என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Magazine"

    • தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
    • சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே திருவதிகை முத்துலட்சுமி நகரில் உள்ள மரத்தில் ஒரு வாலிபர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாககிடந்தார். இதனை கண்ட அப்பகுதியினர் பண்ருட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பண்ரு ட்டி அடுத்த தொரப்பாடியை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 29). முந்திரி வியாபாரி என்பதும், இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு பத்திரிக்கை வைக்கும் பணிகள் நடந்து வந்தது. நண்பர்களுக்கு பத்திரிக்கை வைக்க செல்வதாக கூறி வீட்டிலிருந்து மோகன்ராஜ் இன்று காலை வெளியில் சென்றவர் தூக்கில் தொங்கியபடி கிடந்தது போலீசாருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து முந்திரி வியாபாரி மோகன்ராஜ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா என்பது குறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமியின் ஆராய்ச்சி இதழில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
    • தென்கிழக்கு ஆசியாவின் தாழ்மையான தொடக்கத்திலிருந்து ஐரோப்பா மற்றும் அதற்கு 17 நாடுகள் மற்றும் ஆறு கண்டங்களில் இருந்து 280 கரப்பான் பூச்சிகளின் மரபணுக்களை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.

    உலகம் முழுவதும் பரவியுள்ள ஜெர்மன் கரப்பான் பூச்சி இனம், சுமார் 2,100 ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கரப்பான் பூச்சி இனத்திலிருந்து உருவாகியிருக்கலாம் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமியின் ஆராய்ச்சி இதழில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

    தென்கிழக்கு ஆசியாவின் தாழ்மையான தொடக்கத்திலிருந்து ஐரோப்பா மற்றும் அதற்கு 17 நாடுகள் மற்றும் ஆறு கண்டங்களில் இருந்து 280 கரப்பான் பூச்சிகளின் மரபணுக்களை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் கரப்பான் பூச்சிகள் சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முன்பு ஆசியாவிலிருந்து மேற்கு நோக்கியும் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் நோக்கியும் பயணித்ததாகக் கூறப்படுகிறது.

     

    மேலும் சுமார் 270 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி வீரர்கள் ஆசியாவிலிருந்து வர்த்தக பாதைகளில் ஐரோப்பாவிற்கு பயணித்த போது, அவர்களின் ரொட்டி கூடைகளில் கரப்பான் பூச்சிகள் ஏறி ஐரோப்பாவிற்குப் பயணித்து அங்கு அதிகம் பரவியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

     

    அந்த காலகட்டங்களில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட நீராவி இயந்திரம் மற்றும் கடிதத்துக்கு உட்புறமாகக் குழாய்கள் போன்ற கண்டுபிடிப்புகள் பூச்சிகள் மேலும் பயணிக்கவும், உட்புறமாக வசதியாக வாழவும் உதவியது. கரப்பான் பூச்சிகளைக் கட்டுப்படுத்த அவற்றின் பரவலை ஆராய்வது உதவும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.  

     

    • லட்சக்கணக்கான அமெரிக்கர்களின் மிக முக்கிய தகவல்களையும் அணுக DOGE-க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • அவர் ஒரு சிறப்பு அரசு ஊழியர் மட்டுமே என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றுள்ள நிலையில் அரசின் செயல்திறனை மேம்படுத்தும் DOGE என்ற துறை உருவாக்கப்பட்டு அதற்கு தொழிலதிபர்கள் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.

    விவேக் ராமசாமி தலைவர் பதவியிலிருந்து விலகிய நிலையில் எலான் மஸ்க் கட்டுப்பாட்டுக்கு DOGE முழுமையாகச் சென்றுள்ளது. அரசு மற்றும் பொதுமக்களின் முக்கிய தரவுகளை அணுகும் சுதந்திரம் DOGE துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.

    டிரில்லியன் கணக்கான டாலர் சலுகைகள், மானியங்கள் மற்றும் வரி வசூலுக்கான அரசாங்கத்தின் கட்டண அமைப்பு தரவுகளை அணுக கருவூலத் துறை DOGE-க்கு அனுமதி அளித்தது. மேலும் வகைப்படுத்தப்பட்ட (Classified material) முக்கியமான விவரங்கள், கோப்புகள், ஆவணங்கள், அதி ரகசிய வீடியோ, ஆடியோகளையும், லட்சக்கணக்கான அமெரிக்கர்களின் மிக முக்கிய தகவல்களையும் அணுக DOGE-க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    அரசாங்க செலவினங்களை ஆண்டுதோறும் 1 டிரில்லியன் டாலர் முதல் 2 டிரில்லியன் டாலர் வரை குறைக்கும் திட்டத்தை மஸ்க் முன்மொழிந்தார். இதனையடுத்து "சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) மூடப்படும்" என மஸ்க் தன்னிச்சையாகத் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்தார்.

    இதனால் டிரம்ப் அமெரிக்க அதிபரா அல்லது எலான் மஸ்க் அதிபரா என்ற குழப்பம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. உலக பணக்காரர் ஒருவர் நினைத்தால் வல்லரசு நாட்டையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பது மஸ்க்- டிரம்ப் விஷயத்தில் புலனாவதைப் பலர் தெரிவித்து வருகின்றனர்.

    ஏகபோக அதிகாரங்களை மஸ்க் பெற்றிருந்தாலும் தனது அனுமதி இன்றி மஸ்க் எதுவும் செய்ய முடியாது என்றும் அவர் ஒரு சிறப்பு அரசு ஊழியர் மட்டுமே என்றும் டிரம்ப் தெரிவித்தார். ஆனால் நாளுக்கு நாள் அமெரிக்க அரசில் மஸ்க்கின் பிடி இறுகிக்கொண்டே வருவது அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இதை பிரதிபலிக்கும் விதமாக அமெரிக்காவின் பிரபல 'டைம்' இதழ் தனது அட்டைப்படத்தில் ஒரு சித்திரத்தை வெளியிட்டுள்ளது.

    அதில் அமெரிக்க அதிபர் இருக்கையில் எலான் மஸ்க் அமர்ந்திருக்கிறார். மேலும் வாஷிங்க்டன் (தலைநகர்) மீது எலான் மஸ்க் தொடுத்துள்ள போர் என்று தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. இந்த அட்டைப்படம் வைரலான நிலையில் இதற்கு டிரம்ப் பதிலளித்துள்ளார். ஆதாவது, டைம்ஸ் இதழ் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதே தனது தெரியாது என்று கேலியாக கூறியுள்ளார்.  

    ×