என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
400 ஆண்டுகள் பழமையான வெள்ளகவி கிராமத்தில் முதன்முறையாக சட்ட விழிப்புணர்வு முகாம்
- 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கிராமத்திற்கு தற்போது வரை அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
- மிகவும் பின்தங்கிய பகுதியாக இருக்கிறது வெள்ளகவி மலைக்கிராமம். இந்த கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் முதன்முறையாக நடத்தப்ப ட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் மிகவும் பழமையானதும் ஆங்கிலேயர்களால் அறியப்பட்டதாகவும் இருப்பது வெள்ளகவி என்ற மலைக்கிராமம். 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கிராமத்திற்கு தற்போது வரை அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
சாலை வசதி இல்லாத இந்த கிராமத்தில் வாழும் மக்கள் நடைபயணமாகவே 16 கி.மீ. தொலைவில் உள்ள கொடைக்கானலுக்கு வந்து சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். பலமுறை கோரிக்கை வைத்தும் தற்போது வரை மண்சாலை மட்டுமே 3 கி.மீ. தூரத்துக்கு அமைக்க ப்பட்டுள்ளது.
சாலை வசதி இல்லாததால் மிகவும் பின்தங்கிய பகுதியாக இருக்கிறது வெள்ளகவி மலைக்கிராமம். இந்த கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் முதன்முறையாக நடத்தப்ப ட்டது.
கொடைக்கானல் நீதிபதி கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த சட்ட விழிப்புணர்வு முகாமில் அந்த கிராம மக்கள் பங்கேற்று தங்களுடைய கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
மேலும் அவர்களுக்கான உரிமைகளை பெறு வதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். தங்களுடைய அடிப்படைத் தேவைகளை சட்டபூர்வமாக எவ்வாறு கையாள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு சட்ட விழிப்புணர்வுகளை நீதிபதி மற்றும் வக்கீல்கள் பங்கேற்று கிராம மக்களுக்கு விளக்கிக் கூறினர்.
மேலும் கொடைக்கா னலில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ள இக்கிராமத்திற்கு 10 கி.மீ. மலை பாதையின் நடுவே நடந்தே சென்று விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
முதன்முறையாக நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு முகாமிற்கு கிராம மக்கள் வரவேற்பு தெரிவித்தனர். இதே போன்று இன்னும் பின் தங்கி உள்ள கிராமங்களிலும் சட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத்த வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் கோரிக்கை யாக உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்