என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lawrence Bishnoi"

    • ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் படத்தில் சல்மான் கான் நடித்து வருகிறார்.
    • சிக்கந்தர் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்று வருகிறது.

    பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் கேங்கை சேர்ந்தவர்கள் சமீபத்தில் அடுத்தடுத்து கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் அவருடைய பாதுகாப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.

    ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான்- ராஷ்மிகா மந்தனா நடிக்கும் சிக்கந்தர் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த ஓட்டலில் சல்மானுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சிக்கந்தர் திரைப்பதில் இடம்பெற்றுள்ள 'மைன் சிக்கந்தர் ஹூன்' பாடலில் சல்மான் கான் மற்றும் கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் தொடர்பான வரிகள் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

    இந்நிலையில், சிக்கந்தர் படத்தின் 'மைன் சிக்கந்தர் ஹூன்' பாடலை எழுதிய பாடலாசிரியருக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் விடுத்துள்ளது.

    இந்தப் பாடலை எழுதியவர் யாராக இருந்தாலும், அவரை உயிருடன் விடமாட்டோம். இந்தப் பாடலை எழுதியவரின் வாழ்க்கையை அடுத்த ஒரு மாதத்தில் முடித்துவிடுவோம் என்று மும்பை போலீசாருக்கு மிரட்டல் வந்துள்ளது.

    இந்த கொலை மிரட்டல் தொடர்பான மெசேஜ் மும்பை போக்குவரத்து போலீசாரின் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்பட்டது.

    அந்த கொலை மிரட்டல் மெசேஜில், சல்மான் கானுக்கு தைரியம் இருந்தால், அந்த பாடலாசிரியரை காப்பாற்ற வேண்டும் என்று சல்மான் கானுக்கு நேரடியாக சவால் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த கொலை மிரட்டல் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ராய்ச்சூர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் நாராயண் என்பவரது நம்பர் என்று தெரிய வந்தது
    • சல்மான் கானுக்கும் தனுக்கு தானேயும் இவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

    பாலிவுட் நடிகர் சல்மான் கானிடம் ரூ. 5 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததோடு மட்டுமல்லாமல் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடிக்கும் 'சிக்கந்தர்' படத்தில் பாடல் எழுதிய, 'மெயின் சிக்கந்தர் ஹூன்' பாடலின் பாடலாசிரியருக்கும் மிரட்டல் வந்தது. மேலும், கடந்த சில வாரங்களாக, மும்பை போக்குவரத்து காவல்துறையின் ஹெல்ப்லைனுக்கு பல மிரட்டல் செய்திகள் வந்துள்ளன.

     

    அந்த நம்பரை டிரேஸ் அவுட் செய்த போலீசார் அது கர்நாடகாவில் உள்ள ராய்ச்சூர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் நாராயண் என்பவரது நம்பர் என்று தெரிய வந்தது. ஆனால் அவரது போனில் இன்டர்நெட் வசதி இல்லை என்று தெரியவந்தது. அவரை விசாரித்ததில் மார்க்கெட்டில் வைத்து ஒருவருக்கு தனது போனை பயன்படுத்தக் கொடுத்தேன் என்று தெரிவித்தார். அவரது போனில் ஒடிபி ஒன்றும் கண்டறியப்பட்டது.

    விசாரித்ததில் சோஹைல் பாஷா என்ற நபர் அந்த நபரின் போனை வாங்கி அதில் ஓடிபி நம்பர் பெற்று அந்த நம்பர் மூலம் தனது போனில் வாட்சப் செயலி பதிவிறக்கம் செய்து இந்த மிரட்டலை விடுத்ததாக கண்டறியப்பட்டது. டிவிஸ்ட் என்னவென்றால் இந்த சோஹைல் பாஷாதான் 'மெயின் சிக்கந்தர் ஹூன்' பாடலின் பாடலாசிரியர் என்றும் என்றும் தனது பாடல் பிரபலமடைய வேண்டும் என்று விரும்பி சல்மான் கானுக்கும் தனுக்கு தானேயும் இவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

     

    லாரன்ஸ் பிஷ்ணோய் கும்பலிடம் இருந்த்து தொடர் மிரட்டல் வந்துகொண்டிருப்பதால் இதையும் அந்த கும்பலே விடுத்திருக்கும் என்று நம்பிவிடுவார்கள் என சோஹைல் நினைந்துள்ளார். ஆனால் தற்போது குட்டு வெளிப்பட்ட நிலையில் ராய்ச்சூரில் வைத்து அவரை கைது செய்த போலீஸ் மேற்கொண்டு விசாரணை நடந்த மும்பைக்கு அழைத்துச் சென்றது.

    லாரன்ஸ் பிஷனோய் - சாலமன் கான் பகை 

     சல்மான் கான் கடந்த 1998 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் சினிமா ஷூட்டிங்கின்போது கரும்புள்ளி [blackbuck] மான்களை வேட்டையாடிய வழக்கில் சிக்கினார். பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் பகுதிகளில் அதிகம் வாழும் பிஷ்னோய் சமூகத்தினர் பிளாக்பக் மான்களை புனித விலங்காக கருதுவதால் சல்மான் கான் அவற்றை வேட்டையாடியது அவர்களின் நம்பிக்கையை புண்படுத்துவதாக அமைந்தது.

    இந்நிலையில் இதற்காக லாரான்ஸ் பிஷ்னோய் என்ற பிரபல ரவுடியின் கும்பல் சல்மான் கானுக்கு தொடர் கொலை மிரட்டல் விடுத்து வந்தது. அவரது வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது உள்ளிட்ட செயல்களில் இறங்கிய அந்த கும்பல் சல்மானுக்கு நெருக்கமாக இருந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக்கை கடந்த அக்டோபர் மாதம் மும்பையில் வைத்து சுட்டுக்கொலை செய்தது.

    மேலும் சல்மான் கானுக்கு உதவி செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கும் அதே கதிதான் என மிரட்டல் விடுத்தது.எனவே சல்மான் கானுக்கு Y கேட்டகிரி பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி சல்மான் கானுக்கு புதிய கொலை மிரட்டல் ஒன்று வாட்ஸ் அப் செயலி மூலம் வந்தது. 

    • அன்மோல் பிஷ்னோய் தேடப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    • சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து இருந்தது.

    பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வைத்து கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாடகர் சித்து மூஸ்வாலா கொலை மற்றும் இந்த ஆண்டு சல்மான் கான் வீட்டிற்கு வெளியே நடந்த துப்பாக்கி சூடு உள்பட பல வழக்குகள் தொடர்பாக அன்மோல் பிஷ்னோய் தேடப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுதவிர கடந்த மாதம் மகாராஷிடிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொல்லப்பட்ட வழக்கில் பிஷ்னோய் தேடப்பட்டு வந்தார். கைது செய்யப்பட்டதாக கூறப்படும் அன்மோல் பிஷ்னோய் காவலில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    முன்னதாக இம்மாத தொடக்கத்தில், மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவு அவரை அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தும் பணியைத் தொடங்கியது. அவரை கைது செய்ய மகாராஷ்டிரா சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து இருந்தது.

    உலகளாவிய சட்ட அமலாக்க நிறுவனமான இன்டர்போல் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. முன்னதாக அன்மோல் பிஷ்னோய் கனடாவில் இருப்பதாக நம்பப்பட்டது.

    இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பான தேசிய புலனாய்வு அமைப்பு, கடந்த மாதம் அன்மோல் பிஷ்னோயை மிகவும் தேடப்படும் பட்டியலில் சேர்த்தது. அவரை கைது செய்ய உதவுபவர்களுக்கு ரூ. 10 லட்சம் பரிசும் அறிவிக்கப்பட்டது.

    • அன்மோல் குறித்து தகவல் தெரிவித்தால் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என என்.ஐ.ஏ. தெரிவித்திருந்தது.
    • 2022-ம் ஆண்டு அன்மோல் உள்பட 9 பேர் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

    மகாராஷ்டிரா மாநிலம் பந்த்ரா பகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவரும், முன்னாள் மாநில மந்திரியுமான பாபா சித்திக் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலையின் பின்னணியில் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் ஈடுபட்டதாக போலீசார் அவரை தேடிவந்தனர்.

    அவர் கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு அடிக்கடி சென்று வந்தது தெரியவந்தது. அமெரிக்கா அவரை கைது செய்ததாக தகவல் வெளியானது. என்.ஐ.ஏ. அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது.

    ஆனால் அமெரிக்கா அவரை கைது செய்ததை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில் அன்மோல் கைது செய்யப்பட்டு அயோவா மாகாணத்தில் உள்ள பொட்டாவட்டமி கவுன்ட்டியில் (Pottawattamie County) உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டதை தவிர மற்ற விரிவான தகவல்கள் ஏதும் உடனடியாக வெளியாகவில்லை.

    பாலிவுட் நடிகர் வீட்டிற்கு அருகில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அன்மோல் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    அன்மோல் குறித்து தகவல் தெரிவித்தால் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என என்.ஐ.ஏ. தெரிவித்திருந்தது.

    வாரத் தொடக்கத்தில் அன்மோலை நாடு கடுத்துவது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை எந்த தகவலையும் வெளியிட மறுத்தது. இது உள்நாட்டு பாதுகாப்புத்துறை மற்றும் எஃப்.பி.ஐ. அதிகார வரம்பிற்கு உட்பட்டது எனத் தெரிவித்தது.

    இவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத செயல்களுக்கு ஆட்கள் சேர்த்தல், நிதி சேர்த்தல் தொடர்பாக 2022-ம் ஆண்டு அன்மோல் உள்பட 9 பேர் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

    • மும்பையில் சல்மான் கான் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
    • போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மும்பை பாந்திராவில் உள்ள நடிகர் சல்மான்கான் வீட்டின் மீது பஞ்சாப் தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். கடந்த மாதம் சல்மான்கானுக்கு நெருக்கமானவராக கருதப்படும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பாபா சித்திக் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவங்களை தொடர்ந்து பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கேங்ஸ்டார் லாரன்ஸ் பிஷ்னோய் கேங்கை சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் அவருடைய பாதுகாப்பு அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், சல்மான் கான் படப்பிடிப்பில் சட்டவிரோதமாக நுழைந்த நபர் ஒருவர் கேங்க்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு கால் செய்ய வேண்டுமா? என்று தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மும்பையில் உள்ள சிவாஜி பார்க் பகுதியில் சல்மான் கான் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அப்பகுதிக்குள் சந்தேகத்திற்குரிய வகையில் ஒருவர் நடமாடி கொண்டிருந்தார். இதனையடுத்து சிலர் அவரிடம் இங்கே என்ன செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் கேங்க்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு கால் செய்ய வேண்டுமா? என்று பதில் அளித்துள்ளார்.

    உடனடியாக இது தொடர்பாக போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த நபரை சிவாஜி பார்க் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஹெல்மெட்டில், இரண்டு கொம்புகளைக் காண்கிறோம், அவை பிளாக் பக் வகை மான்களுடைய கொம்புகளை ஒத்திருக்கும்.
    • எனது உயிரை எடுக்க பலர் முயற்சிப்பதாக நான் கேள்விப்பட்டேன்

    பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் சிக்கந்தர் என்ற இந்தி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித்நதியத்வாலா தயாரிக்கிறார்.

    படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். திரைப்படம் அடுத்தாண்டு ரம்ஜான் பண்டிகையை ஒட்டி வெளியாகவுள்ளது.

    இந்நிலையில் சல்மான் கான் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டீசரை கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி படக்குழு வெளியிட்டது. இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் தற்போது அதில் பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய்-ஐ சீண்டும் விதமாக சல்மான் கான் டீசரின் காட்சிகளும், வசனமும் இடம்பெற்றுள்ளது பேசுபொருளாகி உள்ளது.

    டீசரில், கவசம் மற்றும் ஹெல்மெட் அணிந்த கொலையாளிகள் நிறைந்த அறைக்குள் சல்மான் கான் நுழைவதைப் பார்க்கிறோம்.

     

    அவர்களின் ஹெல்மெட்டில், இரண்டு கொம்புகளைக் காண்கிறோம், அவை பிளாக் பக் வகை மான்களுடைய கொம்புகளை ஒத்திருக்கும். இது சல்மானை சிக்கலில் சிக்க வைத்த புகழ்பெற்ற பிளாக்பக் மான் வேட்டை வழக்கை குறிப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். டீசரில் 00:38க்கு நிறுத்திப் பார்த்தால், ஹெல்மெட் அணிந்திருக்கும் கதாபாத்திரத்தை சல்மான் கான் சுட்டு வீழ்த்துகிறார்.

    டீசரில், சல்மான் கான், " சுனா ஹை போஹோட் லாக் மேரே பீச்சே படே ஹைன், பாஸ் மேரே பீச்சே முட்னே கி டெர் ஹை (எனது உயிரை எடுக்கும் முயற்சியில் பலர் என்னை பின்தொடர்கிறார்கள் என நான் கேள்விப்பட்டேன், நான் திரும்பி நிற்கும் [அடிக்கும்] வரை காத்திருங்கள் என்று ஒரு டயலாக்கையும் கூறியுள்ளார். இது நேரடியாக லாரன்ஸ் பிஷ்னோய் -ஐ தாக்குவதாக உள்ளது என சல்மான் ரசிகர்கள் ஃ பயர் விட்டு வருகிறார்கள்.

     

    சல்மான் கான் கடந்த 1998 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் சினிமா ஷூட்டிங்கின்போது கரும்புள்ளி [blackbuck] மான்களை வேட்டையாடிய வழக்கில் சிக்கினார்.

    பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் பகுதிகளில் அதிகம் வாழும் பிஷ்னோய் சமூகத்தினர் பிளாக்பக் மான்களை புனித விலங்காக கருதுவதால் சல்மான் கான் அவற்றை வேட்டையாடியது அவர்களின் நம்பிக்கையை புண்படுத்துவதாக அமைந்தது.

    இந்நிலையில் இதற்காக லாரான்ஸ் பிஷ்னோய் என்ற பிரபல ரவுடியின் கும்பல் சல்மான் கானுக்கு தொடர் கொலை மிரட்டல் விடுத்து வந்தது.

    அவரது வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது உள்ளிட்ட செயல்களில் இறங்கிய அந்த கும்பல் சல்மானுக்கு நெருக்கமாக இருந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக்கை கடந்த அக்டோபர் மாதம் மும்பையில் வைத்து சுட்டுக்கொலை செய்தது. இதனைத்தொடர்ந்து சல்மானுக்கு Y கேட்டகிரி பாதுகாப்பு வழங்கப்பட்டது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளி விக்ரம் பரத், மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளார்.
    • பிஷ்னாய் கும்பல் விளம்பர ஸ்டண்ட்டிற்காகவே மிரட்டல் விடுத்துள்ளனர்.

    மும்பை:

    பிரபல இந்தி நடிகர் சல்மான்கானின் தந்தை சலீம்கானுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தில் நடிகர் சல்மான்கான், சலீம்கானுக்கும், சமீபத்தில் சுட்டு கொல்லப்பட்ட பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவின் கதி விரைவில் ஏற்படும் என கூறப்பட்டு இருந்தது.

    அந்த கடிதத்தில் ஜி.பி., எல்.பி. என குறிப்பிடப்பட்டு இருந்தது. இது பஞ்சாப்பை சேர்ந்த தாதா லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி கோல்டி பிராரை குறிப்பதாக கருதப்பட்டது. இதையடுத்து சல்மான் கான் வீட்டை சுற்றி போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    இந்த கடிதம் தொடர்பாக மும்பை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் மிரட்டல் கடிதம் கொடுக்க 3 பேர் மும்பைக்கு வந்ததாகவும், அவர்கள் மும்பை குற்றப்பிரிவு அதிகாரிகளால் ஆறு மணி நேரம் விசாரிக்கப்பட்ட சௌரப் மகாகலை சந்தித்தனர் என்றும் மும்பை போலீசார் தெரிவித்தனர்.

    மிரட்டல் கடிதம் கொடுத்த நபரையும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். சல்மான் கானுக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியது விக்ரம் பரத் என்பது தெரிய வந்துள்ளது. லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளியான பரத், தற்போது கனடாவில் வசித்து வருகிறார். இவர் மீது இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. பிஷ்னாய் கும்பல் விளம்பர ஸ்டண்ட்டிற்காகவே மிரட்டல் விடுத்துள்ளதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது

    ×