என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Karthigai Deepam Festival"
- சிறிய அகல் விளக்கு ரூ.1 முதல் ரூ.5 வரை விற்கப்படுகிறது.
- பல்வேறு டிசைன்களிலும் விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம், வேடப்பட்டி, நொச்சி ஓடைப்பட்டி ஆகிய பகுதிகளில் மண் பாண்ட தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். இங்கு பானைகள், சாமி சிலைகள், வீட்டு அலங்கார பொருள், பரிசு பொருட்கள், கார்த்திகை விளக்குகளை களி மண்ணால் செய்து தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
இங்கு கார்த்திகை தீப திருநாளுக்காக விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நாகரீக வளர்ச்சியினால் பீங்கான், மெழுகினால் செய்யப்பட்ட விளக்குகள் விற்பனைக்கு வந்தாலும், மண் விளக்குகளுக்கு இன்னும் மவுசு குறையவில்லை. மண்ணால் செய்யப்பட்ட சிறிய அகல் விளக்கு ரூ.1 முதல் ரூ.5 வரை விற்கப்படுகிறது.
வெளி மாவட்டம், மாநில விற்பனையாளர்கள் தேவையான விளக்குகளை மொத்தமாக ஆர்டர் கொடுத்து வாங்கி செல்கின்றனர்.
சாதாரண மண் விளக்குகள் மட்டுமின்றி, தட்டு விளக்கு, மொரம் விளக்கு, காமாட்சி விளக்கு, மேஜிக் விளக்கு, ஆரத்தி தட்டு விளக்கு உள்ளிட்ட வெவ்வேறு டிசைன்களிலும் விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன.
களி மண்ணால் செய்யப்பட்ட மனை விளக்கு, பெரிய மனை விளக்கு, உருளி விளக்கு, சாமி சிலை வைத்த உருளி விளக்கு, 5 விளக்குகள் கொண்ட தாமரை விளக்கு என புதிய டிசைன்களில் ரூ.200 முதல் ரூ.1000 வரை விற்பனைக்கு தயாராகி வருகின்றன.
இதுகுறித்து கலைடெரகோட்டா உரிமையாளர் கஜேந்திரன் கூறியதாவது:-
மண்ணால் செய்யப்படும் பொருட்களின் செய்கூலி, விற்கும் விலையை விட அதிகம். ஆனாலும், மக்கள் மத்தியில் மண்ணால் செய்யப்படும் பொருட்களுக்கு வரவேற்பு இருக்கிறது. இதனால் இந்த தொழிலை தொடர்ந்து செய்து வருகிறோம்.
இங்கு தயாரிக்கப்படும் விளக்குகள் மதுரை, திருச்சி, தஞ்சை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலமான கேரளா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா ஆகிய பகுதிகளுக்கும் விற்பனைக்காக வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.
மண் பாண்ட கலையும், தொழிலும் அழியாமல் இருக்கவும், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படவும் அரசு உதவி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- சிறிய விளக்குகள் முதல் பெரிய விளக்குகள் வரை பலதரப்பட்ட வகைகளில் தயார் செய்யப்பட்டுள்ளது.
- சிறிய அளவிலான ஆயிரம் அகல் விளக்குகள் ரூ.800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
குடிமங்கலம்:
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான திருக்கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 26-ந்தேதி கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபத்திருவிழா அன்று வீடுகளில் வரிசையாக தீபங்கள் ஏற்றி அழகுபடுத்துவது வழக்கம். இது போல் கோவில்களில் பக்தர்கள் புதிய விளக்குகளில் தீபங்கள் ஏற்றுவார்கள். கார்த்திகை தீபத் திருவிழா நெருங்கி வரும் நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலை பூளவாடி பகுதியில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சிறிய விளக்குகள் முதல் பெரிய விளக்குகள் வரை பலதரப்பட்ட வகைகளில் தயார் செய்யப்பட்டுள்ளது. சிறிய அளவிலான ஆயிரம் அகல் விளக்குகள் ரூ.800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் அகல்விளக்குகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் அகல் விளக்குகள் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.
அகல் விளக்கு தயாரிப்பு குறித்து மண்பாண்ட தொழிலாளி ரஞ்சித் கூறியதாவது:-
உடுமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அகல் விளக்குகள் தயாரிப்பதற்கு கோதவாடி, கொழுமம் ஆகியவற்றில் உள்ள குளத்து மண் பயன்படுத்தப்படுகிறது. அங்கு மண் எடுப்பதில் சிரமம் உள்ளது. பூளவாடியில் இரண்டு குடும்பங்கள் மட்டுமே மண்பாண்ட தொழில் செய்து வருகிறோம். அரசின் சார்பில் அடையாள அட்டை இருந்தும் மண் எடுக்க முடியவில்லை. மண் எடுப்பதற்கான வழிமுறைகளை எளிதாக்க வேண்டும் என்பது மண்பாண்ட தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த ஆண்டு அகல் விளக்கு விற்பனை அமோகமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விழாவை காண தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் அதிகமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருவார்கள்.
அவர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் மற்றும் அனைத்து போக்குவரத்துக் கழகங்களில் இருந்து வருகிற 22-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் 24-ந் தேதி (சனிக்கிழமை) வரை திருவண்ணாமலைக்கு 2,609 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
இதற்காக திருவண்ணாமலையில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து செஞ்சி, திண்டிவனம், புதுச்சேரி, தாம்பரம், சென்னைக்கு 666 பஸ்கள் இயக்கபட உள்ளது.
அத்தியந்தல் முனை பகுதியில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து ஓசூர், பெங்களூரு, சேலம், திருப்பத்தூர், ஈரோடு, கோவைக்கு 662 பஸ்களும், அண்ணா நுழைவு வாயில் அருகில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி, செய்யாறு பகுதிகளுக்கு 336 பஸ்களும் இயக்கபடுகிறது.
எஸ்.ஆர்.ஜி.டி.எஸ். பள்ளி மைதானத்தில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து சேத்துப்பட்டு, வந்தவாசி, காஞ்சீபுரத்திற்கு 140 பஸ்களும், அபய மண்டபம் அருகில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து காஞ்சி, மேல்சோழங்குப்பத்திற்கு 20 பஸ்களும் இயக்கப்பட உள்ளது.
அதேபோல வேட்டவலம் புறவழிச் சாலை அருகில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து வேட்டவலம், விழுப்புரத்திற்கு 58 பஸ்களும், கம்பன் கல்லூரி எதிரில் உள்ள மைதானத்தில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து திருக்கோவிலூர், பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், கும்பகோணம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூருக்கு 242 பஸ்கள் இயக்கபட உள்ளன.
அன்பு நகரில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளுக்கு 264 பஸ்கள் இயக்கபடும். மணலூர்பேட்டை புறவழிச் சாலை அருகில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து மணலூர்பேட்டை, திருக்கோவிலூருக்கு 22 பஸ்களும், நல்லவன்பாளையம் புறவழிச்சாலை அருகில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து தண்டராம்பட்டு, தானிப்பாடி, அரூர், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளுக்கு 199 பஸ்களும் இயக்கப்பட உள்ளது.
கார்த்திகை தீப திருவிழாவையொட்டி வருகிற 22 மற்றும் 23-ந் தேதிகளில் விழுப்புரம், வேலூர் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. சென்னை சென்ட்ரலில் இருந்து சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கார்த்திகை தீபம் அன்று திருவண்ணாமலையில் கார்களை நிறுத்த 77 இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு வாகனங்களை நிறுத்த www.tvmpournami.in என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.
மகாதீப மலையில் ஏறும் பக்தர்கள் திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் 22-ந் தேதி அனுமதி சீட்டு பெறவேண்டும். #KarthigaiDeepam #ArunachaleswararTemple
இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழாவுக்கான பூர்வாங்க பணிகளின் தொடக்கமாக வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பந்தக்கால் முகூர்த்தம் நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் அருகே பந்தக்கால் முகூர்த்தமும், கோவில் 3-ம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெறும்.
பந்தக்கால் முகூர்த்தத்தை தொடர்ந்து கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தில் வாகனங்கள் சீரமைத்தல், பஞ்ச ரதங்களை பழுது நீக்கி பவனிக்கு தயார் செய்தல் திருக்கோயில் சீரமைப்பு பணி உள்ளிட்ட பூர்வாங்க பணிகள் நடைபெறும்.
இந்த தகவலை கோவில் இணை ஆணையர் ஞானசேகர் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்