search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kanal kannan"

    • ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று திரையரங்களில் வெளியானது.
    • ஜெயிலர் படத்தை பார்த்த பிறகு சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை பார்க்க ரசிகர்கள் திரையரங்குகளில் கூடி, மேளம் தாளம் அடித்து பாலபிஷேகம் செய்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நாகர்கோவில் திரையரங்கம் ஒன்றில் ஜெயிலர் படம் பார்த்த சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, படம் நல்லா இருக்கு, இயக்குனர் நெல்சன், ரஜினி சாருக்கு வாழ்த்துக்கள். கல், மண், காதல் இருக்கும் வரை என்னைக்கும் சூப்பர் ஸ்டார்தான் நம்பர் ஒன் என்றார்.

    • சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனை போலீசார் கடந்த 10-ந்தேதி கைது செய்து ஜே.எம். கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
    • நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கனல் கண்ணன் மீண்டும் ஜே.எம்.கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்.

    பிரபல திரைப்பட சண்டை பயிற்சியாளரும், இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய பிரிவு மாநில செயலாளருமான கனல் கண்ணன் தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்திருந்தார்.

    அதில், போதகர் அணியும் உடையுடன் வெளிநாட்டை சேர்ந்த நபர் ஒருவர் இளம் பெண்ணுடன் நடனமாடும் வீடியோவும் அதன் பின்னணியில் தமிழ் சினிமா திரைப்பட பாடல் இணைக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. இதை பார்த்த குமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியை சேர்ந்த தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த ஆஸ்டின் பெனட் (54) என்பவர் நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    சைபர் கிரைம் போலீசார் கனல் கண்ணன் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் விசாரணைக்கு வந்த கனல் கண்ணனை போலீசார் கடந்த 10-ந்தேதி கைது செய்து ஜே.எம். கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் கனல் கண்ணன் பாளை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கனல் கண்ணனை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நாகர்கோவில் ஜே.எம்.கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி தாயுமானவர் 3 மணி நேரம் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து நேற்று பாளையங்கோட்டை ஜெயிலில் இருந்த கனல் கண்ணனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் நாகர்கோவில் அழைத்து வந்தனர். நேற்று மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணை முடிவடைந்த நிலையில் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கனல் கண்ணன் மீண்டும் ஜே.எம்.கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்.

    அப்போது அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது. நீதிபதி தாயுமானவர் கனல் கண்ணனுக்கு 30 நாள் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். தினமும் காலை, மாலை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இதையடுத்து கனல் கண்ணன் இன்று நாகர்கோவிலில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் காலை ஆஜரானார். அங்கே அவர் நிபந்தனை ஜாமினில் கையெழுத்திட்டார். அவருடன் பா.ஜ.க. இந்து முன்னணி நிர்வாகிகளும் வந்திருந்தனர். பின்னர் கனல் கண்ணன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    • திமுகவைச் சேர்ந்த ஜோசப் பெனடிக்ட் என்பவர் புகார்.
    • கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் சண்டை பயிற்சியாளராக இருப்பவர் கனல் கண்ணன். இவர் இந்து மதத்திற்கு ஆதரவாகப் பேசுகிறேன் என்ற பெயரில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

    இந்நிலையில், திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கிறிஸ்தவ மதம் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டதாக திமுகவைச் சேர்ந்த ஜோசப் பெனடிக்ட் என்பவர் அளித்த புகாரின் பேரில், கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    முன்னதாக, கனல் கண்ணன் சமீபத்தில் பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை அடுத்து கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், சமூக வலைதளத்தில் மதபோதகரின் நடன வீடியோவை வெளியிட்டது தொடர்பான புகாரில் கனல் கண்ணனை நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட நிலையில் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    • கனல் கண்ணன் சமீபத்தில் பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அண்மையில் கைது செய்யப்பட்டார்.
    • இதனை தொடர்ந்து கனல் கண்ணன் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

    தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் சண்டை பயிற்சியாளராக இருப்பவர் கனல் கண்ணன். இவர் இந்து மதத்திற்கு ஆதரவாகப் பேசுகிறேன் என்ற பெயரில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

    இந்நிலையில், திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கிறிஸ்தவ மதம் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டதாக திமுகவைச் சேர்ந்த ஜோசப் பெனடிக்ட் என்பவர் அளித்த புகாரின் பேரில், கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கனல் கண்ணன் சமீபத்தில் பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அண்மையில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • பெரியார் சிலை குறித்து அவதூறு கருத்து தெரிவித்த புகாரில் சண்டை பயிற்சி கலைஞர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார்.
    • இவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பிரபல சண்டை பயிற்சி கலைஞர் கனல் கண்ணன் சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பெரியார் குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியது. அதில், உலகப் புகழ் பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் முன்பு இருக்கும் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்றைக்கு உடைக்கப்படுகிறதோ அன்றுதான் ஹிந்துக்களின் உண்மையான எழுச்சி நாள் என்று திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் பேசியிருந்தார்.

    கனல் கண்ணன்

    இவரின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்புகளும் ஆதரவுகளும் தெரிவித்து வந்தனர். இதையடுத்து பெரியார் சிலை குறித்து அவதூறு கருத்து தெரிவித்த புகாரில் சண்டை பயிற்சி கலைஞர் கனல் கண்ணனை பாண்டிச்சேரியில் வைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    கனல் கண்ணன்

    பின்னர் இவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி 4 வாரங்களுக்கு காலை, மாலையில் இருவேளை விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கனல் கண்ணன் மீது மூன்று மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • பெரியார் சிலை குறித்து அவதூறு கருத்து தெரிவித்த புகாரில் சண்டை பயிற்சி கலைஞர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார்.
    • இவரது ஜாமீன் நிபந்தனைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    பிரபல சண்டை பயிற்சி கலைஞர் கனல் கண்ணன் சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பெரியார் குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியது. அதில், உலகப் புகழ் பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் முன்பு இருக்கும் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்றைக்கு உடைக்கப்படுகிறதோ அன்றுதான் ஹிந்துக்களின் உண்மையான எழுச்சி நாள் என்று திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் பேசியிருந்தார்.

    கனல் கண்ணன்

    இவரின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்புகளும் ஆதரவுகளும் தெரிவித்து வந்தனர். இதையடுத்து பெரியார் சிலை குறித்து அவதூறு கருத்து தெரிவித்த புகாரில் சண்டை பயிற்சி கலைஞர் கனல் கண்ணனை பாண்டிச்சேரியில் வைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் இவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி 4 வாரங்களுக்கு காலை, மாலையில் இருவேளை விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.

    கனல் கண்ணன்

    இந்நிலையில், கேரளாவில் நடைபெற உள்ள படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டியுள்ளதால், ஜாமீன் நிபந்தனைகளை நிறுத்திவைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கனல் கண்ணன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தினமும் ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையை இன்று (10-09-2022) முதல் 17-ந் தேதி வரை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

    • பெரியார் சிலை குறித்து அவதூறு கருத்து தெரிவித்த புகாரில் சண்டை பயிற்சி கலைஞர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார்.
    • கனல் கண்ணன் 4 வாரத்திற்கு விசாரனை அதிகாரி முன்பு காலை, மாலையில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவு.

    பிரபல சண்டை பயிற்சி கலைஞர் கனல் கண்ணன் சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பெரியார் குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியது. அதில், உலகப் புகழ் பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் முன்பு இருக்கும் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்றைக்கு உடைக்கப்படுகிறதோ அன்றுதான் ஹிந்துக்களின் உண்மையான எழுச்சி நாள் என்று திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் பேசியிருந்தார்.

    கனல் கண்ணன்

    இவரின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்புகளும் ஆதரவுகளும் தெரிவித்து வந்தனர். இதையடுத்து பெரியார் சிலை குறித்து அவதூறு கருத்து தெரிவித்த புகாரில் சண்டை பயிற்சி கலைஞர் கனல் கண்ணனை பாண்டிச்சேரியில் வைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    கனல் கண்ணன்

    இந்த வழக்கில் கனல் கண்ணன் ஜாமின்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் சண்டை பயிற்சி கலைஞர் கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் கனல் கண்ணன் 4 வாரத்திற்கு விசாரனை அதிகாரி முன்பு காலை, மாலையில் ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை வழங்கி, இனி இதுபோன்று பேசமாட்டேன் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார்.

    • பெரியார் சிலை குறித்து அவதூறு கருத்து தெரிவித்த புகாரில் சண்டை பயிற்சி கலைஞர் கனல் கண்ணன் கைது.
    • பாண்டிச்சேரியில் வைத்து கனல் கண்ணனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

    1991-ஆம் ஆண்டு இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியான சேரன் பாண்டியன் படத்தின் மூலம் திரையுலகிற்கு திரைப்பட சண்டை பயிற்சியாளராக அறிமுகமானவர் கனல் கண்ணன். அதன்பின்னர் நாட்டாமை, தேவா, முத்து, பூவே உனக்காக, அவ்வை சண்முகி உள்ளிட்ட பல படங்களுக்கு இவர் சண்டை பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். இவர் பணியாற்றும் படங்களில் அவ்வப்போது சண்டை காட்சிகளில் சிறு சிறு வேடங்களில் தோன்றி அனைவராலும் அறியப்பட்டார். இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் பெரும்பாளான படங்களுக்கு இவர் பணியாற்றி பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

    கனல் கண்ணன்

    சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கனல் கண்ணன், பெரியார் குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியது. அதில், உலகப் புகழ் பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் முன்பு இருக்கும் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்றைக்கு உடைக்கப்படுகிறதோ அன்றுதான் ஹிந்துக்களின் உண்மையான எழுச்சி நாள் என்று திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் பேசியிருந்தார்.

    இவரின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்புகளும் ஆதரவுகளும் தெரிவித்து வந்தனர். இதையடுத்து பெரியார் சிலை குறித்து அவதூறு கருத்து தெரிவித்த புகாரில் சண்டை பயிற்சி கலைஞர் கனல் கண்ணனை பாண்டிச்சேரியில் வைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

    கனல் கண்ணன்

    இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவை எழுப்பூர் நீதிமன்றமும் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றமும் அடுத்தடுத்து தள்ளுபடி செய்தது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், கனல் கண்ணன் ஜாமின் மனு மீது பதிலளிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ஜாமின் மனு மீதான விசாரணையை செப்டம்பர் 1-ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

    • உங்களுக்கு ஒரு நியாயம், ஊருக்கு ஒரு நியாயமா? என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
    • சாமானிய மக்களின் அடிப்படை உரிமைகளை திமுக அரசு மறுத்துவருவதாக குற்றச்சாட்டு

    சென்னை:

    இந்து முன்னணி சார்பில் தொடங்கிய இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சாரம் என்ற பயணத்தின் நிறைவு விழா சென்னை மதுரவாயலில் நடந்தது. அந்த கூட்டத்தில், இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய மாநில தலைவரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    "ஸ்ரீரங்கத்தில் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள்" என்று கனல் கண்ணன் பேசியிருந்தார். கனல் கண்ணன் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை கமிஷனர் அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். கலகம் செய்யத் தூண்டுதல், அவதூறு செய்தி மூலம் பொது மக்களிடையே விரோதத்தை தூண்டுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதற்கு இந்து முன்னணி மற்றும் பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    'தொடரும் திமுகவின் அராஜக போக்கு! உங்களுக்கு ஒரு நியாயம், ஊருக்கு ஒரு நியாயமா?'என கேள்வி எழுப்பி அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:

    தில்லை நடராஜரை களங்கப்படுத்திய கயவனை சிவனடியார்கள் நடத்திய போராட்டத்திற்குப் பிறகும் கைது செய்யாமல் காப்பாற்றி வருகிறது திமுக அரசு.

    மறுபுறம், கனல் கண்ணன் தெரிவித்த கருத்திற்கு உடனடியாக கைது செய்துள்ள திமுக அரசின் நடவடிக்கைகளின் மூலமாக, கருத்து சுதந்திரத்திலும் அவர்களின் இரட்டை நிலைப்பாட்டையும் மக்கள் விரோத போக்கையும் வெளிப்படுத்திவிட்டார்கள்.

    சாமானிய மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்துவரும் திமுக அரசு, கனல் கண்ணனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அண்ணாமலை கூறி உள்ளார்.

    • கனல் கண்ணன் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினர் 22 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மாற்று மதத்தினரை புண்படுத்தும் வகையில் சினிமா சண்டை பயிற்சியாளர் பேசியதாக கூறப்படுகிறது.

    மதுரை

    மாற்று மதத்தினரை புண்படுத்தும் வகையில் பேசியதாக சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று இந்து முன்னணி அறிவித்து இருந்தது.

    அதன்படி மதுரை ஜான்சிராணி பூங்கா, நேதாஜி சிலை முன்பு இன்று இந்து முன்னணி ஒருங்கிணைப்பாளர் கரடிபாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது போலீசாரிடம் அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக இந்து முன்னணியினர் 22 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதே போல மதுரை முனிசாலை சந்திப்பு பகுதியில் மாவட்ட செயலாளர் செல்வகுமார் தலைமையிலும், ஜெய்ஹிந்த்புரம், ஜீவா நகர் சந்திப்பு பகுதியில் மாவட்ட செயலாளர் சதீஷ் தலைமையிலும், புதூர் பஸ் நிலையத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹரிக்குமார் தலைமையிலும், அண்ணா நகரில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகவேல் தலைமையிலும், திருப்பரங்குன்றத்தில் பகுதி செயலாளர் ராஜசேகர் தலைமையிலும் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    • பெரியார் சிலை குறித்து அவதூறு கருத்து தெரிவித்த புகாரில் சண்டை பயிற்சி கலைஞர் கனல் கண்ணன் கைது.
    • பாண்டிச்சேரியில் வைத்து கனல் கண்ணனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

    1991-ஆம் ஆண்டு இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியான சேரன் பாண்டியன் படத்தின் மூலம் திரையுலகிற்கு திரைப்பட சண்டை பயிற்சியாளராக அறிமுகமானவர் கனல் கண்ணன். அதன்பின்னர் நாட்டாமை, தேவா, முத்து, பூவே உனக்காக, அவ்வை சண்முகி உள்ளிட்ட பல படங்களுக்கு இவர் சண்டை பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். இவர் பணியாற்றும் படங்களில் அவ்வப்போது சண்டை காட்சிகளில் சிறு சிறு வேடங்களில் தோன்றி அனைவராலும் அறியப்பட்டார். இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் பெரும்பாளான படங்களுக்கு இவர் பணியாற்றி பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

    கனல் கண்ணன் 

    கனல் கண்ணன் 

    சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கனல் கண்ணன், பெரியார் குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியது. அதில், உலகப் புகழ் பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் முன்பு இருக்கும் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்றைக்கு உடைக்கப்படுகிறதோ அன்றுதான் ஹிந்துக்களின் உண்மையான எழுச்சி நாள் என்று திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் பேசியிருந்தார். இவரின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்புகளும் ஆதரவுகளும் தெரிவித்து வந்தனர்.

    கனல் கண்ணன் 

    கனல் கண்ணன் 

    அதன்பின்னர் கனல் கண்ணனுக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தந்தை பெரியார் திராவிடக்கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், பொது அமைதியை சீர்குலைத்தல் சட்டப்பிரிவுகளின் கீழ் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு கனல் கண்ணன், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்நிலையில் பெரியார் சிலை குறித்து அவதூறு கருத்து தெரிவித்த புகாரில் சண்டை பயிற்சி கலைஞர் கனல் கண்ணனை பாண்டிச்சேரியில் வைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

    • கனல் கண்ணனுக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
    • பொது அமைதியை சீர்குலைத்தல் சட்டப்பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    ஸ்ரீரங்கம் கோயில் முன்பு இருக்கும் பெரியார் சிலையை இடிக்க வேண்டும் என ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேசியது சர்ச்சையை கிளப்பியது. அதில், உலகப் புகழ் பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் முன்பு இருக்கும், கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்றைக்கு உடைக்கப்படுகிறதோ அன்றுதான் ஹிந்துக்களின் உண்மையான எழுச்சி நாள் என்று கனல் கண்ணன் பேசியுள்ளார். இவரின் இந்த கருத்துக்கு எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

    கனல் கண்ணனுக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தந்தை பெரியார் திராவிடக்கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், பொது அமைதியை சீர்குலைத்தல் சட்டப்பிரிவுகளின் கீழ் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு கனல் கண்ணன், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், "சிலையை உடைக்கப் போவதாக கூறவில்லை. சிலையை அகற்ற வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைதான் விடுக்கப்பட்டது. மனுதாரர் வேறு எந்த குற்றமும் செய்யவில்லை" என்று வாதிடப்பட்டது.

    இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மாநகர குற்றவியல் அரசு வக்கீல் ஜி.தேவராஜன் வாதிட்டார். "மனுதாரர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மோதலை உருவாக்கும் விதமாக மதங்களை பற்றியும் பேசியுள்ளார். அவருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது" என வாதிட்டார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    ×