என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "karthigai"

    • கார்த்திகை மாத அமாவாசையொட்டி சேலத்தில் பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
    • கோவில்கள், வீடுகளில் பூஜைக்காக அதிகளவில் பயன்படுத்துவதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

    அன்னதானப்பட்டி: 

    சேலம் பூ மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அதே போல் சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இன்று கார்த்திகை மாத அமாவாசையையொட்டி கோவில்களுக்கும், வீடுகளில் சாமிக்கு பூஜைகள் செய்து படைக்கவும் பூக்கள் அதிகளவில் மக்கள் வாங்கிச் சென்றனர். இதன் காரணமாக சேலத்தில் உள்ள பூ , மார்க்கெட்டுகளில் அதிகாலை முதலே பூக்கள் விற்பனை களை கட்டியது.

    சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் (1 கிலோ கணக்கில்):-

    மல்லிகை - ரூ.1000, முல்லை - ரூ500, ஜாதி மல்லிகை - ரூ.280, காக்கட்டான் - ரூ.280, கலர் காக்கட்டான் - ரூ.240, சி.நந்தியா வட்டம் - ரூ.80, சம்மங்கி - ரூ.50, சாதா சம்மங்கி - ரூ.50, அரளி - ரூ.220, வெள்ளை அரளி - ரூ.220, மஞ்சள் அரளி - ரூ.220, செவ்வரளி - ரூ.240, ஐ.செவ்வரளி - ரூ.240, நந்தியா வட்டம் - ரூ.80, என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டது.

    தொடர்ந்து வருகிற வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமையில் விற்பனை நன்றாக இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • ஸ்ரீஅண்ணாமலையார் ஸ்ரீஉண்ணாமுலையம்மன் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா துவங்கவுள்ளது.
    • இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

    திருப்பூர் : 

    திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபவிழா அன்னம்பாலிப்பு திருப்பணிக்குழு செயலாளர் சண்முகசுந்தரம் கூறியதாவது:- வருகிற 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) திருவண்ணாமலை, ஸ்ரீஅண்ணாமலையார் ஸ்ரீஉண்ணாமுலையம்மன் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா துவங்கவுள்ளது.

    இதனை முன்னிட்டு எமது "திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபவிழா அன்னம் பாலிப்பு திருப்பணிக்குழு" சார்பில் 40-வது ஆண்டாக சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

    திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, பக்தர்களின் வசதிக்காகவும், பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டும், அங்குள்ள 18 திருமண மண்டபங்களில், கடந்த 39 ஆண்டுகளாக எமது திருப்பணிக்குழு சார்பில், சுமார் 90 லட்சம் மதிப்பீட்டில் இச்சேவை செயல்பட்டு வருகிறது. நமது திருப்பூர் மாவட்ட பக்தர்களின் பங்களிப்பாக ஆண்டுதோறும் சுமார் 5 டன் காய்கறிகள் -30 இலட்சம் மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் நன்கொடையாகப் பெறப்பட்டு இச்சேவா காரியத்திற்காக தொடர்ந்து அனுப்பப்படுகிறது.

    மேலும் சுமார் 500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இங்கிருந்து வரவழைக்கப்பட்டு அங்குள்ள மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு அன்னதானம் வழங்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

    நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில், திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் தன்னார்வமாக கலந்துகொண்டு, அன்னதானப்பணிகளில் சேவையாற்ற, இந்தாண்டும் சேவார்த்திகள் வேண்டப்படுகிறார்கள். விருப்பமுள்ள தன்னார்வலர்கள் மற்றும் அன்னதானத்திற்கு மளிகைப்பொருட்கள் கொடுக்க விரும்புவோர், திருப்பணிக்குழுவின் இணைச்செயலாளர் முருகேசன் , பொருளாளர் மோகன சுந்தரம் ஆகியோர்களை 94434 79279, 93616 26363 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • கார்த்திகை மாத முப்பது நாட்களிலும் தீபகானம் செய்ய வேண்டும்.
    • பொதுவாக தீபம் சந்ததியை வளர்க்கும் என்பது சமய குரவர்களின் கூற்றாகும்.

    கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்திற்கு முதல் நாள் பரணி தீபம், மறுநாள் கார்த்திகை தீபம்,

    கார்த்திகை மாத முப்பது நாட்களிலும் தீபகானம் செய்ய வேண்டும்.

    வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்பவர்கள் பவுர்ணமி முதல் மூன்று நாட்களாவது

    தங்களுடைய வீட்டில் வரிசையாக தீபம் ஏற்ற வேண்டும்.

    தீபம் எங்கெல்லாம் பிரகாசமாக ஜொலிக்கின்றதோ அங்கே லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

    பொதுவாக தீபம் சந்ததியை வளர்க்கும் என்பது சமய குரவர்களின் கூற்றாகும்.

    வசதிக்கேற்றபடி நெய், நல்லெண்ணெய், இலுப்பெண்ணெய், தீபங்கள் ஏற்றலாம்.

    • 108 தீபங்கள்: நினைத்த காரியம் கை கூடும்.
    • 508 தீபங்கள்: திருமண தடை நீங்கும்.

    1 தீபம்: மன அமைதி

    9 தீபங்கள்: நவக்கிரக பிணி நொடியில் அடங்கும்.

    12 தீபங்கள்: ஜென்ம ராசியில் உள்ள தோஷம் நீங்கும்.

    18 தீபங்கள்: சக்தி தரும் சக்தி தீபம்.

    27 தீபங்கள்: நட்சத்திர தோஷம் நீங்கும், விரும்பியது கிட்டும்.

    48 தீபங்கள்: தொழில் வளரும், பயம் நீங்கும்.

    108 தீபங்கள்: நினைத்த காரியம் கை கூடும்.

    508 தீபங்கள்: திருமண தடை நீங்கும்.

    1008 தீபங்கள்: குழந்தை பாக்கியம் உண்டாகும்.


    • தாமரை மலர் மேலுறையும் பிரம்ம தேவனைக் குறிக்கும்.
    • தண்டுபாகம் போன்று உயரமாக இருப்பதால் நெடுமாலாகிய விஷ்ணுவைக் குறிக்கும்.

    விளக்கின் அடிப்பகுதியான பீடம் மலர்ந்த தாமரைப்பூ போல் அகன்று வட்டமானதாக இருப்பதால்

    தாமரை மலர் மேலுறையும் பிரம்ம தேவனைக் குறிக்கும்.

    தண்டுபாகம் போன்று உயரமாக இருப்பதால் நெடுமாலாகிய விஷ்ணுவைக் குறிக்கும்.

    தண்டுக்கு மேலுள்ள எண்ணெய் வார்க்கும் அகல், கங்கையை சடையுள் வைத்துள்ள சிவனைக் குறிக்கும்.

    திரி எரிவதற்குரிய மூக்குகள் ஐந்தும், ஐந்து முகமுடைய மகேஸ்வரனைக் குறிக்கும்.

    அகலின் மேல் அமைந்துள்ள கும்பக்கவசம் போன்ற உச்சிப்பகுதி சிவலிங்கம் போலிருப்பதால்

    சதாசிவனை குறிப்பதாக உள்ளது.

    ஆக ஐந்து தெய்வ வடிவங்களின் சின்னமாக அமையும் பெருமையுடையது திருவிளக்கு.

    திருவிளக்கின் சுடரை சிவ ஜோதியாகவே கருதி திருவைந் தெழுந்து முதலிய மந்திரங்களை ஓதி வழிபட்டு வந்தால்

    "விளக்கிட்டாருக்கு மெய்நெறி விளக்குவாய் போற்றி" என்ற சொல்லின் உண்மை புலப்படும்.

    • 108 முறைக்கு குறையாமல் தினமும் பின்வரும் மந்திரம் ஜபித்து வரவேண்டும்.
    • சரியாக 90 தினங்களுக்குள் தீபம் உங்களுடன் பேசுவதை நீங்கள் சூட்சுமமாக உணர முடியும்.

    ஏதாவது ஒரு அமாவாசை அன்று 50 கிராம் பசுநெய்யும், 50 கிராம் நல்லெண்ணையும்,

    தாமரை நூல் திரியும் வாங்கிக் கொள்ள வேண்டும்.

    இதை நம் வீட்டில் இருக்கும் திருவிளக்கில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

    விளக்கில் இருந்து நான்கு அடி தூரம் தள்ளி சுத்தமான மஞ்சள் விரிப்பு விரித்து அதில் நிமிர்ந்து உட்கார வேண்டும்.

    நமது புருவமத்திக்கு நேராக தீபம் எரிய வேண்டும்.

    108 முறைக்கு குறையாமல் தினமும் பின்வரும் மந்திரம் ஜபித்து வரவேண்டும்.

    "ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் நமோ பகவதி தீபிகா ஜோதி சொரூபணி

    ஆகர்ஷய ஆகர்ஷய வாவா ஸ்வாஹா"

    சரியாக 90 தினங்களுக்குள் தீபம் உங்களுடன் பேசுவதை நீங்கள் சூட்சுமமாக உணர முடியும்.

    உங்கள் எதிர்காலத்தையும், உங்கள் அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வையும்,

    எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் தடங்கல்களை தாண்டும் வழிமுறைகளையும், நீங்கள் கண்கூடாக உணர முடியும்.

    இந்த பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்ததும் கண்டிப்பாக அசைவம், மது, புகை தவிர்க்க வேண்டும்.

    • தாமரை நூல் திரியில் தீபம் ஏற்றி எரிய விடுவது நமது வீட்டில் உள்ள வாஸ்து குற்றங்களை சரி செய்யும்.
    • குழந்தைகள் செய்யும் சேஷ்டைகள் குறையும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.

    முதலில் கிழக்கு நோக்கி ஒரு திரியும், 2வது வடக்கு நோக்கி ஒரு திரியும், 3வது மேற்கு நோக்கி இரு திரியும் ஏற்ற வேண்டும்.

    தெற்கு நோக்கி தீபம் ஏற்றக்கூடாது.

    குளிர்விக்கும்போது, முதலில் மேற்கே உள்ள திரிகளையும், 2வது வடக்கே உள்ள திரியையும்,

    3வது கிழக்கே உள்ள திரியையும் குளிர்விக்க வேண்டும்.

    ஊதி அணைக்க கூடாது.

    மேற்கூறிய முறைப்படி, 8 நாட்களுக்கு தினமும் 1 மணி நேரம் வீதம் நெய்யில்  தாமரை நூல் திரியில் தீபம் ஏற்றி 

    எரிய விடுவது நமது வீட்டில் உள்ள வாஸ்து குற்றங்களை சரி செய்யும்.

    குழந்தைகள் செய்யும் சேஷ்டைகள் குறையும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.

    குத்துவிளக்கும் குடும்பப்பெண்ணும்

    குத்துவிளக்கின் 5 முகங்களிலும் தீப ஒளி பிரகாசிப்பதுபோல, குலவிளக்காகத் திகழும் குடும்பப் பெண்ணும்

    அன்பு, மனஉறுதி, நிதானம், சமயோசிதபுத்தி, சகிப்புத்தன்மை என்னும் 5 குணங்களுடன்

    சிறப்பாகப் பிரகாசிக்க வேண்டும் என்பதற்காகவே, திருமணம் ஆகி மறுவீடு வந்ததும் மணப்பெண்ணை

    முதலில் குத்துவிளக்கு ஏற்றச் சொல்வது நடைமுறையில் வழக்கமாக உள்ளது.

    • சிவனுக்கு மிகவும் உகந்த விரதம், கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை சோமவார விரதம்.
    • கார்த்திகை மாத சோமவாரங்களில் சிவாலயங்களில் சங்காபிஷேகம் செய்வார்கள்.

    சிவனுக்கு மிகவும் உகந்த விரதம், கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை சோமவார விரதம்.

    சிவனின் தலையில் இருக்கும் சந்திரன் சோமவார விரதத்தை கடைபிடித்து

    சிவனுக்கு மிகவும் பிடித்தவனாகி சிவனின் தலையிலேயே இடம்பெற்றான்.

    அந்த அளவிற்கு சோமவார விரதம் மிகவும் புகழ்பெற்றது.

    ஒருமுறை இந்த விரதத்தை எப்படி கடைபிடிப்பது என்று பார்வதி சிவனிடம் கேட்க, சிவன், காலையில் எழுந்து நீராடி, தினக்கடமைகளை முடிக்க வேண்டும்.

    வீட்டிலேயே விரிவாக சிவபூஜை தினமும் செய்யும் ஒரு வேதியரையும் அவரது மனைவியையும் அழைத்து அவர்களை சிவ-பார்வதியாக நினைத்து, அவர்களுக்கு முடிந்தவரை தானம் செய்ய வேண்டும்.

    அதன் பின் பகல் முழுவதும் உண்ணாமல் விரதம் இருந்து முன் இரவில் ஒரு வேளை மட்டும் உணவருந்தி சிவ சிந்தனையுடன் விரதமிருக்க வேண்டும்.

    வீட்டிலேயே விரிவாக பூஜை செய்ய இயலாதவர்கள் சிவன் கோவிலுக்கு சென்று சிவனுக்கு அபிஷேகம் செய்து வேதியர்களுக்கும், அடியவர்களுக்கும் அன்னதானம் செய்யவும்.

    இந்த சோமவார விரதம் இருப்பவர்கள் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள்.

    அவர்களுக்கு என்னிடத்தில் இடம் கொடுப்பேன் என்று சிவன் கூறுகிறார்.

    கார்த்திகை மாத சோமவாரங்களில் சிவாலயங்களில் சங்காபிஷேகம் செய்வார்கள்.

    கார்த்திகை மாதத்தில் இறைவன் அக்னிப் பிழம்பாக இருப்பார்.

    எனவே குளிர்விக்கும் பொருட்டு சங்காபிஷேகம் செய்வார்கள்.

    கார்த்திகை மாதம் சூரியன் பகை வீடான விருச்சிகத்தில் சஞ்சரிப்பார்.

    அப்போது சந்திரன் நீச்சத்தில் இருப்பதால் தோஷம் என்பர்.

    இந்த தோஷத்தை நீக்கவே சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது.

    • இவ்விரத முறை உமாகமேஸ்வர விரதம் என்று அழைக்கப்படுகிறது.
    • நவகிரகங்கள் இவ்விரதத்தை மேற்கொண்டே வரம் பெற்றனர்.

    கார்த்திகை பௌர்ணமி அன்று அம்மை மற்றும் அப்பனை நினைத்து விரதமுறை மேற்கொள்ளும்

    இவ்விரத முறை உமாகமேஸ்வர விரதம் என்று அழைக்கப்படுகிறது.

    கார்த்திகை ஞாயிறு விரதம்

    இவ்விரத முறை கார்த்திகை முதல் ஞாயிறு அன்று தொடங்கப்பட்டு தொடர்ந்து பன்னிரெண்டு வாரங்கள் கடைப்பிடிக்கப்படுகிறது.

    நவகிரகங்கள் இவ்விரதத்தை மேற்கொண்டே வரம் பெற்றனர்.

    எனவே இவ்விரதமுறையை கடைப்பிடிப்பதால் நவகிரகப் பாதிப்புகள் நீங்கி அம்மை, அப்பரின் பேரருள் கிடைக்கும்.

    • இவ்விரத முறையில் பகலில் உணவு உண்ணாமல் இறைவழிபாடு செய்து விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
    • இவ்விரதமுறையைப் பின்பற்றுவதால் பூலோகத்தில் சொர்க்க வாழ்வு கிடைக்கும்.

    கார்த்திகை விரதம் என்பது முருகப்பெருமானைக் குறித்து கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி

    ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்திலும் கடைப்பிடிக்கப்படுகிறது.

    இவ்விரதம் தொடர்ந்து 12 ஆண்டுகள் கடைபிடிக்கப்படுகிறது.

    இவ்விரத முறையில் பகலில் உணவு உண்ணாமல் இறைவழிபாடு செய்து விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

    இவ்விரத முறையை மேற்கொள்வதால் வாழ்வின் பதினாறு செல்வங்கள் கிடைக்கும்.

    தொடர்ந்து 12 ஆண்டுகள் இவ்விரத முறையை பின்பற்றுவதால் வாழ்வில் பெரும்பேறும், முக்தியும் கிடைக்கும்.

    ப்ரமோதினி ஏகாதசி

    கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி ப்ரமோதினி என வழங்கப்படுகிறது.

    இது கைசிக ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது.

    இவ்விரதமுறையைப் பின்பற்றுவதால் உயர்ந்த நன்மைகள் கிடைக்கும்.

    பூலோகத்தில் சொர்க்க வாழ்வு கிடைக்கும்.

    • இவ்விரதமுறை விநாயகப் பெருமானை நினைத்து மேற்கொள்ளப்படுகிறது.
    • வாழ்வின் எல்லாப் பேறுகளும் கிடைக்கும். எடுத்த நல்ல காரியங்கள் வெற்றியாகும்.

    இவ்விரதமுறை விநாயகப் பெருமானை நினைத்து மேற்கொள்ளப்படுகிறது.

    இவ்விரதம் கார்த்திகை மாதம் தேய்பிறை பிரதமை முதல் மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை

    மொத்தம் 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது.

    இவ்விரத முறையில் 21 இழைகளால் ஆன நோன்பு கயிற்றினை ஆண்கள் வலது கையிலும்

    பெண்கள் இடது கையிலும் கட்டி கொள்கின்றனர்.

    முதல் 20 நாளும் ஒருபொழுது மட்டும் சாப்பிட்டும், கடைசி நாள் முழுமையாக உபவாசம் மேற்கொள்கின்றனர்.

    இவ்விரத முறையினை மேற்கொள்வதால் சிறந்த வாழ்க்கைத் துணை, புத்திசாலியான புத்திரர்கள் கிடைப்பர்.

    வாழ்வின் எல்லாப் பேறுகளும் கிடைக்கும். எடுத்த நல்ல காரியங்கள் வெற்றியாகும்.

    • நெற்றியில் பொட்டு வைக்குமிடத்தில் பிட்யூட்டரி எனும் சுரப்பி உள்ளது.
    • இது ஆன்மா இருக்குமிடம் என்று கருதுவதால் இதை மனோன்மணி என்று அழைக்கிறார்கள்.

    அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதற்காக மாலை அணிந்தவுடன் புருவமத்தியில் சந்தனத்தை வைத்துக்கொள்ள வேண்டும்.

    சந்தனத்தை நெற்றியில் பார்த்ததுமே இவர் மாலை அணிந்த சாமி என்று மற்ற அய்யப்ப சாமிகள் தெரிந்து கொள்வார்கள்.

    நெற்றியில் பொட்டு வைக்குமிடத்தில் பிட்யூட்டரி எனும் சுரப்பி உள்ளது.

    பீனியல் சுரப்பி நெற்றிக் கண்ணைப் போலவே செயல்படுகிறது.

    அதன் அமைப்பும் ஒரு கண்ணைப் போன்றே இருக்கும்.

    இது உடலையும், உள்ளத்தையும் இணைக்கும் பாலமாக செயல்படுகிறது.

    வெளிப்புறம் நடக்கும் அனைத்தையும் அறிந்து கொள்ளக்கூடியது இச்சுரப்பி.

    இது ஆன்மா இருக்குமிடம் என்று கருதுவதால் இதை மனோன்மணி என்று அழைக்கிறார்கள்.

    இது சிறப்பாக இயங்கினால் ஞானதிருஷ்டி சித்திக்கும். இதை குண்டலினி யோகம் மூலம் தான் தூண்ட முடியும்.

    ×