search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kalpana Chawla Award"

    • சபீனா ஜிப்லைன் மூலம் ஆற்றைக் கடந்து சென்று சிகிச்சை அளித்தார்.
    • மு.க.ஸ்டாலின், நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் விருது வழங்க உள்ளார்.

    வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு தமிழகத்தின் கூடலூரைச் சேர்ந்த செவிலியர் சபீனா ஜிப்லைன் மூலம் ஆற்றைக் கடந்து சென்று சிகிச்சை அளித்தது குறித்த குறும்படம் ஒளிபரப்பப்பட்டது.

    செவிலியர் சபீனாவின் இந்த வீர செயலுக்காக அவருக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    இந்நிலையில், தமிழக செவிலியர் சபீனாவுக்கு, வீர தீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    செவிலியர் சபீனாவுக்கு, விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்க உள்ளார்.

    வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தனது உயிரையும் பொருட்படுத்தாமல், துணிச்சலாக செயல்பட்டு சிகிச்சை அளித்தமைக்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    • சமூகத்தில் தானாக முன்வந்து தைரியமாகவும், துணிச்சலுடனும், நல்ல பல செயல்களை செய்திருக்க வேண்டும்.
    • இவ்விருது சுதந்திர தினத்தன்று நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சரால் வழங்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்ப

    தாவது:-

    2023 ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது வீர தீர செயல்புரிந்த பெண் ஒருவருக்கு வழங்கப்படவுள்ளது. சமூகத்தில் தானாக முன்வந்து தைரியமாகவும், துணிச்சலுடனும், நல்ல பல செயல்களை செய்திருக்க வேண்டும். மேற்படி நற்செயல்கள் செய்ததற்கான சான்று மற்றும் புகைப்படங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இவ்விருது சுதந்திர தினத்தன்று நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சரால் வழங்கப்படும்.

    இவ்விருது தொடர்பாக இணையதள முகவரியான https://awards.tn.gov. in- ல் வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அல்லது ஆப் லைனில் இருந்தால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவஹர்லார் நேரு விளையாட்டரங்கம், ராஜா முத்தையா சாலை, பெரியமேடு, சென்னை-600 003. எனும் முகவரிக்கு தபால் மூலமாக எதிர்வரும் வரும் 28-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04362-235633 என்ற தொலைபேசி எண்ணிலும், 7401703496 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2023ம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருது சுதந்திர தினத்தன்று நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் முதல்வர் வழங்கவுள்ளார்.
    • வருகிற 30ந் தேதிக்குள் http://awards.tn.gov.in என்ற ஆன்லைன் முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

    திருப்பூர்:

    கல்பனா சாவ்லா விருது பெற விளையாட்டுத்துறையில் சாதனை படைக்கும் பெண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து திருப்பூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜகோபால் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:- விளையாட்டில் சாதனை புரிந்த விளையாட்டு வீராங்கனைகளுக்கு 2023ம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருது சுதந்திர தினத்தன்று நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் முதல்வர் வழங்கவுள்ளார். தமிழகத்தை சேர்ந்த விளையாட்டில் சாதனை புரிந்த பெண்கள் அதற்கான சான்றுகளுடன் வருகிற 30ந் தேதிக்குள் http://awards.tn.gov.in என்ற ஆன்லைன் முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

    கடிதம் வாயிலாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் வருகிற 28ந்தேதிக்குள், உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், பெரியமேடு, சென்னை என்ற முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    • தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    தமிழக அரசின் சார்பில் பல் வேறு துறைகளில் மற்றும் சமூ கத்தில் வீரத்துடனும் , துணிச்ச லுடனும் சாதனை செயல்கள் புரிந்த பெண்களுக்கு ' கல் பனா சாவ்லா ' விருது வழங் கப்பட்டு வருகிறது . அதன்படி 2022 - ம் ஆண்டுக்கான கல் பனா சாவ்லா விருது கான விண்ணப்பங்கள் ராணிப் பேட்டை மாவட்டத்தில் வர வேற்கப்படுகின்றன. 2022-ம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கான விண் ணப்பம் என குறிப்பிட்டுவிண் ணப்பத்தை அனுப்ப வேண் டும் .

    இதற்கான விவரங்களை http://awards.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக வும் , பூர்த்தி செய்த விண்ணப் பங்களை அசலாக தபால் வாயிலாகவும் உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணை யம் , நேரு விளையாட்டு அரங் கம் , பெரியமேடு , சென்னை -3 என்ற முகவரிக்கு வருகிற 30-ந் தேதிக்குள் சேரும்படி அனுப்ப வேண்டும் .

    கூடுதல் விவரங்களுக்குமாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 0416-2221721 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் . மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார் .

    • சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளிலும் மிகப்பெரிய சாதனை புரியும் பெண்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
    • வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தேனி கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

    தேனி:

    கல்பனாசாவ்லா விருது ஆண்டுதோறும் சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளிலும் மிகப்பெரிய சாதனை புரியும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    2022-ம் ஆண்டு–க்கான கல்பனாசாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சமுதாயத்தில், துணிச்சலான, தைரியமிக்க சாதனை புரிந்த பெண்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.

    மேற்படி விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதற்குரிய இணையதளத்தில் வருகிற 30-ந் தேதிக்குள் விண்ண–ப்பித்து, பயனடையுமாறு தேனி கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

    • தனிநபர்கள் நிகழ்த்திய பல்வேறு வீர சாகச செயலுக்காக கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது.
    • தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் விண்ணப்பதாரர் மட்டுமே இவ்விருதினை பெற விண்ணப்பிக்கலாம்

    சென்னை:

    சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால் சுதந்திர தின விழாவின்போது வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த துணிச்சலான மற்றும் வீர சாகசம் செயல் புரிந்த பெண்கள், இவ்விருதினை பெற தகுதியுடையவராவர். இயற்கை பேரழிவுகள், விபத்துகள், நீரில் மூழ்கும் சம்பவங்கள், தீ தொடர்பான சம்பவங்கள், துணிச்சலான முயற்சிகள் ஆகியவற்றின்போது பல தனிநபர்கள் நிகழ்த்திய பல்வேறு வீர சாகச சம்பவங்கள் தொடர்பாக இவ்விருது வழங்கப்படுகிறது.

    2022 ஆம் ஆண்டுக்கான கல்பான சாவ்லா விருது பெற தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள், விரிவான தன்விவரக் குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் மாவட்ட கலெக்டர் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ 30.6.2022-க்கு முன்பாக விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படவேண்டும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • கல்பனா சாவ்லா விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
    • தமிழ்நாட்டைச் சேர்ந்த துணிச்சலான மற்றும் வீர சாகசம் செயல் புரிந்த பெண் விண்ணப்பதாரர் மட்டுமே இவ்விருதினை பெற தகுதி உள்ளவர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான "கல்பனா சாவ்லா விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :

    துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால் சுதந்திர தின விழாவின்போது வழங்கப்படுகிறது.

    இந்த விருதுடன் ரூ.5 இலட்சத்திற்கான காசோலையும் ஒரு பதக்கமும் வழங்கப்படும். தமிழ்நாட்டைச் சேர்ந்த துணிச்சலான மற்றும் வீர சாகசம் செயல் புரிந்த பெண் விண்ணப்பதாரர் மட்டுமே இவ்விருதினை பெற தகுதி உள்ளவர்.

    2022 ஆம் ஆண்டு வழங்கப்படவுள்ள விருதுக்கான விண்ணப்பங்கள் விரிவான தன்விவரக் குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டர் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ 30.6.2022-க்கு முன்பாக வரவேற்கப்படுகிறது.

    மேலும் உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருதுக்கு வரும் ஜூன் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும், வீர தீர செயலுக்காக தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு தமிழக அரசு சார்பில் கல்பனா சாவ்லா விருது வழங்கப்படும். சுதந்திர தினத்தன்று இவ்விருதை முதல்வர் வழங்குவார். 

    அவ்வகையில் இந்த ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

    தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருதுக்கு ஜூன் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் சுயவிவரங்கள் மற்றும் விண்னப்பத்தில் குறிப்பிட்டுள்ள ஆவணங்களுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விருதுக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு, சுதந்திர தினத்தன்று பதக்கம் மற்றும் ரூ.5 லட்சம் காசோலையுடன் விருதை முதல்வர் வழங்க உள்ளார்.
    மகளை இழுத்துச்சென்ற சிறுத்தையை விறகு கட்டையால் விரட்டியடித்த கோவை முத்துமாரிக்கு சுதந்திர தின விழாவில் கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது. #IndependenceDayIndia #KalpanaChawlaAward
    சென்னை

    சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் இன்று தேசியக்கொடி ஏற்றி உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசின் நல் ஆளுமை விருதுகளை வழங்கினார். இதில், தமிழக அரசின் துணிவு மற்றும் சாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது, கோவையில் வசித்து வரும் முத்துமாரிக்கு வழங்கப்பட்டது. விறகு கட்டையால் சிறுத்தையை தனி ஆளாக விரட்டிய இவரது துணிவைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.

    நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த அய்யப்பராஜ் மனைவி முத்துமாரி (42). இவர், குடும்பத்துடன் கோவை மாவட்டம் வால்பாறை பெரிய கல்லார் எஸ்டேட்டில் தங்கியிருந்து அந்த பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று முத்துமாரியும், அவரது மகள் சத்யாவும் வீட்டின் பின்புறம் இருந்த விறகுகளை எடுத்து வீட்டுக்குள் அடுக்கி வைத்து கொண்டிருந்தனர். அப்போது புதருக்குள் இருந்து ஓடி வந்த சிறுத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் சத்யாவின் கழுத்தை கடித்து இழுத்துச் சென்றது. இதனை பார்த்த முத்துமாரி பயப்படாமல் விறகு கட்டையை எடுத்து சிறுத்தையை பலமாக தாக்கி விரட்டியடித்துள்ளார். இந்த துணிச்சல் பலரது பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. #IndependenceDayIndia #KalpanaChawlaAward
    தமிழ்நாட்டைச் சேர்ந்த, துணிச்சலான மற்றும் வீர சாகசச்செயல் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பம் செய்யலாம் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்-அமைச்சரால், சுதந்திர விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதில், ரூ.5 லட்சத்திற்கான காசோலையும் மற்றும் ஒரு பதக்கமும் அடங்கும். தமிழ்நாட்டைச் சேர்ந்த, துணிச்சலான மற்றும் வீர சாகசச்செயல் புரிந்த பெண் விண்ணப்பதாரர் மட்டுமே இவ்விருதினைப் பெறத் தகுதியுள்ளவர்.

    2018-ம் ஆண்டு வழங்கப்படவுள்ள விருதிற்கான விண்ணப்பங்கள், விரிவான தன் விவரக்குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன், அரசு முதன்மைச் செயலாளர், பொதுத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9 என்ற முகவரிக்கு ஜூன் 30-ந்தேதிக்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். விருது பெறத் தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்படுவார்.

    இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ×