என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Legal Awarness Camp"
- திருச்செந்தூர் வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் ஆழ்வார்தோப்பு கிராம உதயம் அமைப்பின் சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் ஆறுமுகநேரியில் நடந்தது.
- நிகழ்ச்சியில் கிராம உதயம் சார்பில் 200 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
ஆறுமுகநேரி:
திருச்செந்தூர் வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் ஆழ்வார்தோப்பு கிராம உதயம் அமைப்பின் சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் ஆறுமுகநேரியில் நடந்தது. திருச்செந்தூர் சார்பு நீதிபதியும், வட்ட சட்டப்பணிகள் குழு தலைவருமான வசந்குமார் வழிகாட்டுதலின்படி நடந்த இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக திருச்செந்தூர் குற்றவியல் நீதிமன்ற நீதித்துறை நடுவர் வரதராஜன் கலந்து கொண்டு பேசினார். மேலும் வக்கீல் சங்க தலைவர் ஜேசுராஜ், துணைத்தலைவர் முத்துக்குமார், அரசு வக்கீல் சாத்ராக், மூத்த வக்கீல்கள் எட்வர்ட், முத்துவேல், பிரித்திவிராஜ், கிராம உதயம் மேலாளர் வேல்முருகன் ஆகியோர் பேசினர்.
முகாம் ஏற்பாடுகளை கிராம உதயம் அலுவலர் ஆனந்த், திருச்செந்தூர் சட்ட உதவி மைய நிர்வாக அலுவலர் அருள்மணிராஜ் மற்றும் தன்னார்வலர் ராஜேஷ் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் கிராம உதயம் சார்பில் 200 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
- நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, நெல்லை போக்குவரத்து காவல்துறை மற்றும் கிராம உதயம் தலைமை அலுவலகம் கோபாலசமுத்திரம் இணைந்து நடத்திய போக்கு வரத்து விதி முறைகள் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் தாழையூத்தில் நடை பெற்றது.
- கிராம உதயம் உறுப்பினர்கள் பொதுமக்கள் 200- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, நெல்லை போக்குவரத்து காவல்துறை மற்றும் கிராம உதயம் தலைமை அலுவலகம் கோபாலசமுத்திரம் இணைந்து நடத்திய போக்கு வரத்து விதி முறைகள் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் தாழையூத்தில் நடை பெற்றது.
நிகழ்ச்சியை முதன்மை மாவட்ட நீதிபதி குமரகுரு தலைமை தாங்கி தொடங்கி வைத்து போக்குவரத்து விதிமுறைகள் குறித்த தலைமையுரை ஆற்றி னார். கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வழக்கறிஞர் டாக்டர் புகழேந்தி பகத்சிங் வரவேற்று பேசினார்.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் (பொறுப்பு) கூடுதல் சார்பு நீதிபதி இசக்கியப்பன் மற்றும் நில அபகரிப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நெல்லை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன் சிறப்புரை ஆற்றினார். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுனை முருகன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் செந்தில் குமார் நன்றி கூறினார். கிராம உதயம் உறுப்பினர்கள் பொதுமக்கள் 200- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக முதன்மை மாவட்ட நீதிபதி அவர்களிடம் வழங்கினார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்