என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "liquor policy"
- 12 நகரங்களில் பிரீமியம் கடைகள் திறக்கப்பட உள்ளன.
- 1-ந் தேதி முதல் மதுபான கடைகள் தனியார் மயமாகப்படுகின்றன.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் வருகிற 1-ந் தேதி முதல் மதுபான கடைகள் அனைத்தும் தனியார் மயமாகப்படுகின்றன.
இது தொடர்பாக மந்திரி சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் குறைந்த விலையில் தரமான மதுபானங்களை அறிமுகம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிய மதுபான கொள்கைகளின் படி ஆண்டுக்கு ரூ.2000 கோடி அரசுக்கு வருவாய் கிடைக்கும். விண்ணப்பதாரர்கள் பெயர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
99 ரூபாய்க்கு தரமான கிக் கான மது விற்பனை செய்ய வேண்டும். அதற்கும் குறைவான விலையில் மதுபானங்கள் அறிமுகம் செய்யபட உள்ளது.
12 நகரங்களில் பிரீமியம் கடைகள் திறக்கப்பட உள்ளன. அரசு ஒதுக்கும் தனியார் மதுபான கடைகளை 10 சதவீத கடைகள்கள் இறக்கும் தொழிலாளர்களுக்காக ஒதுக்கீடு செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் சட்டவிரோத மதுபான விற்பனை தடுக்கப்படும். அரசுக்கு நிரந்தரமான வருவாய் கிடைக்கும். ஏற்கனவே கடந்த ஆட்சியில் இருந்த மதுபான கொள்கைகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு வகை மது ஆந்திராவில் விற்பனைக்கு கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் உடல் நலம் பாதிக்காத வகையில் மதுபான கொள்கைகள் செயல்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கருவூரத்துக்கு ரூ.18,860 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
- அமலாக்கத் துறை உதவியுடன் விசாரணை நடத்தப்படும்.
திருப்பதி:
ஆந்திரா மாநில சட்டமன்ற கூட்டம் நேற்று நடந்தது. இதில் கடந்த ஒய். எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அரசாங்கத்தால் கடைபிடிக்கப்பட்ட மது கொள்கை குறித்த வெள்ளை அறிக்கையை முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு வெளியிட்டார்.
ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி அரசு அறிமுகப்படுத்திய மது கொள்கைகளால் கடந்த 5 ஆண்டுகளில் அரசு கருவூரத்துக்கு ரூ.18,860 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் ஏதும் இன்றி பணமாக மட்டுமே மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளன.
கஜானாவுக்கு இவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்தியதற்காக நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் . ஜெகன் மோகன் ரெட்டியின் மதுபான கொள்கைக்கு எதிராக சி.ஐ.டி. விசாரணைக்கு அரசு உத்தரவிடும் .மேலும் அமலாக்க துறை உதவியுடனும் விசாரணை நடத்தப்படும்.
போலி மது குடித்ததால் எத்தனை பேர் கடுமையான உடல்நிலை பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த விவரங்கள் சுகாதாரத் துறையிடம் இருந்து கேட்கப்படும்.
கடந்த ஆட்சியில் பிரபல பீர் வகைகள் முற்றிலும் கைவிடப்பட்டுள்ளன. உள்ளூர் வகைப்பீர்கள் அதை அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் முறைகேடுகள் நடந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
சந்திரபாபு நாயுடுவின் இந்த திடீர் குற்றச்சாட்டால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.
- தனக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார் கெஜ்ரிவால்.
- சிபிஐ அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக திகார் சிறையில் வைத்து கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21 ஆம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்திய மக்களவைத் தேர்தல் நடந்த இடைப்பட்ட காலத்தில் பிரச்சாரம் செய்வதற்காக உச்சநீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் பெற்று வெளியில் வந்த கெஜ்ரிவால் 21 நாட்கள் கழித்து இந்த மாத தொடக்கத்தில் மீண்டும் திகார் சிறைக்கு திரும்பினார்.
இந்நிலையில் கெஜ்ரிவால் மீது சுமத்தப்பட்ட மற்றொரு குற்றச்சாட்டான கலால் கொள்கை முறைகேடு வழக்கு சம்பந்தமாக சிபிஐ அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக திகார் சிறையில் வைத்து கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதற்கிடையில் கீழமை நீதிமன்றதில் கெஜ்ரிவாலுக்கு மீண்டும் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் அது அமலாக்கத்துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் அளித்த மனுவால் நிறுத்திவைக்கப்பட்டது.
தனக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார் கெஜ்ரிவால். கெஜ்ரிவாலின் இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்த நிலையில், நீதிமன்றத்தில் வைத்தே கலால் கொள்கை வழக்கில் சிபிஐ கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது. இதனை அடுத்து உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் தடையை எதிர்த்து தான் அளித்த மனுவை கெஜ்ரிவால் வாபஸ் பெற்றுக்கொண்டார். மேலும் நீதிமன்றத்தில் தனது உடலில் ரத்த சர்க்கரை அளவு குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜாமீன் வழங்கப்பட்டு கெஜ்ரிவால் வெளியே வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்திலேயே பாஜக அரசு சிபிஐ அதிகாரிகளை ஏவி இந்த திடீர் கைதை அரங்கேற்றியுள்ளது என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. கெஜ்ரிவால் விஷயத்தில் அடுத்தடுத்து பரபரப்பான வகையில் காட்சிகள் மாறி வரும் நிலையில் இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பதே இப்போது அனைவரின் கேள்வியாக உள்ளது. மேலும் ஜாமீன் கேட்டு புதிய மனு ஒன்றை கெஜ்ரிவால் தாக்கல் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- விசாரணையில் டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ரூ.100 கோடி வரை ஊழல் நடந்தது ஊர்ஜிதமாகி உள்ளது.
- கவிதாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்த போவதாக சி.பி.ஐ. அறிவித்துள்ளது.'
திருப்பதி:
தெலுங்கானா மாநில முன்னாள் முதல் மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதா டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார். அவர் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
கவிதா இடைக்கால ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அதை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. சி.பி.ஐ. அதிகாரிகளும் இந்த வழக்கை விசாரித்து வருவதால் அவர்களும் கடந்த 6-ந் தேதி திகார் ஜெயிலில் இருக்கும் கவிதாவை சிறையிலேயே விசாரணை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதற்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது.
இதனைத் தொடர்ந்து ஒரு பெண் போலீஸ் மற்றும் கவிதாவின் வக்கீல் முன்னிலையில் திகார் ஜெயிலில் கவிதாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ரூ.100 கோடி வரை ஊழல் நடந்தது ஊர்ஜிதமாகி உள்ளது.
இதைத் தொடர்ந்து கவிதாவை ஜெயிலிலேயே சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். கவிதாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்த போவதாக சி.பி.ஐ. அறிவித்துள்ளது.
- புதுவை மாநில அ.தி.மு.க.துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் பா.ஜனதா கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்தார்.
- ங்கு பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதனை சந்தித்து ஒரு கடிதம் அளித்தார்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க.துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் பா.ஜனதா கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அங்கு பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதனை சந்தித்து ஒரு கடிதம் அளித்தார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு அமைந்து 2 ஆண்டுகளாக உள்ளது. ஆட்சி அமைந்தது முதல் என்.ஆர்.காங்கிரஸ் அரசு மதுபான கொள்கையால் தள்ளாட்டத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
கூடுதலாக 10 மதுபான, சாராய தொழிற்சாலைகளை திறக்க அனுமதியளித்துள்ளது. கவர்ச்சி நடனங்களுடன் கூடிய சுற்றுலா மதுபார் (ரெஸ்டோ பார்) அமைக்கவும் நூற்றுக்கணக்கில் அனுமதி வழங்குகிறது. என்.ஆர்.காங்கிரஸ் அரசு மதுபான உரிமையாளர்களுக்கு, சாராய முதலாளிகளுக்கும் சாதகமாக, அரசின் அனைத்து சட்டவிதிகளையும் மீறி செயல்பட்டு, அனுமதி வழங்கி வருகிறது. இதனால் புதுவையில் மது ஆறாக பெருக்கெடுத்து ஓடும். புதுவையின் கலாச்சாரம், பண்பாடு முற்றிலுமாக சீர்குலையும்.
இந்த கலாச்சார சீரழிவுக்கு, புதுவை மாநில பா.ஜனதா நிலைப்பாடு என்ன? நாடு முழுவதும் பூரண மதுவிலக்கு வேண்டும் என்பதே பா.ஜனதா வின் தேசிய கொள்கை. ஆனால் பா.ஜனதா கூட்டணியில் உள்ள புதுவையில் என்.ஆர்.அரசு நாள்தோறும் கூடுதலாக மதுபான தொழிற்சாலைகள், மதுபார்களை திறக்க அனுமதி வழங்கி வருகிறது.
ஆட்சியில் அங்கம் வகிக்கும் கூட்டணி என்றாலும், மக்களின் உரிமைகள் பறிபோகும்போதும், அவர்களின் நலனுக்காகவும் தவறுகளை தட்டிக்கேட்பது அரசியல்கட்சிகளின் தலையாய கடமை. எனவே மதுபான, சாராய கொள்கையில் புதுவை மாநில பா.ஜனதாவின் நிலைப்பாடு என்ன? என்பதை வெளிப்படையாக, அறிக்கையாக வெளியிட வேண்டும் என அ.தி.மு.க. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்