என் மலர்
நீங்கள் தேடியது "lying"
- ஆத்தூர் அருகே சிறுவாச்சூர் கிராமம் சேட்டூரில் உள்ள திருவேங்கடம் என்பவரது விவசாய நிலத்தின் அருகில் சாலையோரம் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமாக கிடந்தார்.
- வீரகனூர் போலீஸ் நிலையங்களில் கடந்த 10 நாட்களில் மாயமான நபர்கள் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சிறுவாச்சூர் கிராமம் சேட்டூரில் உள்ள திருவேங்கடம் என்பவரது விவசாய நிலத்தின் அருகில் சாலையோரம் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமாக கிடந்தார்.
உடல் அழுகி துர்நாற்றம் வீசிய நிலையில் இருந்ததால் அந்த பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் குணசேகரனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் தலைவாசல் போலீசுக்கு கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் வாலிபரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
அவர் இறந்து 5 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். உடல் முழுவதும் அழுகிய நிலையில் இருந்ததால் அடையாளம் காண முடியவில்லை.
மலை பகுதியில் விவசாய தோட்டத்தின் அருகில் சாலை ஓரத்தில் அந்த வாலிபர் இறந்து கிடந்ததால் யாரேனும் அவரை அடித்துக் கொன்று வீசி சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதனால் வாலிபரின் பிணத்தை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மர்ம சாவு என வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆத்தூர், தலைவாசல், வீரகனூர் போலீஸ் நிலையங்களில் கடந்த 10 நாட்களில் மாயமான நபர்கள் குறித்து விசாரித்து வருகிறார்கள். மேலும் பிணமாக கிடந்த வாலிபரைஅடையாளம் காணும் பணியில் தீவிரமாக போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவரது சாவில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது.
- ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட பெளத்தூர் அருகே உள்ள ஒரு குளத்தின் அருகே புலி ஒன்று ஹாயாக படுத்திருந்தது.
- புலிகள் நடமாட்டம் காரணமாக இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
தாளாவடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. குறிப்பாக இந்த வனச்சரகத்தில் மான், யானை, புலி, காட்டெருமை, செந்நாய், சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த வனப்பகுதி வழியாகத்தான் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல வேண்டும்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த வனவிலங்குகள் கணக்கெடுப்பில் புலி மற்றும் சிறுத்தைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளதாக தெரிய வந்து உள்ளது.
இந்த மலைப்பாதையில் அவ்வப்போது இரவு நேரங்களில் சிறுத்தை மற்றும் புலிகள் நடமாடுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. அப்போது அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டு அச்சமடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட பெளத்தூர் அருகே உள்ள ஒரு குளத்தின் அருகே புலி ஒன்று ஹாயாக படுத்திருந்தது. இதை குளத்தின் மறுபக்கம் இருந்து அப்பகுதியை சேர்ந்த சிலர் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். பின்னர் சிறிது நேரம் கழித்து புலி அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.
இந்நிலையில் புலிகள் நடமாட்டம் காரணமாக இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
- வண்ணார்காடு பகுதியில், நேற்று விவசாயநிலத்தில் 2 ஆண்மயில் மற்றும் 2 பெண்மயில் என நான்கு மயில்கள் உயிரிழந்து கிடந்தது.
- மேலும் ஒரே நேரத்தில் 4 மயில்கள் உயிரிழந்ததால், அப்பகுதியில் உள்ள யாரேனும் மயில்களுக்கு விஷம்வைத்து கொன்றார்களா?
எடப்பாடி:
எடப்பாடி அடுத்த குரும்பபட்டி ஊராட்சிக்குட்பட்ட, நாச்சியூர் அடுத்த வண்ணார்காடு பகுதியில், நேற்று விவசாயநிலத்தில் 2 ஆண்மயில் மற்றும் 2 பெண்மயில் என நான்கு மயில்கள் உயிரிழந்து கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அலுவலர்கள், மயில்களின் உடலினை கைப்பற்றி , கொங்கணாபுரம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் ஒரே நேரத்தில் 4 மயில்கள் உயிரிழந்ததால், அப்பகுதியில் உள்ள யாரேனும் மயில்களுக்கு விஷம்வைத்து கொன்றார்களா? மேலும் புதர்பகுதியில் மயில்கள் இறந்து கிடக்கின்றனவா? என வனவர் குமரேசன் தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
தேசியபறவையான மயில்கள் மர்மமான முறையில் இறந்துகிடந்த நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
- பெருந்துறை அருகே டாஸ்மாக் கடை அருகே இறந்து கிடந்த தொழிலாளி சாவில் சந்தேகம் இருப்பதாக சகோதரி போலீசில் புகார் தெரிவித்தார்.
- இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்
பெருந்துறை:
பெருந்துறை அருகே தலையம்பாளையம் நடுத்தோ–ட்டத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி (42). கூலி தொழிலாளி. இவரது மனைவி மகாலட்சுமி.
வேலுச்சாமிக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி மகாலட்சுமி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து வேலுச்சாமி பெற்றோருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் வேலுச்சாமி கடந்த 2 நாட்க ளுக்கு முன்பு பெருந்துறை அடுத்த சீனாபுரம் டாஸ்மாக் மதுக் கடைக்கு மது குடிக்க சென்றுள்ளார். அப்போது வேலுச்சாமிக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வேலுச்சாமி டாஸ்மாக் மதுக்கடை அருகே மர்ம மான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து தனது அண்ணன் சாவில் மர்மம் இருப்பதாகவும், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலுச்சாமி யின் தங்கை சித்ரா பெருந்துறை போலீசில் புகார் செய்தார்.
இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.
- ஈரோட்டில் டாஸ்மாக் கடை அருகே அதிக மதுபோதையில் மயங்கி இறந்து கிடந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
- இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்த்தவர் மூர்த்தி (38). இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மூர்த்தியை விட்டு பிரிந்து அவரது மனைவி 2 குழந்தையுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதனால் மன வருத்தத்தில் இருந்த மூர்த்தி அடிக்கடி மது குடித்து வந்தார். சம்பவத்தன்று ஜெயகோபால் தெருவில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே அதிக மதுபோதையில் பேச்சு மூச்சு இல்லாமல் மூர்த்தி மயங்கி கிடந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மூர்த்தி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
