search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kabaddi tournament"

    • கபடி வீரர்களுக்கு விஜய் வசந்த் எம்.பி. பரிசு வழங்கி கவுரவித்தார்.
    • முழங்குளி முத்தமிழ் ஆர்ட் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் முழங்குளி முத்தமிழ் ஆர்ட் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜய் வசந்த் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

    இதில் வெற்றிபெற்ற கபடி வீரர்களுக்கு விஜய் வசந்த் எம்.பி. பரிசு வழங்கி கவுரவித்தார். 

    • கபடிப் போட்டியில் சேலம் நீலாம்பாள் சுப்பிரமணியம் பள்ளி அணியுடன் இறுதிப் போட்டியில் மோதிய வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்றது.
    • மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு பெற்றது.

    வாழப்பாடி:

    வாழப்பாடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடிப் போட்டியில் சேலம் நீலாம்பாள் சுப்பிரமணியம் பள்ளி அணியுடன் இறுதிப் போட்டியில் மோதிய வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு பெற்றது.

    வெற்றி பெற்ற கபடி அணி வீரர்கள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் குமார், உடற்கல்வி ஆசிரியர்கள் பழனி முருகன், ராமமூர்த்தி, சிறப்பு பயிற்றுனர் வெங்கடேஷ் ஆகியோருக்கு, வேளாண்மை ஆத்மா குழுத் தலைவர் சக்கரவர்த்தி, பள்ளி தலைமையாசிரியர் ரவீந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கலைஞர்புகழ், முருகேசன், குணாளன், கோபிநாத், ரமணி மற்றும் ஆசிரியர்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

    • அண்ணா பல்கலைக்கழக கபடி போட்டி நடந்தது.
    • கிட் அண்ட் கிம் கல்லூரி அணி சாதனை படைத்துள்ளனர்.

    காரைக்குடி

    காரைக்குடி அருகே உள்ள மானகிரி கிட் அண்ட கிம் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழக 16-வது மண்டலத்திற்கான ஆண்கள் கபடி போட்டி நடந்தது. இதில் ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இருந்து 21 அணிகள் கலந்து கொண்டன. நாக் அவுட் முறையில் நடந்த போட்டி களில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் அமராவதிபுதூர் ராஜ ராஜன் பொறியியல் கல்லூரி அணியும், புதுக்கோட்டை மதர் தெரசா கல்லூரி அணியும் விளை யாடின. இதில் 15 புள்ளி வித்தி யாசத்தில் வெற்றி பெற்று ராஜ ராஜன் கல்லூரி அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

    2-ம் அரையிறுதி ஆட்டத்தில் மானகிரி கிட் அண்ட் கிம் பொறியியல் கல்லூரி அணியும், செந்தூரான் அணியும் விளையாடி கிட் அண்ட் கிம் கல்லூரி அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. பரபரப்பான இறுதி போட்டியில் ராஜ ராஜன் கல்லூரி அணி வெற்றி பெற்று முதலிடம் பெற்றது.

    இதில் கிட் அண்ட் கிம் கல்லூரி அணியும் சிறப்பாக விளையாடி பாராட்டை பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கிட் அண்ட் கிம் கல்லூரி தலைவர் அய்யப்பன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.இதில் கல்லூரியின் இயக்குனர் ஜெயராஜா, முதல்வர் பார்த்தசாரதி, உடற்கல்வி இயக்குனர் பழனியப்பன், பேராசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மகளிர் கபடி போட்டியில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பரிசு வழங்கினார்.
    • இரு அரை இறுதி போட்டியில் கோபிசெட்டிபாளையம் அணியும், அந்தியூர் அணியும் வெற்றி பெற்றது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு தேசிய அளவிலான மகளிர் கபடி போட்டி நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழகம், கேரளா, பீகார், டெல்லி, ஹரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 20 அணிகள் பங்கேற்றன. போட்டியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்.

    பிரமாண்ட கேலரியில் ஏராளமான பெண்கள், குழந்தைகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அமர்ந்திருந்தது கைதட்டியும், விசில் அடித்தும், ஆரவா ரத்துடன் போட்டியை கண்டுகளித்தனர். இரவில் நடந்த இரு அரை இறுதி போட்டியில் கோபிசெட்டி பாளையம் அணியும் அந்தியூர் அணியும் வெற்றி பெற்றது. இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

    இதில் கோபிசெட்டி பாளையம் 27 புள்ளிகள் பெற்றது. அந்தியூர் அணி 37 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. இதையடுத்து முதல் பரிசை அந்தியூர் பள்ளி மாணவிகளும், 2-வது பரிசை கோபிசெட்டி பாளையம் கல்லூரி மாணவிகளும், 3-வது பரிசை மேற்கு ெரயில்வேயும் 4-வது பரிசை சென்னையும் பெற்றது.

    வெற்றி பெற்ற அணிக்கு முதல் பரிசாக 2 லட்சமும், 2-வது பரிசாக ரூ.1.50 லட்சமும், 3-வது பரிசாக ஒரு லட்சமும், 4-வது பரிசாக ரூ.75 ஆயிரம் மற்றும் கோப்பைகள் சிறப்பு பரிசுகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். அந்தியூர் அணியில் 34 முறை பிடிபடாமல் சென்ற கவுந்தர்யாவை அமைச்சர் மற்றும் ரசிகர்கள் வெகுவாக பாராட்டினர்.

    இந்த போட்டியில், திருப்பத்தூர் ஒன்றிய குழு தலைவரும், திமுக ஒன்றிய செயலா ளருமான சண்முக வடிவேல், பேரூராட்சி சேர்மன் கோகிலாராணி, திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் காளிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • மதுரை சோழவந்தானில் மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது.
    • இந்த போட்டியில் குருவித்துறை அணி முதல் பரிசை பெற்றது.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தானில் சங்கங்கோட்டை கிராமத்தார்கள் இளைஞர்கள் மற்றும் எஸ்.ஆர். ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து நடத்திய மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. போட்டியை வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன், சங்கங்கோட்டை கிராம தலைவரும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான சிவா, சோழவந்தான் அரிமா சங்கத் தலைவர் மருது பாண்டியன் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கபடி வீரர்கள் கலந்து கொண்டனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் பரிசு பெற்ற குருவித்துறை அணியினருக்கும், 2-ம் பரிசை மதுரை மாடக்குளம் அணியினருக்கும், 3-வது பரிசை திண்டுக்கல் மாவட்டம் மட்ட பாறை அணியினருக்கும் வழங்கப்பட்டது.

    • கமுதி அருகே தென் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது.
    • கிராம பெரியோர்கள், இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டு ஏற்பாடு செய்தனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே குண்டுகுளம் கிராமத்தில் அமைந்துள்ள சிவகாளி அம்மன், அழகுத்தாய் அம்மன் கோவில் கடைசி ஆடித்திருவிழாவை முன்னிட்டு தென் மாவட்ட அளவில் மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் (தெற்கு), ராமநாதபுரம் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் பெருநாழி போஸ், சிக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கபாடி போட்டியை தொடங்கி வைத்தார். தென் மாவட்ட அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் குண்டுகுளம் அணியினர் முதல்பரிசும், 2-ம் பரிசை விஜய பாண்டியன் நினைவு கிளப் அணியும், பாளையம் பட்டி அணி 3-வது பரிசும், புதுக்கோட்டை அணி 4-வது பரிசும், சாமிபட்டி 5-வது பரிசும், கோவிலாங்குளம் அணி 6-வது பரிசும், கள்ளக்காரி 7-வது பரிசும், அரியமங்களம் 8-வது பரிசும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கிராம பெரியோர்கள், இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டு ஏற்பாடு செய்தனர்.

    முன்னதாக சிவகாளியம்மன் கோவிலுக்கு பால்குடம், அக்னி சட்டி, எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு செலுத்தினர். அம்மனுக்கு 11 வகையான அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொது அன்னதானம் வழங்கப்பட்டது.

    • மாநில அளவி லான யுனைடெட் ஃபார்மா டிராபி போட்டிகள் நடைபெற்றது.
    • கலாம் கல்லூரி மாணவர்கள் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வென்றனர்.

    பேராவூரணி:

    கோயம்புத்தூர் யுனைடெட் காலேஜ் ஆப் பார்மசி கல்லூரியில் மாநில அளவி லான யுனைடெட் ஃபார்மா டிராபி போட்டிகள் நடைபெற்றது.

    இதில் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், ஆவணம் டாக்டர் கலாம் காலேஜ் ஆப் பார்மசி கல்லூரி மாணவ, மாண விகள் கலந்து கொண்டு ஆடவர்களுக்கான கபாடி போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து கோப்பையை வென்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர்.

    இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரியின் சேர்மன் ஜெயசீலன்,நிர்வாக பிரதிநிதி அஜித் டேனியல், பார்மசி மற்றும் பாலி டெக்னிக் கல்லூரியின் முதல்வர்கள் அன்பழகன், மதிவாணன் மற்றும் துணை முதல்வர் பரிமளா தேவி மற்றும் துறை தலைவர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் பிரசாத், பாலமுருகன் குழந்தைவேல், ஆசிகா மற்றும் பேராசிரியர்கள், பேராசிரியைகள் மற்றும் அலுவலக உதவி யாளர்கள், மாணவ, மாணவிகளும் பாராட்டு களை தெரி வித்தனர்.

    • 67அணிகள் பங்கேற்றது
    • 10 அடி உயர கோப்பை, ரூ.7 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பனந்தோப்பு கிராமத்தில் மாநில அளவிலான கபடி போட்டி கடந்த 2 நாட்களாக நடந்தது.

    ஹிட்லர் பாய்ஸ் அணியினர் நடத்திய இந்த போட்டியில் சென்னை, திண்டுக்கல், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 67அணிகள் பங்கேற்றது. சுமார் 750-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று ஆர்வத்துடன் விளையாடினர்.

    இதில் பெரிய ஏரியூர் கிராமத்தை சேர்ந்த ஜெய் அனுமான் அணியினர் சிறப்பாக விளையாடிய முதல் பரிசை தட்டிச் சென்றனர்.

    முதல் பரிசாக 10அடி உயர கோப்பையுடன் ரூ.7 ஆயிரம், 2-ம் பரிசாக 7 அடி கோப்பையுடன் ரூ.5 ஆயிரம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது.

    • தேசிய கபடி போட்டியில் மானாமதுரை பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.
    • லோகேஸ்வரன், ஆனந்தகிருஷ்ணன் ஆகியோர் தமிழக அணியின் சார்பில் தேர்வு செய்யப்பட்டு போட்டியில் பங்கேற்றனர்.

    மானாமதுரை

    கோவாவில் பள்ளி மாணவர்களுக்கிடையிலான தேசிய கபடி போட்டி நடந்தது. யூத் நேஷனல் ஸ்போர்ட்ஸ் கவுன்சில் ஆப் இந்தியா சார்பில் நடந்த இப்போட்டியில் தமிழக அணியின் சார்பில் ராமநாத புரத்தை சேர்ந்த பயிற்சியாளர் புவனேஸ்வரன் தலைமையில் மானா மதுரை செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவர்கள் லோகேஸ்வரன், ஆனந்தகிருஷ்ணன் ஆகியோர் தமிழக அணியின் சார்பில் தேர்வு செய்யப்பட்டு போட்டியில் பங்கேற்றனர்.

    போட்டியின் இறுதி சுற்றில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி தமிழக அணி வெற்றிபெற்றது. இதையடுத்து இந்த அணியில் பங்கேற்ற மாணவர்கள் லோகேஸ்வரன், ஆனந்தகிருஷ்ணன் இருவருக்கும் தங்கப்பதக்கங்களும் தலா ரூ.35 ஆயிரம் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களை செயின்ட் ஜோசப் கல்வி நிறுவனங்களின் செயலர் கிறிஸ்டிராஜ், தலைமை முதல்வர் அருள் ஜோசப்பின் பெட்ஷி, மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் பிருந்தா மற்றும் ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் பாராட்டினர்.

    • ராமநாதபுரம் எஸ்.பி.பட்டிணத்தில் மின்னொளி கபாடி போட்டி நடந்தது.
    • 2-ம் பரிசான ரூ. 30 ஆயிரம் சுழற்கோப்பையை சென்னை புதுக்கல்லூரி அணி பெற்றது.

    கீழக்கரை

    பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டிணத் தில் 12-ம் ஆண்டு ஃபிரண் ட்ஸ் ஸ்டார் அணியினர் நடத்திய மின்னொளியில் கபாடி போட்டி நடைபெற்றது.

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ. 35 ஆயிரமும் சுழற்கோப்பையையும் எஸ்.பி. பட்டிணம் வி.ஆர். எஸ். ஒய் பிரதர்ஸ் அணி பெற்றது.

    இரண்டாம் பரிசான ரூ. 30 ஆயிரம் சுழற்கோப்பையை சென்னை புதுக்கல்லூரி அணி பெற்றது. மூன்றாம் பரிசு ரூ.25 ஆயிரம் சுழற் கோப்பையை சோழகன் பேட்டை அணி பெற்றது.

    நான்காம் பரிசான ரூ.20 ஆயிரம் சுழற்கோப்பையை எஸ்.பி.பட்டிணம் ஸ்பார் டன்ஸ் அணி பெற்றது.

    ஐந்தாம் பரிசு ரூ.15 ஆயிரம் சுழற்கோப்பையை எஸ்.பி.பட்டிணம் லெஜண்ட் அணி பெற்றது.

    வெற்றி பெற்ற அணி வீரர்களை த.மு.மு.க. மாநில செயலாளர் சாதிக்பாட்சா, மாவட்ட துணை செயலாளர் நிஸார் அஹமது, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் பாக்கி, தொண்டி இந்து தர்ம பரிபாலன சபை தலைவர் ராஜ சேகர், த.மு.மு.க. ஒன்றிய செயலாளர் ஜின்னா இளையோர் அணி புஹாரி தமிம், ம.ம.க. செயலாளர் பரக்கத் அலி ஆகியோர் வாழ்த்தினர்.

    • லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. கோப்பை வழங்கினார்
    • இதற்கான ஏற்பாடுகளை பி.ஆர், மற்றும் யு.எல்.கே. பிரதர்ஸ் விளையாட்டு குழு பாபு தலைமையில் செய்திருந்தனர்.

    புதுச்சேரி:

    ஏம்பலம் தொகுதி சார்காசிமேடு கிராமத்தில் கபடி போட்டி தொடங்கியது. துணை சபாநாயகர் ராஜவேலு, லட்சுமி காந்தன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டியில் புதுவை கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 30 அணிகள் பங்கேற்றன.

    முதல் இடத்தை சார்காசிமேடு அணியும், 2-வது இடத்தை பாக்கம் கூட்ரோடு அணியும், 3-வது இடத்தை பாகூர் அணியினர் வென்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. கோப்பை மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கினார்.

    மேலும் கிராமத்தில் உள்ள 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை கவுரவித்து பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பி.ஆர், மற்றும் யு.எல்.கே. பிரதர்ஸ் விளையாட்டு குழு பாபு தலைமையில் செய்திருந்தனர்.

    • கபடி அணிகளுக்கு பரிசுகளை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • ரூ. 1 லட்சத்தை முதல் பரிசாக கொண்டு மாபெரும் கபடி போட்டி நடத்தப்படும் என்றார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சியாபுரம் ஊராட்சி செவன் லயன்ஸ் கபடிக்குழு மற்றும் ஊர்பொதுமக்கள் இணைந்து நடத்திய கபடி போட்டியையும், ராஜ பாளையம் ஆவாரம்பட்டி யாழினி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய கபடி போட்டியை யும் எம்.எல்.ஏ. தங்கப் பாண்டியன் தொடங்கி வைத்தார். இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அவர் ரொக்கப்பரிசுகளை வழங்கினார்.

    அப்போது அவர் பேசுகையில், விளையாட்டுத் துறைக்கு புத்துயிர் கொடுத்து அதனை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்வதில் நமது முதலமைச்சரும், விளை யாட்டுத்துறை அமைச்சரும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

    மேலும் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ராஜபாளையம் தொகுதியில் ரூ. 1 லட்சத்தை முதல் பரிசாக கொண்டு மாபெரும் கபடி போட்டி நடத்தப்படும் என்றார்.

    இந்த நிகழ்வில் நகர செயலாளர் (தெற்கு) ராமமூர்த்தி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, பொன்னுத்தாய், அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×