என் மலர்
நீங்கள் தேடியது "Kayathar"
- நெல்லை சந்திப்பை சேர்ந்தவர் முப்பிடாதி கார் டிரைவர்
- பயணிகளை ஏற்றிக்கொண்டு மதுரை விமான நிலையம் சென்றார்
கயத்தாறு:
நெல்லை சந்திப்பை சேர்ந்தவர் முப்பிடாதி ( வயது 28). கார் டிரைவர். இவர் நேற்று இரவு நெல்லையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மதுரை விமான நிலையம் சென்றார். அங்கு பயணிகளை இறக்கி விட்டு விட்டு நெல்லை திரும்பினர்.
இன்று காலை கயத்தாறு சுங்கச்சாவடி அருகே வந்தபோது திடீரென காரின் டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சென்று சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தவாறு நின்றது. இதில் கார் முற்றிலும் சேதமானது. ஆனால் அதிர்ஷ்டவசமாக முப்பிடாதி உயிர் தப்பினார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கயத்தாறு போலீசார் முப்பிடாதியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எட்ராஜ் பூக்கட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
- படுகாயம் அடைந்த எட்ராஜ் குளத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
கயத்தாறு:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பசுவந்தனை துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அழகுசுந்தர். இவரது மகன் எட்ராஜ்(வயது 22).
பூக்கட்டும் தொழிலாளி
இவர் பூக்கட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்றிரவு கயத்தாறுக்கு பூக்கட்டுவதற்காக சென்றிருந்தார். பின்னர் இன்று அதிகாலையில் அவர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
பசுவந்தனை ரோட்டில் கடம்பூர் அருகே வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது. சாலையை யொட்டி அமைந்துள்ள பாலத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் அதன் அருகே உள்ள இரட்டை குளத்தில் மோட்டார் சைக்கிள் பாய்ந்தது.
குளத்தில் பாய்ந்து பலி
இதில் படுகாயம் அடைந்த எட்ராஜ் குளத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கயத்தாறு போலீசா ருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக இன்ஸ்பெக்டர் பத்மா சீனிவாசன் தலைமை யிலான போலீசார் அங்கு விரைந்து சென்று எட்ராஜ் உடலையும், மோட்டார் சைக்கிளையும் மீட்டனர்.
பின்னர் பிரேத பரிசோ தனைக்காக எட்ராஜ் உடலை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கங்கைகொண்டான் பஞ்சாயத்தில் ராஜபதி, துறையூர், புங்களூர், ஆலடிப் பட்டி, அனைத்தலையூர், வடகரை, நேதாஜிநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ளன.
- கங்கைகொண்டான்- மதுரை நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தின் முன்பு பெண்களும், ஆண் களும் காலி குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கயத்தாறு :
கங்கைகொண்டான் பஞ்சாயத்தில் ராஜபதி, துறையூர், புங்களூர், ஆலடிப் பட்டி, அனைத்தலையூர், வடகரை, நேதாஜிநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ளன.
இந்நிலையில் சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் அனைத்து பகுதிகளுக்கும் சென்று விட்டு அனைதலையூர், மறக்குடி மற்றும் நேதாஜி நகரில் வாழும் கிராம மக்களுக்கு கூட்டுகுடிநீர் வழங்கவில்லை என புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று கங்கைகொண்டான்- மதுரை நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தின் முன்பு பெண்களும், ஆண் களும் காலி குடங்களுடன் ஊர் நாட்டாண்மைகள் சின்னத்துரை, லெட்சு மணன், மகாராஜன் ஆகியோர் தலைமையில் முற்று கையிட்டு போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.
கங்கை கொண்டான் போலீசார் சப்- இன்ஸ்பெக்டர் மாடசாமி, பஞ்சாயத்து தலைவர் கவிதா பிரபாகரன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது 2 நாட்களுக்குள் உடனடியாக புதிய பைப் லைன் வைத்து கொடுக்கப்படும் என்றனர். இதனால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
கலெக்டர் அலுவலகத்தில் மனு
இதற்கிைடயே கங்கை கொண்டான் ஊராட்சிக்கு உட்பட்ட கங்கைகொண்டான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங் களான அலங்காரப்பேரி, மடத்துப்பட்டி, ராஜபதி, குப்பக்குறிச்சி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கங்கை வசந்தி தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:
கங்கைகொண்டான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 5,000 மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு சீவலப்பேரியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் இருந்து தான் குடிதண்ணீர் வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக எங்கள் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தண்ணீர் வரவில்லை. இது தொடர்பாக பஞ்சாயத்து நிர்வாகத்திடம் கேட்கும் போது அவர்கள் முறையாக பதில் கூறுவதில்லை. எனவே நிரந்தரமாக தட்டுப்பாடு இன்றி தண்ணீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
- 750 ஏக்கர் பரப்பளவில் பருத்தி, உளுந்து, கம்பு ஆகிய பயிர்கள் பயிரிடப்பட்டு வருகிறது
- அதிகாலை நேரத்தில் விவசாயிகள் அயர்ந்து தூங்கிவிடும்போது ஏராளமான காட்டு விலங்குள் வந்து பயிர்களை சேதப்படுத்தி விடுகிறது
கயத்தாறு:
கயத்தாறு தாலுகா குருமலை பஞ்சாயத்துக்கு உட்பட்டது சுந்தரேஸ்வரன் கிராமம் ஆகும். இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் மக்காச்சோள பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.
பயிர்கள் சேதம்
மேலும் பருத்தி, உளுந்து, கம்பு ஆகிய பயிர்கள் 750 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குருமலை வனத்துறை பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மான்களும், பன்றிகளும் இப்பகுதியில் இரவு நேரங்களில் தோட்டங்களுக்குள் புகுந்து விடுவதாகவும், அவை பயிர்களை சேதப்படுத்துவதாகவும் அப்பகுதி விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர்.
தினமும் 5 முதல் 10 ஏக்கர் வரை சேதம் செய்துள்ளதால் கடந்த ஒரு வார காலமாக இந்த பகுதி விவசாயிகள் தங்கள் குடும்பங்களுடன் தோட்டங்களுக்கு சென்று இரவு பகலாக விளக்குகளை வைத்துக்கொண்டு காவலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அதிகாலை நேரத்தில் விவசாயிகள் அயர்ந்து தூங்கிவிடும்போது ஏராளமான காட்டு விலங்குள் வந்து பயிர்களை சேதப்படுத்தி விடுகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
வேதனை
இன்று காலை 200-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களை அவை சேதப்படுத்தி உள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நாங்கள் தங்க நகைகளை அடகு வைத்தும், வட்டிக்கு பணம் வாங்கியும் விவசாயம் செய்து வருகிறோம். ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம்.ஒரு ஏக்கருக்கு 30 குவிண்டால் மக்காச்சோளம் கிடைக்கும். அதற்கு விலையாக ரூ.60 ஆயிரம் பெறுவோம். ஆனால்
இந்த ஆண்டு அனைத்துமே பாழாகிவிட்டது. எனவே மாவட்ட நிர்வாகம், வனத்துறையினர் இங்கு வந்து சேதங்களை கணக்கீடு செய்து நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அய்யனார்ஊத்து கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் குழந்தை பாதுகாப்பு, நலன் தொடர்பான போட்டிகள் நடைபெற்றது
கயத்தாறு:
கயத்தாறு தாலுகாவை சேர்ந்த அய்யனார்ஊத்து கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு, போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆசிரியர் பைசல் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் இளங்கோ தலைமை தாங்கினார். கோவில்பட்டி சாய்லீங்க அறக்கட்டளையின் தலைவர் உமையலிங்கம், பள்ளி மாணவ- மாணவிகளுக்கு குழந்தை பராமரிப்பு மற்றும் குழந்தை திருமணம்,போதை பொருள் ஒழிப்பு, அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்க உரையாற்றினார்.
தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் நல ஆலோசகர் சுரேத்துவாணி வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் குழந்தை பாதுகாப்பு, நலன் தொடர்பான போட்டிகள் நடைபெற்றது. இதில் 250 மாணவ- மாணவியர் பங்கேற்றனர்.
அறக்கட்டளையின் சார்பில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுமார் 350 பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
பள்ளியின் உதவி தலைமைஆசிரியர் ராமலட்சுமி நன்றி கூறினார்.
- சண்முகராஜ் நேற்று இரவு மோட்டார்சைக்கிளில் கயத்தாறு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
- மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் நெல்லை மேலப்பாளைம் நத்தம் பகுதியை சேர்ந்தது என்பது தெரியவந்தது.
கயத்தாறு:
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள வடக்கு இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகராஜ் (வயது 36). லாரி டிரைவர்.
இவர் நேற்று இரவு மோட்டார்சைக்கிளில் கோவில்பட்டியில் இருந்து கயத்தாறு நோக்கி வந்து கொண்டிருந்தார். வில்லிச்சேரி நாற்கர சாலையில் வந்தபோது நடந்து சென்ற ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் சண்முகராஜூம், நடந்து சென்றவரும் ரோட்டில் விழுந்தனர். அப்போது பின்னால் வந்த வாகனம் இருவர் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
வாகனம் அடையாளம் தெரிந்தது
நடந்த சென்றவர் அப்பகுதியை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. அவரது பெயர் விபரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக கயத்தாறு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் விசாரணை நடத்தி அங்குள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்து நிற்காமல் சென்ற வாகனம் குறித்து காட்சிகளை பார்வையிட்டார்.
அப்போது அந்த வாகனம் நெல்லை மேலப்பாளைம் நத்தம் பகுதியை சேர்ந்தது என்பது தெரியவந்தது. மேலும் அதன் உரிமையாளர் யார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாலை பாதுகாப்பு வார விழாவிற்கு டி.எஸ்.பி. வெங்கடேஷ் தலைமை தாங்கினார்.
- சுங்கச்சாவடியில் அனைத்து வாகனங்களுக்கும் ஒளிரும் கலர் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.
கயத்தாறு:
கயத்தாறு சுங்கச்சாவடியில் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. விழாவிற்கு டி.எஸ்.பி. வெங்கடேஷ் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினர். வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியபாண்டியன் மற்றும் சுங்கச்சாவடி புராஜக்ட் மேலாளர்கள் அம்பத்சிரிவாசகிரன்குமார், வேல்ராஜ், தென்மண்டல மேலாளர் அனந்தராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கயத்தாறு சுங்கச்சாவடி மேலாளர் சிம்கரிசிவகுமார், வரவேற்று பேசினார். விழாவில் டி.எஸ்.பி. வெங்கடேஷ் சாலை பாதுகாப்பு குறித்து பேசினார். சுங்கச்சாவடி வரும் அனைத்து வாகனங்களுக்கும் கருப்பு ஸ்டிக்கர் மற்றும் ஒளிரும் கலர் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. மேலும் துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சுங்கச்சாவடி அலுவலர்கள் செய்திருந்தனர்.
- சுப்பையா அங்குள்ள சாலையில் தனது டிராக்டரை நிறுத்தி இருந்தார்.
- திருட்டு குறித்து சப் -இன்ஸ்பெக்டர் பால் விசாரணை நடத்தி வந்தார்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே அய்யனார் ஊத்து இந்திரா நகரை சேர்ந்தவர் சுப்பையா. விவசாயி.
பேட்டரி திருட்டு
இவர் அங்குள்ள சாலையில் தனது டிராக்டரை நிறுத்தி இருந்தார். பின்னர் வந்து பார்த்த போது டிராக்டரில் உள்ள ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான பேட்டரியை மர்மநபர்கள் திருடி சென்றிருந்தனர்.
அதேபோல் கயத்தார் வணிகவளாகத்தில் பழைய இரும்பு கடை நடத்தி வரும் வியாபாரி ஒருவர் தனக்கு சொந்தமான ஜே.சி.பி., மற்றும் டிராக்டரை வழக்கம் போல் அந்த இடத்தில் நிறுத்தி இருந்தார். அதில் இருந்த பேட்டரிகளும் திருட்டு போனதாக கயத்தாறு போலீஸ் நிலையத்தில் செய்தனர்.
2 வாலிபர்கள் கைது
இது குறித்து சப் -இன்ஸ்பெக்டர் பால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். அய்யனார்ஊத்து கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அக்ரி கணேஷ்குமார் (வயது 21), அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணபதி (23) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் கயத்தார் வட்டார பகுதியில் 7 பேட்டரிகளையும், கழுகுமலை பகுதியில் 16, இடங்களில் பேட்டரி களையும் திருடியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- கயத்தாறில் புதுமை புனித சந்தன மாதா கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- சந்தனமாதா சப்பரபவனி இரவு 10 மணிக்கு தொடங்கி முக்கிய ரதவீதிகள் வழியாக பவனி வந்தது.
கயத்தாறு:
கயத்தாறில் புதுமை புனித சந்தன மாதா கோவில் திருவிழா கடந்த 9-ந்தேதி கயத்தாறு பங்குத்தந்தை எரிக் ஜோ தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று மாலை ஜெபவழிபாடு நடைபெற்றது. 10-ந்தேதி விளக்கு பூஜை, நேற்று அன்னையின் திருச்சபை முன்பு சிறப்பு வழிபாடும், மன்றாடுதல், வேண்டுதலும், ஜெபம் பிரார்த்தனை, சப்பரபவனி ஆகியவை நடைபெற்றன.
திருவிழாவிற்கு கயத்தார், தஞ்சாவூர், சென்னை, சிவகாசி, நெய்வேலி, விருதுநகர், நெல்லை, கோவில்பட்டி ஊர்களில் இருந்து இறைமக்கள் வந்திருந்தனர். கோவிலில் கடந்த 3 நாட்களும் அன்னதானம் நடைபெற்றன. மூன்றாம் நாளன்று சந்தனமாதாவிற்கு இறைமக்கள் மற்றும் கிராம மக்கள் வீடுகளில் இருந்து கொண்டு வந்து பால் அபிஷேகமாக அனைவரும் ஊற்றினார்கள்.
தொடர்ந்து இனிப்பு கலந்த ஆயிரம் கிலோ துல்லுமாவு மற்றும் பழங்கள் வழங்கினார்கள். இதனை தொடர்ந்து சந்தனமாதா சப்பரபவனி இரவு 10 மணிக்கு தொடங்கி முக்கிய ரதவீதிகள் வழியாக பவனி வந்தது. வழிநெடுக இறைமக்கள் வழிபாடு செய்தனர். சப்ரம் 12.30 மணிக்கு கோவில் வந்து சேர்ந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியார் மற்றும் இறை மக்கள் செய்திருந்தனர்.
- கயத்தாறு அருகே உள்ள நாகலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வெயில்முத்து காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
- கரிசல்குளம் விலக்கு அருகே வந்த போது எதிர்பாராத விதமாக டிராக்டர் மீது லாரி பின்னால் மோதியது.
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள நாகலாபுரம் கிராமத்தை சேர்ந்த வர் வெயில்முத்து (வயது 42). இவர் கயத்தாறு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
லாரி மோதல்
இந்நிலையில் இன்று காலை வெயில்முத்து டிராக்டரில் எம்சான்ட் மணல் ஏற்றிக்கொண்டு கயத்தாறு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கோவையில் இருந்து நெல்லைக்கு வந்த லாரியை வண்ணார்ப்பேட்டையை சேர்ந்த முருகன் (45) என்பவர் ஓட்டி வந்தார். கரிசல்குளம் விலக்கு அருகே வந்த போது எதிர்பாராத விதமாக டிராக்டர் மீது லாரி பின்னால் மோதியது. இதில் டிராக்டர் கவிழ்ந்து வெயில்முத்து சம்பவ இடத்தில் பலியானார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கயத்தாறு இன்ஸ்பெ க்டர் பாஸ்கரன் சென்று பலியான வெயில்முத்து வின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.உயிரிழந்த வெயில்முத்துக்கு வள்ளியம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
- கடம்பூர் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி அப்பகுதி வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
- கடம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.
கயத்தாறு:
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி அப்பகுதி வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
கடம்பூர் ரெயில் நிலையம்
தொடர்ந்து வியா பாரிகள், பொதுமக்கள் நேற்று ஒரு நாள் உண்ணாவிரத்திலும் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறும்போது, கொரோனா காலத்திற்கு முன்னர் இயக்கப்பட்ட ரெயில்கள் அனைத்தும் கடம்பூர் ரெயில் நிலையத்தில் நின்று சென்றது.
ஆனால் தற்போது கோவில்பட்டியில் நிறுத்தப்படும் ரெயில்கள் அதன் பின்னர் கடம்பூரில் நிற்காமல் நெல்லையில் நின்று செல்கிறது. இதனால் தங்கள் பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படு வதாக தெரிவித்தனர்.
2-வது நாளாக போராட்டம்
இந்நிலையில் கோரிக்கை களை வலியுறுத்தி இன்று 2-வது நாளாக வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இதனால் கடம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக அவர்கள் கூறும்ேபாது, வழக்கம் போல கடம்பூர் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை யென்றால் எங்களது ஆதார் அட்டை, ரேஷன்கார்டு உள்ளிட்டவைகளை கலெக்டர் அலுவலகத்தில் திரும்ப ஒப்படைப்போம் என்றனர்.
- இன்று காலை கடம்பூர் ரெயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நல்லசாமி சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
- இதுகுறித்து கடம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
கயத்தாறு:
கயத்தாறை அடுத்த கடம்பூர் அருகே உள்ள சிதம்பரபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் நல்லசாமி (வயது 38). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் கடந்த சில மாதங்க ளாக அவர் விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் இன்று காலை கடம்பூர் ரெயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற அவர் சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கடம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தகவல் அறிந்து ெரயில்வே போலீசார் அங்கு வந்து நல்லசாமி உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.