என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jungle"

    • காட்டு யானைகள் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி சாலையை கடந்து செல்வது வழக்கமான ஒன்று.
    • மினி லாரியில் இருந்த தார்பாயை தனது துதிக்கையால் கீழே இழுத்து போட்டு சேதாரம் செய்தது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இந்த காட்டு யானைகள் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி சாலையை கடந்து செல்வது வழக்கமான ஒன்று.

    சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை வனப்பகுதியில் இருந்து வெளியேரிய ஒற்றை காட்டுயானை கரும்பு லாரி வருகிறதா என சாலையில் உலா வந்தது. அப்போது அங்கு பழுதாகி நின்ற மினி லாரியின் உள்ளே காய்கறி உள்ளதா என தேடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மினி லாரியில் ஏதும் இல்லாதால் மினி லாரியில் இருந்த தார்பாயை தனது துதிக்கையால் கீழே இழுத்து போட்டு சேதாரம் செய்தது. சுமார் 30 நிமிடம் வாகனங்கள வழிமறித்த ஒற்றையானை பின்னர் வனப்பகுதியில் சென்றது. கடந்த சில நாட்களாக காட்டு யானை கூட்டம் வாகனங்களை வழிமறித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    • பிரசாரத்தில் அவரது கலாட்டாவிற்கும் பஞ்சமில்லை.
    • வேலூர் மாவட்டத்தில் உள்ள காடு, மலைகளை அழித்து வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் தொகுதியில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் பலாப்பழச் சின்னத்தில் போட்டியிடுகிறார். பிரசாரத்தில் அவரது கலாட்டாவிற்கும் பஞ்சமில்லை.

    வேலூரில் இப்போது 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனை சமாளிக்க மன்சூர் அலிகான் பிரசார வாகனத்தில் தென்னை ஓலை பந்தல் அமைத்துள்ளார் .

    அந்த நிழலில் நின்ற படியே மன்சூர் அலிகான் பேசி வருகிறார். வேலூர் மாவட்டத்தில் உள்ள காடு, மலைகளை அழித்து வருகின்றனர். நான் வெற்றி பெற்று வந்து காடு, மலைகளை, காப்பாற்றி, நீர் நிலைகள் அமைப்பேன், மற்றவர்களை போல் 5 வருடம் காணாமல் போகமாட்டேன், இங்கே தான் இருப்பேன் அதனை தொடர்ந்து, காடு, மலைகளை அழிப்பவர்களை வெட்டுவேன் என ஆவேசமாக பேசினார். 

    • சிறுத்தையை "வா.. வா" என்று விளையாட்டாக அழைத்து வீடியோ எடுத்துள்ளனர்.
    • திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை இவர்களை தாக்கியுள்ளது.

    மத்திய பிரதேசத்தில் சிறுத்தையை "வா.. வா.." என்று அழைத்து இளைஞர்கள் சிலர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுத்தை உண்மையிலேயே பாய்ந்து வந்து கடித்ததில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.

    உதவி சப்-இன்ஸ்பெக்டர் நிதின் சம்தாரியா, ஆகாஷ் குஷ்வாஹா (23) மற்றும் நந்தினி சிங் (25) ஆகியோர் ஷாதோல் மாவட்டத்தில் உள்ள கோபாரு மற்றும் ஜெய்த்பூர் காடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இவர்களுடன் சேர்ந்து சுமார் 50-60 பேர் சுற்றுலாவிற்கு வந்திருந்தனர்.

    காட்டிற்குள் இருந்த புதருக்குள் மறைந்திருந்த சிறுத்தையை "வா.. வா" என்று இவர்கள் விளையாட்டாக அழைத்து வீடியோ எடுத்துள்ளனர். அந்த சமயத்தில் திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை இவர்களை தாக்கியுள்ளது.

    பின்னர் சிறுத்தை அங்கிருந்து தப்பி வனப்பகுதிக்குள் ஓடியது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இளைஞர்களை சிறுத்தை தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

    ×