது.

    Next Story
    ×