என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kanja"
- தமிழகத்தில் கடந்த ஆண்டு 28 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- கஞ்சா வியாபாரிகளின் 5 ஆயிரம் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
அண்ணா நகர் :
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி சென்னை அண்ணாநகர், வளைவு சந்திப்பில் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற போதை பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாணவர்கள் போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியும், வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் போதைபொருள் தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அந்த வழியாக சென்ற பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி போதை பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கினார்.
பின்னர் அனைவரும் போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றனர்.
பின்னர் நிருபர்களிடம் மகேஷ்குமார் அகர்வால் கூறியதாவது:-
தமிழகத்தில் போதைபொருட்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்கும், அதில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்வதற்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை பெயரில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி தமிழகத்தில் கடந்த ஆண்டு 28 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டில் இதுவரை 14 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக போதைபொருள் விற்பனை செய்தவர்களிடம் இருந்து ரூ.18 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா வியாபாரிகளின் 5 ஆயிரம் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதேபோல் புளியந்தோப்பில் துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் அழகேசன் தலைமையிலும், கொரட்டூரில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற போதை பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தெற்கு ரெயில்வே சார்பில் நேற்று சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் நடந்த போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில், ரெயில்வே போலீஸ் டி.எஸ்.பி., ரமேஷ் பங்கேற்று, போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
எழும்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரெயில்வே போலீசார் மற்றும் பச்சையப்பா கல்லுரி மாணவர்கள் இணைந்து போதை பொருள் விழிப்புணர்வில் ஈடுபட்டனர். அப்போது, போதை பொருள் உபயோகித்தல் மற்றும் சட்டவிரோதமாக கடத்துதல் தவறானது என்பதை சுட்டிகாட்டும் வகையில் விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தி பேரணி சென்றனர்.
- ஒடிசாவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் வடமாநில வாலிபர்களுக்கு விற்பனை.
- 21கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கரடிவாவி செங்கோடம்பாளையம் பகுதியில் பஸ் நிறுத்தம் அருகே வட மாநில வாலிபர் ஒருவர் மூட்டையுடன் நின்றுகொண்டிருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை மடக்கி விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து அவரை காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் அவர் ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தை சேர்ந்த பரமான்மாலிக் மகன் நீலு குமார் மாலிக் (35) என்பதும் ஒடிசாவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் வடமாநில வாலிபர்களுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் இருந்து 21கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் பரிந்துரையின் பேரில், திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத், கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நீலு குமார் மாலிக்கை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து சிறையில் உள்ள அவரிடம் குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.
- மோட்டார் சைக்கிள், கார் பறிமுதல் செய்யப்பட்டது
- 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.
சரவணம்பட்டி
கோவை கணபதி அடுத்த மணியகாரம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக சரவணம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
கிழக்கு உதவி கமிஷனர் பார்த்திபன் மேற்பார்வையில் சரவணம்பட்டி சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் குற்ற பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமை–யில் சப்-இன்ஸ்பெக்டர் செல்லமணி, போலீஸ்கா–ரர்கள் தினேஷ், நந்தகுமார் பிரகாஷ் ஆகியோர் அடங்கிய போலீசார் மணியகாரம்பாளையம் எம்.கே.பி.காலனி லட்சுமி நகரில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை செய்தனர்.
அப்போது அங்கு கஞ்சா சிறு, சிறு பொட்டலங்களாக பேப்பரில் வைக்கப்ப ட்டிருந்தது. இதுகுறித்து நடத்திய விசாரணையில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக இங்கு பதுக்கி வைத்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கஞ்சா விற்ற மணியகாரம் பாளையம் மாணிக்கவாசகம் நகரை சேர்ந்த போண்டா என்ற ஜீவானந்தம்(வயது21), மேடி என்ற கார்த்தி(23), உடையாம்பாளையம் சபரி நகரை சேர்ந்த சிவ பிரசாத்(24), சின்ன வேடம்பட்டி திருமலை நகரைச் சேர்ந்த பூனை என்ற அருண்குமார்(20), கணபதி செக்கான் தோட்டத்தை சேர்ந்த மனோஜ்(26), மணியகாரம் பாளையம் பாரதியார் பகுதியை சேர்ந்த சந்தோஷ்(25) ஆகிய 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா, மோட்டார் சைக்கிள் மற்றும் சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.
- கொடிசியா ரோட்டில் சந்தேகம்படும் படி நின்றிருநத வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
- 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.
கோவை
கோவை பீளமேடு போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொடிசியா ரோட்டில் சந்தேகம்படும் படி நின்றிருநத வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருப்பூர் சாமூண்டிபுரம் காந்திநகரை சேர்ந்த கோபி(25) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதேபோல், பீளமேடு போலீசார் விமான நிலையம் பூங்கா நகர் ரோட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருப்பூர் சாமூண்டிபுரம் ராஜீவ் நகரை சேர்ந்த அருண்குமார்(25), நரேந்திரன்(22), திருப்பூர் சோழியம்பாளையத்தை சேர்ந்த பவிஷ்நாத்(22) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இவர்களின் கூட்டாளி திருப்பூர் சபி முகமத் என்பவரை தேடி வருகின்றனர்.
- புல்லுக்காட்டில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
- ரூ.3,100 ரொக்க பணம், ஒரு மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கோவை
கோவை தெற்கு உக்கடம் அருகே உள்ள புல்லுக்காட்டில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து பெரியக்கடை வீதி சப்-இன்ஸ்பெக்டர்கோமதி தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த புல்லுக்காடு குடிசை மாற்றுவாரிய குடியிருப்பை சேர்ந்த காய்கறி வியாபாரி நவுபல் ரகுமான் (வயது 20), சி.எம்.சி. காலனியை சேர்ந்த சூர்யா (18) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 1 கிலோ கஞ்சா, ரூ.3,100 ரொக்க பணம், ஒரு மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- செஞ்சேரி மற்றும் எஸ் குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- இருவர் போலீசை பார்த்ததும் தப்பியோட முயற்சி செய்தனர்.
சூலூர்
சூலூர் அருகே சுல்தான்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக சுல்தான் பேட்டை போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சுல்தான்பேட்டை செஞ்சேரி மற்றும் எஸ் குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த இருவர் போலீசை பார்த்ததும் தப்பியோட முயற்சி செய்தனர். உடனடியாக சுல்தான்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், தனிப்பிரிவு காவலர் வரதராஜன், தலைமை காவலர் ராமகிருஷ்ணன், காவலர் ஜெயக்குமார் உள்ளிட்ட தனிப் படையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் எஸ் குமாரபாளையத்தைச் சேர்ந்த ரமேஷ் (44) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ரங்கசாமி(63) என தெரிய வந்தது. அவர்கள் இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 1.100கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் கைது செய்த சுல்தான்பேட்டை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- ரெயில்வே பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.
- 12 பேரையும் போலீசார் கைது செய்து, ஜெயிலில் அடைத்தனர்.
கோவை:
கோவை பெரிய நாயக்கன் பாளையம் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் நரசிம்ம நாயக்கன் பாளையம் ரெயில்வே பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் கஞ்சாவை மறைத்து வைத்து கடத்தி சென்றது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து போலீசார் 1 கிலோ கஞ்சா, மோட்டார் சைக்கிள், ரூ.350 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பின்னர் 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ராக்கி பாளையத்தை சேர்ந்த எலக்ட்ரிசீயன் சரவணன் (வயது 20), தொப்பம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (20) என்பது தெரிய வந்தது. 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
தொண்டாமுத்தூர் வாலாங்குட்டை கருப்பராயன் கோவில் அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த அசாம் மாநிலத்தை சேர்ந்த பைசுல் இஸ்லாம் (30), சபீக் இஸ்லாம் (46) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து ஜெயிலில் அடைத்தனர்.
கே.ஜி.சாவடி போலீசார் மாலா கோவில் பஸ் நிறுத்தம் அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்ற கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஜெகதீஸ்வரன் (24) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து ஜெயிலில் அடைத்தனர். கோவில்பாளையம் போலீசார் கோட்டை பாளையம் மின் மயானம் அருகே கஞ்சாவை பதுக்கி விற்ற அவினாசியை சேர்ந்த கார்த்திகேயன் (23) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து ஜெயிலில் அடைத்தனர்.
ஆனைமலை போலீசார் கெட்டிமேலன்புதூர் பிரிவு அருகே கஞ்சாவை பதுக்கி விற்ற காளியாபுரத்தை சேர்ந்த செல்வராஜ் (42), அம்பராம்பாளையத்தை சேர்ந்த அருண்வேல் (53) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா, ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
மேட்டுப்பாளையம் அறிவொளி நகர் தண்ணீர் தொட்டி அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் கஞ்சாவை விற்பனை செய்து கொண்டு இருந்த சாந்ராமணி (45), அபுசேட் (24), முகமது ரபீக் (18) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சவை பறிமுதல் செய்தனர்.
குதிரைபாளையம் பிரிவு அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த புளியம்பட்டியை சேர்ந்த கிருஷ்ணகுமார் (23) என்வரை கைது செய்தனர். அவரிடம் இருந்த 1 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
- கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
கோவை
கோவை மாநகரில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே கஞ்சா பயன்படுத்தும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து கும்பல்கள் விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் சின்னவேடம்பட்டி துடியலூர் ரோட்டில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சரவணம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் செல்லமணி தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1½ கிலோ கஞ்சா, ஒரு மெபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சாய்பாபா காலனி பெரியார் நகரை சேர்ந்த அஜித் (வயது 25), கருணாநிதி நகரை சேர்ந்த ஷர்மிளா பேகம் (41) என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
இதேபோல சரவண ம்பட்டி போலீசார் சங்கனூர் ரோடு டாஸ்மாக் கடை அருகே கஞ்சாவை பதுக்கி விற்ற உடையாம்பாளையத்தை சேர்ந்த சிவா என்ற சிவபிரசாத் (24) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- ஒரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
- 3 பேரும் கஞ்சா விற்பதற்காக அங்கு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து 2.300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கருமத்தம்பட்டி:
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள கிட்டாம்பாளையம் நால்ரோடு பகுதியில் கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜதுரை, சப் -இன்ஸ்பெக்டர் உதயசந்திரன் தலைமை யிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் அவர்கள் அருகில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
போலீசார் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் வாகராயம்பாளையத்தை சேர்ந்த தீபக்குமார்(20) சந்தோஷ்(24) மற்றும் சதீஷ்குமார் (32) என்பது தெரியவந்தது.
இவர்கள் 3 பேரும் கஞ்சா விற்பதற்காக அங்கு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து 2.300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து அவர்கள் மீது கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்
- அண்ணாநகர் 3-வது தெருவில் சிலர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்தனர்.
- போலீசார் கைதானவர்களிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் வாலிபர்கள் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
போலீசார் ரோந்து
அதன்பேரில் தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம், தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அண்ணாநகர் 3-வது தெருவில் சிலர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்தனர்.
3 பேர் கைது
விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி 1-ம் கேட் பகுதியை சேர்ந்த பிரபு வினோத்குமார் (வயது25), அண்ணாநகர் 3-வது தெருவை சேர்ந்த மேத்தபிள்ளை மரைக்காயர் (25), அண்ணாநகர் 6-வது தெருவை சேர்ந்த ஜமால் (25) என்பதும் அவர்களிடம் 1¼ கிலோ கஞ்சா இருப்பதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட பிரபு வினோத்குமார் மீது திருட்டு, அடிதடி உள்ளிட்ட 6 வழக்குகளும், மேத்தபிள்ளை மரைக்காயர் மீது கொலை முயற்சி வழக்கும் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- கல்லூரி மாணவர்கள் இடையே வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரையாக பயன்படுத்தும் கலாசாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
கோவையில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரையாக பயன்படுத்தும் கலாசாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இளைஞர்கள், கல்லூரி மாணவர்களை குறி வைத்து ஒரு கும்பல் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருகின்றனர்.
மாநகரில் போதை மாத்திரை விற்பனை செய்வதை தடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இது வரை மாநகரில் மட்டும் 20-க்கும் மேற்பட்டோர் போதை மாத்திரை விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில் சவுரிபாளையத்தில் சிலர் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து பீளமேடு சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்ற திருப்பூரை சேர்ந்த பிரவீன்குமார் (வயது 23),உடையாம் பாளையத்தை சேர்ந்த பிரதீப் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 50 போதை மாத்தி ரைகளை போலீசார் பறி முதல் செய்தனர்.பின்னர் 2 பேரையும் கோர் ட்டில் ஆஜர்படுத்தி ஜெயி லில் அடைத் தனர். தப்பி ஓடிய பீளமேடு புதூரை சேர் ந்த நித் தீஷ் என்ப வரை தேடி வருகி றார்கள்.
- தனியார் ஆஸ்பத்திரி அருகே சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
- 4 கிலோ கஞ்சா ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம், ஒரு மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கோவை:
கோவை கோவில்பாளையம் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகே சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
கோவில்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கஞ்சாவை பதுக்கி விற்ற தேவம்பாளையத்தை சேர்ந்த விஜயன் (36), உத்தமபாளையத்தை சேர்ந்த அங்குராஜா (49) ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம், ஒரு மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். வெரைட்டி ஹால் ரோடு போலீசார் சலீவன் வீதி வழியாக சென்றனர். அப்போது அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த சக்திவேல்(24) என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சா ரூ. 2,300 ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சாய்பாபா காலனி போலீசார் அம்பேத்கார் வீதி கட்டபொம்மன் வீதி சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த மொபட்டை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 130 கிராம் கஞ்சாவை கடத்தி வந்த ரத்னபுரியைச் சேர்ந்த ரமேஷ் (49) என்பவரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்