என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Karupatti"
- உடன்குடி வட்டார பகுதியில் கருப்பட்டி உற்பத்திக்கு ஒரு தனி சிறப்பு உண்டு.
- பனிப்பொழிவால் இருப்பு வைத்த கருப்பட்டியில் பூஞ்சை என்ற வெள்ளை நிறத்தில் நூல் போன்ற பாசி படிகிறது.
உடன்குடி:
உடன்குடி வட்டார பகுதியில் கருப்பட்டி உற்பத்திக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார் களோ அங்கெல்லாம் உடன்குடி கருப்பட்டி இங்கு கிடைக்கும் என விளம்பர போர்டு வைத்த விற்பனை செய்வார்கள். அவ்வளவு சிறப்பு வாய்ந்தது உடன்குடி கருப்பட்டி ஆகும்.
கருப்பட்டியில் பூஞ்சை
தற்போது கருப்பட்டி உற்பத்தி சீசன் இல்லை. கடந்த ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கருப்பட்டியை சிலர் தங்களது வீடுகளில் இருப்பு வைத்திருக்கிறார்கள். தற்போது உடன்குடி வட்டார பகுதியில் மழை முழுவதுமாக இல்லை.
இரவு, பகலாக பனிப்பொழிவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இதனால் இருப்பு வைத்த கருப்பட்டியில் பூஞ்சை என்ற வெள்ளை நிறத்தில் நூல் போன்ற பாசி படிகிறது. இதை தடுக்க கருபட்டிக்கு புகைமூட்டம் போடுகிறார்கள். அப்படி இருந்தும் சில இடங்களில் கருப்பட்டி கசிந்து தண்ணீராக வெளி வருகிறது. இது பற்றி கருப்பட்டி உற்பத்தியாளர் ஒருவர் கூறியதாவது:-
உற்பத்தியாளர்கள் தவிப்பு
கடந்த காலங்களில் உற்பத்தி செய்த கருப்பட்டி யை வீடுகளில் பரன்களில் போட்டு பாதுகாப்பாக வைத்துள்ளோம். இருப்பு கருப்பட்டிக்கு விலை அதிகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வைத்தோம். ஆனால் தற்போது மழைக்காலத்தில் மழை பெய்யவில்லை. ஆனால் இரவு, பகலாக பனிப்பொழிவு அதிகமாக உள்ளது.
மழை பெய்தால் கூட கருப்பட்டிக்கு பாதிப்பு அதிகம் இருக்காது. ஆனால் பனிப்பொழிவால் எல்லா கருப்பட்டியிலும் பூஞ்சை பிடிக்கிறது. புகை போட்டாலும் அதை மீறி பூஞ்சை பிடிக்கிறது. கூடுதல் விலை கிடைக்கும் என்று நினைத்தோம்.ஆனால் பனிப்பொழிவில் எல்லாம் கசிந்து விடும் போல தெரிகிறது.
மேலும் கருப்பட்டி அதிகளவு கருப்பாக இருந்தால் வாடிக்கை யாளர்கள் வாங்க மறுக்கின்றனர், அதனால் கருப்பட்டியை எப்படி பாதுகாப்பது என்பது தெரியாமல் நாங்கள் தவிக்கிறோம் என்று கவலையுடன் கூறினார்.
- தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஆர்ப்பாட்டத்தில் நாடார் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம்:
ரேஷன் கடைகளில் மாதந்தோறும் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்ககோரி தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் ராமநாதபுரம் அரண்மனை முன்பு பேரவை மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில பொருளாளர் துறையூர் பெ.பிரபாகரன், வர்த்தக அணித் தலைவர் எம்.வி.எம்.ரமேஷ்குமார், தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார், அவைத்தலைவர் அற்புதம், தமிழ்நாடு நாடார் பேரவை பொருளாளர் எஸ்.சதாசிவம், துணை பொதுச் செயலாளர் கே.வெற்றிராஜன், ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், மாநில துணைத் தலைவர்கள் கரூர் லோகநாதன், என்.அன்புகிருஷ்ணன், மதுரை மாநகர செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் எஸ்.எம்.தாளைக்கண்ணன், மாநில மகளிர் அணி துணைத்தலைவி விக்டோரியா, கவிதா காந்தி, மதுரை தெற்கு மாவட்ட தலைவர் சங்கரன், சிவகங்கை மாவட்டத் தலைவர் ஜேசுபாஸ்கர், சமூக ஆர்வலர் ராணி, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காசிவிஸ்வநாதன் கலந்து கொண்டனர்.
- கருப்பட்டி தயாரிக்க மானியத்துடன் கடன் வழங்க வேண்டும் என கலெக்டரிடம் பெண்கள் மனு கொடுத்தனர்.
- ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சி பகுதியில் கருப்பட்டி தயாரிப்புதான் அந்த பகுதி மக்களின் பிரதான தொழில் ஆகும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சி வி.வி.ஆர்.நகர், லால்பகதுார் சாஸ்திரி தெருவில் 100-க்கும் மேற்பட்டகுடியிருப்புகள் உள்ளன. கருப்பட்டி தயாரிப்புதான் இவர்களின் பிரதான தொழில் ஆகும்.
ஆண்டுக்கு 6 மாதம் இந்த தொழிலில் வருமானம் கிடைக்கிறது.அதன்பின்னர் பதனீர் சீசன் இல்லாதால்அன்றாட வருமானத்திற்கு சிரமப்படுகின்றனர். இந்த பகுதி பெண்கள் 2018-ம் ஆண்டு பனைத்தொழில் மேம்பாட்டு திட்டத்தில் வங்கியில் அரசு மானியத்துடன் ரூ.1 லட்சம் வரை கடன் வாங்கி முறையாக கட்டி முடித்துள்ளனர்.
அதன் பிறகு அரசு மானியத்துடன்கடன் வழங்கவில்லை. மீண்டும் அரசு மானியத்துடன் வங்கியில் கடன் வழங்க வேண்டும் என்று வி.வி.ஆர்.நகர் தலைவி அந்தோணியம்மாள் தலைமையில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸிடம் மனு கொடுத்தனர்.
அவர்கள் கூறுகையில், ஆண்டு தோறும் தை முதல் ஆவணி வரை கருப்பட்டி தயாரித்து விற்கிறோம். வியாபாரிகளிடம் முன்பணம் வாங்குவதால் குறைந்த விலைக்கு வாங்கி வியாபாரிகள் அதிக லாபம் அடைகின்றனர். ஏற்கனவே வங்கியில் கடன் கொடுத்தனர். தற்போது சில புரோக்கர்கள் ரூ.10 ஆயிரம் கமிஷன் கொடுத்தால் ரூ.1 லட்சம் கடன் வாங்கி தருவதாக பேரம் பேசுகின்றனர். கடந்த முறை வாங்கிய கடனை முறையாக கட்டியுள்ளோம். எனவே எங்களுக்கு சிறு தொழில் மேம்பாட்டு திட்டத்தில் வங்கியில் அரசு மானியத்தில் கடன் வழங்க கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்