search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Land bridges"

    • எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • 2 பெரிய பாலங்களும், 5 சிறிய பாலங்களும் கட்டப்படுகிறது

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்று ரூபாய் 8.49 கோடி மதிப்பீட்டில் 7 தரைப் பாலங்கள் அமைப்பதற்கான பணியை எம்எல்ஏ க.தேவராஜி நேற்று துவக்கி வைத்தார்.

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் இருந்து புத்துக்கோயில் செல்ல தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    பெரிய கம்மியம் பட்டு, காவேரிபட்டு, சின்னக்கம்மியம் பட்டு, பெரிய மோட்டூர், கூத்தாண்ட குப்பம், கேத்தாண்டப்பட்டி, புத்துக்கோயில் ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்கள் சென்று வர இந்த பிரதான சாலை மட்டுமே உள்ளது.

    இந்த சாலையில் நடுவில் ஆங்காங்கே பாலாற்றுக்கு மழைநீர் செல்லும் கால்வாய் உள்ளது. மழைக்காலங்களில் கால்வாய்களில் அதிகளவு தண்ணீர் தேங்குவதால் மக்களின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கிறது.

    இது குறித்து பொதுமக்கள், கால்வாயை கடந்த செல்ல பாலம் கட்டி தர வேண்டும் என ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ. தேவராஜியிடம் கோரிக்கை விடுத்தனர்.

    அதன்படி கால்வாய்களை கடந்து செல்ல 2 பெரிய பாலங்களும், 5 சிறிய பாலங்களும் கட்ட ரூ.8.49 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று பாலம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

    நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி தலைமை தாங்கினார்.

    உதவி கோட்ட பொறியாளர் மணி சுந்தரம் முன்னிலை வகித்தார். சாலை ஆய்வாளர் வெங்கடேசன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.தேவராஜி கலந்து கொண்டு தரைப் பாலங்கள் கட்ட அடிக்கல் நாட்டினார்.

    • மழைநீர் தேங்குவதை தடுக்க மாற்று வழிமுறை
    • வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே கட்டேரி ஊராட்சியில் லாரி த ஷெட்பகுதியில் ஒரு தரைப்பாலமும், பக்கிரிதக்கா பகுதியில் க ஒரு தரைப்பாலமும் உள்ளது. கட்டேரி, அம்மையப்பன் நகர், திரியாலம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் இந்த 2 ரெயில்வே தரைப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    மழைக்காலங்களில் இந்த 2 தரைப்பாலங்களிலும் குளம் போல் மழைநீர் தேங்கி விடுவதால் வாகன ஓட்டிகள், பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சுமார் 3 கிலோ தூரம் சுற்றி செல்லும் அவல நிலை உள்ளது.இதனால் மீட்டர் இங்குள்ள பொதுமக்கள் இந்த பகுதியில் ரெயில்வே மேம்பா லம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்ற னர். சுதந்திரதின விழாவிற்கு முன்பு அப்பகுதி மக்கள் தங்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காததால் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம். எல்.ஏ.க்கள் தேவராஜி, நல்லதம்பி மற்றும் அதிகாரிகள் நேற்று தரைப்பாலங்களை ஆய்வு செய்தனர். அப்போது ரெயில்வே மண்டல முதுநிலை பொறியாளர் மயிலேரி, உதவி மண்டல பொறியாளர் விகாஸ் யாதவ் ஆகியோரிடம், பணிகள் மேற் கொள்வதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து உடனடியாக ரெயில்வே வாரியத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

    தொடர்ந்து கேத்தாண்டப்பட்டி ரெயில்வே தரைப்பாலம், சிகரலப்பள்ளி ரெயில்வே சுரங்க பாதை ஆகியவற்றையும் ஆய்வு மேற்கொண்டு பாலங்களில் மழைநீர் தேங்குவதை 'தடுக்க மாற்று வழிமுறைகள் குறித்து ரெயில்வே அதிகாரிக ளிடம் ஆலோசனை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க தெரிவித்தார்.

    ஆய்வின்போது மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என். -கே.ஆர்.சூர்யகுமார், மாவட்டகவுன்சிலரும், கிழக்கு ஒன்றிய செயலாளருமான சி.கவிதா தண்டபாணி, மாவட்ட கவுன் சிலர் ஜெ.சிந்துஜா ஜெகன், மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே.சதீஷ்குமார், ஜோலார்பேட்டை நகர செயலாளர்.ம.அன் பழகன், ஒன்றிய கவுன்சிலர் ஆ.கலா ஆஞ்சி, நகர மன்ற தலைவர் காவியா விக்டர், நகராட்சி ஆணையாளர் பழனி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    ×