search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி தேரோட்டம்
    X

    தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களை படத்தில் காணலாம். 

    களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி தேரோட்டம்

    • களக்காடு வரதராஜபெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 27-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
    • திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்ட விழா 10-ம் நாளான நேற்று நடந்தது.

    களக்காடு:

    களக்காடு வரதராஜபெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 27-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் காலையில் சிறப்பு திருமஞ்சனமும், இரவில் பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருதலும் நடந்து வருகிறது. திருவிழாவின் 5-ம் நாளன்று கருட சேவையும், 7-ம் திருநாளன்று வரதராஜபெருமாள் திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது. 8-ம் நாளான கடந்த 3-ந்தேதி பெருமாள் குதிரை வாகனத்தில் பவனி வந்தார். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்ட விழா 10-ம் நாளான நேற்று நடந்தது. இதையொட்டி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் தேவியர்களுடன் திருத்தேருக்கு எழுந்தருளினார். அதன் பின் மாலையில் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். ரதவீதிகளை சுற்றி வந்து, இரவில் திருத்தேர் நிலையை வந்தடைந்தது. களக்காடு இன்ஸ்பெக்டர் ஜோசப்ஜெட்சன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் வரதராஜபெருமாள் தேர் தடம் பார்க்கும் நிகழ்ச்சி இடம்பெற்றது. 11-ம் நாளான இன்று தீர்த்தவாரி நடக்கிறது.

    Next Story
    ×