என் மலர்
நீங்கள் தேடியது "Madurai AIIMS"
- ரூ.1,977 கோடியில் 10 தளங்களுடன் 870 படுக்கை வசதிகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுகிறது.
- மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முதல்கட்ட கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன.
மதுரை:
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2015-ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. ரூ.1,977 கோடியில் 10 தளங்களுடன் 870 படுக்கை வசதிகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுகிறது. இதனால் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.
தற்போது வரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் விசாலமான சாலை மற்றும் சுற்றுச்சுவரை தவிர வேறு கட்டுமானப் பணிகள் எதுவும் தொடங்கவில்லை. இதனால் எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் பேசுபொருளாக மாறியது.
இதற்கிடையே, மதுரை தோப்பூரில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு மத்திய அரசு டெண்டர் கோரியது. இந்த டெண்டரை எல் அண்ட் டி நிறுவனம் கைப்பற்றியது. அடிக்கல் நாட்டி 5 ஆண்டுக்கு பிறகு சமீபத்தில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்கான வாஸ்து பூஜை மற்றும் சமன்படுத்தும் வேலை நடைபெற்றது.
இந்நிலையில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முதல்கட்ட கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன. முதல் கட்டமாக ரூ.10 கோடி மதிப்பீட்டில் 5 கி.மீ. சுற்றளவுக்கு 12 அடி உயர சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள பகுதியில் ரூ.21 கோடியில், 6 கிலோமீட்டருக்கு சாலை பணிகள் நிறைவடைந்துள்ளது. மருத்துவமனை கட்டுமானப் பணிகளை எல் அண்ட் டி நிறுவனம் தொடங்கியுள்ளதாக எய்ம்ஸ் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
- மார்ச் 14 ஆம் தேதி கட்டுமான பணிகள் துவங்கின.
- இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாத வா்கில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினர். இதன்பிறகு, நீண்டகாலம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் துவங்கப்படாமல் இருந்தது.
கடந்த 2023 ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான டெண்டர் அறிவிப்பு வெளியானது. இதில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் டெண்டர் எல்&டி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மார்ச் 14 ஆம் தேதி கட்டுமான பணிகள் துவங்கின.
நீண்ட காலம் கழித்து கட்டுமான பணிகள் துவங்கிய நிலையில், இதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை என்று தகவல் வெளியானது. இதையடுத்து கடந்த 2 ஆம் தேதி சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆய்வறிக்கையை தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் எய்ம்ஸ் நிர்வாகம் சமர்பித்தது.
இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என்று கடந்த 10 ஆம் தேதி சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு பரிந்துரை வழங்கியது. இந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதியை தமிழ்நாடு அரசு இன்று வழங்கியது.
- மார்ச் 14-ம் தேதி கட்டுமான பணிகள் தொடங்கின.
- இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டது.
மதுரை
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினர். இதன்பிறகு, நீண்டகாலம் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல் இருந்தது.
கடந்த 2023-ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான டெண்டர் அறிவிப்பு வெளியானது. இதில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் டெண்டர் எல்&டி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மார்ச் 14-ம் தேதி கட்டுமான பணிகள் தொடங்கின.
நீண்டகாலம் கழித்து கட்டுமான பணிகள் தொடங்கிய நிலையில் இதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை என தகவல் வெளியானது. இதையடுத்து கடந்த 2-ம் தேதி சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆய்வறிக்கையை தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் எய்ம்ஸ் நிர்வாகம் சமர்ப்பித்தது.
இந்தத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என கடந்த 10-ம் தேதி சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு பரிந்துரை வழங்கியது. அதன்படி, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதியை தமிழ்நாடு அரசு சமீபத்தில் வழங்கியது.
இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. எல் & டி நிறுவனம் சார்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தினை சமன்செய்யும் வாஸ்து பூஜை போடப்பட்டது.
- பணிகள் தொடங்கப்பட்டு 2026-க்குள் நிறைவடைந்துவிடும்.
- கொரோனா காலகட்டத்தை காரணம் காட்ட வேண்டாம்.
மதுரை:
மதுரையை சேர்ந்த பாஸ்கர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதால், ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, அவர்களின் வாழ்க்கை தரம் உயர உதவியாக இருக்கும். தென் தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் சிறந்த மருத்துவ வசதியை பெறவும் வாய்ப்பாக இருக்கும்.
இதனை கருத்தில் கொண்டு 2015 ஆம் ஆண்டு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தாலும் 2018 ஆம் ஆண்டு தான் மதுரை தோப்பூர் பகுதி தேர்வு செய்யப்பட்டது. பிரதமர் நேரில் வந்து அடிக்கல் நாட்டினார்.
இருப்பினும் இன்னமும் கட்டுமான பணிகள் நடைபெறாமல், நீண்ட காலமாக கிடப்பிலேயே உள்ளது. கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பல்வேறு வழக்குகள் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இதுவரை கட்டுமான பணிகளை தொடங்கப்படவில்லை.
எனவே மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை விரைவுபடுத்தி, குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டு விட்டது. பணிகள் தொடங்கப்பட்டு 2026-க்குள் நிறைவடைந்துவிடும். இடையில் கொரோனா காலம் ஏற்பட்டதால் தாமதம் ஆகிவிட்டது என தெரிவித்தார்.
ஆனால் நீதிபதிகள், கொரோனா காலகட்டத்தை காரணம் காட்ட வேண்டாம். அதற்கு முன்பும் பின்பும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பினர். விசாரணை முடிவில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் எப்போது நிறைவடையும்? என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலர் எழுத்து பூர்வ அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 24-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
- அன்புமணி ராமதாஸ் தான் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் என்று சீமான் கூறியதால் பரபரப்பு
- 2019ம் ஆண்டு பிரதமர் மோடி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அன்புமணி ராமதாஸ் தான் அடிக்கல் நாட்டினார் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், "மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியது யார்? திமுக - காங்கிரஸ் - பாமக கூட்டணியில் இருந்த போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ் தான் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஏன் எய்ம்ஸ் காட்டவில்லை. கடந்த முறை 39 எம்.பி.க்கள் இப்போது 40 எம்.பி.க்கள் பாராளுமன்றம் போனார்களே அவர்கள் பேசி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டவேண்டியதுதானே" என்று பேசியுள்ளார்.
2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி பிரதமர் மோடி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார். உண்மை இப்படியிருக்க மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது என்று உண்மைக்கு புறம்பான செய்திகளை சீமான் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பணிகள் 33 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியாகி இருந்தது.
- சென்னையைச் சார்ந்த லார்சன் அண்டு டூப்ரோ கட்டுமான நிறுவனத்துடன் ரூ.1118.35 கோடிக்கு (ஜிஎஸ்டி வரி சேர்க்காமல்) கட்டுமான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என கடந்த 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 5 ஆண்டுகளை கடந்தும் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நடைபெறாமல் இருந்து வந்ததால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இதனைதொடர்ந்து கடந்த மார்ச் 14 ஆம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் தனியார் கட்டுமான நிறுவனமான L&T நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்டது. இந்தப் பணிகள் 33 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என ஆர்.டி.ஐ.யில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் குறித்து தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா என்பவர் ஆர்.டி.ஐ.யில் கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு ஆர்.டி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- மதுரை எய்ம்ஸ்-இன் கட்டுமான ஒப்பந்தத்தின்படி, தற்போது பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மருத்துவ கல்விசார் கட்டிடம், நர்சிங் கல்லூரி, மாணவ மாணவிகள் தங்கும் விடுதிகள், உணவு கூடம், வெளி நோயாளிகள் பிரிவு, சேவை பிரிவு கட்டடங்கள் ஆகியவற்றிற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னையைச் சார்ந்த லார்சன் அண்டு டூப்ரோ கட்டுமான நிறுவனத்துடன் ரூ.1118.35 கோடிக்கு (ஜிஎஸ்டி வரி சேர்க்காமல்) கட்டுமான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 22 மே 2024 அன்று கட்டுமானம் தொடங்குவதற்கு கடிதம் வழங்கப்பட்டு 33 மாதங்களில் முடிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மதுரை எய்ம்ஸ்-க்கான திட்ட மதிப்பீடு ரூ.2021.51 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டு, 33 மாதங்களில் மொத்த பணிகளையும் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2 லட்சத்து 18 ஆயிரத்து 927 சதுர மீட்டர் பரப்பளவில் மருத்துவமனை கட்டடங்கள், மருத்துவக் கல்லூரி கட்டடங்கள், விடுதிகட்டடங்கள், ஆசிரியர்கள் குடியிருப்புகள், உணவகங்கள், விளையாட்டுக் கூடங்கள் கட்டப்பட இருக்கின்றன. தற்காலிக கட்டடங்களாக திட்ட அலுவலகம், சேமிப்பு கிடங்குகள், காங்கிரீட் தயாரிப்பு ஆலை, மெடிக்கல் மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான கட்டடங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முதலில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தில் நேரில் ஆய்வு செய்ய முடிவு.
- அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து எய்ம்ஸ் மருத்துவமனையை சிறப்பாக செயல்படுத்துவோம்
கடந்த 2019- ஆண்டு பிரதமர் மோடியால் மதுரை அருகே தொப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், தற்போது வரை மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் நடைபெறவில்லை. இது குறித்து தமிழக அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவரை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் உள்ள வி.என்.நரம்பியல் சிறப்பு மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நாகராஜன் வெங்கட்ராமன், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்: எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தலைவராக அறிவிக்கப்பட்டிருப்பது, குறித்த உத்தரவு தற்போதுதான் கிடைத்திருக்கிறது. முதலில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தில் நேரில் ஆய்வு செய்ய இருக்கிறேன்.
இதுவரை நடந்தது குறித்த முழு விவரங்களை சேகரிக்க வேண்டி இருக்கிறது. மத்திய அரசும், மாநில அரசும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு முழு ஒத்துழைப்பு தருவார்கள் என நம்புகிறேன். அதன்படி அதற்கான பணிகள் துரிதப்படுத்தப்படும். எல்லா தரப்பினரையும் ஒருங்கிணைத்து எய்ம்ஸ் மருத்துவமனையை சிறப்பாக செயல்படுத்த பாடுபடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள பகுதிக்கு சென்று மாணிக்கம் தாகூர் எம்.பி. பார்வையிட்டார்.
- மருத்துவமனைக்கான பணிகள் ஒரு சதவீதம் கூட நிறைவடையவில்லை என குற்றச்சாட்டு
மதுரை:
பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் கூற்றுப்படி, 95 சதவீத பணிகள் நிறைவுபெற்ற மதுரை எய்ம்ஸ் கட்டிடம் எங்கே? என நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, நேற்று மதுரையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசும்போது, மதுரை எய்ம்ஸ் மருத்துமவனையின் கட்டுமானத்திற்கான பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன என்றார். இது தமிழக அரசியலில் பேசுபொருளாகி உள்ளது.
நட்டாவின் பேச்சைத் தொடர்ந்து விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், நேற்றே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுடன் சென்று, எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிறைவடைந்த பணிகளை பார்க்கப் போவதாகவும், அதுதொடர்பான புகைப்படங்களை வெளியிட உள்ளதாகவும் கூறியிருந்தார்.
அதன்படி, மதுரை எம்பி சு.வெங்கடேசனுடன் இன்று எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள தோப்பூர் பகுதிக்கு சென்று பார்வையிட்டார். அங்கு மருத்துவமனைக்கான எந்த கட்டுமான பணியும் நடக்கவில்லை. சுற்றிலும் சுவர்கள் மட்டுமே கட்டப்பட்டிருந்தது. காலியாக உள்ள அந்த இடத்தில் இருவரும் நடந்து செல்லும் புகைப்படங்களை மாணிக்கம் தாகூர் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
We went to the Thoppur AIIMS Madurai site … we found nothing . #MaduraiAIIMS pic.twitter.com/9CBxHEs6Mt
— Manickam Tagore .B🇮🇳✋மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) September 23, 2022
அதில், 'அன்பிற்குரிய நட்டா அவர்களுக்கு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் 95 சதவீத பணிகளை முடித்தமைக்கு நன்றி. நானும் மதுரை எம்.பி சு.வெங்கடேசனும் தோப்பூர் வளாகத்தில் ஒரு மணி நேரம் தேடியும் எதுவும் கிடைக்கவில்லை. கட்டிடத்தை யாரோ திருடிவிட்டார்கள்' என கூறி நட்டாவை டேக் செய்துள்ளார். அத்துடன் 95 சதவீதம் வேலை முடிந்த எய்ம்ஸ் எங்கே? என்ற கேள்வியுடன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
'பாஜக ஆட்சி புல்புல் பறவைகள் மூலம் 95 சதவிகித வேலையை கட்டி முடித்த மதுரை எய்ம்ஸ் கட்டிதத்தை தேடி நானும் மாணிக்கம் தாகூர் எம்.பி.யும் போனோம். கீழ்வானம் வரை மதுரை கிழவி வெற்றிபோட்டு துப்பிய எச்சிலால் சிவந்து கிடந்தது நிலம்' என சு.வெங்கடேசன் ட்வீட் செய்துள்ளார்.
உயர்த்தப்பட்ட திட்ட மதிப்பீட்டிற்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறும் பணி இன்னும் முடியவில்லை. ஒப்பந்த புள்ளி கோரப்படவில்லை. அப்படியிருக்க பணி முடிந்து பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என்று பாஜக தலைவர் கூறுவது அபத்தத்தின் உச்சம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இங்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் ஒரு சதவீதம் கூட நிறைவடையவில்லை. நிதி ஒதுக்கீட்டிலும் குளறுபடிகள் உள்ளன என எம்.பி.க்கள் இருவரும் குற்றம்சாட்டினர்.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பதவியில் இருந்தபோது 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அதே ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந் தேதி தமிழ்நாட்டில் 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
2015-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து, மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் தலைமையில் தமிழகம் வந்த உயர்மட்டக் குழுவினர், குறிப்பிட்ட 5 இடங்களுக்கும் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.
ஆனால், அதன்பிறகு தொடர் நடவடிக்கைகள் எதையும் எடுக்காமல் மத்திய அரசு இருந்துவந்ததால், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக கோர்ட்டில் பொது நல வழக்கும் தொடரப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 18-ந் தேதி டெல்லியில் மத்திய குழு கூடி மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் வழங்கியது.
அதனைத் தொடர்ந்து, தமிழக அரசு விரிவான திட்ட அறிக்கை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தது. இந்த நிலையில், கடந்த வாரம் மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவின நிதி குழு, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு நிதி வழங்க ஒப்புதல் வழங்கியது. அதன் அடிப்படையில், அடுத்த சில நாட்களில் மத்திய அமைச்சரவை கூடி ரூ.1,200 கோடி நிதியளிக்க ஒப்புதல் அளிக்க இருக்கிறது. #AIIMS #AIIMSinMadurai #Thoppur
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து, அதற்கான பணிகளை தொடங்கி உள்ளது. இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், எய்ம்ஸ் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், எய்ம்ஸ் அமைவதற்கான அனுமதியை அரசிதழில் வெளியிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்கும்படி கூறியிருந்தது.


‘பல்வேறு மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. ஆனால், மதுரை தோப்பூரில் இதுவரை எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை. எனவே தமிழகத்தில் மதுரை மாவட்டம், தோப்பூரில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது என்று அரசிதழில் மத்திய அரசு வெளியிட வேண்டும்.
மேலும் அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் பெற வேண்டும். கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தத்தை விரைவுபடுத்தவும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான நிதியை உடனடியாக ஒதுக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என மனுதாரர் கூறியிருந்தார்.
இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, இந்த பிரச்சனை குறித்து விளக்கம் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மதுரையில் தோப்பூரில்தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று உறுதி அளித்தார்.
இதையடுத்து, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து டிசம்பர் 6-ம் தேதி நிலை அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய சுகாதாரத்துறை செயலருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும்? எப்போது நிறைவடையும்? என்பதையும் அறிக்கையில் குறிப்பிடும்படி உத்தரவு பிறப்பித்து விசாரணையை ஒத்திவைத்தனர். #MaduraiAIIMS
பிரதமரை சந்திப்பதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் சென்றனர். டெல்லி சென்றடைந்த முதல்வருக்கு, விமான நிலையத்தில், தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் மற்றும் அதிமுக எம்.பி.க்கள். வரவேற்பு அளித்தனர்.
பின்னர் தமிழ்நாடு இல்லத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றார். அங்கு அதிமுக எம்.பி.க்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது தமிழக திட்டங்கள், நிதி ஒதுக்கீடு, அரசியல் நிலவரம் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கும்படி பிரதமரிடம் வலியுறுத்தினார். இந்த சந்திப்பின்போது அமைச்சர் ஜெயக்குமார் உடனிருந்தார். #EdappadiPalaniswami #Modi #MaduraiAIIMS