என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "keep"
- வேளாண் பட்டம் படித்து வரும் மாணவர்கள், ஆத்தூர் வட்டாரத்தில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் தை திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர்.
- முசிறி இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி ஆகிய வேளாண் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஆத்தூர்:
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு இளங்கலை வேளாண் பட்டம் படித்து வரும் மாணவர்கள், ஆத்தூர் வட்டாரத்தில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் தை திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர்.
இவ்விழாவில் வேளாண் உதவி இயக்குனர் சம்பத்குமார், வேளாண் அலுவலர்கள் ஜானகி, கௌதமன் மற்றும் வேளாண் உதவி அலுவலர்கள் கலந்து கொண்டு மாணவர்களுடன் பொங்கல் வைத்தனர்.
சமத்துவ பொங்கல் விழாவில் ஆத்தூர் வட்டா
ரத்தில் கிராம தங்கள் பணி திட்டத்தில் பயிலும்
வாணவராயர் வேளாண்மை கல்லூரி, தனலட்சுமி ஸ்ரீனிவாசன், தந்தை ரோவர் மற்றும் முசிறி இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி ஆகிய வேளாண் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- நவராத்திரி முதல் நாளை முன்னிட்டு கொலு அமைத்து சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நவராத்திரி பூஜை நடைபெற்றது.
- 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுல்தான் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள அம்மனுக்கு நவராத்திரி முதல் நாளை முன்னிட்டு கொலு அமைத்து சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நவராத்திரி பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
அதேபோல் நவராத்திரி முதல் நாளை முன்னிட்டு கோப்பணம் பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை கட்டப்பட்டது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்த அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல் பரமத்தி அங்காளம்மன் பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்