search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Language War"

    • தமிழை புறக்கணித்து இந்தியை பாஜக திணிக்கிறது.
    • நீட் தேர்வை தமிழகத்திற்குள் நுழையவிட்டவர் எடப்பாடி பழனிசாமி.

    சென்னை அமைந்தகரையில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    மொழிப்போர் தியாகிகள் நாளான இன்று, திருச்சியில் கருணாநிதிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் சிலை திறந்துள்ளார்.

    மொழிக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கத்தை செலுத்துகிறேன். மொழிப்போர் களத்தில் தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் முன்நின்றனர்.

    தமிழுக்காக உயிர் நீத்தவர்கள் தான் மொழிப்போர் தியாகிகள்.

    இந்தி திணிப்பை எதிர்த்து 12 வயதில் களத்தில் நின்றவர் கருணாநிதி. உலகில் வேறெங்கும் மொழிக்காக இப்படி ஒரு போராட்டம் நடைபெற்றது இல்லை.

    மொழிப் போராட்டத்திற்கு பிறகு தான் திமுக ஆட்சிக்கு வந்தது. மொழியின் பழம்பெருமையை பேசுவது மட்டுமே மொழிப்பற்று அல்ல.

    மொழியை கல்வியறிவின் வாயிலாக வளர்த்தோம், அதனால் தான் கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.

    தமிழை புறக்கணித்து இந்தியை பாஜக திணிக்கிறது. இந்தி பேசும் மக்களை ஏமாற்றவே, பாஜக இந்தி மொழியை கையில் எடுத்துள்ளது.

    கொரோனாவை விட கொடியவர்கள் பாஜக அரசு. பாஜகவின் தோல்வி பட்டியில் மிக நீளமானது.

    பாஜக ஆட்சியில் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை பெரிதும் உயர்ந்துள்ளது. பாஜகவுக்கு நேற்று வரை ஆமாம் சாமி போட்டவர் எடப்பாடி பழனிசாமி.

    நீட் தேர்வை தமிழகத்திற்குள் நுழையவிட்டவர் எடப்பாடி பழனிசாமி. இந்தியா கூட்டணி ஆட்சி, உண்மையான கூட்டாட்சியாக அமையும்.

    ராமர் கோவிலை காண்பித்து வடமாநில மக்களை திசை திருப்பி வருகிறது பாஜக. ஆனால், இந்த முறை வடமாநிலங்களிலும் பாஜக தோல்வியை சந்திக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சங்கரன்கோவிலில் மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் 25-ந் தேதி சங்கரன்கோவில் முப்புடாதி அம்மன் கோவில் முன்பு உள்ள கலைஞர் திடலில் வைத்து நடைபெறுகிறது.
    • இதில் டாக்டர் கனிமொழி, சோமு எம்.பி. மற்றும் தூத்துக்குடி இருதயராஜ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவிலில் வருகிற 25-ந் தமிழ் மொழிக்காக அரும்பாடுபட்ட மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கைளில் கூறியிருப்பதாவது, முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க சங்கரன்கோவிலில் மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் 25-ந் தேதி சங்கரன்கோவில் முப்புடாதி அம்மன் கோவில் முன்பு உள்ள கலைஞர் திடலில் வைத்து நடைபெறுகிறது. இதில் டாக்டர் கனிமொழி, சோமு எம்.பி. மற்றும் தூத்துக்குடி இருதயராஜ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர். இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகள் தியாகத்தை போற்றுவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.


    ×