என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kisan"
- ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான தவணைத் தொகையை பெற பி.எம் கிசான் இணையதளத்தில் ஆதார் தகவல்களை பதிவேற்றம் செய்தால் மட்டுமே தவணை தொகை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- விவசாயிகள் பொது இ-சேவை மையத்தில், கணினி உபகரணத்தில் கைவிரல் ரேகை வைத்து பி.எம். கிசான் இணையதளம் சென்று தங்களுடைய விவரங்களை நிறைவு செய்ய வேண்டும்
மேட்டூர்:
விவசாயிகள் ஆதார் எண் அடிப்படையில் விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகள் வாங்க மத்திய அரசு ஆண்டுதோறும் 3 தவணையாக ரூ.6000 உதவித்தொகை வழங்குகிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான தவணைத் தொகையை பெற பி.எம் கிசான் இணையதளத்தில் ஆதார் தகவல்களை பதிவேற்றம் செய்தால் மட்டுமே தவணை தொகை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எனவே விவசாயிகள் பொது இ-சேவை மையத்தில், கணினி உபகரணத்தில் கைவிரல் ரேகை வைத்து பி.எம். கிசான் இணையதளம் சென்று தங்களுடைய விவரங்களை நிறைவு செய்ய வேண்டும்.
மேலும் இது குறித்து விவரங்களை பெற வட்டார வேளாண் விரிவாக்க அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று கொளத்தூர் வேளாண்மை உதவி இயக்குனர் ராஜகோபால் தெரிவித்து உள்ளார்.
- பிரதம மந்திரி கிசான் கவுரவ நிதி ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் நிலமுள்ள தகுதியுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ 2 ஆயிரம் வீதம், ஆண்டிற்கு ரூ. 6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் மற்றும் செலவினங்களை மேற்கொள்ள மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
- வரும் 31-ம் தேதிக்குள் கைவிரல் பதிவேற்றம் செய்து புதுப்பித்தால் மட்டுமே விவசாயிகளுக்கு தொடர்ந்து ஊக்கத்தொகை கிடைக்கும்.
பரமத்தி வேலூர்:
கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
பிரதம மந்திரி கிசான் கவுரவ நிதி ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் நிலமுள்ள தகுதியுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ 2 ஆயிரம் வீதம், ஆண்டிற்கு ரூ. 6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் மற்றும் செலவினங்களை மேற்கொள்ள மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை இத்திட்டத்தில் விவசாயிகள் இணைந்த தேதியின் அடிப்படையில் 11 தவணைகள் தொகை விடுவிக்கப்பட்டு விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
12-வது தவணை தொகை விடுவிப்பிற்கு ஆதார் விபரங்கள் சரிபார்ப்பு அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பிரதம மந்திரி கிசான் கவுரவ ஊக்கத்தொகை பெறுகின்ற கபிலர்மலை வட்டார விவசாயிகள் அருகிலுள்ள இ- சேவை மையங்களையோ, தபால் அலுவலகங்களையோ அணுகி வரும் 31-ம் தேதிக்குள் ஆதார் அட்டை கொண்டு தங்களுடைய இருப்பை கைவிரல் ரேகையை பதிவு செய்வதன் வழியாக புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு வரும் 31-ம் தேதிக்குள் கைவிரல் பதிவேற்றம் செய்து புதுப்பித்தால் மட்டுமே விவசாயிகளுக்கு தொடர்ந்து ஊக்கத்தொகை கிடைக்கும். எனவே கபிலர்மலை வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் உடனடியாக ஆதார் அட்டை மூலம் புதுப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்