என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "kallidaikurichi"
- கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 17 தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தாட்கோ மூலம் மானியக்கடனில் கறவை மாடுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
- கல்லிடைக்குறிச்சி கால்நடை மருத்துவமனை அருகில் உள்ள பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் பார்வதி தலைமை தாங்கினார்.
கல்லிடைக்குறிச்சி:
கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 17 தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தாட்கோ மூலம் மானியக்கடனில் கறவை மாடுகள் வழங்கும் விழா நடைபெற்றது. கல்லிடைக்குறிச்சி கால்நடை மருத்துவமனை அருகில் உள்ள பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் பார்வதி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் இசக்கிப் பாண்டியன், வங்கி மேலாளர்கள் ஜெயராம், சதீஷ்குமார், கால்நடை மருத்துவர்கள் அகன்யா, சிவமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாட்கோ மாவட்ட மேலாளர் செல்வி கறவை மாடுகளை வழங்கி திட்டம் குறித்து விளக்கவுரை உரையாற்றினார். சமூக ஆர்வலர் முருகன் வரவேற்றார்.
தெற்கு கல்லிடைக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகலெட்சுமி, தமிழ்நாடு கிராமவங்கி முன்னாள் மேலாளர் அசரப், தி.மு.க. சேரன்மகாதேவி மேற்கு ஒன்றிய துணைச்செயலாளர் சொரிமுத்து, கவுன்சிலர்கள் பாண்டி, செய்யது அலிபாத்து, கைக்கொண்டான் பொன்னுசாமி, சந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். ரமேஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கறவை மாடுகளை பெறும் பயனாளிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிகள் தொடர்பான விழிப்புணர்வு மாரத்தான் நடைபயணம் மணிமுத்தாறு செல்லும் சாலையில் நடைபெற்றது.
- மாரத்தான் நடைபயணத்தை பேரூராட்சி தலைவர் பார்வதி இசக்கி பாண்டியன் தொடங்கி வைத்தார்.
கல்லிடைக்குறிச்சி:
தகவல் அறியும் உரிமைச் சட்ட வாரம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரைகொண்டாடப்படுவதை முன்னிட்டு கல்லிடைக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் இன்று தமிழ்நாடு மாநில தகவல் ஆணைய உத்தரவின்படி காலை 6 மணி முதல் 10 மணி வரை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிகள் தொடர்பான விழிப்புணர்வு மாரத்தான் நடைபயணம் நடைபெற்றது. கல்லிடைக்குறிச்சி கோட்டவிளை தெரு, மணிமுத்தாறு செல்லும் சாலையில் பாப்பாங்குளம் முக்கவர் சாலை பஸ் நிறுத்தம் வரை நடைபயணம் நடைபெற்றது . பேரூராட்சி துணைத் தலைவர் இசக்கி பாண்டியன் முன்னிலையில், தலைவர் பார்வதி இசக்கி பாண்டியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பாத்திமா, ஜானகி, பிரமாச்சி, ஜானகி, பெரிய செல்வி, மாலதி, ஜார்ஜ் ராபர்ட், பாண்டி, முத்துலட்சுமி, சையத் அலி பாத்திமா மற்றும் பேரூராட்சி இளநிலை பொறியாளர் பாலகிருஷ்ணன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், பள்ளி மாணவர்கள், பேரூராட்சி பணியாளர்கள், காவல்துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். தகவல் உரிமைச் சட்டத்தின் விதிகள் தொடர்பான விழிப்புணர்வை பேரூராட்சி செயலாளர் சத்தியமூர்த்தி தெரிவித்து நன்றி கூறினார்.
- தமிழ்நாடு முழுவதும் 50 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகள், டீ கப்புகள், பிளாஸ்டிக் தொட்டி கள், பிளாஸ்டிக் இலைகள், பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் உட்பட 14 பொருட்களை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.
- அதன்படி கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி எல்கைக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது என ஆட்டோ மூலம் கடந்த 5 நாட்களாக அறிவிப்பு செய்யப்பட்டது.
நெல்லை:
தமிழ்நாடு முழுவதும் 50 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகள், டீ கப்புகள், பிளாஸ்டிக் தொட்டி கள், பிளாஸ்டிக் இலைகள், பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் உட்பட 14 பொருட்களை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.
கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி
அதன்படி கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி எல்கைக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது என ஆட்டோ மூலம் கடந்த 5 நாட்களாக அறிவிப்பு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செயல் அலுவலர் சத்தியமூர்த்தி உத்தரவின்படி பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அபுபக்கர் தலைமையில், துப்புரவு மேற்பார்வையாளர்கள், துப்புரவு பணியாளர்கள் கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி மெயின் ரோடுகள் மற்றும் முக்கிய வீதிகளில் சூப்பர் மார்க்கெட்டுகள், உணவ கங்கள், பேக்கிரிகள், டீக்கடை கள், பழக்கடைகள் மற்றும் பூக்கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்ப டுத்தபடு கிறதா? என ஆய்வு செய்தனர்.
பிளாஸ்டிக் பறிமுதல்
ஆய்வில் ஒரு சில கடைகளில் பயன்படுத்த வைத்திருந்த சுமார் 3 கிலோ அளவிலான பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் தொடர்பாக செயல் அலுவலர் கூறும்போது, தற்போது கடைகளிலும், பொதுமக்களிடமும் பிளாஸ்டிக் தடை தொடர்பான விழிப்புணர்வு எடுத்து கூறி இனிவரும் காலங்களில் பயன்படுத்தினாலோ, அல்லது விற்பனை செய்தாலோ பிளாஸ்டிக் பொருட்கள் முழுவதும் பறிமுதல் செய்யப்ப டுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டது என்று கூறினார்.
- ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள், சேரன்மகாதேவி வட்டாரம் சார்பாக “100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு” சமுதாய வளைகாப்பு விழா கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி மண்டபத்தில் நடத்தப்பட்டது.
- விழாவில் மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ் மற்றும் சுகாதார ஆய்வாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.
கல்லிடைக்குறிச்சி:
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள், சேரன்மகாதேவி வட்டாரம் சார்பாக "100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு" சமுதாய வளைகாப்பு விழா கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி மண்டபத்தில் நடத்தப்பட்டது
விழாவில் கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி தலைவர் பார்வதி, இசக்கிபாண்டியன், வீரவநல்லூர் பேரூராட்சி தலைவர் சித்ரா மற்றும் வசந்த சந்திரா, மேலச்செவல் தலைவர் அன்னபூரணியம்மாள், கோபாலசமுத்திரம் தலைவர் தமயந்தி மற்றும் சுந்தர்ராஜன், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி உறுப்பினர்கள் பாத்திமா, ஜானகி, பிரமாச்சி, ஜானகி, பெரியசெல்வி, மாலதி, ஜார்ஜ் ராபர்ட், பாண்டி, முத்து லெட்சுமி, செய்யது அலி பாத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ் மற்றும் சுகாதார ஆய்வாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜாஸ்மின்தேனா, காந்திமதி , சீதாலெட்சுமி மற்றும் சரஸ்வதி, வட்டார ஒருங்கிணைப்பாளர் மங்கை ஆகியோர் கலந்து கொண்டு குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து எடுத்துரைத்தனர். இதில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சி நடுத்தெரு சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் இந்திராணி (வயது 20). இவர் நெல்லையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் நேற்று வழங்கம் போல கல்லூரி சென்றார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு செல்லும் வழியில் திடீரென மயங்கி விழுந்தார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ெநல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் இந்திராணி கல்லூரி படிப்பு முடித்ததும் மேல்படிப்பு படிக்க வேண்டும் என கூறியதாக தெரிகிறது.
ஆனால் தற்போது குடும்ப பொருளாதார சூழ்நிலையில் முடியாது என பெற்றோர் கூறிஉள்ளனர். இதில் மனமுடைந்த இந்திராணி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காதல் விவகாரத்தில் தாக்கப்பட்ட விவசாயிக்கு தீவிர சிகிச்சை.
- விவசாயியை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கல்லிடைக்குறிச்சி:
கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள அயன் சிங்கம்பட்டி மடத்து தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 42). விவசாயி.
இவரை நேற்று இரவு 6 பேர் கும்பல் பீர்பாட்டிலால் குத்திவிட்டு தப்பி சென்றது. இதில் பாலசுப்பிரமணியம் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் பாலகிருஷ்ணனின் உறவினர் பெண்ணை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்டபோது ஏற்பட்ட தகராறில் பாட்டில் குத்து விழுந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவன் பாண்டி (28), வேல்முருகன் (23) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- அம்பை, கடையம் உள்ளிட்ட துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- நாளை மறுநாள் காலை 9 மணி-மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
கல்லிடைக்குறிச்சி:
கல்லிடைக்குறிச்சி மின்விநியோக செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது:-
ஓ. துலூக்கப்பட்டி, வீரவநல்லூர், அம்பை, மணிமுத்தாறு, கடையம் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் அன்று மின்தடை ஏற்படும்.
அதன்படி ஆழ்வான் துலூக்கப்பட்டி, ஒ. துலூக்கப்பட்டி, செங்குளம், கபாலிபாறை, இடைகால், அனைந்த நாடார்பட்டி, தாழை யூத்து, பனையங்குறிச்சி, நாலா ங்கட்டளை, கீழக்குத்தபாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், வெள்ளாங்குளி, ரெங்கசமுத்திரம், கூனியூர், காருகுறிச்சி, அம்பை, ஊர்க்காடு, வாகைக்குளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி, மணிமுத்தாறு, ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன்மாநகர், தெற்கு பாப்பான்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம் ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணி வரையும் மின்விநியோகம் இருக்காது.
இதேபோல் கடையம், பண்டாரகுளம், பொட்டல்புதூர், திருமலையப்பபுரம், வடமலைசமுத்திரம், வள்ளியம்மாள்புரம், சிவநாடனூர், மாதாபுரம் மயிலப்பபுரம், வெங்காலிப்பட்டி, மேட்டூர் ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை மின்விநியோகம் தடைப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- போலீஸ் நிலையம் அருகே உள்ள சுவரில் ஆண், பெண் சமத்துவம் உள்ளிட்ட வசனங்கள் அடங்கிய கருத்துக்கள் எழுதப்பட்டுள்ளது.
- சமூகத்தில் பெண்கள் ஆண்களுக்கு கீழே இருப்பதாக கருதும் நிலை மாற வேண்டும்.
கல்லிடைக்குறிச்சி:
அம்பை சரகத்திற்குட் பட்ட அனைத்து மகளிர் காவல் நிலையம் அம்பையில் உள்ளது. இங்கு அம்பை, வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி, பாப்பாக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் தொடர்பான பிரச்சினை களுக்கு புகார்கள் பெறப்பட்டு வருகிறது.
இங்கு உள்ள சுற்றுச் சுவர்களில் பெண்களுக்கான உரிமைகள் குறித்தும், போக்சோ சட்டம் உள்ளிட்டவை குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீசாரின் முயற்சியால் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
குறிப்பாக போலீஸ் நிலையம் அருகே உள்ள சுமார் 10 அடி உயர சுவரில் ஆண், அதற்கு ஈடாக பெண் நடனமாடுவது, அதில் ஆண், பெண் சமத்துவம் உள்ளிட்ட வசனங்கள் அடங்கிய கருத்துக்கள் எழுதப்பட்டு இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த ஓவியங்கள் நடராஜர் வடிவத்தில் வரையப்பட்டிருந்தாலும் இதன் மூலம் சாதி, மதம் போன்ற பேதங்களை கடந்து உள்ளதாக காவல்துறையும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், சமூகத்தில் பெண்கள் ஆண்களுக்கு கீழே இருப்பதாக கருதும் நிலை மாற வேண்டும். மது ஒழிப்பு, போக்சோ குறித்து அனைவருக்கும் தெரிய வேண்டும். இங்கு பெண்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் சில நேரங்களில் வரும்போது இந்த ஓவியங்கள் மூலம் நிச்சயமாக அவர்கள் மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றனர்.
- அம்பை, கடையம், கரிசல்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
- சேரன்மகாதேவி பகுதிகளில் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
கல்லிடைக்குறிச்சி:
கல்லிடைக்குறிச்சி மின் வினியோக செயற் பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
மின்தடை
கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்திற்கு உட்பட்ட அம்பை, கடையம், கரிசல்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சில இடங்களில் மின்தடை ஏற்படும்.
ஆழ்வான் துலுக்கப் பட்டி,ஓ.துலுக்கப்பட்டி, செங்குளம், கபாலி பாறை, இடைகால், அனைந்தநாடார்பட்டி, தாழையூத்து, பனை யங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தபாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை ஆகிய இடங்களில் மின்வினி யோகம் இருக்காது.
வீரவநல்லூர் பகுதிக்கு உட்பட்ட கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், வெள்ளாங்குளி, ரெங்க சமுத்திரம், திருப்புடை மருதூர், கூனியூர், காருக்குறிச்சி, அத்தாள நல்லூர், ரெட்டியார்புரம் ஆகிய இடங்களிலும், அம்பாச முத்திரம், ஊர்க்காடு, வாகைக்குளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்ம தேசம், பள்ளக்கால், அடைச் சாணி, அகஸ்தி யர்பட்டி ஆகிய இடங்களிலும் மின்தடை ஏற்படும்.
மேலும் மணிமுத்தாறு பகுதியில் ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவிக்குளம், பொன்மாநகர், தெற்கு பாப்பான்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம், கடையம் பண்டாரகுளம், பொட்டல் புதூர், திருமலையப்பபுரம், ரவணசமுத்திரம், வள்ளியம்மாள்புரம், சிவநாடனூர், மாதா புரம், மயிலபுரம், வெய்க்காலிப் பட்டி, மேட்டூர், கரிசல் பட்டி, பிள்ளைகுளம், காணியாளர் குடியிருப்பு, பட்டன்காடு, இடையன்குளம், கங்கணாங்குளம், பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணி யங்குளம், சுப்பிரமணியபுரம், சடையான்குளம், வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவன் நல்லூர், காடுவெட்டி, சேரன்மகாதேவி, கரிசூழ்ந்த மங்கலம், கேசவசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நாளை(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப் பதால் ஓ.துலுக்கப்பட்டி துணை மின்நிலை யத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
- இதேபோல வீரவநல்லூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் நாளை காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
கல்லிடைக்குறிச்சி:
கல்லிடைக்குறிச்சி மின் விநியோக செயற் பொறியாளர் சுடலை யாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாளை(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப் பதால் ஓ.துலுக்கப்பட்டி துணை மின்நிலை யத்திற்கு உட்பட்ட ஆழ்வான் துலூக் கப்பட்டி, ஒ.துலூக்கப் பட்டி, செங்குளம், கபாலி பாறை, இடைகால், அனைந்த நாடார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங் கட்டளை, கீழக்குத்த பாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
இதேபோல வீரவநல்லூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், வெள்ளாங்குளி, ரெங்கச முத்திரம், திருப்புடை மருதூர், கூனியூர், காரு குறிச்சி, அத்தாளநல்லூர், ரெட்டியார்புரம் பகுதிக ளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
அம்ம்பை, ஊர்க்காடு, வாகைக்குளம், இடைகால், மன்னார் கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி, மணி முத்தாறு, ஜமீன் சிங்கம் பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன் மாநகர், தெற்கு பாப்பான் குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள் புரம் ஆகிய பகுதி களிலும் நாளை காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
கடையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஆவுடையானூர், மனல் காட்டானூர், பண்டார குளம், வள்ளியம்மாள்புரம், பாப்பான் குளம், கடையம், சிவநாடனூர் ஆகிய பகுதி களில் காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை மின்விநியோகம் தடைபடும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற இருப்பதால் நாளை (சனிக்கிழமை) கீழ்வரும் கோட்டத்தை சார்ந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின் தடை ஏற்படும்
- நாலாங் கட்டளை, கீழக்குத்தபாஞ்சான்,காசிதர்மம்,முக்கூடல், சிங்கம்பாறை பகுதி களில் மின் வினியோகம் இருக்காது.
கல்லிடைக்குறிச்சி,:
கல்லிடைக்குறிச்சி மின் விநியோக செயற்பொறி யாளர் சுடலையாடும் பெரு மாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற இருப்பதால் நாளை (சனிக்கிழமை) கீழ்வரும் கோட்டத்தை சார்ந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின் தடை ஏற்படும்
ஓ.துலூக்கப்பட்டி துணை மின்நிலையத்திற்குட்பட்ட ஆழ்வான்துலூக்கப்பட்டி, ஒ.துலூக்கப்பட்டி, செங்குளம், கபாலி பாறை, இடைகால், அனைந்த நாடார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங் கட்டளை, கீழக்குத்தபாஞ்சான்,காசிதர்மம்,முக்கூடல், சிங்கம்பாறை பகுதி களில் மின் வினியோகம் இருக்காது.
வீரவநல்லூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட கல்லிடைக்குறிச்சி, வீரவ நல்லூர், சாட்டுபத்து, அரிகே சவநல்லூர், வெள்ளாங்குளி, ரெங்கச முத்திரம், கூனியூர், காரு குறிச்சி பகுதிகள் மற்றும் அம்பாசமுத்திரம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட அம்பாசமுத்திரம், ஊர்க்காடு, வாகைக்குளம், இடைகால், மன்னார் ்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டிபகுதி களில் மின் வினியோகம் இருக்காது.
இதேபோல மணிமுத் தாறு துணை மின்நிலையத்திற்குட்பட்ட மணிமுத் தாறு, ஜமீன் சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைரா விக்குளம், பொன்மாநகர், தெற்கு பாப்பான்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம் ஆகிய பகுதிகளில் காலை 9மணியில் இருந்து மதியம் 2 மணி வரை மின் வினியோகம் தடைபடும்.
கடையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஆவுடை யானூர், மனல் காட்டானூர், பண்டார குளம், வள்ளியம்மாள் புரம், பாப்பான் குளம், கடையம், சிவநாடனூர் ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை மின்விநியோகம் தடைபடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மேல்முகநாடார் தெருவை சேர்ந்தவர் திரவியம் ஜெபக்குமார் (வயது48). அரசு பஸ் டிரைவர்.
- சம்பவத்தன்று வங்கியில் அடகு வைத்த 5 பவுன் நகையை மீட்டு தனது மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்து வீட்டிற்கு சென்றார்
நெல்லை:
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மேல்முகநாடார் தெருவை சேர்ந்தவர் திரவியம் ஜெபக்குமார் (வயது48). அரசு பஸ் டிரைவர்.
5 பவுன் நகை கொள்ளை
இவர் சம்பவத்தன்று வங்கியில் அடகு வைத்த 5 பவுன் நகையை மீட்டு தனது மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்து வீட்டிற்கு சென்றார். அப்போது கல்லிடைக் குறிச்சி அருகே ஒரு மருந்து கடையில் மருந்து வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளை சாலையோரம் நிறுத்திவிட்டு சென்றார்.
பின்னர் வந்த போது அவரது மோட்டார் சைக்கிளின் பெட்டி உடைக்கப்பட்டு கிடந்த கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகை கொள்ளை போயி ருந்தது.
இது தொடர்பாக அவர் கல்லிடைக்குறிச்சி போலீ சில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சி.சி.டி.வி.காமி ராக்களை ஆய்வு செய்தனர்.
அதில் 2 மோட்டார் சைக்கிளில் 4 பேர் திரவியம் ஜெபக்குமாரை பின் தொடர்ந்து வருவது தெரியவந்தது. அதனை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்