என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Legal Awareness Camp"
- கருப்பகவுண்டன்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது
- மூன்றாம் பாலினத்தவர் குறித்த சட்டம் குறித்து விளக்கி கூறப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் திருப்பூர் கருப்பகவுண்டன்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மூன்றாம் பாலினத்தவர் குறித்த சட்டம் குறித்து விளக்கி கூறப்பட்டது.
கோர்ட்டு வக்கீல்கள் அருணாசலம், திங்களவள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ரியாஷ்கான் ஆகியோர், பெண் குழந்தைகள் நலனுக்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள் குறித்தும், மூன்றாம் பாலினத்தவரை சமுதாயத்தில் வேறுபாடின்றி நடத்த வேண்டும் என்பது குறித்தும், பாதுகாப்புக்காகவும், நலனுக்காகவும் உருவாக்கப்பட்டுள்ள சட்டங்கள் குறித்தும் விரிவாக எடுத்துக்கூறி னார்கள். முடிவில் பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் நந்தகோபால் நன்றி கூறினார். இதில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- குழந்தைகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் பல்லடம் சினேகா சமூகசேவை மைய வளாகத்தில் நடைபெற்றது.
- வளர் இளம் பருவத்தினர்,சமூகசேவை மைய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்லடம்:
பல்லடம் வட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு இணைந்து நடத்திய குழந்தைகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் பல்லடம் சினேகா சமூகசேவை மைய வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர் ராஜசேகரன், பல்லடம் வட்ட சட்டப் பணிகள் குழு வழக்கறிஞர்கள் கோபாலகிருஷ்ணன், தனபாக்கியம், உள்ளிட்டோர் கலந்து கொண்டு குழந்தைகளு க்கான சட்டங்கள் குறித்தும், சமூக வலைதளங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும், அதிலுள்ள நன்மை, தீமைகள் பற்றியும், செல்போனை பயன்படுத்து வதால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் பற்றியும், குழந்தைகள் பாதுகாப்பு கோரி தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் குறித்தும், தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்வது என்பது பற்றியும் குழந்தைகளுக்கு புரியும் வகையில் கதை வடிவில் விளக்கி கூறினார்கள். இதில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினர்,சமூகசேவை மைய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பால மலை ஊராட்சியில் மேட்டூர் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பாக இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- மேட்டூர் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிமன்ற நீதிபதியுமான முத்துராமன் தலைமை வகித்தார்.
மேட்டூர்:
கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பால மலை ஊராட்சியில் மேட்டூர் வட்ட சட்டப்பணி கள் குழு சார்பாக இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மேட்டூர் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிமன்ற நீதிபதியுமான முத்துராமன் தலைமை வகித்தார். மேட்டூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் பத்மபிரியா, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நடுவர் மணிவர்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகா மில் குழந்தை திருமணத்தை தடுப்பது மற்றும் அனைவரும் கல்வி கற்க வேண்டிய அவசியம் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில் 16 பேருக்கு வீட்டு மனை பட்டா, 10 பேருக்கு முதியோர் உத வித்தொகை வழங்கப்பட்டது.
இதில் வருவாய்த்துறை அதி காரிகள் மற்றும் கிராம மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
- சட்ட உதவி தினத்தை ஒட்டி திருப்பூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு, விழுதுகள் தன்னாா்வ அமைப்பு ஆகியன சாா்பில் நடைபெற்றது.
- முகாமில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் சுண்டமேடு பகுதியில் சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
சட்ட உதவி தினத்தை ஒட்டி திருப்பூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு, விழுதுகள் தன்னாா்வ அமைப்பு ஆகியன சாா்பில் சுண்டமேடு பகுதியில் சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. முகாமில் பங்கேற்ற வழக்குரைஞா்கள் அருணாசலம், உதயசூரியன், கண்ணன், நாகராஜன் ஆகியோா் குழந்தைகள், பெண்கள் மற்றும் தொழிலாளா்களுக்கான பாதுகாப்புச் சட்டங்கள் குறித்தும், பொதுமக்களுக்கான அடிப்படை சட்டங்கள் குறித்தும் பேசினா். இறுதியாக விழுதுகள் அமைப்பின் திட்ட இயக்குநா் கோவிந்தராஜ் நன்றி கூறினாா். முகாமில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
- 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கிராமத்திற்கு தற்போது வரை அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
- மிகவும் பின்தங்கிய பகுதியாக இருக்கிறது வெள்ளகவி மலைக்கிராமம். இந்த கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் முதன்முறையாக நடத்தப்ப ட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் மிகவும் பழமையானதும் ஆங்கிலேயர்களால் அறியப்பட்டதாகவும் இருப்பது வெள்ளகவி என்ற மலைக்கிராமம். 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கிராமத்திற்கு தற்போது வரை அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
சாலை வசதி இல்லாத இந்த கிராமத்தில் வாழும் மக்கள் நடைபயணமாகவே 16 கி.மீ. தொலைவில் உள்ள கொடைக்கானலுக்கு வந்து சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். பலமுறை கோரிக்கை வைத்தும் தற்போது வரை மண்சாலை மட்டுமே 3 கி.மீ. தூரத்துக்கு அமைக்க ப்பட்டுள்ளது.
சாலை வசதி இல்லாததால் மிகவும் பின்தங்கிய பகுதியாக இருக்கிறது வெள்ளகவி மலைக்கிராமம். இந்த கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் முதன்முறையாக நடத்தப்ப ட்டது.
கொடைக்கானல் நீதிபதி கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த சட்ட விழிப்புணர்வு முகாமில் அந்த கிராம மக்கள் பங்கேற்று தங்களுடைய கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
மேலும் அவர்களுக்கான உரிமைகளை பெறு வதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். தங்களுடைய அடிப்படைத் தேவைகளை சட்டபூர்வமாக எவ்வாறு கையாள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு சட்ட விழிப்புணர்வுகளை நீதிபதி மற்றும் வக்கீல்கள் பங்கேற்று கிராம மக்களுக்கு விளக்கிக் கூறினர்.
மேலும் கொடைக்கா னலில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ள இக்கிராமத்திற்கு 10 கி.மீ. மலை பாதையின் நடுவே நடந்தே சென்று விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
முதன்முறையாக நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு முகாமிற்கு கிராம மக்கள் வரவேற்பு தெரிவித்தனர். இதே போன்று இன்னும் பின் தங்கி உள்ள கிராமங்களிலும் சட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத்த வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் கோரிக்கை யாக உள்ளது.
- நெல்லை மாவட்ட 1-வது நீதிமன்ற குற்றத்துறை நடுவர் நீதிபதி திரிவேணி தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
- நிகழ்ச்சியில் 200- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கிராம உதயம் கோபாலசமுத்திரம் தலைமை அலுவலகம் சார்பாக கடந்த 23-ந் தேதி தச்சநல்லூர் திருப்பாற்கடல் திருமண மண்டபத்தில் பெண்களுக்கான நலச் சட்டங்கள் மற்றும் பாதுகாப்பு சட்டங்கள் பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சியை நெல்லை மாவட்ட 1-வது நீதிமன்ற குற்றத்துறை நடுவர் நீதிபதி திரிவேணி தலைமை தாங்கி தொடங்கி வைத்து சட்ட விழிப்புணர்வு குறித்து பேசினார் . கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் டாக்டர் புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகித்தார். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் முருகன் வரவேற்று பேசினார். பகுதி பொறுப்பாளர்கள் செந்தில் குமார், பாலசுப்பிரமணியன், ஜெபமணி, மரியமிக்கேல், ஜீவா அருள் முருகன் கோபால், ஆறுமுகத்தாய் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். கிராம உதயம் தன்னார்வ தொண்டர் பிரேமா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் 200- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர்.
- செங்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் செங்கோட்டை தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசமாக முடிப்பது குறித்து சட்ட விழிப்புணா்வு முகாம் நடந்தது.
- வட்ட சட்டப்பணிகள் குழு தன்னார்வ பணியாளா் ஜெயராமசுப்பிரமணியன் வரவேற்றார்.
செங்கோட்டை:
செங்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் செங்கோட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் காசோலை மற்றும் ஜீவனாம்சம் வழக்குகளை தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசமாக முடிப்பது குறித்து சட்ட விழிப்புணா்வு முகாம் நடந்தது.
வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதித்துறை நடுவரும், நீதிமன்ற நீதிபதியுமான சுனில்ராஜா தலைமை தாங்கினார். வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் முத்துக்குமாரசாமி, மூா்த்தி, சங்கரலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனா். வட்ட சட்டப்பணிகள் குழு தன்னார்வ பணியாளா் ஜெயராமசுப்பிரமணியன் வரவேற்றார்.
முகாமில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத காசோலை மற்றும் ஜீவனாம்சம், பாகபிரிவினை வழக்குகள் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசமாக தீர்த்து வைப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் வக்கீல்கள் மாரியப்பன், சக்திவேல், வெங்கடேஷ், நித்யானந்தம், பழனிக்குமார், வீரபாண்டியன், சிவசுந்தரமூர்த்தி, இந்திரா, பாத்திமா கலிலா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
- அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நலச் சட்டங்கள் பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் கோபாலசமுத்திரம் சார்பில் கிராம உதயம் தலைமை அலுவலகம் சார்பாக நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நெல்லை மற்றும் கோபாலசமுத்திரம் சார்பில் கிராம உதயம் தலைமை அலுவலகம் சார்பாக முன்னீர் பள்ளம் சமுதாய நலக்கூடத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நலச் சட்டங்கள் பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டை வழங்குதல் மற்றும் 200 மரக்கன்றுகள் வழங்குதல், நடுதல், பராமரித்தல் மற்றும் 200 துணிப்பைகள் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியை நெல்லை மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதி குமரேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்து சட்ட விழிப்புணர்வு உரை ஆற்றினார். கிராம உதயம் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுந்தரேசன் அவர்கள் முன்னிலை வகித்தார். கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் டாக்டர் புகழேந்தி பகத்சிங் வரவேற்று பேசினார். முத்திரை ஆய்வாளர் விஸ்வநாதன், மங்கள் வித்யா பவுண்டேஷன் நிறுவனர் ராகுல், கிராம உதயம் பகுதி பொறுப்பாளர்கள் முருகன், பாலசுப்பிரமணியன், அருள் முருகன், கோபால் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் பேச்சியம்மாள் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் மற்றும் துணி கைகப்பைகள் வழங்கப்பட்டது.
- நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கிராம உதயம் தலைமை அலுவலகம் ஆகியவை இணைந்து தச்சநல்லூர் அங்கன்வாடி மையத்தில் வறுமை ஒழிப்பு பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தியது.
- நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கிராம உதயம் தலைமை அலுவலகம் ஆகியவை இணைந்து தச்சநல்லூர் அங்கன்வாடி மையத்தில் வறுமை ஒழிப்பு பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியை நெல்லை மாவட்ட மக்கள் கோர்ட்டு நீதிபதி சமீனா தலைமை தாங்கி தொடங்கி வைத்து வறுமை ஒழிப்பு சட்டம் பற்றிய விழிப்புணர்வு உரை ஆற்றினார்.
கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகித்தார். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் செந்தில் குமார் வரவேற்று பேசினார். இதில் கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் முருகன் கருத்துரை வழங்கினார். கிராம உதயம் தன்னார்வ தொண்டர் மாதவி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.
- சான்றிதழ் வழங்குதல் மற்றும் பட்டிமன்றம்நிகழ்ச்சிகளுடன் நிறைவு விழா மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் நடைபெற்றது.
- பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைஒழிப்பு குறித்து சட்டவிழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
திருப்பூர் :
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிபதி தலைமையில்கடந்த 15 நாட்களாக திருப்பூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளில்நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் கோர்ட்டு பெண் பணியாளர்கள், பெண் வக்கீல்களுக்கானபல்வேறு போட்டிகள், சான்றிதழ் வழங்குதல் மற்றும் பட்டிமன்றம்நிகழ்ச்சிகளுடன் நிறைவு விழா மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் நடைபெற்றது.
ஆசிரியர் சிவகாமி வரவேற்றார். குடும்பநல நீதிபதி சுகந்தி சிறப்புரையாற்றினார். முதன்மை மாவட்ட நீதிபதிஸ்வர்ணம் நடராஜன் தலைமை தாங்கி பேசும்போது, சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலமாக மூத்த வக்கீல்கள், சமூக ஆர்வலர்கள்,மனநல மருத்துவர்கள் கொண்ட குழுவுடன் பல்வேறு பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைஒழிப்பு குறித்து சட்டவிழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. திருப்பூர்மாவட்ட நீதிமன்ற பாலின உணர்திறன் குழு மூலம் பெண் நீதிமன்றபணியாளர்கள், பெண் வக்கீல்களுக்கு பாலின சம உரிமை, பாலியல் வன்முறைக்கு எதிரான தற்காப்பு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்மற்றும் பாலியல் துன்புறுத்தல்களை புகார்களாக பெற்று அதற்குரியநடவடிக்கை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
விழாவில் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மா, தலைமைகுற்றவியல் நீதித்துறை நடுவர் புகழேந்தி, சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மேகலா மைதிலி, குற்றவியல் நீதித்துறைநடுவர்கள் பாரதி பிரபா, முருகேசன், கார்த்திகேயன், பழனிக்குமார், பெண் வக்கீல்கள், பெண் கோர்ட்டு ஊழியர்கள் பங்கேற்றனர்.
- நெல்லை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, நெல்லை வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் கோபால சமுத்திரத்தில் உள்ள கிராம உதயம் தலைமை அலுவலகம் ஆகியவை இணைந்து சட்ட தினத்தை முன்னிட்டு இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் சாந்தி நகரில் நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, நெல்லை வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் கோபால சமுத்திரத்தில் உள்ள கிராம உதயம் தலைமை அலுவலகம் ஆகியவை இணைந்து சட்ட தினத்தை முன்னிட்டு இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் சாந்தி நகரில் நடைபெற்றது.
முகாமை மாவட்ட நீதிமன்ற 3-வது கூடுதல் மாவட்ட நீதிபதி பன்னீர் செல்வம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் கூடுதல் சார்பு நீதிபதி இசக்கியப்பன், வழக்கறிஞர் சங்க தலைவர் ராஜேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் சுசிலா வரவேற்று பேசினார். மூத்த வழக்கறிஞர் ஜோதி முருகன், வழக்கறிஞர் சங்க செயலாளர் காமராஜ், கிராம உதயம் வழக்கறிஞர் ஆலோசனை குழு உறுப்பினர் டாக்டர் புகழேந்தி பகத்சிங் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
கிராம உதயம் தன்னார்வ தொண்டர் மாரியம்மாள் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர். கலந்து கொண்ட அனை வருக்கும் அமைப்பு சாரா அடையாள அட்டை மற்றும் துணிப்பைகள் வழங்கப்பட்டது.
- நெல்லையில் மெகா சட்ட விழிப்புணர்வு மற்றும் சட்டபணிகள் முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற உள்ளது.
- முகாமை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான குமரகுரு, மாவட்ட கலெக்டர் விஷ்ணு ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறார்கள்.
நெல்லை:
இந்தியா முழுவதிற்கும் சட்ட விழிப்புணர்வு, சட்ட உதவி மற்றும் அரசு பல நலத்திட்டங்களை அனைத்து தரப்பு மக்களுக்கும் அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று கொண்டு செல்லும் வகையில் தேசிய சட்டபணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்ட பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவிட்டுள்ளது.
நெல்லையில் மெகா சட்ட விழிப்புணர்வு மற்றும் சட்டபணிகள் முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற உள்ளது. முகாமை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான குமரகுரு, மாவட்ட கலெக்டர் விஷ்ணு ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறார்கள்.
முகாமில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு துறைகளான மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, சமூக பாதுகாப்பு திட்டம், வேளாண்மைதுறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை துறை, ஆதி–திராவிட நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சமூகநலத்துறை, வங்கிகள், மகளிர் திட்டம் வழங்கல் துறை, தாட்கோ, போக்குவரத்து துறை, குழந்தைகள் நலத்துறை, தொழிலாளர் நல ஆணையம், மாற்றுத்திறனாளி நலத்துறை, நெல்லை, பாளையங்கோட்டை மற்றும் மானூர் தாசில்தார் அலுவலகம் வட்டார வளர்ச்சித்துறை, அரசு கேபிள் டி.வி., இ-சேவை மையம் ஆகிய துறைகளில் இருந்து நலத்திட்டங்களை வழங்க இருக்கிறார்கள்.
மேலும் பொதுமக்கள் இது சம்பந்தமாக மனுக்கள் கொடுத்து பயன் பெறலாம். இத்தகவலை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான குமரகுரு தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்