என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kalakkadu"

    • களக்காடு சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் கோவிலில் முருகப்பெருமான் பட்டின பிரவேச விழா நடந்தது.
    • முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை அம்மன்களுடன் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார்.

    களக்காடு:

    களக்காடு சத்தியவா கீஸ்வரர், கோமதி அம்பாள் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா வின் தொடர் நிகழ்ச்சியான முருகப்பெருமான் பட்டின பிரவேச விழா நடந்தது.

    இதையொட்டி முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து முருகப்பெருமான் விஷேச அலங்காரத்தில் காட்சி அளித்தார். அதன்பின் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை அம்மன்களுடன் சப்பரத்தில் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க, வான வெடிகள் ஒலிக்க திருவீதி உலா வந்தார். சப்பரம் பல வண்ண மின் விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • களக்காடு தலையணை மலையடிவாரத்தில்காட்டு பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.
    • 1 வாரத்திற்குள் 300-க்கும் மேற்பட்ட வாழைகள் நாசமானதாக விவசாயி கவலையுடன் தெரிவித்தார்.

    களக்காடு:

    களக்காடு தலையணை மலையடிவாரத்தில் கள்ளியாறு விளைநிலங்கள் உள்ளன. இதில் விவசாயிகள் வாழை, நெல் சாகுபடி செய்து வருகின்றனர். சமீபகாலமாக இப்பகுதியில் காட்டு பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.

    கடந்த 1 வாரமாக வனப்பகுதியில் இருந்து வெளி வந்த காட்டு பன்றிகள் கூட்டம் களக்காடு நாடார் புதுத்தெருவை சேர்ந்த விவசாயி சுரேஷ் (58) என்பவருக்கு சொந்தமான விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது.

    மேலும் வாழைகளை சாய்த்து அதன் குருத்துகளை தின்றன. இதனால் 1 வாரத்திற்குள் 300-க்கும் மேற்பட்ட வாழைகள் நாசமானதாக விவசாயி ஒருவர் கவலையுடன் தெரிவித்தார்.

    இந்த வாழைகள் ஏத்தன் ரகத்தை சேர்ந்தது ஆகும். இதனால் அவருக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி களக்காடு வனத்துறை அலுவலகத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

    இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், அதிகரித்து வரும் காட்டுப்பன்றிகள் அட்டகாசத்தை தடுக்கவும், பயிர்கள் நாசமாகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

    • சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் ஆகியோர் வாகனத்தில் எழுந்தருளி தெப்பக் குளத்திற்கு வந்தனர்
    • விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காட்டில் ஆண்டு தோறும் தை மாதம் 3 நாட்கள் தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று கோலா கலத்துடன் தொடங்கியது. முதல் நாளான நேற்று ஸ்ரீசத்திய வாகீஸ்வரர், கோமதி அம்பாள் கோவில் தெப்ப உற்சவம் நடை பெற்றது.

    இதையொட்டி சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் ஆகியோர் கோவிலில் இருந்து வாகனத்தில் எழுந்தருளி ரதவீதிகள் வழியாக விழா நடைபெறும் தெப்பக் குளத்திற்கு வந்தனர். அங்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷே கங்களும், அலங் கார தீபாரா தனைகளும் நடத்தப்பட்டது.அதன் பின்னர் தெப்ப உற்சவம் தொடங்கியது. சிறப்பு அலங்காரத்தில் சத்தியவாகீஸ்வரரும், கோமதி அம்பாளும் தெப்பத்தில் எழுந்தருளி 11 முறை சுற்றி வந்து காட்சி அளித்தனர்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். விழாவை யொட்டி தெப்பமும், தெப்பக்குளத்தின் நடுவே உள்ள நீராழி மண்டபமும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஜொலித்தது. 2-ம் நாளான இன்று இரவு களக்காடு வரதராஜ பெருமாள் கோவில் தெப்ப திருவிழாவும், 3-ம் நாளான நாளை (12-ந் தேதி) களக்காடு சந்தான கோபால கிருஷ்ண சுவாமி கோவில் தெப்பத்திருவிழாவும் நடக்கிறது.

    • வன அலுவலர்கள், ஊழியர்கள் ரோந்து சென்றபோது ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
    • உரிய அனுமதியுடன் தேக்கு மரங்களைகொண்டு செல்வது விசாரணையில் தெரிய வந்தது.

    நெல்லை:

    களக்காடு- முண்டந் துறை புலிகள் காப்பகம், அம்பை வனக்கோட்டத்திற் குட்பட்ட பகுதிகளில் வன அலுவலர்கள்- ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் தேக்கு மர தடிகள் இருந்தன.

    இது தொடர்பாக விசாரித்த போது அவை கட்டளை மலை எஸ்டேட் பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் காற்றில் விழுந்த பட்டு போன தேக்கு மரங்களை அப்புறப்படுத்த உரிய அனுமதி பெற்று கொண்டு செல்வது தெரிய வந்தது. எனினும் அந்த தடி மரங்களில் சொத்து குறியீடு இல்லாத காரணத்தினால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    • களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 27-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
    • திருவிழாவின் 5-ம் நாளான நேற்று கருட சேவை விழா நடந்தது.

    களக்காடு:

    களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 27-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினசரி காலையில் சிறப்பு திருமஞ்சனமும், இரவில் பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருதலும் நடந்து வருகிறது.

    திருவிழாவின் 5-ம் நாளான நேற்று கருட சேவை விழா நடந்தது. இதனை முன்னிட்டு வரதராஜ பெருமாள், வெங்கடாஜலபதி மற்றும் தேவியர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து இரவில் வரதராஜபெருமாளும், வெங்கடாஜலபதி சுவாமிகளும் தனித்தனி கருட வாகனங்களில் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க ரத வீதிகளில் உலா வந்தனர்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 7-ம் திருநாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு திருக்கல்யாண வைபவமும், 8-ம் நாளான 3-ந் தேதி (திங்கட்கிழமை) பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளிகிறார். 10-ம் நாளான 5-ந் தேதி (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா மண்டகப்படிதாரர்கள், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • களக்காடு வரதராஜபெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 27-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
    • திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்ட விழா 10-ம் நாளான நேற்று நடந்தது.

    களக்காடு:

    களக்காடு வரதராஜபெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 27-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் காலையில் சிறப்பு திருமஞ்சனமும், இரவில் பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருதலும் நடந்து வருகிறது. திருவிழாவின் 5-ம் நாளன்று கருட சேவையும், 7-ம் திருநாளன்று வரதராஜபெருமாள் திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது. 8-ம் நாளான கடந்த 3-ந்தேதி பெருமாள் குதிரை வாகனத்தில் பவனி வந்தார். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்ட விழா 10-ம் நாளான நேற்று நடந்தது. இதையொட்டி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் தேவியர்களுடன் திருத்தேருக்கு எழுந்தருளினார். அதன் பின் மாலையில் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். ரதவீதிகளை சுற்றி வந்து, இரவில் திருத்தேர் நிலையை வந்தடைந்தது. களக்காடு இன்ஸ்பெக்டர் ஜோசப்ஜெட்சன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் வரதராஜபெருமாள் தேர் தடம் பார்க்கும் நிகழ்ச்சி இடம்பெற்றது. 11-ம் நாளான இன்று தீர்த்தவாரி நடக்கிறது.

    • களக்காட்டில் புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 14 பெண்களுக்கும், 2-ம் கட்டமாக 24 பெண்களுக்கும் தையல், அழகு கலை பயிற்சி வழங்கப்பட்டது.
    • பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா களக்காடு சூழல் திட்ட அலுவலகத்தில் நடந்தது.

    களக்காடு:

    களக்காட்டில் புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 14 பெண்களுக்கும், 2-ம் கட்டமாக 24 பெண்களுக்கும் தையல், அழகு கலை பயிற்சியும், 14 பெண்களுக்கு அழகு கலை நிபுணர் பயிற்சியும் அளிக்கப்பட்டது. பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா களக்காடு சூழல் திட்ட அலுவலகத்தில் நடந்தது. களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் தலைமை தாங்கினார். களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் சூழல் மேம்பாட்டு திட்ட அதிகாரி அன்பு சான்றிதழ்களை வழங்கினார்.

    அப்போது அவர் பேசுகையில், களக்காடு புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள கிராம மக்களுக்கு சுய தொழில் தொடங்குவதற்கு சூழல்மேம்பாட்டு திட்டத்தின் மூலம் கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக பெண்கள் பொருளாதாரத்தில் மேம்பட தையல் ,அழகு கலை பயிற்சியும், அழகு கலை நிபுணர் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. வனத்தையும், வன விலங்கு களையும் பாதுகாப்பதில் பொதுமக்கள் பங்களிப்பு அவசியமாகும். தேசிய புலிகள் ஆணையமும், வன வளத்தை பாதுகாக்க என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கிராம மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளது. காடுகளை வனத்துறை அதிகாரியால் மட்டும் பாதுகாக்க முடியாது. பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

    விழாவில் களக்காடு சூழல் திட்ட வன சரகர் முகுந்தன், வனவர் சிவக்குமார் மற்றும் வனத்துறை அதிகாரிகள், சூழல் மேம்பாட்டு திட்ட பணியாளர்கள், கிராம வனக்குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • குழந்தையை பார்ப்பதற்காக ஜெபராஜ் களக்காட்டிற்கு வந்தார்.
    • விசாரணையில் டேனியல் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது.

    களக்காடு:

    சேரன்மகாதேவி அருகே உள்ள கூனியூர், கீழவடக்கு தெருவை சேர்ந்தவர் சகரியா மைக்கில் ஜெபராஜ் (வயது28). விவசாயி. இவரது மனைவிக்கு களக்காடு புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. நேற்று அவர் குழந்தையை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் களக்காட்டிற்கு வந்தார். மருத்துவமனை அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, அவர் மருத்துவமனைக்கு சென்றார். சிறிது நேரத்திற்கு பின் திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் நேச மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    இதில் மேலபத்தை, கருப்பன்தோப்பு பகுதியை சேர்ந்த டேனியல் (27) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    • இசக்கிபாண்டி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார்.
    • பீரோவில் இருந்த ஒரு பவுன் தங்க கம்மல்கள் திருட்டு போயிருந்தது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மலையடிப்புதூர் பருத்திவிளை தெருவை சேர்ந்தவர் இசக்கி பாண்டி (வயது 37). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று பகலில் இசக்கி பாண்டி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் இருந்த ஒரு பவுன் தங்க கம்மல்கள் திருட்டு போயிருந்தது. இசக்கி பாண்டி வேலைக்கு சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து கம்மல்களை திருடி சென்றுள்ளனர்.

    இது குறித்து இசக்கி பாண்டி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

    • கோடை வெயிலால் தலையணையில் தண்ணீர்வரத்து வெகுவாக குறைந்தது.
    • மேற்கு தொடர்ச்சி மலையிலும் கனமழை பெய்தது.

    களக்காடு:

    களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை உள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் கொளுத்தி வந்ததால் தலையணையில் தண்ணீர்வரத்து வெகுவாக குறைந்தது. சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இதற்கிடையே களக்காடு பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.

    நேற்று இரவில் விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. மேற்கு தொடர்ச்சி மலையிலும் கனமழை பெய்தது. இதனால் தலையணை நீர்வீழ்ச்சியில் இன்று அதிகாலை முதலே தண்ணீர் வரத்து அதிகரித்தது. தடுப்பணையை தாண்டி தண்ணீர் கொட்டுகிறது. இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் கவனமுடன் குளிக்கும்படி வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • வெண்ணிலா பாரதியும், வேலுவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
    • வேலு உள்பட 4 பேர் காந்திமதி வீட்டிற்கு வந்து குழந்தையை கேட்டனர்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பை சேர்ந்தவர் மாடசாமி மனைவி காந்திமதி (வயது 45). இவரது மகள் வெண்ணிலா பாரதியும், அவரது கணவர் வேலுவும் கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். வெண்ணிலா பாரதியின் ஆண் குழந்தை காந்திமதியின் பராமரிப்பில் உள்ளது. வெண்ணிலா பாரதிக்கும், அவரது கணவர் வேலுக்கும் இடையே விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில் நேற்று வேலு, பலவேசகண்ணன், சுரேஷ் உள்பட 4 பேர் காந்திமதி வீட்டிற்கு வந்து குழந்தையை கேட்டனர். அதற்கு அவர் மறுத்ததால் அவரை தாக்கினர். இதனை தடுக்க வந்த காந்திமதியின் மகன் கார்த்திக் மணிகண்டனையும் தாக்கினர். இதில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி மூன்றடைப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வேலு உள்பட 4 பேரையும் தேடி வருகின்றனர்.

    • இசக்கியப்பனுக்கும்,முருகனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
    • காயமடைந்த இசக்கியப்பன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    களக்காடு:

    திருக்குறுங்குடி அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்தவர் சுந்தரம் மகன் இசக்கியப்பன் (39). விவசாயி. இவருக்கும், இவரது அண்ணன் முருகனுக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு, முன் விரோதம் இருந்து வருகிறது.

    சம்பவத்தன்று அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த முருகன், இசக்கியப்பனை அரிவாளால் வெட்டினார். இதில் காயமடைந்த இசக்கியப்பன் சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்க ப்பட்டார். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்ய ப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, முருகனை தேடி வருகின்றனர்.

    ×