என் மலர்
நீங்கள் தேடியது "layoffs"
- வேலைகளை தானாக முன்வந்து விட்டுச் செல்வதற்கான சலுகைகளை ஏற்று 75,000 அரசு ஊழியர்கள் வெளியேற சம்மதித்துள்ளனர்.
- அதிக பணம் வீண் விரயம் மற்றும் மோசடியால் விரயம் ஆவதாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
அமெரிக்க அரசு நிறுவனங்களில் 10,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்க அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற டொனால்டு டிரம்ப் அரசின் செயல்துறை அதிகரிக்க DODGE துறையை உருவாக்கினார். இதற்கு டிரம்ப்பின் கோடீஸ்வர ஆதரவாளர் எலான் மஸ்க் தலைமை வகிக்கிறார்.
அரசின் தேவையற்ற செலவுகளை டிரம்புக்கு சுட்டிக்காட்டும் வேலையை DODGE செய்து வருகிறது. பின்தங்கிய நாடுகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் USAID அமைப்புக்கு வழங்கி வந்த நிதியை எலான் மஸ்க் ஆலோசனையின் பேரில் அதிரடியாக முடக்கினார் டிரம்ப்.
இந்த நிலையில்தான் பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள ஊழியர்களை எலான் மஸ்க் ஆலோசனையின் பேரில் டிரம்ப் பணிநீக்கம் செய்துள்ளார்.

அந்த வகையில் உள்துறை, எரிசக்தி, படைவீரர் விவகாரங்கள், வேளாண்மை, சுகாதாரம் மற்றும் மனிதவளத் துறைகளில் உள்ள ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசிடம் அதிகப்படியான ஊழியர்கள் இருப்பதாகவும், அதிக பணம் வீண் விரயம் மற்றும் மோசடியால் விரயம் ஆவதாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இதுவரை, வேலைக்கு சேர்ந்து முதல் ஆண்டு Probation காலத்தில் உள்ள ஊழியர்கள் இந்த பணிநீக்கத்துக்கு இலக்காகி உள்ளனர். சுமார் 10,000 ஊழியர்களுக்கு ஏற்கனவே பணிநீக்கத்துக்கான உத்தரவு துறை ரீதியாக அனுப்பப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் நோய்த் தடுப்பு மையங்களில் உள்ள Probation ஊழியர்களில் பாதி பேர் மற்றும் தேசிய சுகாதார நிறுவனங்களில் உள்ள ஊழியர்கள் கட்டாயமாக வெளியேற்றப்படுகிறார்கள் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிசக்தித் துறையில் சுமார் 1,200 முதல் 2,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகத்தின் 325 ஊழியர்களும் அடங்குவர்.
அமெரிக்க வனத்துறை சமீபத்தில் பணியமர்த்தப்பட்ட சுமார் 3,400 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது. அதே நேரத்தில் தேசிய பூங்காக்கள் சேவை நிறுவனம், சுமார் 1,000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்கிறது.

வரிகளை வசூலிக்கும் உள்நாட்டு வருவாய் சேவை நிறுவனம், அடுத்த வாரம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தயாராகி வருகிறது. பருவகால தீயணைப்பு வீரர்களை பணியமர்த்துவதையும், காடுகளில் இருந்து காய்ந்த மரம் போன்ற தீபற்றும் ஆபத்து கொண்டவற்றை அகற்றும் திட்டங்கள் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் வேலைகளை தானாக முன்வந்து விட்டுச் செல்வதற்கான சலுகைகளை டிரம்ப் மற்றும் மஸ்க் அறிவித்த நிலையில் அதை ஏற்றுக்கொண்டு வெளியேற 75,000 அரசு ஊழியர்கள் சம்மதித்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதற்கிடையே பணிநீக்கத்துக்கு எதிராக பல்வேறு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- அதிபர் டிரம்ப் அமைப்பின் பணிகளை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
- வாஷிங்டன் நீதிமன்றம், நிதியுதவி நிறுத்தும் உத்தரவுக்கு தடை விதித்தது.
அமெரிக்காவை சேர்ந்த USAID அமைப்பு உலகளவில் மனிதாபிமான அடிப்படையிலான பணிகளுக்கும், வளர்ச்சிப் பணிகளுக்கும் உதவி செய்து வருகிறது. இதற்கான நிதி முழுவதும் அமெரிக்க அரசால் வழங்கப்படுகிறது.
இதற்கிடையே தொண்டு நிறுவனமான USAID அமைப்பு தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறிய அதிபர் டிரம்ப் அமைப்பின் பணிகளை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து ஊழியர்கள் சங்கத்தினர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த வாஷிங்டன் நீதிமன்றம், நிதியுதவி நிறுத்தும் உத்தரவுக்கு தடை விதித்தது. பின்னர் இந்த தடையை வாஷிங்டன் தலைமை நீதிபதி கார்ல் நிகோலஸ் நீக்கி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் உலகளவில் USAID அமைப்பை சேர்ந்த சுமார் 1600 பணியாளர்களை அதிபர் டிரம்ப் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். சில ஊழியர்களை தவிர மற்ற அனைவரையும் விடுப்பில் அனுப்புவதாகவும் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- 2012-ம் ஆண்டு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க இயலாத நிலை ஏற்பட்டது.
- 2004 முதல் பணியில் அமர்த்தப்பட்ட 5,500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம், நிர்வாக சீர்கேட்டால் 2012-ம் ஆண்டு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க இயலாத நிலை ஏற்பட்டது. எனவே 2013-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ெஜயலலிதா பல்கலைக்கழகத்தை அரசின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தார். இதற்காக மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவதாஸ் மீனாவை நிர்வாக அதிகாரியாக நியமித்தார்.
நிதி சிக்கலில் இருந்து மீட்கும் வகையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு அரசுக்கு அவர் பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் மிகை பணியாளர்களாக பணியாற்றிய 1,200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 3,200க்கும் மேற்பட்ட ஆசிரியர் அல்லாத ஊழிய ர்களை தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு இடமாற்றம் செய்து அயல் பணிக்கு அனுப்பினர்.கடந்த 2010-ம் ஆண்டு தனியார் நிர்வாகத்தில் பல்கலை கழகம் இருந்த போது 206 பேர் அலுவ லக உதவியாளர் முதல், தோட்ட பணியாளர் வரை மாதம் 1,500 முதல் 5,000 ரூபாய் வரை சம்பளத்தில் தொகுப்பூதிய அடிப்ப டையில் தற்காலிக பணியில் சேர்க்கப்பட்டனர்.
ஆட்சி மன்ற குழு பரிந்து ரையின்படி 2 ஆண்டு களில் பணி நிரந்தரம் செய்ய ப்பட்டு காலமுறை ஊதியம் கிடைக்கும் என்ற நம்பி க்கை, அன்றைய நிர்வாகம் ஏற்படுத்தியிருந்தது. ஆனால், எதிர்பாராத வகையில், 2012ம் ஆண்டு ஏற்பட்ட நிதி சிக்கலில் பல்கலை அரசு ஏற்றதால், தொகுப்பூதியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாமல் போனது. கடந்த 12 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றினாலும், பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்ற நம்பிக்கையோடு பணியாற்றி வந்தனர். பணி நிரந்தரம் கோரிக்கையை கடந்த ஆட்சியில் இருந்தே வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் கடந்த மாதம் நடைபெற்ற ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் இந்த மாதத்தோடு, இவர்களுக்கு வேலை இல்லை என எடுத்த ரகசிய முடிவு, ஊழியர்க ளுக்கு வாய்மொழியாக கூறப்பட்டுள்ளது. இதனால் பல்கலை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு ள்ளது. ஊழியர்கள் போரா ட்டத்தில் இறங்க உள்ளனர். குறிப் பாக 10 ஆண்டுக்கு பின் அனைத்து ஊழியர் சங்கங்களும் கூட்டாக இணைந்து மீண்டும் 'ஜாக்' கூட்டமைப்பை உருவாக்கி தொடர்ச்சியாக போராட்ட ங்கள் நடத்த முடிவு செய்து ள்ளனர். இதுகுறித்து பாதிக்க ப்பட்ட தொகுப்பூயர்களில் ஒருவர் முத்துலிங்கம் கூறியதாவது:-
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தொகுப்பூதிய ஊழியர்களாக 206 பேர் 2010-ல் தி.மு.க., ஆட்சியின் போது பணியில் சேர்ந்தோம். இரண்டு ஆண்டுகளில் பணி நிரந்தரம் என்ற அடிப்படையில் பணியில் சேர்ந்தோம். கடந்த 2004 முதல் பணியில் அமர்த்தப்பட்ட 5,500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்; நாங்களும் நிரந்தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 2013ல் அ.தி.மு.க., அரசு அரசுடமை யாக்கிய பின், பல்கலைக் கழகம் நிர்வாகம், நிதி நெருக்கடிகளை காரணம் காட்டி, பணி நிரந்தரத்தை நிறுத்தி வைத்தது. ஆனால் இதுவரை எங்களை, பணி நிரந்தரம் செய்யவில்லை. நாங்கள் பணியில் சேரும் போதும் தி.மு.க., ஆட்சி தான்; தற்போதும் அதே ஆட்சிதான். பணி நிரந்தரம் செய்யாமல் சொற்ப ஊதியமாக கொடுத்து 8 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யாமல் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.