என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "kurumbur"
- கடம்பாகுளம் மறுகால் ஓடை கரையோரங்களில் மதர் சமூக சேவை நிறுவனம் மற்றும் அங்கமங்கலம் பஞ்சாயத்து சார்பில் 1 லட்சம் பனை விதைகள் நடும் பணி நடந்தது.
- வன அலுவலர் மகேந்திரன் பனை விதைகள் விதைக்கும் பணி மற்றும் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்து பேசினார்.
குரும்பூர்:
மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் கடந்த 6 ஆண்டுகளாக 1 கோடி பனை விதைகள் விதைக்கப்பட்டு வருகிறது.
இதனைத்தொடர்ந்து கடம்பாகுளம் மறுகால் ஓடை கரையோரங்களில் மதர் சமூக சேவை நிறுவனம் மற்றும் அங்கமங்கலம் பஞ்சாயத்து சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கம், ஒரு லட்சம் பனை விதைகள் மற்றும் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது.
அங்கமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி எதிரே நடந்த விழாவிற்கு மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவருமான கென்னடி தலைமை தாங்கினார். அங்கமங்கலம் பாலமுருகன் வரவேற்றார்.
தொழிலதிபர் செல்வகுமார், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க திருச்செந்தூர் ஒன்றிய தலைவர் காயல் பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் கடம்பாகுளம் மறுகால் ஓடை கரையோரங்களில் 1 லட்சம் பனை விதைகள் விதைக்கும் பணி மற்றும் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்து பேசினார்.
இதில் அங்கமங்கலம் பஞ்சாயத்து செயலாளர் கிருஷ்ணம்மாள், ஊராட்சி கணினி இயக்குனர் ஜென்சி, பணித்தள பொறுப்பாளர் கஸ்தூரி, பரமேஸ்வரி, உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் பானுமதி நன்றி கூறினார்.
- முத்து ,சுந்தர்ராஜ் ஆகிய இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து தங்கள் பகுதியில் குலசை முத்தாரம்மன் தசரா செட் அமைக்க ஏற்பாடு செய்திருந்தனர்.
- இதற்காக கடலில் தீர்த்தம் எடுப்பதற்காக 2 பேரும் நேற்று அதிகாலையில் பத்தமடையில் இருந்து திருச்செந்தூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
குரும்பூர்:
நெல்லை மாவட்டம் பத்தமடை அம்பேத்கர்நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் கண்ணன் மகன் முத்து (வயது 24). அதே பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (45). இவர்கள் இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து தங்கள் பகுதியில் குலசை முத்தாரம்மன் தசரா செட் அமைக்க ஏற்பாடு செய்தி ருந்தனர்.
இதற்காக கடலில் தீர்த்தம் எடுப்பதற்காக 2 பேரும் நேற்று அதிகாலையில் பத்தமடையில் இருந்து திருச்செந்தூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். குரும்பூரில் அதிகாலை 4 மணி அளவில் டீ குடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட தயாராகினர். அப்போது நெல்லையில் இருந்து திருச்செந்தூர் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி இவரது மோட்டார் சைக்கிள் மீது திடீரென மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த முத்துவுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதனால் கீழே விழுந்த முத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குரும்பூர் போலீசார் முத்துவின் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து லாரி டிரைவர் சிவகளையை சேர்ந்த சிவலிங்கம் மகன் குமார் (33) மீது குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உழவர்கள் அமைப்பு சார்பில் குரும்பூர் பஜாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ஆர்ப்பாட்டத்தில் மதுரை தமிழ் தேசிய பேரியக்க ராசு கண்டன உரையாற்றினார்.
குரும்பூர்:
குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி யில் மோசடி செய்த நகை, பணத்தை மீட்கக்கோரி பாதிக் கப்பட்ட மக்கள் மற்றும் உழவர்கள் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி யில், திருச்செந்தூர் கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் மற்றும் சார்பதிவாளர் ஆகியோர் அடங்கிய குழுவினர் நகைக்கடன் தள்ளுபடிக்காக கடந்த 2021 செப்டம்பர் 8-ந்தேதி மற்றும் 13-ந்தேதி நகை கடன்கள் குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்ட போது 548 நகை பைகளில் 261 நகை பைகள் மாயமானது தெரியவந்தது.
இதேபோல் வைப்புநிதியும் இருப்பில் இருப்பது போன்று போலியாக கணக்கை உருவாக்கி ரூ.27 கோடி வரை மோசடி செய்ததாக விசா ரணை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த மோசடி வழக்கில் வங்கி தலைவர் மட்டும் கைது செய்யப்பட்ட நிலையில் செய லாளர் தேவராஜ் உடல்நிலை சரியில்லை என்று கூறி முன்ஜாமீன் பெற்றார். தலை மறைவாக இருந்த துணை செய லாளர் ஜான்ஸி சந்திரகாந்தா ஞான பாயும் கைது செய்யப் பட்டார்.
இந்நிலையில் பாதிக்கப் பட்டவர்கள் அமைச்சர், அதிகாரிகளிடம் நகை, பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று பலமுறை கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் இன்று வரை அதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும் பாதிக்கப்பட்ட வர்கள் தொடர்ந்து போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். இதனைத் தொடர்ந்து நேற்று பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உழவர்கள் அமைப்பு சார்பில் குரும்பூர் பஜாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக உழவர் முன்னணி மாநில துணைத்தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கினார். மதுரை தமிழ் தேசிய பேரியக்க ராசு கண்டன உரையாற்றினார். இதில் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பி னர். குரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம கிருஷ்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- அங்கமங்கலத்தில் ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் பஞ்சாயத்து அலுவலக புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
- நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் பஞ்சாயத்து அலுவலக புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
குரும்பூர்:
அங்கமங்கலத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் பஞ்சாயத்து அலுவலக புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. ஆழ்வை யூனியன் சேர்மன் ஜனகர் தலைமை தாங்கினார். பஞ்சாயத்து தலைவர் பானுப்பிரியா பாலமுருகன் வரவேற்றார். குரும்பூர் லூசியா ஆலய பங்கு தந்தை பபிஸ்டன், ஜமாத் நிர்வாகிகள் மிஸ்தார்அலி, நசீர் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் பஞ்சாயத்து அலுவலக புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
முன்னதாக தமிழக அர சின் நமக்கு நாமே திட்டமும், இயேசு விடு விக்கிறார் புது வாழ்வு சங்கமும் இணைந்து குரும்பூர் புதுக்கிராமம் பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை இயேசு விடுக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் திறந்து வைத்தார்.
இதில் துணைத்தலைவர் முத்துசங்கர், ஆழ்வை யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவராஜன், என்ஜினீயர் வெள்ளப் பாண்டி, தட்சணமாற நாடார் சங்க துணை தலைவர் முரு கேசப்பாண்டியன், ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் பாலமுருகன், குரும்பூர் வியாபாரி சங்க தலை வர்கள் கிஷோக் முரு கானந்தம், பரமசிவன், நாலுமாவடி பஞ்சாயத்து தலைவர் இசக்கிமுத்து, பாதிரியர் ரொபிஸ்டன், ஜமாத் நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள், களப்பணியாளர்கள், தூய்மைப் பணியாளர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பஞ்சாயத்து செயலர் கிருஷ்ணம்மாள் நன்றி கூறினார்.
- நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள், புது வாழ்வு சங்கம் சார்பில் ஆத்தூர் கீழக்குளம் பாசன வாய்க்கால் துார்வாரும் பணிகளை தாசில்தார் சுவாமிநாதன் தொடங்கி வைத்தார்.
- இப்பணிகள் மூலம் சுமார் 50 கி.மீ நீளத்திற்கு வாய்க்கால் தூர்வாரப்படுகிறது.
குரும்பூர்:
தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள், புது வாழ்வு சங்கம் சார்பில் ஆத்தூர் கீழக்குளம் பாசன வாய்க்கால் துார்வாரும் பணிகளை திருச்செந்தார் தாசில்தார் சுவாமிநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு விவசாய சங்கத் தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். மாதவன், லெசிஸ்டன், வெள்ளச்சாமி, ஆவுடையப்பன், சிவ சுப்பிரமணியன், சின்னத்துரை, பெருமாள், பாலமுருகன், கொடியன், சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்பணிகள் மூலம் சேர்ந்த மங்கலம், குமாரபன்னையூர், செல்வன் புதியனூர், புதுநகர், தலைப்பன்னையூர், ஆவரையூர் தலைவன் வடலி, கீரனூர் ஆகிய கிராமங்களில் சுமார் 50 கி.மீ நீளம் வாய்க்கால் தூர்வாரப்படுகிறது. 1500 ஏக்கர் பாசன பகுதிகள் பயன்பெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழியப் பொதுமேலாளர் செல்வக்குமார் தலைமையில் விவசாயப் பணிகளின் ஒருங்கிணைப்பாளர் மணத்தி எண்வின், மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
- குரும்பூரில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற திருமணத்தில் கறி விருந்து சாப்பிடுவதில் 2 பேருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
- தகவல் அறிந்த குரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டை சேதப்படுத்திய குருகாட்டூரை சார்ந்த பணிமயராஜ், வெங்கடேசன் மற்றும் முக்காணி சேர்ந்த அரிபுத்திரன் ஆகியோரை கைது செய்தனர்.
குரும்பூர்:
குரும்பூரில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற திருமணத்தில் கறி விருந்து சாப்பிடுவதில் 2 பேருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. உறவினர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
தகராறில் ஈடுபட்ட ஒரு சிலர் சுப்ரமணியபுரம் மாணிக்கம் மனைவி ராமலட்சுமி (வயது 75) என்பவரின் வீட்டிற்கு சென்று, உனது பேரனை வெளியே அனுப்பி வை என கூறி அவரின் வீட்டை சேதப்படுத்தி உள்ளனர்.
தகவல் அறிந்த குரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டை சேதப்படுத்திய குருகாட்டூரை சார்ந்த பணிமயராஜ், வெங்கடேசன் மற்றும் முக்காணி சேர்ந்த அரிபுத்திரன் ஆகியோரை கைது செய்தனர்.
- குரும்பூரை அடுத்த வெள்ளகோவிலில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு 3 நாட்கள் கைப்பந்து போட்டி நடைபெற்றது.
- சிறப்பு விருந்தினராக திருச்செந்தூர் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
குரும்பூர்:
குரும்பூரை அடுத்த வெள்ளகோவிலில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு 3 நாட்கள் கைப்பந்து போட்டி நடைபெற்றது.
இதில் தென் மாவட்டத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கைப்பந்து அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். அணிகளை ஒவ்வொரு குழுக்களாக பிரித்து புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி பெற்ற அணிகள் கால் இறுதி மற்றும் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.
இதில் கூடுதாழை ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர் முதலாம் பரிசையும், கானம் கஸ்பா அணியினர் 2-ம் பரிசையும், ராமநாடு அணியினர் 3-ம் பரிசையும், வெள்ளகோவில் இளைஞர் அணியினர் 4-ம் பரிசையும் தட்டி சென்றனர்.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு சுகந்தலை ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக திருச்செந்தூர் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
ஆழ்வை வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பசாமி மற்றும் முன்னாள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கருவேல்ராஜ், ராஜேஷ், அருண் சங்கர் உட்பட வெள்ளக்கோவில் இளைஞர்கள் செய்திருந்தனர்.
குரும்பூர் அருகே உள்ள அம்மன்புரத்தை சேர்ந்தவர் நயினார். இவருக்கு 2 மனைவி. முதல் மனைவிக்கு ரவிகுமார் என்ற மகன் உள்ளார். இவர் ராணுவவீரராக உள்ளார். இவர் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். நயினார் தற்போது முதல் மனைவியுடன் வசித்து வருகிறார். 2-வது மனைவி சந்தனமாரியம்மாள்.
இந்நிலையில் நயினார் தனது சொத்துக்களை பிரித்துக் கொடுத்துள்ளார். இதையடுத்து சந்தனமாரியம்மாள் தனது பங்கு சொத்துக்களை விற்பதற்காக சென்றுள்ளார். அப்போது இவருக்கும், ரவிக்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே ஒருவருரை ஒருவர் மாறி, மாறி தாக்கிக் கொண்டனர். இதில் இருவருக்கும் பலத்தகாயம் ஏற்பட்டது. இதையடுத்து ரவிக்குமாரை திருச்செந்தூர் அரசு மருத்துவமனையிலும், சந்தனமாரியம்மாளை ஆத்தூர் தனியார் மருத்துவமனையயிலும் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து குரும்பூர் போலீசில் ரவிக்குமார், சந்தனமாரியம்மாள் தரப்பில் தனித்தனியாக புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.#tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்