search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "LSGvMI"

    • மும்பை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னியுடன் ரோகித் சர்மா பேசிக்கொண்டிருந்தார்.
    • அப்போது அவர் கேமராமேனை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டது சமூக வலைதளத்தில் வைரலாகியது.

    மும்பை:

    மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா, மும்பை அணியின் முன்னாள் வீரரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பயிற்சியாளர்களில் ஒருவருமான அபிஷேக் நாயருடன் பேசிய வீடியோவை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தனது சமூக வலைதள பக்கத்தில் கடந்த வாரம் வெளியிட்டது.

    அந்த வீடியோவில், ரோகித் சர்மாவும், அபிஷேக் நாயரும் பேசுவது தெளிவாக கேட்கவில்லை. சில ரசிகர்கள் நாய்ஸ் கேன்சலேஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரோகித் சர்மா பேசுவதை மட்டும் தனியாக பிரித்து எடுத்தனர். அதில் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணி பற்றி பேசி இருப்பது தெரியவந்தது. இதன்மூலம் ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் மீது கடும் அதிருப்தியில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

    இந்த சர்ச்சை வீடியோவை வெளியிட்ட சில நிமிடங்களில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி நீக்கிவிட்டது.

    இந்நிலையில், மும்பையில் நேற்று நடந்த ஐ.பி.எல். போட்டியில் மும்பை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னியுடன் ரோகித் சர்மா பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் கேமராமேனை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டார். ஏற்கனவே ஒரு ஆடியோ வெளியாகி சர்ச்சையை உண்டு பண்ணியுள்ளது. எனவே ஆடியோவை ஆப் செய்யுங்கள் என தெரிவித்தார். இதுதொடர்பான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • முதலில் ஆடிய லக்னோ அணி 3 விக்கெட்டுக்கு 177 ரன்கள் குவித்தது.
    • அந்த அணியின் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 47 பந்தில் 4 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 89 ரன்கள் விளாசினார்.

    லக்னோ:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று லக்னோவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 177 ரன்கள் சேர்த்தது. கேப்டன் குருணால் பாண்டியா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 49 ரன்கள் சேர்த்தார்.

    மும்பை இந்தியன்ஸ் சார்பில் ஜேசன் பெஹ்ரன்டாப் 2 விக்கெட்டும், பியூஷ் சாவ்லா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 178 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான இஷான் கிஷன், கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 37 ரன்னில் அவுட்டானார்.

    இஷான் கிஷன் அரை சதமடித்து 59 ரன்னில் வெளியேறினார். சூர்யகுமார் யாதவ் 7 ரன்னிலும், வதேரா 16 ரன்னிலும் அவுட்டாகினர்.

    கடைசி கட்டத்தில் டிம் டேவிட் அதிரடியில் மிரட்டினார். அவர் 32 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், மும்பை அணி 172 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் லக்னோ அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

    லக்னோ அணி சார்பில் ரவி பிஷ்னோய், யாஷ் தாக்குர் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    ×