என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "lamb"
- ஆட்டு குட்டிகளை தும்பிக்கையால் தாக்கிய போது 3 ஆட்டு குட்டிகள் பலியானது.
- வனத்துறையினர் பலியான ஆட்டுக்குட்டிகள் மற்றும் சேதம் அடைந்த விளை பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பென்னாகரம்:
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடி கிராமம் ஒகேனக்கல் மற்றும் பென்னாகரம் வனப் பகுதிகளை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு, 1,000-ற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கடந்த 15 நாட்களாக இப்பகுதிக்கு அடிக்கடி யானைகள் வந்து விளை நிலங்களை சேதப்படுத்தி செல்கின்றது.
இந்நிலையில், நேற்று முன்தினம் தாசிகிணறு பகுதிக்கு வந்த ஒற்றை யானை அங்கு பயிரிடப்பட்டுள்ள ராகி, தக்காளி, முருங்கை உள்ளிட்ட பயிர்களை சேதம் செய்துவிட்டு, அதே பகுதியை சேர்ந்த பவுனேசன் என்பவருக்கு சொந்தமான ஆட்டுப்பட்டி அருகே சென்றுள்ளது.
அங்கு குட்டிகளை எடுத்து வைத்திருக்கும் குடில்களை தள்ளிவிட்டு, அதிலிருந்து ஆட்டு குட்டிகளை தும்பிக்கையால் தாக்கிய போது 3 ஆட்டு குட்டிகள் பலியானது.
இதை அடுத்து அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் பலியான ஆட்டுக்குட்டிகள் மற்றும் சேதம் அடைந்த விளை பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஏற்கனவே 3 மாதத்திற்கு முன் முதியவரை தாக்கியதில் அவருக்கு கை உடைந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இப்பகுதிக்கு படை யெடுக்கும் யானைகளை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டி அடிக்கும்படி அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- சத்தியமங்கலம் அருகே ஆட்டுக்கொட்டகையில் இருந்து விவசாய தோட்டம் வழியாக ஆட்டுக்குட்டியை சிறுத்தை இழுத்து சென்றதற்கான அடையாளம் காணப்பட்டது.
- மேலும் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கவும் அவர்கள் பரிந்துரை செ ய்தனர்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அருகே உள்ள ஓட்டக்குட்டை பகுதியை சேர்ந்தவர் சுமதி. இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். மேலும் ஆடு வளர்த்து வருகிறார்.
நேற்று மாலை ஓட்டக்குட்டை பகுதியில் மழை பெய்து கொண்டு இருந்தது. அப்போது மரத்தில் கட்டப்பட்ட ஒரு ஆட்டுக்குட்டியை சுமதி அருகில் உள்ள ஒரு தொழுவத்தில் கட்டியிருந்தார்.
சிறிது நேரம் கழித்து அவர் மீண்டும் சென்ற போது தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த ஆட்டை காணவில்லை. அப்போது ஆட்டுக்கொட்டகையில் இருந்து விவசாய தோட்டம் வழியாக ஆட்டுக்குட்டியை சிறுத்தை இழுத்து சென்றதற்கான அடையாளம் காணப்பட்டது.
எனவே சிறுத்தை தான் ஆட்டுக் குட்டியை உயிரோடு இழுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து சுமதி வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து கால் தடயங்களை பார்த்த போது அது சிறுத்தையின் கால் தடம் தான் என்று உறுதிசெய்தனர்.
மேலும் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கவும் அவர்கள் பரிந்துரை செ ய்தனர். எனவே விரைவில் கூண்டு வைக்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்