என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "keezhapavur"
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கடந்த 19-ந்தேதி முதல் வருகிற 25-ந்தேதி வரை நல்லாட்சி வாரமாக கடைபிடிக்கப்படுகிறது.
- பொதுமக்களின் குறைகள், அடிப்படை தேவைகளை நிறைவேற்றிடும் வகையில் சேர்மன் காவேரி சீனித்துரை தலைமையில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
தென்காசி:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கடந்த 19-ந்தேதி முதல் வருகிற 25-ந்தேதி வரை நல்லாட்சி வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பொதுமக்களின் குறைகள், அடிப்படை தேவைகளை நிறைவேற்றிடும் வகையில் சேர்மன் காவேரி சீனித்துரை தலைமையில் வருகிற
23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கீழப்பாவூர் யூனியனுக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் தங்களுக்கு தேவைப்படும் சாலை வசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதிகள் மற்றும் இதர அடிப்படை வசதிகள் சம்பந்தமான கோரிக்கை மனுக்களை வழங்கலாம் எனவும், பெறப்படுகின்ற கோரிக்கை மனுக்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அதன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பெத்தநாடார்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் நவநீதகிருஷ்ணபுரத்தில் இயங்கி வருகிறது.
- குப்பை கழிவுகள் அனைத்தையும் நாகல்குளத்தின் கரையோர பகுதிகளில் கொட்டி வருகிறார்கள்.
தென்காசி:
கீழப்பாவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெத்தநாடார்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் நவநீதகிருஷ்ணபுரத்தில் இயங்கி வருகிறது. ஊராட்சிமன்ற தலைவராக பெத்தநாடார்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெயராணி கலைச்செல்வன் என்பவர் உள்ளார்.
குப்பை கழிவுகள்
ஊராட்சி மன்றத்தின் சார்பாக சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் அனைத்தையும் நாகல்குளத்தின் கரையோர பகுதிகளில் கொட்டி வருவதால் சுகாதார சீர்கேடு மற்றும் நீர் மாசுபாடு ஏற்படுவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே விவசாய நிலங்களுக்கு செல்லும் குளக்கரைகளில் கொட்டப்படும் குப்பைகளால் தொற்று நோய் பரவும் சூழ்நிலை மற்றும் குளங்களில் வாழும் மீன்களும் இறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
விவசாயிகள் கோரிக்கை
இது குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- கீழப்பாவூரை சேர்ந்த ராமலட்சுமி விவசாயம் மற்றும் பீடி சுற்றும் தொழில் செய்து வந்தார்.
- ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதய ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் மைதானம் அருகே வசித்து வருபவர் ராமச்சந்திரன் விவசாயி.
இவரது மனைவி ராம லட்சுமி (வயது 66) இவர் விவசாயம் மற்றும் பீடி சுற்றும் தொழில் செய்து வந்தார். ராமலட்சுமி மற்றும் ராமச்சந்திரன் இருவரும் மகன் சுடலை ஈசன் என்ற அருண் வீட்டில் வசித்து வந்தனர். சுடலை ஈசன் கீழப்பாவூரில் மளிகை கடை நடத்தி வருகிறார். ராமலட்சுமிக்கு சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதய ஆபரேஷன் செய்யப்பட்டு ள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கிய நிலையில் அவரை பாவூர்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற பொழுது செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். உடனடியாக அவரது உடல் வீட்டிற்கு திருப்பி கொண்டு வரப்பட்டது.
பின்னர் பாவூர்சத்திரம் கண் தான விழிப்புணர்வு குழு தலைவர் கே.ஆர்.பி. இளங்கோ ஏற்பாட்டில் ராமலட்சுமியின் கண்கள் தானம் செய்யப்பட்டது. அத்துடன் பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தினர் ஏற்பாட்டில் உறவினர்கள் அனைவரது சம்மதத்துடன் ராமலட்சுமி உடல் தானம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டு இவரது உடலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து சென்று உடல் தானம் செய்யப்பட்டது.
கீழப்பாவூர் பகுதியில் பெண் உடல் தானம் செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
- பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூரில் தமிழ் இலக்கிய மன்ற 47-வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
- சுகிசிவம் நடுவராக பங்கேற்று வாழ்க்கை என்பது சுகமா? சுமையா என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடைபெற்றது.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூரில் தமிழ் இலக்கிய மன்ற 47-வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இலக்கிய மன்ற தலைவர் செல்வன் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவிற்கு ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் துரைராஜ் தலைமை தாங்கினார்.
சிவசுப்பிரமணியன், திருமலைச்சாமி, ராமரத்தினசாமி, கணபதி, மதியழகன்,கிருஷ்ணசாமி, சௌந்தரபாண்டியன், கதிரேசன், சுரேஷ், தங்கேஸ்வரன், துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தங்கசேட் வரவேற்றார்.ராமச்சந்திரபாண்டியன் ஆண்டறிக்கையினை வாசித்தார். செந்தில்செல்வன் தொகுப்புரை ஆற்றினார். பால்துரை, பொன்.அறிவழகன், அருள்செல்வன், திரைப்பட இயக்குனர் பாரதிகண்ணன், சுப்பிரமணியன், பொன்.கணேசன், ராமசாமி, தங்கசாமி உள்ளிட்டோர் பேசினர்.
சுகிசிவம் நடுவராக பங்கேற்று வாழ்க்கை என்பது சுகமா? சுமையா என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடைபெற்றது. சுகமே என்ற அணியில் விஜயசுந்தரி, கவிதா ஜவகர், லெட்சுமண பெருமாள் ஆகியோரும், சுமையே என்ற அணியில் மலர்விழி, பர்வீன் சுல்தானா, மோகனசுந்தரம் ஆகியோரும் பேசினர். முடிவில் சின்னமணி நன்றி கூறினார்.
- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கீழப்பாவூரில் உள்ள விநாயகர் கோவிலில் தினந்தோறும் வெவ்வேறு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
- வருகிற 31-ந்தேதி விநாயகர் சதுர்த்தி அன்று காலை 8 மணிக்கு கணபதி ஹோமம், கும்ப ஜபம், விசேஷ அபிஷேகம், அலங்காரம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது.
தென்காசி:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கீழப்பாவூரில் உள்ள விநாயகர் கோவிலில் தினந்தோறும் வெவ்வேறு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
தினமும் காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 8 மணிக்கு அலங்காரம், தீபாராதனை, பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 7 மணிக்கு விசேஷ அலங்காரம், 1,008 அர்ச்சனை, இரவு 8 மணிக்கு தீபாராதனை நடைபெறுகின்றன. வருகிற 31-ந்தேதி விநாயகர் சதுர்த்தி அன்று காலை 8 மணிக்கு கணபதி ஹோமம், கும்ப ஜபம், விசேஷ அபிஷேகம், அலங்காரம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது.
- கீழப்பாவூர் ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.
- கிருஷ்ண ஜெயந்தி விழா ஏற்பாடுகளை ரவி பட்டாச்சாரியார் தலைமையில் செய்திருந்தனர்.
தென்காசி:
கீழப்பாவூர் ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி அகண்ட நாம ஜெபம், சாயரக்சை, சகஸ்கர நாம அர்ச்சனை, சுவாமி திருவீதி உலா, நாம கீர்த்தனம், கும்பஜெபம், அபிஷேகம், கிருஷ்ண ஜனனம், தீபாராதனை ஆகியன நடைபெற்றது.
சனிக்கிழமை காலை உறியடி உற்சவத்துடன் விழா நிறைவு பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கிருஷ்ண ஜெயந்தி விழா ஏற்பாடுகளை ரவி பட்டாச்சாரியார் தலைமையில் செய்திருந்தனர்.
- கீழப்பாவூர் குருசாமி கோவில் இளைஞர்அணி,குரு பாய்ஸ் நிதி உதவியுடன் பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், கண்தான விழிப்புணர்வு குழு இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது.
- இலவச கண் சிகிச்சை முகாமில் மொத்தம் 63 நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யப் பட்டது
தென்காசி:
கீழப்பாவூர் குருசாமி கோவில் திருமண மஹாலில் 57-வது இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
கீழப்பாவூர் குருசாமி கோவில் இளைஞர்அணி,குரு பாய்ஸ் நிதி உதவியுடன் பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், கண்தான விழிப்புணர்வு குழு இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது.
பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் தலைவரும், கண்தான விழிப்புணர்வு குழுவின் நிறுவனருமான கே.ஆர்.பி. இளங்கோ தலைமை தாங்கினார். நிதி உதவி செய்த காந்தி, சுடலை பூபதி,பால்ராஜ்,அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண் தான மாவட்டத் தலைவர் திருமலை கொழுந்து வரவேற்புரை ஆற்றினார்.
உடனடி முன்னாள் தலைவர் அருணாச்சலம் தொகுப்புரை ஆற்றினார் .கண் சிகிச்சை முகாம் மாவட்ட தலைவர் முருகன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இலவச கண் சிகிச்சை முகாமில் மொத்தம் 63 நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யப் பட்டது. இதில் 23 நோயாளிகள் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாவூர் சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் பொருளாளர் பரமசிவம்,ஜேக்கப் சுமன் மற்றும் செல்வ கணேசன் ஆகியோர் இணைந்து முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்