என் மலர்
நீங்கள் தேடியது "Juice"
சிலருக்கு வெப்பத்தை தாங்க முடியாமல் ‘ஸ்ட்ரோக்’ வந்துவிடுவது உண்டு. இத்தகைய அபாயத்தில் இருந்து தப்ப பல வழிகள் உள்ளன. இப்போது மாங்காய் சீசன் என்பதால் மாங்காய் ஜூஸ் போட்டு குடிப்பதன் மூலம் உடல் உஷ்ணத்தை விரட்ட முடியும்.
தேவையான பொருட்கள்
மாங்காய் - 1
கருப்பட்டி - சுவைக்கு
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
சுக்கு தூள் - ஒரு சிட்டிகை
செய்முறை
மாங்காயை தோலுடன் துருவிக் கொள்ள வேண்டும்.
கருப்பட்டியை சிறிது கரைத்து அதில் மாங்காய் துருவல், எலுமிச்சை சாறு, சுக்கு பொடி சேர்த்து கலக்க வேண்டும்.
இது தான் மாங்காய் ஜூஸ்.
மதியம் வெயிலில் சென்று விட்டு வருபவர்கள் வீட்டுக்கு திரும்பியதும். 30 நிமிடம் கழித்து இதை குடிக்கலாம். உடல் சூடு மாயமாய் மறைந்து விடும். ஆனால்இரவு நேரத்தில் இந்த ஜூசை குடிக்கக் கூடாது.
குளிர்ச்சியான பால் - 2 கப்
சாக்லேட் கிரீம் பிஸ்கட் பாக்கெட் - 1
கிரீம் இல்லாத சாக்லேட் பிஸ்கட் - 1
சாக்லேட் சாஸ் - 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் மிக்ஸியில் பாலை ஊற்றி, அத்துடன் கிரீம் இல்லாத சாக்லேட் பிஸ்கட்டை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் கிரீம் உள்ள சாக்லேட் பிஸ்கட்டை சேர்த்து நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதனை ஒரு டம்ளரில் ஊற்றி, அத்துடன் சாக்லேட் சாஸ் சேர்த்து நன்கு கிளறி பரிமாறினால், சாக்லேட் பிஸ்கட் மில்க் ஷேக் ரெடி.
இந்த மில்க் ஷேக் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
- பீட்ரூட்டில் நைட்ரேட் சத்து அதிகமாக இருக்கிறது.
- பீட்ரூட் ஜூஸ் பருகினால் வயதானாலும் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.
முதுமையிலும் சுறுசுறுப்பாக இருப்பது எப்படி? என்று ஒரு ஆய்வு நடத்தினார்கள்.
அதன்படி பீட்ரூட் ஜூஸ் பருகினால் வயதானாலும் சுறுசுறுப்பாக இருக்க முடியும் என்று அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறதாம்.
மனிதனுக்கு தேவையான ஆக்சிஜன் அளவை நைட்ரேட் என்கிற சத்து வெகுவாக குறைப்பதாக ஏற்கனவே நடத்தப்பட்ட பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பீட்ரூட்டில் நைட்ரேட் சத்து அதிகமாக இருக்கிறது. இதனால் பீட்ரூட் சாப்பிடும்போது நைட்ரேட்டை உருவாக்குவதற்கான ஆக்சிஜன் தேவைப்படாது.
வாரத்துக்கு 6 நாட்கள் பீட்ரூட் ஜூஸ் குடித்தால் ஆரோக்கியம் அதிகரிப்பதுடன், சோம்பலும் வராது என்று இங்கிலாந்தின் எக்ஸ்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
இதன் தலைவர் விஞ்ஞானி கேட்டி வான்லி, "முதியவர்கள் சிறிய வேலைகளை செய்தாலும் சோர்வடைந்து விடுகிறார்கள். வயதாகும்போது அவர்களின் உடலில் உள்ள ரத்த நாளங்கள் சுருங்கி விடும் என்பதுதான் இதற்கு காரணம். இதனால் திசுக்களுக்கு போதிய அளவு ஆக்சிஜன் கிடைக்காது. எனவே, ஆய்வில் கலந்து கொண்ட முதியவர்களுக்கு ஆக்சிஜன் தேவையை குறைப்பதற்காக பீட்ரூட் ஜூஸ் கொடுக்கப்பட்டது. பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட் சத்து, அவர்களின் ரத்த நாளத்தை விரிவடைய செய்தது. ரத்த ஓட்டம் எளிமையாக நடந்தால் திசுக்களுக்கு வழக்கமாக தேவைப்படும் ஆக்சிஜன் அளவு 12 சதவீதம் குறைந்தது. அவர்கள் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்தாலும் சோர்வடையாமல் சுறுசுறுப்பாக இருந்தார்கள்," என்றார்.
அதேநேரம் பீட்ரூட் ஒவ்வொரு மனிதருக்கும் அவர்களின் உடல்நிலையை பொறுத்து செயல்படக்கூடியது. அதனால் பீட்ரூட் அருந்துவதற்கு முன்பு முதியவர்கள் தங்கள் உடலுக்கு ஒத்துவருமா? என்று டாக்டரிடம் ஆலோசனை கேட்டு அதன்பின் அருந்துவது நல்லது.
- கீரையை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும்.
- சருமத்திற்கு பளபளப்பை தரும் பானங்களை பருகுவதன் மூலம் இரட்டிப்பு நன்மைகளை அடையலாம்.
காலையில் எழுந்ததும் தண்ணீர் பருகுவது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். ஆரோக்கியமும், சருமத்திற்கு பளபளப்பும் சேர்க்கும் பானங்களை தயார் செய்து பருகுவதன் மூலம் இரட்டிப்பு நன்மைகளை அடையலாம்.
கீரை ஜூஸ்:
கீரையை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும். சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிப்பதோடு, கரும்புள்ளிகளை கட்டுப்படுத்தும். முதுமையின் ஆரம்பகால அறிகுறிகளை தடுத்து இளமை தோற்றத்தை தக்கவைக்கவும் உதவும்.
தேவையானவை:
நறுக்கிய கீரை - 2 கப்
ஆப்பிள் - 1 (நறுக்கவும்)
எலுமிச்சை - அரை பழம்
தண்ணீர் - முக்கால் கப்
மிளகு தூள் - சிறிதளவு
செய்முறை: கீரையை நன்றாக கழுவி, அதனுடன் ஆப்பிள் சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும். அதனுடன் எலுமிச்சை சாறை பிழிந்து கொள்ளவும். தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக கலந்து கொள்ளவும். பின்பு நன்றாக வடிகட்டி அதனுடன் மிளகு தூள் சேர்த்து பருகலாம். இந்த ஜூஸை அதிகாலையில் பருகி வர, சருமம் பொலிவுடன் காட்சியளிக்கும்.
வெள்ளரி ஜூஸ்:
வெள்ளரிக்காயில் நிறைய நீர் உள்ளடங்கி இருப்பதோடு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த காபிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளன. வெள்ளரிக்காய் உட்கொள்வது சருமத்தை நீரேற்றமாக வைத்துக்கொள்ள உதவும். எண்ணெய் மற்றும் வறண்ட சருமத்திற்கு வெள்ளரி சிறந்த நிவாரணம் தரும். உடலில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்ற துணைபுரியும்.
தேவையானவை:
வெள்ளரி - 1
எலுமிச்சை பழம் - 2
தண்ணீர் - 4 டம்ளர்
புதினா இலைகள் - ஒரு கைப்பிடி
செய்முறை: வெள்ளரிக்காயை தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். அதேபோல் எலுமிச்சை பழத்தையும் நறுக்கிக் கொள்ளவும். கண்ணாடி ஜாரில் தண்ணீர் ஊற்றி அதில் வெள்ளரிக்காய், எலுமிச்சை பழ துண்டுகளை போடவும். புதினா இலைகளையும் தூவிக்கொள்ளவும். சிறிது நேரம் ஊறவைத்துவிட்டு அந்த நீரை பருகலாம். நாள் முழுவதும் இந்த நீரை பருகி வருவதன் மூலம் சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ளலாம். சரும அழகையும் மெருகேற்றி விடலாம்.
கேரட்-பீட்ரூட் ஜூஸ்:
இந்த இரண்டு வேர் காய்கறிகளிலும் வைட்டமின் சி, ஏ, துத்தநாகம், போலிக் அமிலம், இரும்பு, நார்ச்சத்து, மாங்கனீஸ் போன்ற பல்வேறு வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இந்த சத்துக்கள் ரத்தத்தை சுத்திகரிப்பதோடு குடலை சுத்தமாக வைத்திருக்கவும் உதவுகின்றன. அத்துடன் இந்த சிவப்பு பானம், ஆரோக்கியமான மற்றும் ஒளிரும் சருமத்தை பெறவும் உதவி புரியும். கரும்புள்ளிகளை குறைக்கும். சுருக்கங்களை தடுக்கும். முகப்பருக்களை கட்டுப்படுத்தும். வறண்ட சருமத்திற்கு நிவாரணமும் தரும்.
தேவையானவை:
பீட்ரூட் - பாதி
கேரட் -4
இஞ்சி - சிறு துண்டு
தண்ணீர் - அரை கப்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
செய்முறை: கேரட் மற்றும் பீட்ரூட்டை துண்டுகளாக நறுக்கி மிக்சியில் அரைத்துக்கொள்ளவும். அதனுடன் இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு, தண்ணீர் கலந்து ஜூஸ் பதத்துக்கு தயார் செய்து கொள்ளவும். பின்பு வடிகட்டி பருகலாம். காலையில் வெறும் வயிற்றில் பருகுவது நல்லது. விரும்பினால் சிறிதளவு மிளகு தூள் சேர்த்துக்கொள்ளலாம்.
ஆப்பிள் ஜூஸ்
ஆப்பிள்களில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை கட்டுப்படுத்த உதவும். மேலும் செரிமான அமைப்பை சரியான முறையில் பராமரிக்க வழிவகை செய்யும். குடல் சுத்தமாக இருந்தாலே சருமம் பிரகாசமாக மின்னும்.
சருமத்தில் படிந்துள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் நோய்க்கிருமிகளை நீக்க ஆப்பிள் உதவும். இந்த பழத்தில் உள்ள ஆன்டிஆக்சிடென்டுகள் சரும செல்களை புத்துயிர் பெறச்செய்து, சருமத்திற்கு கூடுதல் பொலிவு அளிக்க உதவும். சரும செல்களை புத்துயிர் பெற செய்யவும், ஒளிரும் சருமத்தை பெறவும் சுவையான ஆப்பிள் ஜூஸை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.
தேவையானவை:
ஆப்பிள் - 4
எலுமிச்சை - அரை பழம்
இஞ்சி - சிறு துண்டு
தண்ணீர் - 1 கப்
உப்பு - சிறிதளவு
செய்முறை: ஆப்பிள்களை தோலுரித்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். அதனுடன் எலுமிச்சை சாறு, இஞ்சி சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும். அதனுடன் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் கலந்து கிளறிவிடவும். இந்த சாற்றை டம்ளரில் ஊற்றி அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து காலை வேளையில் பருகி வருவதன் மூலம் சரும பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம்.
- வாரத்துக்கு 3 முறை வாழைத்தண்டு சாறு குடித்தால் சிறுநீரகப்பாதையில் உள்ள தொற்று நீங்கும்.
- மருந்து, மாத்திரைகளோடு வாழ்வதை தவிர்க்க வாழைத்தண்டு சாறு உதவும்.
தேவையான பொருட்கள் :
சிறிய வாழைத்தண்டு - ஒன்று,
பூண்டு - 2 பல்,
ஓமவல்லி இலை, வெற்றிலை - தலா ஒன்று,
துளசி - சிறிதளவு, மிளகு - 3.
செய்முறை:
வாழைத்தண்டை பட்டை, நார் நீக்கி, வட்ட வட்டமாக நறுக்கிக்கொள்ளவும்…
பூண்டு, ஓமவல்லி இலை, வெற்றிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிக்சியில் நறுக்கிய வாழைத்தண்டு, பூண்டு, ஓமவல்லி இலை, வெற்றிலை, துளசி, மிளகு சேர்த்து, நீர் விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த கலவையில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டிக்கொள்ளவும்.
வாரம் ஒரு முறை இந்த சாற்றை அரை டம்ளர் அளவு பருகினால்… சளி, இருமல் தொந்தரவில் இருந்து பாதுகாக்கும்.
தேவையான பொருட்கள் :
வெள்ளரி - 1
எலுமிச்சை பழம் - 2
தண்ணீர் - 4 டம்ளர்
புதினா இலைகள் - ஒரு கைப்பிடி
செய்முறை:
வெள்ளரிக்காயை தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
அதேபோல் எலுமிச்சை பழத்தையும் நறுக்கிக் கொள்ளவும்.
கண்ணாடி ஜாரில் தண்ணீர் ஊற்றி அதில் வெள்ளரிக்காய், எலுமிச்சை பழ துண்டுகளை போடவும்.
புதினா இலைகளையும் தூவிக்கொள்ளவும்.
சிறிது நேரம் ஊறவைத்துவிட்டு அந்த நீரை பருகலாம்.
நாள் முழுவதும் இந்த நீரை பருகி வருவதன் மூலம் சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ளலாம். சரும அழகையும் மெருகேற்றி விடலாம்.
பீட்ரூட் - பாதி
கேரட் - 4
இஞ்சி - சிறு துண்டு
தண்ணீர் - அரை கப்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
செய்முறை:
கேரட் மற்றும் பீட்ரூட்டை துண்டுகளாக நறுக்கி மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.
அதனுடன் இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு, தண்ணீர் கலந்து ஜூஸ் பதத்துக்கு தயார் செய்து கொள்ளவும்.
பின்பு வடிகட்டி பருகலாம்.
காலையில் வெறும் வயிற்றில் பருகுவது நல்லது. விரும்பினால் சிறிதளவு மிளகு தூள் சேர்த்துக்கொள்ளலாம்.
சூப்பரான கேரட் பீட்ரூட் ஜூஸ் ரெடி.
ஆப்பிள் - 4
எலுமிச்சை - அரை பழம்
இஞ்சி - சிறு துண்டு
தண்ணீர் - 1 கப்
உப்பு - சிறிதளவு
செய்முறை:
ஆப்பிள்களை தோலுரித்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
அதனுடன் எலுமிச்சை சாறு, இஞ்சி சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
அதனுடன் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் கலந்து கிளறிவிடவும்.
இந்த ஜூஸை கண்ணாடி டம்ளரில் ஊற்றி அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து காலை வேளையில் பருகி வருவதன் மூலம் சரும பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம்.
தர்பூசணி துண்டுகள் - 2 கப்
ஆரஞ்சு - 2
உப்பு - 1 சிட்டிகை
தேன் - 2 டீஸ்பூன்
ஆப்பிள் - பாதி
ஐஸ்கட்டிகள் - சிறிதளவு
அலங்கரிக்க :
ஆப்பிள் துண்டுகள் - 1 டீஸ்பூன்

செய்முறை :
ஆரஞ்சு பழத்திலிருந்து சாறு எடுத்து தனியாக வைக்கவும்.
ஆப்பிளை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அனைத்தையும் மிக்ஸி ஜாரில் எடுத்துக்கொள்ளவும்.
தர்பூசணியில் உள்ள விதைகளை எடுத்து விட்டு துண்டுகளாக எடுத்து வைக்கவும்.
மிக்சியில் தர்பூசணி, ஆரஞ்சு சாறு, உப்பு, தேன், ஆப்பிள், ஐஸ்கட்டிகள் போட்டு நன்றாக அடிக்கவும்.
அரைத்த ஜூஸை கண்ணாடி கோப்பையில் ஊற்றி பொடியாக நறுக்கிய ஆப்பிள் துண்டுகளையும் புதினா இலைகளையும் போட்டு பருகவும்.
செவ்வாழை : 1 (கனிந்தது)
பேரீச்சம்பழம் : 5
வால்நட் : 3

செய்முறை :
செவ்வாழை பழத்தை தோல் நீக்கி சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அதனுடன் கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம், வால்நட் பருப்பு மற்றும் பால் சேர்த்து மிக்ஸில் நுரை வரும் வரை அரைத்துக் கொள்ளவும்.
கூடுதல் சுவைக்குத் தேன் சேர்த்துக் கொள்ளலாம்.
புளிக்காத தயிரில் செவ்வாழை ஸ்மூதி செய்து சாப்பிடலாம்.
செவ்வாழை பேரீச்சம் பழ மில்க்ஷேக் ரெடி.
கிவி பழம் - 1
பெங்களூர் தக்காளி - 2
ஆப்பிள் - 1
இஞ்சிச் சாறு - 1/4 டீஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்

செய்முறை
ஆப்பிளின் விதைகளை நீக்கி நடுப்பகுதியை தனியே எடுத்துக் கொள்ளவும்.
கிவி பழத்தின் தோலை நீக்கிக் கொள்ளவும்.
பிளெண்டர் (அ) மிக்ஸியில் நறுக்கிய ஆப்பிள், கிவி பழம், தக்காளியைச் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
இதனுடன் இஞ்சிச்சாறு, தேன், மிளகுத்தூள் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.
தேவையெனில் சிறிது நேரம் ஃபிரிட்ஜில் வைத்துக் கூலாகக் குடிக்கவும்.
சத்தான கிவி ஆப்பிள் ஜூஸ் ரெடி.
சோற்றுக்கற்றாழை ஜெல் - 2 டீஸ்பூன்
தேன் - 1 ஸ்பூன்

செய்முறை :
சோற்றுக்கற்றாழை தோலை முழுவதுமாக நீக்கி அதில் உள்ள ஜெல்லை எடுத்து நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
சுத்தம் செய்த சோற்றுக்கற்றாழை ஜெல்லை மிக்சியில் போட்ட அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த ஜூஸில் தேன் கலந்து சாப்பிடவும்.
சூப்பரான சோற்றுக்கற்றாழை ஜூஸ் ரெடி.
ஆரோக்கிய பலன்: சோற்றுக்கற்றாழையில் வைட்டமின் ஏ, சி, இ மற்றும் அனைத்து விதமான தாதுக்களும் இருக்கிறது. சருமத்திற்கும், முடி வளர்ச்சிக்கும் இது நல்லது. கொழுப்பை குறைக்கும். ரத்த அழுத்தத்தை சீராக்கும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். நரம்புகளுக்கு ஊட்டம் அளிக்கும். புற்றுநோய் வராமல் தடுக்கும். இந்த ஜூஸை தொடர்ந்து பத்து நாட்கள் பருகிவிட்டு பின்னர் 10 நாட்கள் இடைவெளி விட்டு மறுபடியும் 10 நாட்கள் தொடர்ந்து பருகலாம்.