என் மலர்
நீங்கள் தேடியது "Kuwait"
- மேத்யூஸ், அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்பட 4 பேரும் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் நீராட்டுபுரம் பகுதியை சேர்ந்தவர் மேத்யூஸ் முலக்கல் (வயது40). இவரது மனைவி லினி ஆபிரகாம் (38). இவர்களது குழந்தைகள் இரின் (14), இசாக் (9). மேத்யூஸ் மற்றும் அவரது மனைவி குவைத் நாட்டில் வேலை பார்த்து வந்தனர்.
இதனால் மேத்யூஸ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் குவைத் அம்பாசியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். மேத்யூஸ் ராய்ட்டர்சில் உள்ள நிறுவனத்திலும், அவரது மனைவி லினி அல் அஹ்மதி கவர்னரேட் பகுதியில் உள்ள மருத்துவமனையில் நர்சாகவும் பணியாற்றினர்.
அவர்களது குழந்தைகள் குவைத்தில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர். விடுமுறை கிடைக்கும் போது கேரளாவில் உள்ள சொந்த ஊருக்கு மேத்யூஸ் தனது குடும்பத்தினருடன் வந்து செல்வது வழக்கம். அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு குடும்பத்துடன் வந்திருக்கிறார்.
பின்பு விடுமுறை முடிந்ததையடுத்து குவைத்துக்கு திரும்பினர். மேத்யூஸ், அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் நேற்று மாலை 4 மணியளவில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தங்களது வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள். பின்பு 4 பேரும் வீட்டில் உள்ள படுக்கையறையில் படுத்து தூங்கியிருக்கின்றனர்.
அப்போது இரவில் அவர்களது வீட்டில் திடீரென தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது. படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்த அவர்கள், அறை முழுவதும் புகைமூட்டமான பிறகே எழுந்துள்ளனர். ஆனால் அறை முழுவதும் புகையாக இருந்ததால் அவர்களால் வெளியே வர முடிய வில்லை.
இதனால் மேத்யூஸ், அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்பட 4 பேரும் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தனர். இந்த தீவிபத்து குறித்து தகவலறிந்ததும் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஏ.சி.யில் ஏற்பட்ட பழுது காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொந்த ஊருக்கு வந்திருந்த மேத்யூஸ் மறறும் அவரது குடும்பத்தினர், நேற்று மாலை 4 மணிக்கு தான் குவைத்துக்கு சென்றிருக்கிறார். இந்நிலையில் இரவு 8 மணிக்கு தனது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேரும் பலியாகினர்.
சொந்த ஊரிலிருந்து குவைத்துக்கு திரும்பிய 4 மணி நேரத்திலேய அவர்கள் பலியாகி விட்டனர். இது கேரளாவில் உள்ள அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சகோதரியின் 59 வயதான மாமனார் ஆஞ்சநேயலு சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
- அதிகாலை தனது கிராமத்திற்குச் சென்று தூங்கிக் கொண்டிருந்த ஆஞ்சநேயலுவை அடித்துக் கொண்டார்
குவைத்தில் பணியாற்றி வரும் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த தந்தை ஒருவர் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட உறவினரை விமானம் ஏறி வந்து கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது,
ஆந்திர பிரதேச மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள ராஜம்பேட் பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சநேய பிரசாத். இவர் குவைத்தில் பணியாற்றி வரும் நிலையில் இவரின் 12 வயது மகள், ஒபுலவாரிப்பள்ளி கிராமத்தில் உள்ள மனைவியின் சகோதரி வீட்டுக்கு சென்றபோது அங்கு அந்த சகோதரியின் 59 வயதான மாமனார் ஆஞ்சநேயலு சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து சிறுமி தனது தந்தையிடம் அலைபேசியில் கூறியுள்ளார். உறவினர் மீது புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தந்தை ஒரு முடிவுடன் டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியாவுக்கு வந்துள்ளார். அதன்படி கடந்த சனிக்கிழமை அதிகாலை தனது கிராமத்திற்குச் சென்று தூங்கிக் கொண்டிருந்த ஆஞ்சநேயலுவை அடித்துக் கொன்றுவிட்டு, அதே நாளில் குவைத் திரும்பினார்.
கொலையைத் தொடர்ந்து குவைத் சென்ற பிரசாத் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் தனது மகளின் புகாரின் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தவறியதால் தான் கொலை செய்ததாக கூறியிருக்கிறார் . இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்வதற்கு ஆவன செய்து வருகின்றனர்.
- பிரதமர் மோடியின் இப்பயணத்தின் மூலம் இரு நாட்டு நட்புறவு மேலும் வலுப்பெறும்.
- கடந்த 43 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி வரும் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் குவைத் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதுதொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
வளைகுடா நாடான குவைத் நாட்டின் மன்னர் ஷேக் மெஷல் அல் அஹமது அல் ஜபர் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி 2 நாள் பயணமாக வரும் 21, 22 ஆகிய தேதிகளில் அரசுமுறை பயணமாக குவைத் செல்கிறார்.
அங்கு மன்னர் ஷேக் மெஷல் அல் அஹமது அல் ஜபர், குவைத் வெளியுறவுத்துறை மந்திரி மற்றும் பட்டத்து இளவரசர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களைச் சந்தித்துப் பேசுகிறார். அங்கு குவைத் வாழ் இந்தியர்களையும் சந்திக்கிறார்.
பிரதமர் மோடியின் இப்பயணத்தின் மூலம் இந்தியா-குவைத் இடையே பரஸ்பரம் நட்புறவு மேலும் வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 43 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 1981-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி குவைத் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன்பிறகு தற்போதுதான் பிரதமர் மோடி செல்லவிருக்கிறார்.
சமீபத்தில் குவைத் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா அலி அல்-யாஹ்யா இந்தியா வருகை தந்தார். அப்போது தங்கள் நாட்டிற்கு வருமாறு அலி அல்-யாஹ்யா கேட்டுக் கொண்டார். இதையடுத்து பிரதமர் மோடியின் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மேற்கொள்ளும் சுற்றுப்பயணம் இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவை மேம்படுத்துவதுடன், புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவும் வாய்ப்புகள் இருக்கின்றன.
- உரிய சிகிச்சை வழங்குவது தொடர்பான பணிகளும் விரைந்து மேற்கொள்ளப்பட்டன.
- மீட்பு பணிகளில் 90-க்கும் அதிகமானோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
குவைத்தில் உள்ள அடுக்கு மாடி கட்டிடம் ஒன்றில் கடந்த ஜூன் 12ம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் கேரளாவை சேர்ந்த ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமானது என பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கட்டிடம் தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் நகரில் அமைந்துள்ளது.
நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து பலரின் உயிரை பறித்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியது. தீ விபத்தைத் தொடர்ந்து மீட்பு பணிகள் மற்றும் மீட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குவது தொடர்பான பணிகளும் விரைந்து மேற்கொள்ளப்பட்டன.
உயிரிழப்பு:
தீ விபத்து தொடர்பான விசாரணையில் சார்ட் சர்கியூட் காரணமாவே விபத்து ஏற்பட்டுள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டது. தீ விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. மீட்பு பணிகளில் 90-க்கும் அதிகமானோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 45 இந்தியர்கள் உள்பட 49 பேர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களில் ஏழு பேர் தமிழகத்தில் உள்ள நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.
கட்டிடத்தில் சுமார் 195 பேர் தங்கி இருந்துள்ளனர். விபத்தின்போது பலர் உயிர் தப்பிக்க மாடியில் இருந்து கீழே குதித்துள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். தீ விபத்தின் போது உடல் கருகியும், மூச்சுத்திணறியும் பலர் உயிரிழந்தனர்.
இதில் உடல் கருகியதை விட, மூச்சுத்திணறி உயிரிழந்தவர்கள் அதிகம் என தகவல் வெளியானது. பலியான இந்தியர்களின் உடல்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.

இழப்பீடு:
இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த விபத்துக்கு அந்த கட்டிடத்தில் தங்களது ஊழியர்களை தங்கவைத்த NBTC கட்டுமான நிறுவனம் பொறுப்பேற்றுக் கொள்வதாக அறிவித்தது. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.8 லட்சம் நஷ்டஈடாக அனுப்பி வைக்கப்படும் என்றும் அறிவித்தது.
இதோடு 4 வருட சம்பள பணம் இன்சுரன்ஸ் தொகையாக அவர்களிடம் வழங்கப்படும். மேலும் அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று தெரிவித்தது. இதைத்தவிர்த்து கேரள அரசு உயிரிழந்த கேரளா மாநிலத்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு அறிவித்தது.
தீ விபத்தில் குடும்பங்களுக்கு குவைத் அரசாங்கம் தலா 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 12.50 லட்சம்) இழப்பீடாக வழங்குதாக தெரிவித்தது.
- குவைத்தில் என்னுடைய 101 வயது தாத்தாவை சந்திப்பீர்களா என வேண்டுகோள்.
- நிச்சயமான சந்திப்பேன் என பிரதமர் மோடி பதில் அளித்திருந்தார்.
இரண்டு நாள் அரசு பயணமாக பிரதமர் மோடி இன்று குவைத் சென்றுள்ளார். வளைகுடா நாட்டிற்கு 43 வருடத்திற்குப் பிறகு செல்லும் இந்திய பிரதமர் மோடி ஆவார். குவைத்தின் முக்கிய தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேச இருக்கிறார்.
பிரதமர் மோடி குவைத் செல்கிறார் என்று தெரிய வந்ததும், எக்ஸ் பயனர் ஒருவர் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு பதிவிட்டிருந்தார்.
அதில் "பிரதமர் மோடிக்கு என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். என்னுடைய 101 வயது தாத்தா நானாஜி குவைத்தில் வசித்து வருகிறார். அவர் முன்னாள் ஐ.எஃப்.எஸ். அதிகாரி. இந்திய வம்சாவளியினர் சந்திக்கும்போது அவரை சந்திப்பீர்களா? என்று கேட்டிருந்தார். மேலும், அவர் உங்களுடைய மிகப்பெரிய பிரியர். மற்ற விவரங்கள் அனைத்தும் உங்களுடைய அலுவலகத்தறி்கு அனுப்பி வைத்துள்ளேன்" எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு பிரதமர் மோடி "நிச்சயமாக! நான் உங்கள் தாத்த மங்கல் செயின் ஹண்டாவை சந்திப்பதை எதிர்நோக்கி இருக்கிறேன்" என பதில் அளித்துள்ளார்.
இந்த நிலையில் குவைத் சென்ற பிரதமர் மோடி, மங்கல் செயின் ஹண்டா சந்தித்தார். மேலும், ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை அரபி மொழியில் வெளியிட்ட அப்துல்லாதீப் அல்னெசெஃப், மொழி பெயர்த்த அப்துல்லா பரோன் ஆகியோரையும் சந்தித்தார்.
- வளைகுடா ஸ்பிக் தொழிலாளர் முகாம் சென்ற பிரதமர் மோடி இந்திய தொழிலாளர்களுடன் உரையாடினார்.
- ஹாலா மோடி என்ற தலைப்பில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
குவைத்:
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக குவைத் சென்றுள்ளார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினர் ஒன்று சேர்ந்து பிரதமர் மோடியை வரவேற்றனர்.
வளைகுடா ஸ்பிக் தொழிலாளர் முகாமிற்கு சென்ற பிரதமர் மோடி அங்குள்ள இந்திய தொழிலாளர்களை சந்தித்து நலம் விசாரித்தார். அவர்களுடன் உற்சாகமாக கலந்துரையாடினார்.
குவைத்தின் ஷேக் சாத் அல் அப்துல்லா விளையாட்டு உள்ளரங்கில், ஹாலா மோடி என்ற தலைப்பில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், குவைத் ஆட்சியாளர்களுடன் நான் பேசும்போது எல்லாம் இந்தியர்களை அவர்கள் புகழ்ந்து பேசுகின்றனர் என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, குவைத்தில் அரேபியன் கோப்பை கால்பந்து தொடரின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். மேலும், போட்டியையும் கண்டு களித்தார்.
- பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக குவைத் சென்றுள்ளார்.
- விருது இதற்கு முன்பாக பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ், சார்லஸ் உள்ளிட்ட தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக குவைத் சென்றுள்ளார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினர் ஒன்று சேர்ந்து பிரதமர் மோடியை வரவேற்றனர்.
வளைகுடா ஸ்பிக் தொழிலாளர் முகாமிற்கு சென்ற பிரதமர் மோடி அங்குள்ள இந்திய தொழிலாளர்களை சந்தித்து நலம் விசாரித்தார். அவர்களுடன் உற்சாகமாக கலந்துரையாடினார்.
பிறகு, குவைத்தின் ஷேக் சாத் அல் அப்துல்லா விளையாட்டு உள்ளரங்கில், ஹாலா மோடி என்ற தலைப்பில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், குவைத் ஆட்சியாளர்களுடன் நான் பேசும்போது எல்லாம் இந்தியர்களை அவர்கள் புகழ்ந்து பேசுகின்றனர் என தெரிவித்தார்.
இந்நிலையில், குவைத் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருது இதற்கு முன்பாக பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ், சார்லஸ் உள்ளிட்ட தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- யோகாவை ஊக்குவித்து வரும் சமூக ஊடக பிரபலங்களை அவர் சந்தித்து உரையாடினார்.
- பிரதமர் மோடியை விமான நிலையத்திற்கு வந்து குவைத் பிரதமர் வழியனுப்பி வைத்தார்.
குவைத்:
பிரதமர் நரேந்திர மோடி குவைத்திற்கு 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் நேற்று புறப்பட்டுச் சென்ற அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
குவைத் சென்றடைந்த பிரதமர் மோடியை அந்நாட்டு விமான நிலையத்தில் துணை பிரதமர் மற்றும் பாதுகாப்பு மந்திரியான ஷேக் பகத் யூசப் சவுத் அல்-சபா மற்றும் பலர் வரவேற்றனர்.
அதன்பின், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களை சந்தித்து அவர் பேசினார். இந்திய தேசிய கொடியுடன் பிரதமரை வரவேற்ற அவர்கள் பிரதமருக்கு கரம் கூப்பி வணக்கம் தெரிவித்தனர்.
பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய குடிமக்களுக்கான விருது வழங்கப்பட்டது. குவைத்தின் அமீர், ஷேக் மெஷல் அல்-அகமது அல்-ஜாபர் அல் சபா, பிரதமர் மோடிக்கு விருது வழங்கி கவுரவம் அளித்துள்ளார்.
தி ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர் என்ற இந்த விருது நாடுகளின் தலைவர்கள், வெளிநாட்டு ஆட்சியாளர்கள் மற்றும் வெளிநாட்டு அரச குடும்பத்தினர் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. இதன்பின்னர், ஷேக் மெஷல் அல்-அகமது அல்-ஜாபர் அல் சபாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் பிரதமர் மோடி ஈடுபட்டார்.
இந்நிலையில், குவைத் நாட்டுக்கான 2 நாள் அரசுமுறை பயணம் முடிந்து பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார். இந்தியா புறப்பட்ட பிரதமர் மோடியை காண விமான நிலையத்திற்கு வந்த குவைத் பிரதமர், பின்னர் அவரை வழியனுப்பி வைத்தார்.
இந்தப் பயணத்தின்போது மருந்து, தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் ஒத்துழைப்புடன் செயல்படுவது பற்றி குவைத்தின் அமீருடன் ஆலோசனை மேற்கொண்டார். யோகாவை ஊக்குவித்து வரும் சமூக ஊடக பிரபலங்களையும் அவர் சந்தித்து உரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய குடிமக்களுக்கான விருது வழங்கப்பட்டது.
- பிரதமர் மோடியை விமான நிலையத்திற்கு வந்து குவைத் பிரதமர் வழியனுப்பி வைத்தார்.
குவைத்:
பிரதமர் நரேந்திர மோடி குவைத்திற்கு 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் நேற்று புறப்பட்டுச் சென்ற அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு விமான நிலையத்தில் துணை பிரதமர் மற்றும் பாதுகாப்பு மந்திரியான ஷேக் பகத் யூசப் சவுத் அல்-சபா மற்றும் பலர் வரவேற்றனர்.
அதன்பின், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களை சந்தித்து அவர் பேசினார். பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய குடிமக்களுக்கான விருது வழங்கப்பட்டது. குவைத்தின் அமீர், ஷேக் மெஷல் அல்-அகமது அல்-ஜாபர் அல் சபா, பிரதமர் மோடிக்கு விருது வழங்கி கவுரவம் அளித்துள்ளார்.
அதன்பின், ஷேக் மெஷல் அல்-அகமது அல்-ஜாபர் அல் சபாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் பிரதமர் மோடி ஈடுபட்டார்.
இந்தப் பயணத்தின்போது மருந்து, தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் ஒத்துழைப்புடன் செயல்படுவது பற்றி குவைத்தின் அமீருடன் ஆலோசனை நடத்தினார். யோகாவை ஊக்குவித்து வரும் சமூக ஊடக பிரபலங்களையும் அவர் சந்தித்து உரையாடினார்.
இதற்கிடையே, குவைத் நாட்டுக்கான 2 நாள் அரசுமுறை பயணம் முடிந்து பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார். இந்தியா புறப்பட்ட பிரதமர் மோடியை காண விமான நிலையத்திற்கு வந்த குவைத் பிரதமர், பின்னர் அவரை வழியனுப்பி வைத்தார்.
இந்நிலையில், குவைத் பயணம் முடிந்து தலைநகர் டெல்லியில் உள்ள பாலம் விமானம் நிலையம் வந்தடைந்தார். பிரதமர் மோடியை அதிகாரிகள் வரவேற்றனர்.
- இந்த பயணத்தில் பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய குடிமக்களுக்கான விருது வழங்கப்பட்டது.
- மருந்து, தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் விவாதம் நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி குவைத்திற்கு 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் நேற்று முன் தினம் புறப்பட்டுச் சென்ற அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன்பின், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களையும் ஊழியர்களையும் சந்தித்து அவர் பேசினார். அதன்பின் நேற்று இரவு மீண்டும் அவர் டெல்லி புறப்பட்டார். மோடியுடன் உரையாடிய இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலாளர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.
அதில் ஒரு தொழிலாளி, நீங்கள் மெடிக்கல் லீவ் எடுக்குறீங்களா சார் என கேட்டார். இதற்கு பதிலளித்த மோடி, தொழிலாளர்களின் வியர்வை வாசனையே எனது மருந்து என்று பதில் அளித்தார்.
மேலும் உரையாடலின்போது தான் தமிழர் என மோடியிடம் ஒருவர் தன்னை அறிமுகப்டுத்திக்கொள்ளவே உடனே அவரிடம் வணக்கம் என மோடி தெரிவித்துள்ளார்.
இந்த பயணத்தில் பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய குடிமக்களுக்கான விருது வழங்கப்பட்டது. குவைத்தின் அமீர், ஷேக் மெஷல் அல்-அகமது அல்-ஜாபர் அல் சபா, பிரதமர் மோடிக்கு விருது வழங்கி கவுரவம் அளித்துள்ளார்.
தி ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர் என்ற இந்த விருது நாடுகளின் தலைவர்கள், வெளிநாட்டு ஆட்சியாளர்கள் மற்றும் வெளிநாட்டு அரச குடும்பத்தினர் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
இந்தப் பயணத்தின்போது மருந்து, தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் ஒத்துழைப்புடன் செயல்படுவது பற்றி குவைத்தின் அமீருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை காமராஜர் நகர் புதுசாரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரமோகன். இவரது மனைவி விஜய லட்சுமி (வயது 35). இவர், குடும்ப ஏழ்மையின் காரணமாக ஏஜெண்டு மூலம் குவைத்த நாட்டுக்கு வேலைக்கு சென்றார்.
ஆனால், அந்த ஏஜெண்டின் தவறான வழிகாட்டுதலால் ஒரு வீட்டில் கொத்தடிமையாக விஜயலட்சுமி வேலைக்கு சேர்க்கப்பட்டார்.
கடந்த 3 மாதங்களாக மிகுந்த சித்ரவதைக் குள்ளாக்கப்பட்டதால் மனமுடைந்த விஜயலட்சுமி அங்கு விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
குவைத் அரசு ஆஸ்பத்திரியில் விஜயலட்சுமி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதுபற்றி விஜயலட்சுமியின் குடும்பத்தினர் புதுவை பாரதிய ஜனதா கட்சியினரை தொடர்பு கொண்டு குவைத் நாட்டில் இருந்து விஜயலட்சுமியை மீட்குமாறு கேட்டு கொண்டனர்.

இதுபற்றி புதுவை பாரதிய ஜனதா கட்சியினர் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு தகவல் தெரிவித்து முழு விவரங்களை அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் குவைத் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டு விஜயலட்சுமியை மீட்க உடனடி நடவடிக்கை எடுத்தார்.
இதன் மூலம் விஜய லட்சுமியை எந்தவித பாதிப்பும் இன்றி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மீட்டு புதுவைக்கு அனுப்பி வைத்தது.
இதையடுத்து புதுவை வந்த விஜயலட்சுமி தனது கணவர் சந்திரமோகனுடன் புதுவை பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. மற்றும் துணை தலைவர்கள் ஏம்பலம் செல்வம், செல்வம், பொதுச்செயலாளர்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து நன்றி தெரிவித்தார். #Sushmaswaraj