search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Libraries"

    அயோத்தியாப்பட்டணத்தில் பராமரிப்பு இல்லாமல் கிடக்கும் அண்ணா மறுமலர்ச்சி நூலகங்கள் இந்த புதிய கட்டிடம் பல ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது.
    அயோத்தியாப்பட்டணம்:

    சேலம் மாவட்டம்  அயோத்தியாப்பட்டணம் அடுத்த மாசிநாயக்கன்பட்டி பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலக கட்டிடம்  உள்ளது. இந்த புதிய கட்டிடம்  பல ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது.

    மேலும் முறையான பராமரிப்பு இல்லாமல் நூலக வளாகத்தில் செடி, கொடி சூழ்ந்துள்ளது. இது இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக செயல்படுகிறது. 

    நூலகம் திறக்கப்படாததால்  இங்கு வைத்துள்ள போட்டி தேர்வுகளுக்கான  புத்தகங்கள், பாட புத்தகங்கள் ஆகியவற்றை அப்பகுதியில் வசிக்கும் பட்டதாரிகள்,  பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பயில முடியவில்லை. 
     
    எனவே நூலகத்தை பராமரித்து மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இது தவிர நூலகத்தில்  போதுமான அலுவலர்கள்  நியமிக்க வேண்டும்.   

    பள்ளி , கல்லூரி விடுமுறை நாட்களில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு செல்போன் வாங்கி  ெகாடுக்காமல் நூலகங்கள் அழைத்து வந்து புத்தகங்களின் சிறப்பை எடுத்துக் கூற வேண்டும் என சமூக ஆர்வலர்கள்  மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    • நூலகங்கள் மேம்பாட்டில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
    • ஐந்தாண்டுகளில் பல அரசுப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு படிப்பறிவு சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளது.

    உடுமலை :

    உடுமலை நகரில் மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பில் மாதிரி நூலகம் ஒன்றும், இரண்டாம் நிலை கிளை நூலகங்கள் இரண்டும் செயல்பட்டு வருகின்றன.உடுமலை, குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களில் 10க்கும் மேற்பட்ட கிளை நூலகங்களும் செயல்பட்டு வருகின்றன.மடத்துக்குளம் தாலுகாவில் மடத்துக்குளத்தில் இரண்டாம் நிலை நூலகமும், கணியூர், கொமரலிங்கம் உட்பட பகுதிகளில் கிளை நூலகங்களும் செயல்பட்டு வருகின்றன.

    இதில் தளி ரோட்டில் இருந்த கிளை நூலகம் மட்டும் மாதிரி நூலகமாக தரம் உயர்த்தப்பட்டது. பிற நூலகங்கள் மேம்பாட்டில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், ஐந்தாண்டுகளில் பல அரசுப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு படிப்பறிவு சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளது.

    இதனால் அரசு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. போட்டித்தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்கள், அரசு நூலகங்களை மட்டுமே நம்பியுள்ளனர்.ஆனால், இரண்டாம் நிலை நூலகங்களில் போதியளவு புத்தகங்கள் இருப்பதில்லை. குடிமைப்பணிகள் தேர்வுக்கு தயாராக தேவையான, கட்டமைப்பு வசதிகள் எந்த நூலகத்திலும் இல்லை. தனியாக இருக்கை வசதி, கூடுதல் புத்தகங்கள், கழிப்பிட வசதியில்லாததால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதனால் கிராமப்புற இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு அதிருப்தியில் உள்ளனர். நூலகங்களை தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படவில்லை.போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்காக நூலகங்களை தரம் உயர்த்த வேண்டும். குடிமைப்பணிகள் தேர்வு பிரிவு அனைத்து கிளை நூலகங்களிலும் துவக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

    • மாலா அமைப்பு செயலாளர் ஜெயபாரதி வரவேற்றார்.
    • மனிதனின் சிந்தனையை வளர்க்கும் நூல் வாசிப்பு இயக்கம் தொடங்கப்பட வேண்டும்.

    திருப்பூர்:

    மெட்ராஸ் லைப்ரரி அசோசியேஷன் (மாலா), நடவு பதிப்பகம், முத்தமிழ் சங்கம் சார்பில் திருப்பூர் மங்கலம் ரோட்டில் உள்ள மக்கள் மாமன்ற நூலகத்தில் பாராட்டு விழா நடந்தது.திருவள்ளுவர், தமிழன்னை சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. மாலா அமைப்பு செயலாளர் ஜெயபாரதி வரவேற்றார். நூலகர் வாசகர் வட்ட தலைவர் புருஷோத்தமன் முன்னிலைவகித்தார். 'மாலா' தலைவர் அனுராதா பேசினார்.எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் பேசுகையில், கல்லூரி மாணவ, மாணவிகளின் திறமையை வெளிப்படுத்தும் வகையில், இணையவழி நூல் அறிமுக நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.மனிதனின் சிந்தனையை வளர்க்கும் நூல் வாசிப்பு இயக்கம் தொடங்கப்பட வேண்டும். நூலகம் என்பது தாய்மடி போன்றது. ஒவ்வொருவரும் தங்கள் பகுதிகளில் உள்ள நூலகங்களில் கட்டாயம் உறுப்பினராக இணைய வேண்டும் என்றார்.

    • வீட்டுக்கு ஒரு விருட்சம்-ஓராண்டில் ஒரு லட்சம் மரங்கள் வளர்க்கும் திட்டத்தை உலக புவி தினத்தன்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
    • 75 அமைப்புகளை சேர்ந்தவர்கள் நூலகங்கள், கோவில்கள், குளக்கரைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 75 மரக்கன்றுகள் நடப்பட்டன.

    தஞ்சாவூர்:

    75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி தஞ்சை மாவட்டத்தில் 75 இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    தஞ்சை மாவட்ட நிர்வாகம், மாவட்ட பசுமைக்குழு, கவின்மிகு தஞ்சை இயக்கம், தன்னார்வ மற்றும் சேவை அமைப்புகள் சார்பில் வீட்டுக்கு ஒரு விருட்சம்-ஓராண்டில் ஒரு லட்சம் மரங்கள் வளர்க்கும் திட்டத்தை உலக புவி தினத்தன்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

    அதன்தொடர்ச்சியாக 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் 75 அமைப்புகள் மூலம் தஞ்சை மாவட்டத்தில் 75 இடங்களில் 75 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை கீழ்கோவில்பத்து ஊராட்சியில் கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    இதில் இந்திய செஞ்சிலுவை சங்கம், ரோட்டரி சங்கம், அரிமா சங்கம், இன்னர்வீல் சங்கம், ஜே.சி.ஐ. அமைப்பு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பெண்கள் இயக்கம், நேரு யுவகேந்திரா இளைஞர் மன்றங்கள், தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை தன்னார்வலர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட 75 அமைப்புகளை சேர்ந்தவர்கள் பள்ளி, கல்லூரி வளாகங்கள், பொது இடங்கள், ஆஸ்பத்திரிகள், போலீஸ் நிலையங்கள், நூலகங்கள், கோவில்கள், குளக்கரைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 75 மரக்கன்றுகள் நடப்பட்டன.

    மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வரும் அனைத்து அமைப்புகளுக்கும், அதன் உறுப்பினர்களுக்கும் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பாராட்டுக்க ளையும், வாழ்த்து களையும் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் வேளா ண்மைத்துறை இணை இயக்குனர் ஜஸ்டின், கும்ப கோணம் கோட்டாட்சியர் லதா, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கலைச்செல்வன், உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) சங்கர், கவின்மிகு தஞ்சை இயக்க தலைவர் டாக்டர் ராதிகா மைக்கேல், இணை செயலாளர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கிராமப்புற மாணவர்களும் போட்டித் தேர்வுகளுக்கு படிப்பதற்கான வசதி
    • மாவட்ட மைய நூலகம், முழு நேர நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள் மற்றும் கிளை நூலகங்களுக்கு நூல்கள் வழங்கப்பட்டன.

    சென்னை:

    போட்டித் தேர்வுகளுக்காக நகர்ப்புற பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கின்ற வாய்ப்பு கிராமப்புற மாணவர் களுக்கும் கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    அந்த வகையில், கிராமப்புற மாணவர்களும் போட்டித் தேர்வுகளுக்கு படிப்பதற்கான வசதியினை ஏற்படுத்தி தரும் நோக்கத் துடன் மதுரை எம்.பி. வெங்கடேசன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பெறப்பட்ட போட்டித் தேர்வுகளுக்கான 164 நூல்கள் கொண்ட தொகுப்பினை, மதுரை மாவட்டத்தில் உள்ள மாவட்ட மைய நூலகம், முழு நேர நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள் மற்றும் கிளை நூலகங்கள் ஆகிய 85 நூலகங்களுக்கு சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    மேலும், அனைத்து நூலகங்களுக்கு இரும்பு புத்தக அடுக்குகளையும் வழங்கினார். இப்புத்தக தொகுப்புகளில் மொத்தம் 13,000 புத்தகங்கள் அடங்கும்.

    இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்தில் இருந்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, பொது நூலக இயக்குநர் (பொறுப்பு) இளம்பகவத், மதுரை யிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக அமைச்சர் மூர்த்தி, மதுரை மேயர் இந்திராணி, சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன், பூமிநாதன், துணை மேயர் நாகராஜன், மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், நூலகர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தில் பராமரிப்பு இன்றி உள்ள நூலகங்கள் சீரமைக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் சட்டசபையில் இன்று தெரிவித்தார். #TNAssembly #MKStalin #Sengottaiyan
    சென்னை:

    சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, நூலகங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

    இதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உள்ளாட்சித்  துறையிடம் இருந்து உரிய நிதி பெற்று பராமரிப்பு இன்றி உள்ள நூலகங்கள் சீரமைக்கப்படும் என்றார்.

    மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் நூலகங்களில் வைப்பதற்காக நூல்களை வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.



    இதேபோல் மின்துறை சார்ந்த கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில் அளிக்கையில், தமிழகத்தில் ஒரு லட்சத்து 66 ஆயிரம் தாழ்வான மின் கம்பங்கள் மாற்றியமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். #TNAssembly #MKStalin #Sengottaiyan
    ×